Google Search Engine

தலைப்புகளில் தேட

தேதிவாரியாக பதிவுகள்

April 2013
S M T W T F S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  

Archives

Visitors since 22-3-13

Free counters!
இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 13,933 முறை படிக்கப்பட்டுள்ளது!

பவர் ஆஃப் அட்டார்னி (Power of Attorney)

வெளிநாடுகளில் வசிப்போர் தங்களுடைய பெயரில் தாயகத்தில் சொத்துகளை வாங்குவதற்கான வழிமுறை

பெரும்பாலானவர்கள் வேலைக்காக வெளிநாட்டில் வசிக்கின்றனர். இவர்களில் தன்னுடைய பெயரில் வீட்டு மனை அல்லது வீடு வாங்க முயற்சிக்கும் போது வெளிநாட்டில் இருந்து கொண்டே நம்முடைய பெயரில் சொத்துக்களை இந்தியாவில் வாங்க முடியும்.

அதற்கான வழிமுறைதான் இந்த ஜெனரல் பவர் ஆஃப் அட்டார்னி Power of (General Attorney (GPA or GPOA) or Purchase Power.

தேவையான ஆவணங்கள்

பவர் எழுதி கொடுப்பவர் (Principle)

  • புகைப்பட அடையாள சான்று
  • இருப்பிட சான்று
  • பாஸ்போர்ட் சைஸ் புகைப்படம் 2 மட்டும்
  • ரூபாய் 20க்கான முத்திரைதாள்(பத்திரம்)

பவர் ஏஜன்ட் (எழுதி வாங்குபவர்)ன்

  • புகைப்பட அடையாள அட்டை ( Photo Identity proof)
  • இருப்பிட சான்று (Residence Proof)
  • பாஸ்போர்ட் சைஸ் புகைப்படம் 1 மட்டும்
  • இரு அத்தாட்சிகளின் (Two witness)
  • புகைப்பட அடையாள  சான்று (Photo Id proof)
  • இருப்பிட சான்று (Residential proof)

இந்த ஆவணங்களை சொந்த ஊரில்(தமிழ்நாட்டில்) இருக்கும் போதே சப் ரிஜிஸ்டர் ஆபிஸில் தாக்கல் செய்யலாம்.

தாக்கல் செய்யும் முறை:
மேற்கண்ட ஆவணங்கள் தாக்கல் செய்வதற்கு பத்திரம் எழுதுபவர்களிடம் சென்று ஷரத்துக்களை பத்திரத்தில் டைப் செய்து கொள்ள வேண்டும். (ஆங்கிலம் அல்லது தமிழில் – எளிதாக நாமே கீழே கொடுக்கப்பட்டுள்ள மாதிரி எழுதலாம்)

இந்த பவர் ஆஃப் அட்டார்னி எதற்கெல்லாம் உதவும்.

  • சொத்துகளை தனது பெயரில் வேறொருவர் மூலமாக வாங்கலாம்.
  • வெளி நாட்டில் அல்லது வெளியூர்களில் தங்கி வேலை பார்க்கும் போது தன்னுடைய விஜயம்(visit) இல்லாமல் இந்த ஆவணங்கள் மூலம் சொத்துகளை வாங்கலாம் அதை கிரையம் செய்து கொள்ளலாம்.
  • சொத்து வாங்க அக்ரிமண்ட் தனது பெயரில் எற்படுத்திக் கொள்ளலாம்.

இந்த ஆவணக்களுக்கு காலவாதி ஆகாது.
எழுதி கொடுக்கும் நபர் உயிரோடு இருக்கும் வரை இந்த ஆவணங்கள் செல்லத்தக்கது.

வரன்முறைகள்:

  • இந்த ஆவணத்தின் மூலம் சொத்துக்கல் வாங்க மட்டுமே முடியுமே தவிர சொத்துக்களை விற்க முடியாது
  • சொத்துக்களை விற்பனை செய்ய நினைத்தால் சொத்து விவரங்கள் கண்டிப்பாக பத்திரத்தில் பதிய வேண்டும்.
  • ஆனால் சொத்துக்கள் வாங்கும் போது சொத்து விவரங்களை பதிவு செய்ய அவசியமில்லை.
  • அவ்வாறு சொத்து விவரங்களை வாங்கும் போது பதிய நினைத்தால் அது ஸ்பெஷல் பவர் ஆஃப் அட்டார்னி ஆகிவிடும். அது ஒரே ஒரு சொத்து அல்லது சொத்துக்கல்(பத்திரத்தில் குறிப்பிட்ட சொத்துக்களை மட்டும்) வாங்க மட்டுமே வாங்க செல்லுபடி ஆகும்

இதன் பயன்கள்:
வெளிநாட்டில் இருக்கும் போதே தாயகம் செல்லாமல் முறையாக சொத்துக்களை நம்முடைய பெயரிலே வாங்கிக் கொள்ளலாம். இதனால் அவசர பயணம் தவிர்க்கப்படும்.

