Google Search Engine

தலைப்புகளில் தேட

தேதிவாரியாக பதிவுகள்

March 2012
S M T W T F S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031

Archives

Visitors since 22-3-13

Free counters!
இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 289,016 முறை படிக்கப்பட்டுள்ளது!

ஆமீனா அக்கா ஜவுளிக்கடை (உண்மைக் கதை)

1996ல் சேலத்தில் ஜவுளிக்கடையில் வேலை பார்த்தபோது  உடன்  வேலை பார்த்த சலீம் நண்பனாகி போனான்.  சலீமுடைய அக்கா ஆமீனா.அவனோடு நட்பு இறுக்கமாகி வீடு வரை போயி நாளடைவில் ஆமீனக்கா எனக்கும் அக்காவாகி போனார்.

தகப்பன் இல்லாத மிகவும் ஏழ்மையான குடும்பம் அது.  ஆமீனா அக்காவுக்கு 30 வயதிற்கும். ஆனால் திருமணம் ஆகாத முதிர்கன்னி. இவர்  தான் அக்குடும்பத்தில் மூத்தவர். மதராஸாவில் ஓதிய மாணவி (ஆலிம்மா). நல்ல மார்க்கப்பற்று உள்ளவர். எனக்கு ஆரம்பத்தில் மார்க்கம் என்றால் என்னவேன்று தெரியாமல் இருந்தபோது கற்றுக் கொடுத்த என் ஆரம்ப ஆசிரியை. கொஞ்சம் கருப்பாக இருப்பார். நிறமும் ஏழ்மையும் சேர்ந்து அவரை 30 வயதுவரை முதிர்கன்னியாக்கி வீட்டில் அடைத்து வைத்திருந்தது.

என் நண்பன் சலீம் படிப்பை தொடர முடியாமல் அவன் எதாவது வேலைக்கு போயி சம்பாதித்தால் தான் குடும்பம் ஓடும் என்கிற சூழலில் ஜவுளிக்டையில் வேலைக்கு சேர்ந்தவன்.

அவனுக்கு 17 வயது. அப்போது என்னுடைய வயதும் அதுதான். சலீமோடு சேர்த்து என்னையும் அவரின் சொந்த சகோதரனாக பாவித்து தாயுள்ளத்தோடு அன்பு செலுத்தியவர் ஆமீனாக்கா.

ஜவுளிக்கடை மெஸ் சாப்பாடு அவ்வளவு நல்லா இருக்காது.சலீமின் அம்மா வீட்டில் இட்லி,இடியாப்பம் சுட்டு விற்பார்கள். அதையும் சாப்பிட மாட்டேன்.  பழைய கஞ்சி சுண்டவைத்த குழம்பு காலையில் ரொம்ப நல்லாயிருக்கும். அக்காவின் சமையல் தான்.  ரொம்ப நல்லாயிருக்கும். இப்போது கூட அந்த மனமும் சுவையும் வந்து போகிறது. மறக்க முடியவில்லை. சலீமோடு சேர்ந்து நானும் அவனின் சின்ன சின்ன குடும்ப செலவுகளை பகிர்ந்து கொள்வேன். நானாக முன்வந்து செய்வேனே தவிர  அவர்கள் எப்போதும்  என்னிடம் எதிர்பார்த்ததில்லை.சலீமுடைய மாத சம்பளம் 800. என்னுடைய சம்பளமும் அதுதான்.

கடையில் பெண்கள் உள்ளாடை பிரிவில் கீதாஅக்கா,பாக்கியலஷ்மி அக்கா இவர்கள் வேலை பார்த்தார்கள்.  அத்தோடு அழகு சாதன பொருட்களை சேர்த்து அந்த பிரிவை முதலாளி விரிவுபடுத்தியதால் இன்னும் சில பெண் வேலையாட்களை சேர்க்க வேண்டிய சூழல். பாக்கியலஷ்மி அக்கா என்னை கூப்பிட்டு, “சலீம் அக்காவை இங்கு வேலைக்கு வரச் சொல்லி கேட்டுப் பார். நாம பாத்துகிருவோம். அவர்களுடைய குடும்ப வருமானமும் கூடும். என்ன சரியா?? நாளைக்கு கேட்டு விட்டு வந்து சொல்லு! முதலாளி இக்பாலிடம் நான் சொல்லி சேர்த்து விடுகிறேன்” என்றார்.

