Google Search Engine

தலைப்புகளில் தேட

தேதிவாரியாக பதிவுகள்

Archives

Visitors since 22-3-13

Free counters!
இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 3,277 முறை படிக்கப்பட்டுள்ளது!

செவப்பு சட்டயே பாத்தா பயமா இருக்கு (நிஜக்கதை)

இராமநாதபுரம் To மதுரை போர்டு போட்ட பஸ் மதுரை மாட்டுதாவணி பஸ் ஸ்டாப்பில் வந்து நின்றது பரமக்குடியிலிருந்து வந்த பலூன் வியாபாரி மைதீன் பஸ்க்குள்ளே இருந்து சுத்திமுத்தி நோட்டமிட்டார். அவிய்ங்கே நிக்கிறாய்ங்களா? ஆமா இம்பூட்டு பேரு நிக்கிறாய்ங்கே இவிய்ங்ககிட்டயிருந்து எப்படி தப்பிக்க போறேன் என்று யோசித்துக் கொண்டிருக்கும் போது யோவ் மாட்டுத்தாவணி வந்துருச்சு எறங்குயா கிழே என்ற நடத்துனர் குரல் குறுக்கிட்டு நிகழ்காலத்திற்கு கொண்டு வந்தது.
அவுட்டோருலே மாட்டுதாவணி பஸ் ஸ்டாண்டு கட்டுறதுக்கு முன்னாடியெல்லாம் நேரே அண்ணா பஸ் ஸ்டாண்டில் பஸு நிக்கும் அங்கே இறங்கி போடி நடையாக நடந்து போனால் பலூன் சரக்கு எடுக்கிற மொத்த கொள்முதல் கடை இருக்கும் இப்ப இங்கிருந்து அங்கே போறதுக்கு ஒரு பஸ் மாறனும் அதுக்கு வேறே ஆறு ஓவா தெண்டம் கட்டனும். டீ கடையில் டீ குடிக்கனும் போல இருந்துச்சு இருந்தாலும் வேண்டாம். அண்ணா பஸ் ஸ்டாப் வண்டியில் எறிக் கொண்டு உள் பாக்கெட்டில் கையை விட்டு பணத்தை ஒரு முறை தொட்டுப் பார்த்துக் கொண்டார்.
பஸ் முன்னோக்கி கிளம்பியது இவரின் சிந்தனைகள் மறுபடிக்கும் பின்னோக்கி போனது. வர செவ்வாக்கிழமை தங்கச்சிமடம் சூசையப்பர் கிறிஸ்துவ கோவில் திருவிழா பலூன் கம்பு போட்டா நல்ல வியாபரம் ஓடும் சரக்கு எடுக்க காசு இல்லாம ஆயிஷாவின் கையில் கெடந்த அரை பவுன் மோதிரத்தை வித்து காசாக்கியதும், அம்மா யாவாரம் பாத்து ஒனக்கு திருப்பி வாங்கி தந்துருவம்மா என்று சொன்னதும் நினைவுக்கு வர பத்து ரூபாயை மட்டும் எடுத்து முன் பாக்கேட்டில் வைத்துக் கொண்டார்.
வண்டியை விட்டு இறங்கி பலூன் ஓல்சல் சேட்டு கடைக்கு போனார்
கிலுக்கு—– ——————–ஒரு டஜன்
சக்திமான் கொட்டு ———-ஒரு டஜன்
பொம்ம தூப்பக்கி————-ஒரு டஜன்
பாப்பா ஆப்பிள் பாலுன்—– பத்து பாக்கேட்டு
இப்படி ஒவ்வோரு சரக்காக இவர் சொல்ல சேட் கட பையன் எடுத்து அட்டை பெட்டியில் அடுக்கிக் கொண்டே இருந்தான் சேட்டு சிட்டை கொடுங்க எவ்வளவு வந்துச்சு நாலயிரம் தான் பாய் இந்தங்கோ சிட்டை என்றார் சிட்டயை பார்த்தாதும் மைதீனின் மனக்கணக்கு தவறாக இருந்தது நாலயிரம் வராதே கிலுக்கு ஒரு டஜன் எவ்வளவு சேட்டு 33 ரூபாய் தானே. இல்லே பாய் 36 ரூபாய் பேட்ரோல் விலை கூடிவிட்டது பிளாஸ்டிக் சரக்கு விலையும் கூடி விட்டது பாய் என்ற சேட்டின் பதிலை கேட்டு இப்படி விலையை கூட்டினால் நாங்க என்ன விலைக்கு விக்கிறது என்று சலித்துக் கொண்டே ரெண்டு டஜன் சரக்க எடுத்துக் கொள்ளுங்கள் பஸ்ஸுக்கு காசு இல்லே என்று சொல்லி வேகமாக அட்டை பொட்டி நிரைய இருந்த சரக்கை தலையில் வைத்து நடக்க ஆரம்பித்தார்.