இதை தவிர ஷரத்தில் எழுத்தப்பட்ட அத்தனை விவரங்களும் முறைய செயல்படுத்தலாம்.

ஆங்கிலம் மற்றும் தமிழில் ஷரத்த்துகளை பத்திரத்தில் பயன்படுத்தலாம்.
வங்கிகள் மற்றும் வெளிநாடுகளில் இந்த ஆவணங்கள் உதவ ஆங்கிலத்தை ஷரத்தில் உபயோகிப்பது நன்று.

வெளிநாட்டில் இந்த ஆவணங்கள் தாக்கல் செய்ய இந்தியன் கான்சலேட் அல்லது எம்பாசியை அணுகலாம்.

முறை:

ஷரத்துக்களை கீழே கொடுத்துள்ளதை பார்த்தும் தானாக டைப் செய்யலாம். இது மிகவும் எளிது

எனக்கு எதுவுமே புரியவில்லை – நண்பர்களும் இல்லை என்றால் : ஷரத்துக்களை தாயகத்தில் ஆங்கிலத்தில்  பத்திரம் எழுதுபவர்கள் மூலம் டைப் செய்து இமெயில் மூலம் பெற்றுக்கொள்ளவும்.

அதனை சாதரன ஏ4 ஷீட்(தாளில்) ப்ரிண்ட் செய்து கொள்ள வேண்டும்.

ஒரிஜினல் பாஸ்போர்ட் மற்றும் தங்கள் நான்கு பாஸ்போர்ட் சைஸ் புகைப்படம் எடுத்துக் கொண்டு

பவர் ஆஃப் அட்டார்னி அல்லது இந்திய தூதரகத்தில்

உரிய கட்டணத்தைச செலுத்தி நீங்கள் எழுதி கொடுத்து கையப்பம் இட்டதை அவர் ஊர்ஜிதப்படுத்துவார்.

தூதரக அதிகாரி அல்லது அட்டார்னி முத்திரை மற்றும் அவரது கையோப்பம் பெற்றதும்.

அதனை அப்படிய இந்தியாவுக்கு தபால் அல்லது கூரியர் மூலமாக அனுப்ப வேண்டும்.

வெளிநாட்டிலிருந்து இந்த ஆவணம் வந்ததற்காக அந்த தபால் கவரை அல்லது கூரியர் கவருடன்….

இதனை 90 நாட்களுக்குள் சப் ரிஜிஸ்டர் ஆபிஸில் பதிய வேண்டும். (சட்டம்  என்ன சொல்கிறது என்றால் இப்படி எழுதப்பட்ட ஆவணம் இந்தியாவிற்கு வந்த 90 தினங்களுக்குள் பதிவு செய்ய வேண்டும். எனவே அங்கிருந்து வந்த தபால் கவர் மிகவும் முக்கியம்!)

சப் ரிஜிஸ்டர் அல்லது மாவட்ட ரிஜிஸ்டர் ஆபிசில் கீழ் கண்டபடி மணு செய்ய வேண்டும்.

வெள்ளைப் பேப்பரில் 5 ரூபாய் கோர்ட் பீஸ் ஸ்டாம் ஒட்டி ஒரு மணு எழுத வேண்டும். அதில் தங்களது உறவினறோ, நண்பரோ தங்களுக்கு எழுதித் தந்த பவர் விவரத்தை எழுத வேண்டும். (பவர் தருபவர் பெயர், வாழும் இடம், அட்டார்னியின் அல்லது தூதரக அதிகாரி பெயர், அவர் கையப்பமிட்ட தேதி, உங்களுக்கு இந்த ஆவணம் வந்த தேதி போன்ற விவரங்கள்).

மேலே உள்ள விவரத்தை 20ரூபாய் பத்திரப் பேப்பரில் ஆங்கிலத்திலோ தமிழிலோ டைப் செய்து நீங்கள் கையெப்பம் இட்டு –  இந்த அஃபிடெளட்டை அங்கே உள்ள பவர் ஆஃப் அட்டார்னியிடம் சீல் வாங்கி கொள்ள வேண்டும்.

