Google Search Engine

தலைப்புகளில் தேட

தேதிவாரியாக பதிவுகள்

March 2012
S M T W T F S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031

Archives

Visitors since 22-3-13

Free counters!
இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 2,463 முறை படிக்கப்பட்டுள்ளது!

மால்வேர் பாதிப்பை நீக்கும் வழிகள்

உங்களுடைய கம்ப்யூட்டரை கெடுதல் விளைவிக்கும் மால்வேர் புரோகிராம்கள் பாதித்து விட்டனவா? அதற்கான அறிகுறிகள் தெரிகின்றனவா? வழக்கத்திற்கு மாறாக, கம்ப்யூட்டர் மெதுவாக இயங்குகிறதா? நிறைய பாப் அப் பெட்டிகள் கிடைக்கின்றனவா?

புதுப்புது பிரச்னைகள் தலை தூக்குகின்றனவா? அப்படியானால், உங்கள் கம்ப்யூட்டரை வைரஸ், ஸ்பைவேர் அல்லது வேறு ஏதேனும் மால்வேர் புரோகிராம்கள் பாதித்திருக்கக்கூடிய வாய்ப்புகள் உண்டு. இந்த பிரச்னைகள், ஹார்ட்வேரில் பிரச்னைகள் ஏற்பட்டாலும் தென்படலாம்; இருப்பினும் மால்வேர் இருக்கின்றனவா என்று சோதனை செய்து உறுதி செய்து கொள்வது நல்லது.

1. சேப் மோட் (Safe Mode):
உங்களுடைய கம்ப்யூட்டரை இன்டர்நெட் இணைப்பிலிருந்து நீக்கவும். கம்ப்யூட்டரை சுத்தப்படுத்த நீங்கள் தயாராகும்வரை இன்டர்நெட் இணைப்பினைத் தர வேண்டாம். இதன் மூலம் உங்கள் கம்ப்யூட்டரில் உள்ள மால்வேர், பரவுவதையும், உங்கள் தனிப்பட்ட தகவல்களை மற்றவர்களுக்கு அனுப்புவதனையும் தடுக்கலாம்.

உங்களுடைய கம்ப்யூட்டரில் மால்வேர் இருப்பதாக உணர்ந்தால், சேப் மோடில் (Safe Mode) பூட் செய்திடவும். இதற்கு கம்ப்யூட்டரை ஷட் டவுண் செய்து, பின்னர் எப்8 கீயின் இடம் அறியவும். பின்னர், பெர்சனல் கம்ப்யூட்டரை இயக்கி, திரையில் ஏதேனும் தென்பட்டவுடன், எப்8 கீயினைத் தட்டிக் கொண்டே இருக்கவும்.

இதனால், Advanced Boot Options என்ற மெனு கிடைக்கும். அதில் Safe Mode with Networking என்ற ஆப்ஷனைத் தேர்ந்தெடுத்து என்டர் தட்டவும். சேப் மோடில் உங்கள் கம்ப்யூட்டர் இதற்கு முன் இருந்ததைக் காட்டிலும் சற்று வேகமாக இயங்கு வதனைக் காணலாம். அவ்வாறு இயங்கி னால், மால்வேர் நிச்சயம் உங்கள் கம்ப்யூட்டரில் உள்ளது.

2. தற்காலிக பைல் நீக்கம்  (Temp Files) :
சேப் மோடில் இருந்தபடி, வைரஸ் ஸ்கேன் செய் திட நீங்கள் விரும்பலாம். அதற்கு முன்னர், தற்காலிக பைல்களை நீக்கவும். இதனால், டிஸ்க் இடம் சற்று கூடுதலாகக் கிடைக்கும்; வைரஸ் ஸ்கேனிங் வேகமாக நடைபெறும். விண்டோஸ் இயக்கத்துடன் வரும் Disk Cleanup utility என்பதைப் பயன்படுத்த,  Start, All Programs (or just Programs), Accessories, System Tools, Disk Clean எனச் செல்லவும்.

