Google Search Engine

தலைப்புகளில் தேட

தேதிவாரியாக பதிவுகள்

Archives

Visitors since 22-3-13

Free counters!
இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 8,101 முறை படிக்கப்பட்டுள்ளது!

சாதனை மாணவி விசாலினி

வயது பதினொன்று (பிறந்த தேதி:23.05.2000). IQ லெவல் 225. நம்ப முடிகிறதா? நம்பத்தான் வேண்டும். ஏனெனில், விசாலினி படைத்துள்ளது உலக சாதனை. கின்னஸ் சாதனையாளரான கிம்-யுங்-யோங்கின் (Kim Ung-Yong) I.Q. அளவான 210 என்பதைவிட, இது இன்னும் அதிகம். இந்தியாவென்பதால்தான் இன்னும் இவள் புகழ் பரவவில்லை. இன்னொரு நாடென்றால், இவளை இதற்குள் உலகமறிய பாராட்டியிருப்பார்கள். ஆம், நெல்லை மண்ணின் மகள் இவள்.

பாளையங்கோட்டையை சேர்ந்த, 11 வயது மாணவி, இன்ஜினியரிங் படிப்பு முடித்தவர்கள் எழுத வேண்டிய எம்.சி.பி., மற்றும் சி.சி.என்.ஏ., தேர்வுகள் உட்பட, ஏழு தேர்வுகளை எழுதி, சாதனை படைத்துள்ளார். படிப்பில் மேலும் பல சாதனைகள் படைப்பதற்கு, மத்திய, மாநில அரசுகளின் உதவி கிடைத்தால், ஏதுவாக இருக்கும் என்றும் கூறுகிறார்.

திருநெல்வேலி மாவட்டம், பாளையங்கோட்டை, சங்கர் காலனி செண்பகம் நகரை சேர்ந்த, கல்யாண குமாரசாமி – சேது ராகமாலிகா தம்பதியின் மகள் விசாலினி, 11. இவர், பாளையங்கோட்டையில் உள்ள, ஐ.ஐ.பி.இ., லட்சுமி ராமன் மெட்ரிக் குலேஷன் பள்ளியில், எட்டாம் வகுப்பு படித்து வருகிறார்.

ஐ.க்யூ., அதிகம்:-
சாதாரண மனிதர்களை விட நுண்ணறிவுத் திறன் (ஐ.க்யூ.,) அதிகம் உள்ளதால், நான்கு வகுப்புகளை, இரண்டு ஆண்டுகளில் படித்து தேர்ச்சி பெற்றதன் மூலம், 11 வயதில், எட்டாம் வகுப்பு படித்து வருகிறார். இவருக்கு, இரண்டரை வயதாகும் போதே, இவரை பரிசோதித்த டாக்டர், மற்றவர்களை விட நுண்ணறிவுத் திறன் அதிகம் உள்ளதாக தெரிவித்துள்ளார். சாதாரண மனிதர்களுக்கு நுண்ணறிவுத் திறன் அளவு, 90லிருந்து 110 வரை இருக்கும். விசாலினியின் ஐ.க்யூ., அளவு, 225 வரை உள்ளதாகவும் தெரிவித்துள்ளார். புனேயில் உள்ள நிறுவனம் ஒன்றும், விசாலினியின் ஐ.க்யூ., அளவு, 225 ஆக இருப்பதை, உறுதி செய்துள்ளது.

விசாலியின் இந்த உலக சாதனை, கின்னஸ் புத்தகத்தில் இடம் பெறுவதற்கு, 14 வயது பூர்தியாகியிருக்க வேண்டும் என்பதாலும், இவருக்கு தற்போது, 11 வயது தான் ஆகிறது என்பதாலும், கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பிடிப்பதற்கு, இன்னும் மூன்றுஆண்டுகள் காத்திருக்க வேண்டியுள்ளது.