அதனை சப் ரிஜிஸ்டர் ஆபிஸில் அட்ஜுடிகேஷன்(adjudication) அல்லது பதிவு செய்து கொள்வார்கள்.

ஆக நீங்கள் ரிஜிஸ்டர் ஆபிசில் சமர்ப்பிக்க வேண்டியவைகள்:

  • அங்கிருந்து வந்த ஆவணம் + நகல் (காப்பி)
  • அங்கிருந்து வந்த கவர் (அஞ்சல் அல்லது கூரியர் மூலம்)
  • உங்களது 2 புகைப்படங்கள்
  • உங்களது புகைப்பட அடையாள அட்டை + காப்பி (பாஸ்போர்ட் அல்லது பான்கார்டு போன்றவை, ஓட்டர் கார்டு)
  • 5 ரூபாய் கோர்ட் பீஸ் ஒட்டிய விண்ணப்பம் (கையால் எழுதலாம்)
  • மேலே உள்ள விவரத்தை 20ரூ பத்திரத்தில் டைப் செய்து பவர் ஆஃப் அட்டார்னியின் கையப்பம் முத்திரையுடன் உள்ள அஃபிடெளட்
  • 105 ரூபாய் கட்டணம்

உங்களது ஆவணங்கள் சரிசெய்த பின் அங்கிருந்து வந்த ஆவணத்தின் பின் பக்கம் உங்களது புகைப்படத்தை ஒட்டி ரிஜிஸ்டார் கைப்பம் + முத்திரை + அரசு சீல் (வெள்ளி நிறம்) ஆகியவற்றுடன் உங்களிடம் தருவார்கள்.

 

மாதிரிப் படிவம் / DRAFT CONVENTIONAL FORMAT /

GENERAL POWER OF ATTORNEY

THIS GENERAL POWER OF ATTORNEY EXCEUTED BY ME, XXXXXXXX Son of Mr  XXXXXX, residing at No 4/38, East Street, ChittarKottai, Ramanathapuram, PIN 623513, Tamil Nadu – India, Now residing at  BRUNEI,

TO AND IN FAVOUR OF

MR. xxxxxxxxx, Son OF xxxxxxxxxxxx, residing at Door # Old x/xx, New # x/2xx, CHITTARKOTTAI POST, RAMANATHAPURAM, TAMIL NADU – PIN 623513, WITNESSETH:

WHEREAS I have decided to and arranged to purchase a Plot of land in my name and due to the latest amendment/circular to the Registration Act, at Tamil Nadu, the purchaser has to sign the sale deed to be executed and register in favour of purchaser by the Vendor and therefore it has now become necessary for me to execute this deed of General Power of Attorney for the same.

THEREFORE I, xxxxxxxx, Son of Mr. xxxxx, residing at # 4/38, East Street, Chittar Kottai, Ramanathapuram, PIN 623513, India, Now residing at Deladi Petroleum Service Sdn Bhd – Block ‘C’, BRUNEI, do hereby NOMINATE, CONSTITUTE, APPOINT AND RETAIN THE aforesaid              MR. xxxxxxx, Son of Mr Late M. Syed Ibrahim, at Door # Old x/xx, New # x/xxx, CHITTARKOTTAI POST, RAMANATHAPURAM, TAMIL NADU – PIN 623513, as my LAWFUL POWER AGENT for me, in my name and on my behalf to do the following ACTS, DEEDS AND THINGS that is to say:

  1. To purchase the requisite Non Judicial Stamp papers for the purpose of purchase of the schedule mention property in my name
  2. To acknowledge the execution and sign on my behalf in the deed of sale to be executed in my favour by the vendor and to present the same for registration on my behalf before the concerned Registrar and to do all such other acts, deeds and things which are necessary for the purpose of completion of registration of the said deed of sale in my favour.
  3. To sign necessary applications for transfer of PATTA, mutation in all public records in my name and relation to the schedule mentioned property.
  4. To take Possession of the property and also to the prior title deeds relating to the property from the Vendor on my behalf.
  5. To obtain return of the registered deed of sale from the concerned Registrar on my behalf.

GENERALLY to do all such other acts, deeds and things which are necessary for the aforesaid purposes as my ATTORNEY AND I hereby agree that all acts, deeds and things lawfully done by my said ATTORNEY shall be construed as acts, deeds and things done by me personally and I undertake to ratify and confirm all the whatsoever that my said ATTORNEY shall lawfully do or cause to be done for me by virtue of the POWERs hereby given.

IN WITNESS WHEREOF I HAVE SET MY HAND AND SIGNATURE ON THIS DAY.