Categories

Archives

A sample text widget

Etiam pulvinar consectetur dolor sed malesuada. Ut convallis euismod dolor nec pretium. Nunc ut tristique massa.

Nam sodales mi vitae dolor ullamcorper et vulputate enim accumsan. Morbi orci magna, tincidunt vitae molestie nec, molestie at mi. Nulla nulla lorem, suscipit in posuere in, interdum non magna.

இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 14,684 முறை படிக்கப்பட்டுள்ளது!

சுய தொழில்கள் – பேப்பர் தட்டு தயாரிப்பது எப்படி

இன்று பிளாஸ்டிக் பொருட்கள் எங்குமே தடை செய்யப்பட்டு விட்டன. பிளாஸ்டிக் யுகம் முடிந்து விட்டது எனலாம். இனி எங்கும் எப்போதும் பேப்பர் தட்டு, கப்களுக்குத் தான் டிமாண்ட் ஏற்படும் சூழல். சுமாரான முதலீட்டில் ஈடுபட நினைப்பவர்களுக்கு ஏற்ற பிஸினஸ். இங்கு நான் ஒரளவுக்கு அறிமுக நிலையைப் பற்றித் தான் விளக்கியிருக்கிறேன். தொழில் தொடங்கும் முன் சம்பந்தப்பட்ட துறையை அணுகி மேலதிக விவரங்கள் பெற்றுக் கொள்ளவும்.

சுற்றுச்சூழலுக்கு கேடுவிளைவிக்காதவை பேப்பர் தட்டுகள். ஆடம்பரமாகவும் இருக்கும். வாழைஇலை, பிளாஸ்டிக் தட்டுகளுக்கு மாற்றாக விளங்கும் இவற்றைதயாரித்து விற்றால் நல்ல லாபம் பார்க்கலாம் என்கிறார் கோவை மாவட்டம் பொள்ளாச்சி அடுத்த சின்னாம்பாளையத்தில் உள்ள கற்பக விருட்சம் மகளிர் சுயஉதவி குழுவை சேர்ந்த சுகுணா. அவர் கூறியதாவது: கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு மகளிர் குழுவை துவக்கினோம். உறுப்பினர்கள் 5 பேர்சேர்ந்து, பேப்பர் பிளேட் தயாரிக்க பயிற்சி பெற்றோம். வங்கியில் ரூ .5 லட்சம் கடன் வாங்கி தொழிலுக்கு தேவையான மெஷின்களை நிறுவினோம்.

5   பேரும் பக்கத்து பக்கத்து வீடுகளை சேர்ந்தவர்கள் என்பதால் வீட்டு வேலைகளை சீக்கிரம் முடித்து விட்டு பேப்பர் பிளேட் தயாரிக்கும் பணிகளை தொடங்குவோம். ஒருவர் பேப்பரை கட்டிங் செய்யும் இயந்திரத்தையும், மற்றொருவர் பிளேட் தயாரிக்கும் மெஷினையும் இயக்குவோம். மற்ற 2 பேர் பேக்கிங் செய்வார்கள். உற்பத்தியோடு விற்பனையையும் நாங்களே கவனிக்கிறோம். மின்தடை இல்லாமல் இருந்தால், ஒருநாளில் 10 ஆயிரம்பிளேட் தயாரிக்கலாம். ஒரு பிளேட்டுக்கு 20 பைசாலாபம். மாதம்ரூ.18 ஆயிரம் வங்கிக்கு செலுத்துகிறோம். தினசரி சம்பளமாக நாங்கள் தலா ரூ.100 எடுத்து கொள்கிறோம். அலுவலகம், வீடு ஆகியவற்றில் நடை பெறும் விசேஷங்களில் பேப்பர்பிளேட் பயன்பாடு அதிகரித்து வருவதால் தயாரித்தவுடன் விற்றுவிடுகிறது.

பொள்ளாச்சி தொழிற்பேட்டையில் உள்ள தொழிற்சாலைகளிலும்எங்கள்பேப்பர்தட்டுகளைவிற்றுவருகிறோம். இதனால்நல்லலாபம்கிடைக்கிறது. பெண்கள்வீட்டில்இருந்தபடியேசெய்வதற்குஏற்றதொழில்இது. நீண்டநாள்ஸ்டாக்வைத்துவிற்கலாம். நல்லவருமானமும்கிடைக்கும்.