3. மால்வேர் ஸ்கேனர் தரவிறக்கம்:
உங்கள் கம்ப்யூட்டரில் செட் செய்து வைத்திருந்த ஆண்ட்டி வைரஸ் புரோகிராமிற்குப் பதிலாக, வேறொரு மால்வேர் ஸ்கேனிங் அல்லது எதிர்ப்பு புரோகிராமினை இயக்கவும். இதற்காக, இணையத்திலிருந்தும் இறக்கிக் கொள்ளலாம். லட்சக் கணக்கில் மால்வேர் புரோகிராம்கள் மற்றும் வைரஸ்கள் இருப்பதால், எந்த ஒரு ஆண்ட்டி வைரஸ் மற்றும் மால்வேர் எதிர்ப்பு புரோகிராம்கள் அவை அனைத்தையும் நீக்கும் என எண்ண வேண்டாம்.

நாம் எப்போது நாமாக இயக்குகிறோமோ, அப்போது இயங்கத் தொடங்கி, மால்வேர்களை அழிக்கும் புரோகிராம்கள் பல உள்ளன. அவற்றில் ஒன்றை தரவிறக்கம் செய்து பயன் படுத்தவும். அதனை அடுத்து, கம்ப்யூட்டரில் உள்ள ஆண்ட்டி வைரஸ் புரோகிராமினைப் பயன்படுத்தலாம். கீழ்க்காணும் புரோகிராம்கள் இந்த வகையில் அதிகப் பயனுள்ளவை. BitDefender Free Edition, Kaspersky Virus Removal Tool, Malwarebytes, Norman Malware Cleaner, மற்றும் Super Anti Spyware.

4. மால்வேர் பைட்ஸுடன் (Malwarebytes) ஸ்கேன்:
இந்தவகையில் மிகச் சிறந்த Malwarebytes புரோகிராமினை இயக்குவது நல்லது. உங்களிடம் இந்த புரோகிராம் இல்லை என்றால், http://www.malwarebytes. org/ என்ற இணைய தளத்திலிருந்து தரவிறக்கம் செய்து கொள்ளலாம்.
இதனை கம்ப்யூட்டரில் இன்ஸ்டால் செய்த பின்னர், இணைய இணைப்பினை நிறுத்திவிட்டு, ஸ்கேன் செய்திடலாம். உங்கள் கம்ப்யூட்டரில் இதனை தரவிறக்கம் செய்திட முடியாத போது, மற்றொரு கம்ப்யூட்டரின் இணைய இணைப்பில் பெற்று, இதில் இன்ஸ்டால் செய்திடலாம்.

மால்வேர் பைட்ஸ் ஸ்கேன் செய்திடுகையில் ‘Perform quick scan’ என்ற ஆப்ஷனைத் தேர்ந்தெடுத்து இயக்கவும். அதிக பட்சம் 20 நிமிடங்கள் முதல் 30 நிமிடங்கள் வரை இந்த ஸ்கேன் பணி செயல்படுத்தப்படும். இந்த பணி நடைபெறுகையில், இந்த ஸ்கேனர் மறைந்து பின்னர் அதனை மீண்டும் பெற இயலவில்லை என்றால், உங்கள் கம்ப்யூட்டரில் ரூட்கிட் என்ற வைரஸ் அல்லது அதனைப் போன்று செயல்படும் வைரஸ் உள்ளது என்பது உறுதி.

ஏனென்றால், இந்த வகை வைரஸ்கள், எந்த ஸ்கேனரையும் இயங்கவிடாமல், அவற்றையும் முடக்கி விடும் தன்மை கொண்டன. அப்படிப்பட்ட வைரஸ் இருந்தால், உங்கள் பைல்கள் அனைத்தையும் பேக் அப் செய்த பின்னர், விண்டோஸ் இயக்கத்தை மீண்டும் ரீ இன்ஸ்டால் செய்வதே சிறந்த வழியாகும்.