ஆமீனா அக்காவிடம்  நானும் பேசினேன். “சும்மா இருக்கீங்க! கடைக்கு வாங்க… மாதம் 600 ரூபாய் சம்பளம்,  மாலை 6 மணிக்கெல்லாம் நீங்க வீட்டுக்கு வந்து விடலாம். குடும்ப கஷ்டமும் கொஞ்சம் குறையும். என்ன சொல்றீங்கே?” என்றேன். “சரிப்பா” என அவரும் சம்மதம் சொன்னார். கடையில் சேர்த்து விட்டோம்.  அன்றைய காலகட்டங்களில் புர்கா போடும் இஸ்லாமிய பெண்களை காண்பது மிகவும் குறைவு. அக்கா கடைக்கு முதல் நாள் புர்கா போட்டுக் கொண்டு வேலைக்கு வந்தார். மாலையானதும்  வீட்டுக்கு போய் விட்டார்.

அக்கா கடையைவிட்டு போன பின் முதலாளி பாக்கியலஷ்மி அக்காவை கூப்பிட்டு என்னவோ சொன்னார்.  எனக்கு காதில் விழவில்லை. அதற்குபிறகு பாக்கியலஷ்மி அக்கா என்னிடம் வந்து “ஹைதரு நாளைலிருந்து அவுங்க வேலைக்கு வரவேண்டாம் என்று முதலாளி இக்பால் சொல்லுகிறார்” என்று அதிர்ச்சியை ஏற்படுத்தினார்.  “ஏங்க்கா? என்ன காரணம்?” என்றேன்.  “விடுப்பா வேற வேலை பார்ப்போம்” என்று முடித்துக் கொண்டார்.

ஆனால் எனக்கோ மனம் கேட்கவில்லை. முதலாளி அறைக்குப் போனேன்.(முதலாளி பள்ளபட்டி என்ற ஊரை சார்ந்தவர்). “அண்ணே! அவுங்க கஷ்டப்படுற குடும்பத்தைச் சேர்ந்தவங்க.  அதனால் நான் அக்காவை இங்கு கூட்டிகிட்டு வந்தேன். என்ன காரணத்திற்காக அவரை விலக்குனீங்க? சொல்ல முடியுமா?” என்றேன்.

“ஒன்னுமில்ல…… புர்கா போட்டுக் கொண்டு,  முழுவதுமாக மூடிக் கொண்டு  கடைக்கு வருகிறார். அது அழகில்லை அதான்……..” என்று இழுத்தார்.  (என்னை மீறி உதடுகளில் வரதுடித்த கோப வார்த்தைகளை அடக்கிக்கொண்டே) “அண்ணே அவுங்க வேலை செய்வது பெண்கள் உள்ளாடை பிரிவு. பெண்கள் தான் அங்கு வருவார்கள். அவர்களிடம் இவர் விற்க போகிறார். இதுக்கு எதுக்கு அழகு, கவர்ச்சி…???”  என்றேன்.  “அதற்கில்லை உள்ளாடைகள் மற்றும்  அழகு சாதன பொருட்கள்  என சின்ன சின்ன பொருட்களை விக்கிறோம்.  அவற்றை எடுத்து புர்காவுக்குள்  போட்டுக் கொண்டால் நமக்கு ஒன்றும் தெரியாது. கீதா, பாக்கியலஷ்மியெல்லாம்  புர்கா போடுவதில்லை. அதனால் திருடி ஒளிக்க வாய்ப்பில்லை.  மாலையில் வேலை முடிந்து போகும் போது மேலோட்டமாக பார்த்து அனுப்பி விடலாம். ஆனால் இவர் திருடி ஒளித்துக் கொண்டு போக வாய்ப்புண்டு” என்றார் முதலாளி.

எனக்கு வந்த கோபத்தை அடக்கிக் கொண்டு, “இக்பால் அண்ணே அவுங்க மதராஸா மாணவி (ஆலிம்மா.) இறையச்சமுள்ளவர். திருட வாய்ப்பில்லை. புரிந்து கொள்ளுங்கள்”  என்றேன்.  அதற்கவர் ஒரே வார்த்தையில் “புர்கா போடாமல் வருபதாக இருந்தால் வரச்சொல்” என்றார்.

அடுத்த நாள் காலை ஆமீனா அக்காவிடம் புர்கா போடாமல் கடைக்கு வரமுடியுமா….??? என்று மெதுவாக இழுத்தேன். ஒற்றை வரியில் “முடியாது” என்று மறுத்து, “என்னுடைய உடை இதுதான். புர்கா அணியாமல்  நான் வரமுடியாது என்று சொல்லிவிடு” என்றார் கோபமாக. அன்று அவருடைய பிடிவாதம் அப்போது மார்க்கம் தெரியாத எனக்கு புரியவில்லை.

நன்றி: வலையுகம்