பெரியப்பாவிற்கு முன்பு நாங்கள் வைத்த பட்டப் பெயர் ”பாஸிடிவ்”. ”எதையும் ”பாஸிடிவா” பாருடா. எத்தனை மோசமான சூழ்நிலையிலும் ஒரு ”பாஸிடிவ்” அம்சம் இருக்கும். அதிலே கவனம் வை. நீ ஜெயிச்சிடலாம்” என்று அடிக்கடி சொல்வார்.
”அரண்மனை மாதிரி வீடு, ஆறு காரு, ஏக்கர் கணக்கில் பூமி, ஏகப்பட்ட காசு, இதெல்லாம் இருக்கும்போது அவர் வேணும்னா இப்படிப் பேசலாம். நம்மள மாதிரி அடி மட்டத்தில் இருந்துகிட்டுத் தினசரி வாழ்க்கையில போராடிட்டு இருக்கிறவனுக்குத் தான் கஷ்டம்னா என்னான்னு . . . → தொடர்ந்து படிக்க..