 உலக அளவில் சாதனை:-
மெரிக்காவின் சிஸ்கோ நிறுவனம், உலக அளவில் இன்ஜினியரிங் பட்டப்படிப்பு முடித்த மாணவர்களுக்கு, வேலை வாய்ப்பிற்காக, சி.சி.என்.ஏ., – சி.சி.என்.பி.,தேர்வுகளை நடத்தி வருகிறது. இத்தேர்வுகளை, விசாலினி, பத்து வயதிலேயே எழுதி, மிகவும் இள வயதில் இத்தேர்வுகளை எழுதி வெற்றி பெற்றதற்கான உலக சாதனை விருதும் பெற்றுள்ளார். பாகிஸ்தானில் உள்ள பன்னிரண்டு வயது மாணவர் இரிடிசா ஹைதரின் சாதனையை பத்து வயதில் முறியடித்து  THE YOUNGEST CCNA WORLD RECORD HOLDER என்ற உலக சாதனை படைத்துள்ளார். பிரிட்டிஷ் கவுன்சில், கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகம், ஐ.டி.பி., ஆஸ்திரேலியா மற்றும் இ.எஸ்.ஓ.பி., தேர்வு மையங்கள் இணைந்து உலக அளவில் நடத்தும், ஐ.இ.எல்.டி.எஸ்., தேர்வை, 11 வயதில் எழுதி, வெற்றி பெற்றதன் மூலம், உலகில் மிகவும் இளம் வயதில் ஐ.இ.எல்.டி.எஸ்., முடித்த சாதனையாளர் என்ற விருதையும் பெற்றுள்ளார். இப்படிப்பில், பாகிஸ்தான் நாட்டை சேர்ந்த, 12 வயது மாணவி சிடாரா பிரைஅக்பரின் சாதனையை, 11 வயதில், விசாலினி முறியடித்துள்ளார்.நெதர்லாந்து நாட்டின் இ.எக்ஸ்.ஐ.என் – கிளவுடு கம்ப்யூட்டிங் தேர்வை, 11 வயதில் எழுதி, 1,000க்கு 1,000 மதிப்பெண் பெற்று, விசாலினி உலக சாதனை படைத்துள்ளார்.

பாடமும் நடத்துகிறார்:-
உலக சாதனைகள் மட்டுமின்றி எம்.சி.பி., சி.சி.என்.ஏ., சி.சி.என்.ஏ. செக்யூரிட்டி, ஒ.சி.ஜெ.பி., ஐ.இ.எல்.டி.எஸ்., சி.சி.என்.பி.,-ரூட், மற்றும் இ.எக்ஸ். ஐ.என்.,-கிளவுடு கம்பெனி தேர்வுகளிலும் வெற்றி பெற்று சர்வதேச சான்றிதழ்களையும் பெற்றுள்ளார். தற்போது, சி.சி.என்.பி., சுவிட்ஸ், எம்.சி.டி.எஸ்., எம்.சி.பி.டி., ஐ.எஸ்.இ.பி., தேர்வுகளுக்கு படித்து வருகிறார். இத்துடன் பல்வேறு இன்ஜினியரிங் கல்லூரிகளுக்கு சென்று, பி.இ., மற்றும் பி.டெக் மாணவர்களுக்கு கருத்தரங்கில், “நெட் ஒர்க்கிங்’ சம்பந்தமாக பாடமும் நடத்தி வருகிறார். பல்கலைக் கழகங்களில் நடத்தப்படும், சர்வதேச கருத்தரங்குகளில், தலைமை விருந்தினராகவும் உரையாற்றி வருகிறார்.

அரசு உதவுமா?
விசாலினி, சென்னையில் நேற்று நிருபர்கள் சந்திப்பில் கூறியதாவது:- பாகிஸ்தான் நாட்டில் சிறிய வயதில் சாதனை படைத்த குழந்தைகள் இருவருக்கும் அந்நாட்டு அரசு, “பாகிஸ்தானின் பெருமை’ என்று விருது வழங்கி கவுரவித்ததுடன், அனைத்து வசதிகளையும் செய்து கொடுத்துள்ளது. என் குடும்பம், நடுத்தர குடும்பம் என்பதால், நான் மேலும், மேலும் படித்து சாதனை படைப்பதற்கு போதிய உதவியை, உரிய நேரத்தில் செய்யமுடியாமல் சிரமப்படும் நிலை உள்ளது. நான் அடுத்து படிக்க உள்ள சி.சி.ஐ.இ., படிப்புக்கு கட்டணம், ஐந்து லட்சம் ரூபாயும், தேர்வுகளுக்கு 2 லட்சம் ரூபாய் வரையும் செலவாகும். மத்திய, மாநில அரசுகள் நான் மேலும் படித்து சாதனை படைக்க உதவ வேண்டும் என்று எதிர்பார்க்கிறேன். எதிர்காலத்தில் சொந்தமாக நெட் ஒர்க்கிங் கம்பெனி ஒன்று துவங்கி மேலதிகாரியாகவும் செயல்பட விருப்பம் உள்ளது.  இவ்வாறு விசாலினி தெரிவித்தார்.

CCNAவில் இவள் பெற்ற மதிப்பெண் 90 சதவிகிதம். இதுவும் ஒரு உலக சாதனைதான். மங்களூரிலுள்ள NITயும், திருவில்லிபுத்தூரிலுள்ள பொறியியல் கல்லூரி ஒன்றும் விசாலினியை தங்கள் கல்லூரியில் சேர அழைத்தும் இவர் பெற்றோர்கள், இன்னும் சில ஆண்டுகளுக்கு, இந்த இளம் அறிவாளியை, கல்லூரி வாழ்க்கைக்கு அனுப்பி வைக்கத் திட்டமிடவில்லை .