Google Search Engine

தலைப்புகளில் தேட

தேதிவாரியாக பதிவுகள்

December 2011
S M T W T F S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031

Archives

Visitors since 22-3-13

Free counters!
இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 7,192 முறை படிக்கப்பட்டுள்ளது!

வீட்டிலேயே செய்யலாம் பிசினஸ்!

தகிக்கும் வெயிலிலிருந்து தப்பிக்க குளிர்பான கடைகளில் குவிகிறது கூட்டம். மக்களின் இந்தத் தேவையையே தனது பிசினஸூக்கான அஸ்திவாரமாக்கி ஜெயித்தவர்தான் சென்னை, சைதாப்பேட்டையைச் சேர்ந்த சௌமியா.

கிட்டத்தட்ட சென்னை முழுக்க பல கடைகளுக்கும் சப்ளை ஆகின்றன, இவர் கைகளால் தயாராகும் பிரிசர்வேட்டிவ் ஜூஸ் வகைகள்!

”குடும்பம், குழந்தைகள்னு இயல்பா நகர்ந்துட்டு இருந்துச்சு வாழ்க்கை. குழந்தைங்க கொஞ்சம் வளர்ந்த பிறகுதான் எனக்குள்ள பிசினஸ் ஆசை முளை விட்டுச்சு. அந்த ஆசைக்கு நான் காலேஜ் படிச்சப்ப கத்துக்கிட்ட இந்தத் தொழில் ‘ஜூஸ்’ ஊத்த, ஒரு நல்ல தொடக்கம் கிடைச்சுது. நம்ம சென்னையில வருஷத்துக்கு முக்கால்வாசி நாள் வெயில்தானே.. அதான், அந்த கதிரவன் கடாட்சத்துல மூணு வருஷமா நல்லபடியா போய்க்கிட்டிருக்கு என்னோட ஜூஸ் பிசினஸ்” என்றவரிடம், திராட்சைப் பழ ஜூஸ் செய்யும் விதத்தை விசாரித்தோம்..

தேவையான பொருட்கள்: திராட்சைப் பழம் – அரை கிலோ, சர்க்கரை – ஒரு கிலோ, சிட்ரிக் ஆசிட் – ஒரு டீஸ்பூன், டோனோவின் எஸன்ஸ் – ஒரு டீஸ்பூன், சோடியம் பென்ஸோயேட் – அரை டீஸ்பூன்.

இவற்றையெல்லாம் எடுத்து வைத்து, விளக்கத்தை சொல்லியபடி, மடமடவென ஜூஸை செய்யத் துவங்கினார்..

”அரை கிலோ திராட்சைப்பழத்தை உதிர்த்து, கழுவிக்கணும். அதை கரண்டியால ஓரளவுக்கு மசிச்சுட்டு, அடுப்புல வச்சு பத்து நிமிஷம் சூடாக்கணும். அடுப்புலருந்து இறக்கி, ஆறுனதும் அதுலயிருந்து சாறு எடுத்துக்கணும்.

சாறு எப்படி எடுக்குறதுனு பார்க்கலாம்.. ஆறின பழத்தை மிக்ஸியில நல்லா அடிச்சுக்கணும். இதை கொஞ்சம் பெரிய துளை இருக்குற வடிகட்டியில வடிகட்டணும். அப்போதான், வெறும் சாறு மட்டும் இறங்காம, கொஞ்சம் சதையும் கலந்து அடர்த்தியா இறங்கும். ஜூஸ் பார்க்குறதுக்கு ஃப்ரெஷ் ஜூஸ் மாதிரி தெரியணும் இல்லையா? அதுக்குத்தான் இந்த ஏற்பாடு!” என்றவர், ஜூஸர் இருப்பவர்கள் அதைப் பயன்படுத்தினால், ஜூஸ் இன்னும் நன்றாக வரும் என்றொரு டிப்ஸூம் கொடுத்தபடியே தொடர்ந்தார்..

”ஜூஸ் மேக்கர்ல, மேற்புறம் பிளேடும் அடிப்புறம் வடிகட்டியும் இருக்–கும். சாறு இறங்க கீழ ஒரு பாத்திரத்தை வச்சு, அது மேல ஜூஸரை வச்சு, பழங்களைப் போடணும். மேலே உள்ள கைப்பிடியை சுத்திட்டே வந்தா, கீழ இருக்கற பாத்திரத்தில ஜூஸ் சேரும்.

அடுத்ததா அரை லிட்டர் தண்ணியை கொதிக்க வெச்சுக்கணும். அதுல ஒரு கிலோ சர்க்கரையை கொட்டி, ஒரு டீஸ்பூன் சிட்ரிக் ஆசிட்-ஐ சேர்க்கணும். சர்க்கரை கரைஞ்சு நல்லா கொதிச்சதுமே, அதை இறக்கிடணும். இந்த சர்க்கரை கரைசலை நல்லா ஆறவிட்டு, அதுல வடிகட்டி வச்சிருக்குற பழச்சாறை சேர்க்கணும்.