மால்வேர் பைட்ஸ் வெற்றிகரமாக இயங்கி முடித்த பின்னர், பைல்களின் நிலை குறித்த அறிக்கை ஒன்று டெக்ஸ்ட் பைலாகக் கிடைக்கும். சந்தேகப்படும் படியான பைல்களையும், பாதிக்கப்பட்ட பைல்களையும் பட்டியலிட்டுக் காட்டும். இவற்றை நீக்கவா என்ற கேள்வியும் கேட்கப்படும். இவற்றை நீக்குவதே நல்லது.

இவை நீக்கப்பட்டவுடன் மால்வேர் பைட்ஸ் உங்கள் கம்ப்யூட்டரை மீண்டும் இயக்குமாறு கேட்கும். ஓகே கிளிக் செய்து இயக்கவும். மால்வேர் புரோகிராம்கள் நீக்கப்பட்டு, கம்ப்யூட்டர் மறுபடியும் இயங்கத் தொடங்கியவுடன், வழக்கமான ஆண்ட்டி வைரஸ் புரோகிராம் மூலம், கம்ப்யூட்டரின் அனைத்து ட்ரைவ்களையும் சோதனை செய்திடவும்.

5. பிரவுசரை சரி செய்க:
மால்வேர் தொகுப்புகள், விண்டோஸ் சிஸ்டம் பைல்களைக் கெடுப்பதில் முக்கிய பங்கு வகிக்கின்றன. அத்துடன் நம் பிரவுசரில் மாற்றங்களை ஏற்படுத்தி, தொடர்ந்து கம்ப்யூட்டரில் இத்தகைய மால்வேர் புரோகிராம்கள் நுழைந்திட வழி வகுக்கின்றன. எனவே அடுத்த இணைய இணைப்புக்கு முன்னர், பிரவுசரின் அனைத்து செட்டிங்குகளையும் ஒருமுறை சோதனை செய்து பார்த்துவிடுவது நல்லது.

6. சிஸ்டம் பைல் சரி செய்தல்:
ஒன்றும் செயல்படுத்த முடியாமல் போய், விண்டோஸ் இயக்க பைல்களை மீண்டும் பதிப்பதுதான் ஒரே வழி என்றால், அனைத்து பைல்கள், ட்ரைவர்களை பேக் அப் எடுக்க வேண்டும். இதற்கு Double Driver என்ற புரோகிராம் உதவும். உங்களிடம் ட்ரைவர் டிஸ்க்குகள் இல்லை என்றாலும், இந்த புரோகிராம் உங்களுக்கு உதவிடும்.

7. கம்ப்யூட்டரை “சுத்தமாக’ வைத்திடுக:
கம்ப்யூட்டரில் எப்போதும் அப்டேட் செய்யப்பட்ட ஆண்ட்டி வைரஸ் புரோ கிராம் செயல்பாட்டில் இருக்க வேண்டும். கட்டணம் செலுத்தி இதனை வாங்கி ஒவ்வொரு ஆண்டும் புதுப்பிக்க இயலாவிட்டால், இலவசமாகக் கிடைக்கும் Avast, AVG, Comodo, மற்றும் Microsoft Security Essentials போன்ற தொகுப்புகளைப் பயன்படுத்த வேண்டும்.

வழக்கமான ஆண்ட்டி வைரஸ் புரோகிராம்களுடன் OpenDNS போன்ற புரோகிராம்களைப் பயன்படுத்துவதும், மால்வேர் புரோகிராம்களிடமிருந்து கம்ப்யூட்டரைக் காப்பாற்றும். நம் பணிகளுக்கு என்றும் கம்ப்யூட்டரையே நம்பி இருப்பதால், நம் முக்கிய ஆவணங்களை அதில் மட்டுமே பல வேளைகளில் பதிந்து வைத்திருப்பதால், கம்ப்யூட்டரை வெளித் தாக்குதல்களில் இருந்து காப்பாற்றுவது நல்லது.

நன்றி: தெரிந்து கொள்ளலாம் வாங்க