கட்டமைப்பு: இயந்திரங்கள்நிறுவ 10 அடிநீள, அகலத்தில்ஒருஅறை, தேவையானபேப்பர், உற்பத்தியான பிளேட்களை இருப்புவைக்க மற்றொரு அறை, 1.5 ஹெச்பி மின்இணைப்பு (ரூ.3 ஆயிரம்). முதலீடு: பேப்பர்பிளேட்இயந்திரம் 1 (ரூ.1.4 லட்சம்), பேப்பரை 5, 6, 7, 8, 9, 10, 12ஆகிய இஞ்ச் அளவுகளில் வட்டவடிவில்வெட்ட பிளேடுகள் மற்றும் அந்த அளவுகளில் பிளேட் செய்வதற்கான டை 7 (ரூ.54 ஆயிரம்) எனமொத்தம் முதலீடு ரூ.1.94 லட்சம்.

உற்பத்திபொருட்கள்: பாலிகோட்ஒயிட்பேப்பர் (திக்ரகம் டன்ரூ.72 ஆயிரம், நைஸ்ரகம்ரூ.40 ஆயிரம்) சில்வர்திக் (டன்ரூ.38 ஆயிரம்), சில்வர்நைஸ் (டன்ரூ.30 ஆயிரம்), புரூட்டி பேப்பர்திக் (டன்ரூ.50 ஆயிரம்), நைஸ் ரகம் (ரூ.38 ஆயிரம்) மற்றும் பேக்கிங்கவர், லேபிள், செலோடேப்.

கிடைக்கும்இடங்கள்: பேப்பர்பிளேட்மெஷின் சென்னை, கோவை உள்ளிட்ட பெருநகரங்களிலும், பேப்பர்களில் பாலிகோட் ஒயிட், சில்வர்திக் ஆகியவை சிவகாசி, சில்வர்நைஸ் டெல்லி, புரூட்டி பேப்பர்திக், நைஸ்ஆகியவை கேரளாவிலும் மலிவாககிடைக்கின்றன.

உற்பத்திசெலவு: வாடகை, மின்கட்டணம், உற்பத்திபொருட்கள், கூலி  6 இஞ்ச்பேப்பர்பிளேட் தயாரிக்க 20பைசா, 7 இஞ்ச்தயாரிக்க 45 பைசா, 8 இஞ்ச் 60 பைசா, 10 இஞ்ச்ரூ.1, சில்வர்திக் 8 இஞ்ச்ரூ.1, 10 இஞ்ச் ரூ.1.30, சில்வர்நைஸ் 6 இஞ்ச் 25 பைசா, 7 இஞ்ச் 45 பைசா, புரூட்டிபேப்பர் 8 இஞ்ச்ரூ.1, 10 இஞ்ச்ரூ.1.30 செலவாகிறது. 10 ஆயிரம் பிளேட்தயாரிக்க ஆகும் செலவுரூ.7700. மாதத்தில் 25 நாளில் 2.5 லட்சம்பிளேட்உற்பத்திக்கு ரூ.1.92 லட்சம்தேவை.

வருவாய்: ஒருபேப்பர்பிளேட்டுக்கு 20 பைசாலாபம் கிடைப்பதால் தினசரி லாபம் ரூ.2 ஆயிரம். 25 நாளில் ரூ.50 ஆயிரம் லாபம் கிடைக்கும்.

விற்பனைவாய்ப்பு: கேட்டரிங் நடத்துபவர்கள், சமையல் ஏஜென்ட்கள், விழாக்கள், அன்னதான நிகழ்ச்சி நடத்துபவர்கள் பேப்பர் பிளேட்களை வாங்குகிறார்கள். அவர்களுக்கு நேரடியாக சப்ளை செய்யலாம். கடைகளுக்கும் சப்ளை செய்யலாம். தரம், குறைந்தலாபம், நேரடி அணுகு முறை இருந்தால் நிறைய ஆர்டர் கிடைக்கும்.

 தயாரிப்பதுஎப்படி?

பேப்பர் பிளேட் இயந்திரம் இரண்டு பாகங்களை கொண்டது. ஒன்று கட்டிங் மெஷின், இரண்டாவது பேப்பர் பிளேட்டை மெஷின். இரண்டும் மின்சாரத்தில்இயங்கக்கூடியவை. தயாரிக்க வேண்டிய பிளேட்டின் அளவுக்குரிய கட்டிங்வளையத்தை கட்டிங்மெஷினில் பொருத்தவேண்டும். கட்டிங் வளையத்துக்கு கீழ் பிளேட்டுக்குரிய பேப்பரைமொத்தமாகவைத்து இயக்கினால் கட்டிங்செய்யப்படும். வட்டவடிவில் பேப்பர்கள் தனித்தனியாக கிடைக்கும். நைஸ்ரக பேப்பராக இருந்தால் 100 எண்ணிக்கைவரையும் திக்ரகமென்றால் 30 முதல் 40 வரை கட்டிங் செய்யலாம்.

