Google Search Engine

தலைப்புகளில் தேட

தேதிவாரியாக பதிவுகள்

March 2012
S M T W T F S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031

Archives

Visitors since 22-3-13

Free counters!
இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 19,814 முறை படிக்கப்பட்டுள்ளது!

ரவா தோசை செய்யலாம் வர்ரீங்களா?

நேரடியாக மூலப்பொருட்களைக் கொண்டு எந்த ரெடிமேட் மிக்ஸ்களும் இல்லாமல் செய்யும் ரவா தோசை இது. முக்கியமாக வெளிநாட்டில் இருப்பவர்கள், மிக்ஸி கிரைண்டர் கைவசம் இல்லாதவர்கள், இதை சுலபமாய் செய்யலாம். முந்தின நாளே மாவு ஆட்டி வைக்காதபோதும் திடீர் தோசை வேண்டும் என்றாலும் இது கைகொடுக்கும்.

தேவையான பொருட்கள்:

ரவை (வெள்ளை ரவை, அதாவது சூஜி), அரிசிமாவு (பாக்கட்டில் கிடைக்கும், நைசாக அரைத்த மாவு), மைதா அல்லது All-purpose மாவு,
தயிர்

(கடையில் விற்கும் யோகர்ட் சரிப்பட்டுவராது. கடையில் வாங்குவதானால் பட்டர்மில்க் பயன்படுத்தலாம். இது நம் மோரை விடவும் கெட்டியாக, ஆனால் தயிரைவிட நீர்த்து இருக்கும்)

மிளகு, இஞ்சி, பச்சை மிளகாய், சீரகம், (தாளிக்க கடலைப் பருப்பு, விருப்பம்போல்)

செய்முறை:

ரவை, இருவகை மாவு, தயிர் ஆகிய நான்கையும் ஒரு பாத்திரத்தில் மேலும் நீர்விட்டுக் கலக்கி வைக்கவும். ப்ரிட்ஜில் இருந்து எடுத்த தயிர் என்றால் கொஞ்சம் வென்னீர் சேர்த்து அல்லது மைக்ரோவேவில் வைத்து வெதுவெதுவென்று இருக்கும்படி செய்துகொள்ளவும்.

இஞ்சியை பொடியாக நறுக்கிக்கொள்ளவும். பச்சை மிளகாயையும் சிறு வட்டங்களாக வரும்படி நறுக்கிக் கொள்ளவும்.

ஒரு வாணலியில் சிறிது என்ணை விட்டு வெள்ளை-உளுந்து, மிளகு இவற்றைப்போட்டு, உடனே நறுக்கிய இஞ்சி, மிளகாயைப் போட்டு லேசாக வறுத்து, கலக்கி வைத்துள்ள மாவில் கொட்டவும்.

உப்பையும் போட்டு, மாவில் நன்கு தண்ணீர் விட்டு, கலக்கி வைக்கவும். கிட்டத்தட்ட மோரைப்போல இந்த மாவு இருக்கவேண்டும். இல்லாவிட்டால் கண்-கண்ணாக தோசையில் ஒட்டை வராது, மெலிதாக வராது.

பிறகு..பிறகென்ன ஒரு அரை மணி நேரம் கழித்து தோசை ஊற்ற வேண்டியதுதான். ரவாதோசையில் மாவு தயாரிப்பது 50 சதவீத வேலைதான். மீதி 50 சதவீத வெற்றி தோசையை ஊற்றி வேக வைத்து எடுப்பதில்தான். சாதாரணமாக வீட்டில் செய்யும் தோசைக்கும் இதற்கும் சில வித்தியாசங்கள்:

மாவு மிகவும் நீர்த்து இருக்கவேண்டும், ஊற்றும்போதே தோசை வடிவத்தில் வரும்படி ஊற்றிவிட வேண்டும். ஊற்றியபின் தேய்க்கக் கூடாது. வட்டமாக வரவிட்டாலும் சரி, அங்கங்கே தீவுகளாக காலியிடம் இருந்தாலும் சரி.

அடுப்பு மெதுவாக எரியவேண்டும். எலக்ட்ரிக் அடுப்பு என்றால் சாதா தோசைக்கு வைக்கும் ஹீட்டில் ஒரு 70% வைக்கலாம். இல்லாவிட்டால் மேற்பரப்பில் கருகி, ஆனால் சரியாக வேகாத தோசைதான் வரும். தோசை வேக, சற்றுக் கூடுதல் நேரம் பிடிக்கும். கல்லில் அவ்வளவாக ஒட்டாது, எனவே முதலில் எண்ணை தடவவேண்டியதில்லை, ஆனால் ஊற்றியபின் எண்ணை விடலாம். என்ணை விட்ட அளவுக்கு மொறுமொறுப்பாக இருக்கும்.

தொட்டுக்கொள்வதற்கு காரச்சட்டினி, தேங்காய்ச் சட்டினி அல்லது அவரவர் விருப்பம்போல் சேர்த்துக் கொள்ளலாம்.

இத்தனை பொருட்கள் வாங்கி இத்தனை வேலை செய்வதற்கு ஈசியா எம் டி ஆர் ரவா தோசா மிக்ஸ் வாங்கி செஞ்சுடலாமேன்னு நினைக்கிறவங்களுக்கு, ஒரு பதில் இதில் எல்லாமே தமிழ்க் குடும்பங்களில் சமையல் சாமான்கள், எப்போதும் இருக்கக் கூடியவை. இன்னொண்ணு, இதில் விருப்பம்போல சின்ன சின்ன மாறுதல்களை (customization) செய்துக்கலாம். இதெல்லாம் முக்கியமில்லைன்னா கடையில் கிடைப்பது ஓகே, அது அவங்கவங்க விருப்பம் என்றுதான் பதில் சொல்லமுடியும்.

நன்றி: சித்தூர்க்காரனின் சிந்தனைச்சிதறல்கள்