உலகம் முழுவதும் மொபைல் போன்களின் எண்ணிக்கை வளர்ந்து கொண்டே வருகிறது. மொபைல் போன்களில் நாளுக்கு நாள் புதிய வசதிகளை அறிமுக படுத்துவதே மொபைல் பயன்படுத்துபவரின் எண்ணிக்கை அதிகரிக்க காரணமாக உள்ளது. விலைகுறைந்த போன்கள் முதல் விலை உயர்ந்த போன்கள் வரை அனைத்து மொபைல்களுக்கும் தேவையான ஒரு அடிப்படை விஷயம் சார்ஜ் போடுவது. இப்பொழுது அனைவரும் மின்சாரம் மூலம் தான் போடுகிறோம். மின்சாரம் இல்லை என்றால் நம் மொபைலை சார்ஜ் போடாமல் உபயோகிக்க முடியாத நிலை உள்ளது.
ஏற்க்கனவே மின்சாரத்தை தவிர்த்து ரூபாய் நோட்டு, இலைகள், அரிசி மூலம் போடுவது போன்ற பல செய்திகள் நாம் படித்திருந்தாலும் இவைகள் எல்லாம் தற்காலிகமே இதற்காக என்பதால் இந்த முயற்சிகள் தோல்வியில் தான் முடிந்துள்ளன. ஆனால் இப்பொழுது ஜப்பானின் TES New Energy என்ற நிறுவனத்தால் Pan Energy என்ற ஒரு புதிய USB Charger கருவி உருவாக்கப்பட்டுள்ளது.
இந்த கருவி மூலம் மொபைலுக்கு சார்ஜ் போட மின்சாரம் தேவையில்லை வெப்பம் இருந்தாலே போதும். சூடான பொருட்கள் மீது இந்த கருவியை வைத்து மொபைலை சார்ஜ் செய்து கொள்ளலாம். இந்த கருவி வெப்ப ஆற்றலை நேரடியாக மின்ஆற்றலாக மாற்றி மொபைல்களுக்கு சார்ஜ் செய்கிறது.
இந்த கருவி மூலம் செல்போன்கள், MP3 பிளேயர்ஸ், IPOD மற்றும் USB இணைப்பு இருக்கும் எல்லா கருவிகளுக்கும் சார்ஜ் போட முடியும் என்பது இதன் கூடுதல் வசதியாகும். இந்த கருவி ஏற்கனவே ஜப்பானில் விலைக்கு வந்தாச்சு. ஆனால் இதன் விலை $299 (Rs. 13,750) மிக அதிகமாக இருப்பதால் இந்த கருவியின் விற்பனை எதிர்பார்த்த அளவு இல்லை. இந்த நிறுவனம் விலையில் மாற்றம் செய்தால் உலகம் முழுவதும் வீணாக்கப்படும் மின்சாரத்தை சேமிக்கலாம்.
மின்சாரம் இல்லாமல் சார்ஜ் போட Pan Energy என்ற கருவி மட்டும் தான் உள்ளதா என்றால் இல்லை. Yogen என்ற கருவியும் உள்ளது. இந்த கருவி மூலமும் மின்சாரம் இல்லாமல் 5 அல்லது 10 நிமிடத்தில் நம் பொங்கலுக்கு சார்ஜ் போட்டு விடலாம் இதன் விலை $45 (Rs. 2000)
இவைகளை மீறி கென்யாவில் மொபைல் போன்களுக்கு சார்ஜ் போட ஒரு வித்தியாசமான முறையை கையாளுகின்றனர். இவர்கள் தங்கள் போன்களுக்கு மிதிவண்டிகளை உபயோகித்து எப்படி சார்ஜ் போடுகின்றனர் என்று கீழே உள்ள வீடியோவில் பாருங்கள்.
ஏற்க்கனவே மின்சார தட்டுப்பாட்டால் உள்ள நம் நாட்டில் இந்த மொபைல் போன்களுக்கு சார்ஜ் போடுவதாலும் குறிப்பிட்ட அளவு மின்சாரம் செலவாகிறது. இந்தியா முழுவதும் ஒரு நாள் சார்ஜ் போடுவதால் வீணாகும் மின்சாரத்தை வைத்து ஒரு பெரிய தொழிற்சாலையை 1 மாதம் இயக்க முடியும் என்று ஒரு அறிக்கை கூறுகிறது.
இந்த முறைகளை அரசு பரிசோதித்து மொபைலுக்கு சார்ஜ் போட ஏதாவது ஒரு மாற்று வழியை உருவாக்கினால் மொபைல் போன்கள் மூலம் வீணாகும் மின்சாரத்தை சேமித்து பல பயனுள்ள திட்டத்திற்கு உபயோகித்து கொள்ளலாம்.
நன்றி: வந்தேமாதரம்