கட்செய்த பேப்பர்களை பிளேட்டை மெஷினில் உள்ள அச்சின் மேல் வைத்து இயக்கினால் பேப்பரின் ஓரங்கள் வளைந்து பிளேட்களாக மாறும். பேப்பரை பிளேட்டாகவளைக் கடைமெஷின் 5 டிகிரிவெப்பம் இருக்க வேண்டும். அதற்கு உற்பத்தியை துவக்கும் முன்புடை மெஷினை 90 டிகிரிக்கு சூடேற்ற வேண்டும்.

நிமிடத்திற்கு 30 பிளேட்தயாராகும். 40 பிளேட்களாக பிளாஸ்டிக் பேப்பரில் சுற்றி செலோடேப் ஒட்டி பேக்கிங் செய்ய வேண்டும். இப்போது பேப்பர்பிளேட் விற்பனைக்கு தயார்.

பேப்பர்பிளேட் இயந்திரங்களை விற்பனையகங்களில் பார்வையிடலாம். அரை மணி நேரத்தில் இயக்குவதை கற்றுக் கொள்ளலாம். எளிய தொழில் நுட்பம், சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கு உத்தரவாதம் அளிக்கும் இந்த தொழிலுக்கும திப்புகூடி வருவதால்வ ங்கிகள் எளிதாக கடன் உதவி வழங்குகின்றன.

 பேப்பர் டீ கப் தயாரிப்பு:
அதிகரித்து வரும் சுற்றுச்சூழல் விழிப்புணர்வால் யாருக்கு அதிக பலன் என்று கேட்டால் கண்ணை மூடிக்கொண்டு சொல்லிவிடலாம், பேப்பர் கப் தயாரிப்பவர்களுக்கு என்று!  டீ கடையில் ஆரம்பித்து, கல்யாண வீடு வரை தனக்கென ஒரு இடத்தைப் பிடித்து விட்டது பேப்பர் கப்கள்.

சுகாதாரத்திற்கு சுகாதாரம், சுற்றுச் சூழலுக்கும் நல்லது என்ற இரட்டைக் காரணத்தால் இதற்கான மவுசும் தேவையும் கூடிக்கொண்டே இருக்கிறது. திருமண வீடுகளில் மட்டுமல்ல, டீக்கடைகளிலும் இதுதான் நிலைமை
.
சந்தை வாய்ப்பு!
டீக்கடைகளில் கண்ணாடி கிளாஸ்களை பராமரிப்பதில் உள்ள சிரமத்தின் காரணமாக பேப்பர் கப்கள் மிகச் சிறந்த மாற்றாகி உள்ளது. பெரும்பாலான அலுவலகங்களும் பேப்பர் கப்களுக்கு மாறிவிட்டதால், இதற்கான சந்தை வாய்ப்பு பிரகாசமாக உள்ளது. எனவே புதிதாகத் தொழில் தொடங்க நினைப்பவர்களுக்கு சரியான தேர்வாக இருக்கிறது இந்த பேப்பர் கப் தயாரிப்பு. உள்ளூர் மட்டுமல்லாமல் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் அளவுக்கு இந்த பிஸினஸில் வாய்ப்புகளும் அதிகம்.

மூலப் பொருளான பேப்பர் ரோல்களை வாங்கி மெஷின் மூலம் எளிதாக தயாரித்து விடலாம். மெஷினை இயக்கத் தெரிந்தால் போதுமானது. தயாரான கப்களை பேக்கிங் செய்துவிட்டால் மார்க்கெட்டுக்கு ரெடி!

இத்தொழிலைத் தொடங்கும் முதலீட்டாளர்கள் கையிலிருந்து ஐந்து சதவிகிதத் தொகையை முதலீடு செய்தால் போதுமானது. மீதி 95 சதவிகித தொகையை வங்கிக் கடன் மூலம் பெற்றுக் கொள்ளலாம். குறைந்தபட்சம் ஆறரை லட்சம் ரூபாய் முதலீடாகக் கொண்டு இத்தொழிலைத் தொடங்கலாம்.
இதன் முக்கிய மூலப்பொருளான பேப்பர் தமிழ்நாட்டிலேயே கிடைக்கிறது. இந்த பேப்பர் ரோலின் தரத்தைப் பொறுத்துத்தான் பேப்பர் கப்பின் தரமும் இருக்கும். ஜி.எஸ்.எம். அளவு களைப் பொறுத்தே இதன் தரம் இருக்கும்.