இப்போ, இதுல டோனோவின் எஸன்ஸ் ஒரு டீஸ்பூனும், பிரிசர்வேட்டிவ்வான சோடியம் பென்ஸோயேட் அரை டீஸ்பூனும் கலக்கணும். இதை ஒரு சுத்தமான பாட்டில்ல ஊத்திடணும். அவ்வளவுதான். ஜூஸ் ரெடி!” என்றவர், இந்த ஜூஸை பயன்படுத்தும் விதத்தையும் விளக்கினார்..

”பிரிசர்வேட்டிவ் போட்டிருக்கறதால, அது ஜூஸோட செட் ஆக ரெண்டு நாள் ஆகும். அதுக்கு அப்புறமாத்தான் எடுத்து பயன்படுத்தணும். இந்த ஜூஸ் ஒரு வருஷம் வரை அப்படியே இருக்கும். ஃப்ரிட்ஜ்ல வெச்சா ஒன்றரை வருஷம் வரை இருக்கும். ஒரு பங்கு ஜூஸூக்கு மூணு பங்கு தண்ணி கலந்து குடிக்கலாம்.

இந்த முறையில அரை லிட்டர் ஜூஸ் செய்ய அதிகபட்சமே 25 ரூபாய்தான் செலவாகும். அதை குறைந்தபட்சம் 50 ரூபாய்க்கு விக்கலாம்.. டபுள் மடங்கு லாபம் கேரன்ட்டி!” என்றவர் இன்னும் சில டிப்ஸ்களை கொடுத்தார்..

”வாங்குறது, விக்கிறது இந்த ரெண்டுலயும் கவனமா இருந்தா இன்னும் அதிக லாபம் பார்க்கலாம். அதாவது எந்த பழங்கள் எந்த சீஸன்ல விலை கம்மியா கிடைக்கும்னு பார்த்து வாங்கி ஜூஸ் செஞ்சு வைக்கணும். இதுல செலவு 60%-க்கும் மேலயே மிச்சமாகும். அந்த சீஸன் போனதுக்கு அப்புறமா அதை விக்கணும். இதுல சூப்பர் லாபம் கிடைக்கும். மே, ஜூன் மாசங்கள்ல மாம்பழ ஜூஸையும், ஜூன், ஜூலையில எலுமிச்சை ஜூஸை-யும், செப்டம்பர்ல சாத்துக்குடி, ஆப்பிள், திராட்சை ஜூஸ்-களையும் செய்யலாம்..” என்றவர், மார்க்கெட்டிங் விவரங்களையும் தந்தார்..

”தெரிஞ்ச வீடுகள்ல தொடங்கி, ஜூஸ் கடைகள், பலசரக்கு கடைகள்னு எல்லா இடத்துலயும் கொடுக்கலாம். சேல்ஸ் கேர்ள்ஸ் சிலரைப் பிடிச்சு, அவுங்ககிட்ட கொடுத்துவிடலாம். அப்பறம் என்ன.. அமர்க்கள பிக் அப் தான்!” – ஸ்வீட்டாக முடித்தார் சௌமியா.

சம்மர் சீஸனுக்கு ஏற்ற மாம்பழ ஜூஸ் செய்ய..

தேவையான பொருட்கள்:
மாம்பழம் – ஒரு கிலோ. சர்க்கரை 1.6 கிலோ, சிட்ரிக் ஆசிட் 2 டீஸ்பூன், பொட்டாஸியம் மெட்டாபைசல்ஃபேட் 1 டீஸ்பூன்

செய்முறை: மாம்பழங்களை கழுவி, தோல் சீவி, கொட்டை நீக்கி மிக்ஸியில் அடித்துக் கொள்ளவும்.

ஒன்றரை லிட்டர் தண்ணீரை கொதிக்க வைத்து, அதில் சர்க்கரையை சேர்த்து, ஒரு டீஸ்பூன் சிட்ரிக் ஆசிட் ஐ சேர்க்கவும்.

சர்க்கரை கரைந்து நன்கு கொதித்தவுடன், இறக்கி ஆற வைத்து பின் மிக்ஸியில் அடித்து வைத்துள்ள மாம்பழத்தை கலக்கவும்.

பின் கொட்டாஸியம் மெட்டாபைசல்ஃபேட், மாம்பழ ஜூஸ் சேர்த்து கலந்து இரண்டு நாள் கழித்து பயன்படுத்தவும். ஒரு பங்குக்கு மூன்று பங்கு தண்ணீர் சேர்த்து பருகலாம்.

இன்னும் விபரங்களுக்கு இதோ இருக்கே சௌமியாவோட தொடர்பு எண்.. 9840609790.

 நன்றி: பெட்டகம்.பிளாக்ஸ்பாட்.காம்