Google Search Engine

தலைப்புகளில் தேட

தேதிவாரியாக பதிவுகள்

March 2012
S M T W T F S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031

Archives

Visitors since 22-3-13

Free counters!
இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 68,439 முறை படிக்கப்பட்டுள்ளது!

100 மார்க் உணவு எது- அம்மாக்களுக்கு டிப்ஸ்

ஆரம்பித்துவிட்டது எக்சாம் கவுன்ட் டவுன்… பரீட்சை பயமும் டென்ஷனும் பிள்ளைகளைவிட, அம்மாக்களுக்கே அதிகம்  நன்றாகப் படிக்கவும், படித்ததை நினைவில் வைத்துக்கொள்ளவும் வெண்டைக்காயில் இருந்து வல்லாரை வரை சகலத்தையும் சமைத்துக் கொடுக்கும் அம்மாக்கள் எக்கச்சக்கம்…

தேர்வு நேரத்து டயட் எப்படி இருக்க வேண்டும், எதையெல்லாம் தவிர்க்க வேண்டும்- அம்மாக்களுக்கு டிப்ஸ் தருகிறார் டயட்டீஷியன் புவனேஸ்வரி.

உணவை விட முக்கியம் உறக்கம். என்னதான் ஆரோக்கிய உணவு கொடுத்தாலும், போதுமான அளவு தூக்கம் இல்லாவிட்டால், உள்ளே சென்ற உணவால் ஒரு பயனும் இல்லை. ஒழுங்காகப் படிக்கிறார்களா எனப் பார்ப்பதைப் போலவே, நன்றாகத் தூங்குகிறார்களா என்பதையும் பாருங்கள்.  என் பிள்ளைக்குக் காரசாரமா இருந்தாத்தான் இறங்கும் என நீங்கள் பெருமை பேசுவதை, தேர்வுகள் முடிகிற வரை நிறுத்தி வையுங்கள்.

அதிக காரம், அதிக மசாலா, எண்ணெயில் பொரித்த, வறுத்த உணவுகள் தேவையில்லாத மன அழுத்தம், தூக்கமின்மை, வயிற்றுக்கோளாறுகளை உருவாக்கலாம். படிக்கிற போது இடையில் அடிக்கடி தண்ணீர் குடிக்கிறார்களா என்றும் சரி பாருங்கள். ‘தண்ணிதானே… அதுல என்ன சத்தா இருக்கு’ எனக் கேட்கலாம்.

மற்ற சத்துகள் கிரகிக்கப்படவும், தேவையற்ற கழிவுகள் வெளியேறவும் தண்ணீர் மிகமிக முக்கியம். தண்ணீர் சத்து இல்லாமல் வறண்டு போனால், கண்கள் மஞ்சள் நிறமாகலாம். சிறுநீரும் மஞ்சள் நிறத்தில் வெளியேறலாம். களைப்பாகவும் உணர்வார்கள். நிறைய காய்கறிகளும் பழங்களும் படிக்கிற
பிள்ளைகளுக்கு அவசியம்.

இது கூடாது, அது ஆகாது என எந்தக் கட்டுப்பாடும் இல்லாமல், எல்லா காய் களையும் பழங்களையும் கொடுக்கலாம். சிலருக்கு தேர்வு பயத்தில் வயிற்றுப் போக்கும், இன்னும் சிலருக்கு மலச்சிக்கலும் வரலாம். இந்த இரண்டுக்குமே பழங்களும், காய்கறிகளும் பெஸ்ட்.காலை உணவுக்கு வறுத்த, பொரித்த, எண்ணெய் சேர்த்த உணவுகள் வேண்டாம்.

சில குழந்தைகளுக்கு தேர்வு எழுதப் போகிற பயத்தில் சாப்பாடே இறங்காது. எதைச் சாப்பிட்டாலும் வயிறு கெட்டுப்போன மாதிரி உணர்வார்கள். இதைத் தவிர்க்க அவர்களுக்கு ஆவியில் வேக வைத்த உணவுகளைக் கொடுக்கலாம்.இரவு தூங்கப் போவதற்கு முன் சூடான பால் கொடுக்கலாம். நல்ல தூக்கத்துக்கு உதவும்.

என்னதான் பிசியான அம்மாக்களாக இருந்தாலும், தேர்வு நேரத்தில் பிள்ளைகள் விரும்பிக் கேட்பதை செய்து கொடுங்கள். ‘அம்மா தன்னுடனேயே இருக்கிறார்’ என்கிற எண்ணமே பிள்ளைகளுக்கு பாதி டென்ஷனை விரட்டும்.தூக்கத்தைத் தவிர்த்துப் படிப்பது சரியானதல்ல. தூக்கம் வராமலிருக்கவென்றே காபி, டீயை அளவுக்கு அதிகமாக எடுத்துக்கொள்வது சரியானதில்லை.

சாதாரண டீயைவிட, கிரீன் டீ பெட்டர். அதனால் மிகப்பெரிய நன்மைகள் வந்துவிடும் என்று சொல்ல முடியாது. படிப்புக்கு இடையிடையே சிறிது  ஓய்வு அவசியம். அந்த நேரத்தில் அவர்களுக்குப் பிடித்த எந்த விஷயத்தை வேண்டுமானாலும் செய்ய அனுமதியுங்கள். பாட்டு கேட்பதோ, டி.வியில் காமெடி பார்ப்பதோ… எதுவானாலும் தினம் சிறிது நேரமாவது ஏதோ ஒரு உடற்பயிற்சி செய்வது, தேர்வுக்குப் படிக்கிற பிள்ளைகளுக்கு அவசியம்.

வாக்கிங், சைக்கிளிங் என ஏதோ ஒன்று… உடற்பயிற்சி செய்கிற போது, உடலில் ‘ஹேப்பி ஹார்மோன்கள்’ சுரந்து, மனதையும் உடலையும் உற்சாகப்படுத்தும்.

நன்றி: தினகரன்