இந்த பிஸினஸுக்கு அதிகளவில் இடம் தேவைப்படாது. குறைந்தபட்சம் 350 சதுரடி இடம் போதுமானது. கப்களைத் தயார் செய்யும் இடமும் சொந்தமாகவே இருக்க வேண்டும் என்பதில்லை. வாடகைக்கு இடம் கிடைத்தால்கூட போதுமானது. வழியில்லை எனில் வீட்டிலேயேகூட இயந்திரத்தை நிறுவி தயாரித்துக் கொள்ளலாம்.

பேப்பர் ரோல்களை இயந்திரத்தில் கொடுத்தால் விரும்பிய அளவிலான கப்கள் கிடைக்கும். இந்த இயந்திரங்கள் தமிழ்நாட்டிலேயே கிடைக்கிறது என்பது கூடுதல் சிறப்பு.

பேப்பர் கப் தயாரிப்பு பிரதமரின் சுயவேலை வாய்ப்பு திட்டத்தின் கீழ் வருவதால் மானியம் கிடைக்கிறது. முதலீட்டு தொகையில் நகரம் எனில் 25%மும், கிராமம் எனில் 35 சதவிகிதமும் மானியம் கிடைக்கும். உதாரணமாக பத்துலட்ச ரூபாய் முதலீடு என்றால் இரண்டரை லட்ச ரூபாய் மானியமாக கிடைக்கும். இந்த மானியத் தொகையை நமது வங்கிக் கணக்கில் வரவு வைத்து விடுவார்கள். நான்கு வருடங்களுக்கு பிறகு இத்தொகையை நமது கடனில் வங்கி கழித்துக் கொள்ளும். மேலும் நாம் வங்கியில் வாங்கியிருக்கும் கடனில் மானியத் தொகை போக மீதமுள்ள தொகைக்கு வட்டி கட்டினால் போதுமானது. .

ஆண்டுக்கு 300 நாட்கள், நாள் ஒன்றுக்கு ஒரு ஷிஃப்ட் வீதம் வேலை பார்த்தால், 75 லட்சம் கப்களைத் தயாரிக்கலாம். இதற்கான மூலப்பொருளான ஒரு டன் பேப்பருக்கு 74,000 ரூபாய் செலவாகும்.

திறமையான வேலையாட்கள் – 2, சாதாரண வேலையாட்கள் – 8, மேலாளர் – 1 , விற்பனையாளர் – 1 என மொத்தம் 12 ஆட்கள் தேவைப்படும். ஒரு நாளைக்கு 69 யூனிட் மின்சாரம் தேவைப்படும்.. ஆண்டுக்கு 300 நாட்கள் வேலை செய்தால், 90% உற்பத்தித் திறனுக்கு 18,662 யூனிட் வரை செலவாகும். ஒரு நாளைக்கு எட்டு மணி நேரம் இயந்திர பயன்பாடு இருக்கும்.

பலன்கள்

* ஆண்டு முழுவதும் தேவை இருக்கும்.

* உடனடியாக விற்காவிட்டால் கெட்டுப்போய்விடும் என்ற பிரச்னை இல்லை. .

* அதிகப்படியான நிலம் தேவையில்லை; வேலையாட்கள் தேவையில்லை; மிகப் பெரிய தயாரிப்பு முறையும் கிடையாது என்பதால் இளைஞர்கள், பெண்களுக்கு மிகவும் சாதகமான தொழில். குறிப்பாக சுயஉதவி குழுக்கள் மூலம் பொருட்களைத் தயாரிக்கும் பெண்கள் இத்தொழிலில் சுலபமாக இறங்கலாம்.

சந்திக்க வேண்டிய சவால்கள்

* பலரும் இத்தொழிலில் இறங்க வாய்ப்புண்டு என்பதால் எதிர்காலத்தில் போட்டி அதிகமாகி, நாம் விற்கும் பொருட்களுக்கான விலை குறையலாம்.
* பேப்பர் விலை அதிகரிக்கும் பட்சத்தில் மூலப்பொருள் செலவு அதிகரித்து, விலை உயர்த்த வேண்டி வரும்.

* பேப்பர் கப்கள் மிக லேசானவை என்பதால் மிகுந்த ஜாக்கிரதையோடு கையாள வேண்டும்.

Engr.Sulthan