சரக்கு கடைக்கு பக்கத்தில் பத்து ரூபாய்க்கு தயிர்சாதம் விக்கிற கடை இருந்தது சாப்பிடனும் போல இருந்தது,.மதுரையில் 12 மணிக்கு பஸ் எறினால் எப்புடியும் 2 மணிக்குள்ளே வீடு போய் சேர்ந்து விடலாம் வீட்டில் சாப்பிட்டு கொள்வோம் என்று நினைத்துக் கொண்டு கடையை கடந்தார். மாட்டுதாவணி போற பஸ்ஸில் அட்டை பெட்டி சரக்கை ஏற்றினார் இதை பார்த்த கண்ட்ரக்டர் யோவ் இவ்வளவு பெரிய அட்டை பெட்டியை உள்ளே ஏத்துறே இரண்டு ஆளு எடத்த மறைக்குது இரண்டு டிக்கேட் லக்கேஜ் போடுறேன் என்ன என்றார்? மைதீன் சரிங்கே சரிங்கே என்று தலையாட்டி காசை கொடுத்தார் கொடுக்கும் போதே மனக்கணக்கில் இதே ஆட்டோவ இருந்தா நூறு ரூபா கேப்பாய்ங்கே 12 ரூபாயோட போச்சு என்று சொல்லிக் கொண்டார்.
மாட்டுத்தாவணி பஸ் ஸ்டாப் வருவது முன்பாகவே இறங்கி தலையில் பலூன் சரக்கு நிரம்பிய பெரிய அட்ட பெட்டியை தலையில் சுமந்துக் கொண்டு வந்தார் வரும்போதே மனதில் பயம் கவ்வியது அவிய்ங்கே கண்ணுல மட்டும் பட்டுற கூடாது எப்புடியாவது சரக்கே பஸ்ஸுக்குள் ஏத்திடனும் பஸ் ஸ்டாண்டு முன்புறமாக வந்த தானே சரக்கே பறிப்பிங்கே நான் பின்புறமாக வருகிறேன் பார் என்று மனதில் பயத்தோடு சொல்லிக் கொண்டே உள்ளே நுழைந்தர் சுத்தி முத்தி பார்த்துக் கொண்டே இராமநாதபுரம் பஸு கிட்ட வரும்போது யோவ் நில்லுயா குரல் கேட்டு திரும்பி பார்த்தார்.
செவப்பு சட்ட போட்ட கூலி தூக்கும் அடாவடி தொழிலாளிகள் போச்சு எல்லாம் போச்சு என்று மனதுக்குள் சொல்லிக் கொண்டே பயந்து போய் நின்றார். அங்கிருந்து வந்தவனின் ஒருவன் உனக்கு தெரியாது பஸ் ஸ்டாண்டில் எந்த லக்கேஜாக இருந்தாலும் தூக்குறது எறக்குறது எல்லாம் நாங்க தான் நீ எப்படி தூக்கிட்டு வந்து பஸ்ஸுக்குள் ஏற்ற போகலாம்? என்று அதட்டினான் இல்லேண்ணே பணக்காரவுக லக்கேஜ தூக்க முடியாதவுக இவுங்களுக்கு தான் உங்க ஒதவி தேவைப்படும் நான் சாதாரண பலூன் வியாபாரிண்ணே விட்டுறுங்கண்ணே என்று கேஞ்சிக் கொண்டிருக்கும் போதே
டேய் வேலா அந்த லக்கேஜ பஸ்ஸுக்குள்ளே ஏத்து என்று கட்டளையிடும் தோணியில் சக கூலித் தொழிலாளியை ஏவி விட்டு நூறு ரூபா எடு என்று மைதீனை மிரட்ட ஆரம்பித்தார் அண்ணே அவ்வளவுலாம் இல்லேண்ணே பஸ்ஸுக்கு தானே காசு வச்சுருக்கேன் சொன்ன கேளுங்கண்ணே அழுதுவிடும் தோணியில் கெஞ்சுவதை பொறுட்படுத்தாமல் அந்த செவப்பு சட்டைக்காரன் டேய் வேலா அந்த லக்கேஜ பஸ்ஸ விட்டு வெளியே ஏறக்கி போடு இவன் எப்படி ஊரு போயி சேருகிறான் என்று பார்த்து விடுகிறேன் என்று சொல்லிக் கொண்டே நாங்க யாரு தெரியுமில்லே கம்யூனிஸ்டு எங்களுக்கு சங்கம் இருக்கு சுமை தூக்கும் தொழிலாளர் சங்கம் எங்கள யாரும் மதுரையிலே ஆட்ட முடியாது எங்கள மீறி சரக்க பஸ்ஸுலே ஏத்திரு பாப்போம் சவால் விட்டான்.
அண்ணே வேண்டாம்ணே சரிங்க இந்தங்கே 50 ரூபா சத்தியமாக இது தான் எங்கிட்ட இருக்கிற காசு சாப்பிடகூட இல்லேண்ணே என்று கையை நீட்டினார் 50 ஓவா மயிரு இதுக்கு…. சரி கொண்ட என்று வாங்கி கொண்டு சரக்கே நீயே ஊள்ளே ஏத்திக்க என்று சொல்லி விட்டு நடையை கட்டினார்கள்.
நன்றி: வலையுகம்