Google Search Engine

தலைப்புகளில் தேட

தேதிவாரியாக பதிவுகள்

July 2013
S M T W T F S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  

Archives

Visitors since 22-3-13

Free counters!
இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 2,154 முறை படிக்கப்பட்டுள்ளது!

பாரன்சிக் சயின்ஸ் துறை உங்களை அழைக்கிறது!.

ஒவ்வொரு நாளும் புதிதான மற்றும் ஆர்வமான ஒன்றை கற்றுக்கொள்ளும் படிப்பாக, பாரன்சிக் சயின்ஸ் படிப்பு திகழ்கிறது. குற்றப் புலனாய்வு நடவடிக்கையிலும், அதனையடுத்த நீதி வழங்கும் நடவடிக்கைகளிலும், ஒரு முக்கிய அம்சமாக பாரன்சிக் சயின்ஸ் திகழ்கிறது.

சூழல்

குற்றங்களை புலனறியவும், அதனை சரியான முறையில் கண்டறியவும், தூய அறிவியலைப் பயன்படுத்தும் செயல்பாட்டிற்கு பெயர்தான் பாரன்சிக் சயின்ஸ். இன்றைய நிலையில், நடைமுறையில் பார்த்தால், பயன்பாட்டில் இருக்கும் பாரன்சிக் அறிவியல் தொழில்நுட்ப சேவைகள், தேவைக்கு ஏற்றாற்போல் போதுமானதாக இல்லை. இத்துறை நிபுணர்களுக்கு கடும் தட்டுப்பாடு நிலவுகிறது.

இது ஒரு ஸ்பெஷலைஸ்டு படிப்பா?

சில நிபுணர்கள் சொல்வது என்னவெனில், ஒரு மாணவர், தனது முதுநிலைப் படிப்பில் பாரன்சிக் அறிவியலைப் படிப்பதற்கு முன்பாக, தனது இளநிலையிலும் அதனை மேற்கொள்வது சிறந்தது என்று அறிவுரைப் பகர்கிறார்கள்.

ஏனெனில், அப்போதுதான், ஒரு வெற்றிகரமான பாரன்சிக் அறிவியல் நிபுணராக திகழ்வதற்குரிய, போதுமான அறிவு விசாலமும், அனுபவமும், புரிந்துணர்வு திறனும் கிடைக்கும் என்று கூறப்படுகிறது.

பாடத்திட்டம்

இளநிலைப் படிப்பு அளவில், பாரன்சிக் அறிவியல் துறையில், DNA profiling, gel electrophoresis, fingerprints and document examinations, image processing, voice analysis, knowledge of toxicology, serology, ballistics, physis, chemistry, and cyber crime போன்ற அம்சங்கள் அடங்கியுள்ளன. மேலும், ஒருவர், ஸ்பெஷலைசேஷனும் செய்ய முடியும். உதாரணமாக, மருத்துவம் சார்ந்த forensic serology துறையில், ரத்தத்தின் இயல்புத் தன்மை குறித்தும், அதன் படிவங்கள் மற்றும் கறை குறித்தும் அறிந்துகொள்வதோடு, பரம்பரை பண்புகள் குறித்த விபரங்களையும் அறிந்து கொள்ளலாம்.

பாரன்சிக் முன்முயற்சி

இன்றைய நாட்களில், ஒரு குற்றத்தை தடமறிய, காவல் துறையினர், பாரன்சிக் அறிவியல் நிபுணர்களின் உதவியை நாடுகிறார்கள். இதன்மூலம், அதுபோன்ற குற்றங்கள், தொடர்ந்து நிகழாத வண்ணம் தடுப்பதற்கான முயற்சிகள் எடுக்கப்படுகின்றன. இத்தகைய முன்னெச்சரிக்கை நடவடிக்கை Proactive forensic என்று அழைக்கப்படுகிறது. இதன்மூலம், சமூகத்திற்கு பெரும் நன்மை ஏற்படுகிறது.

கூட்டுமுயற்சிக்கான நடைமுறை பயிற்சி

குண்டு வெடிப்பு, டி.என்.ஏ., வகைப்படுத்தல், பேசுபவரின் குரல் அடையாளங் காணல், ஆவணம் மற்றும் கையெழுத்தை அடையாளம் காணல் போன்ற விஷயங்களை கையாள வேண்டியுள்ளது.

விஷ ஆராய்ச்சி ஆய்வகம், உயிரியல் ஆய்வகம், ஆவண சரிபார்ப்பு ஆய்வகம், கைரேகை பதிவு ஆய்வகம் உள்ளிட்ட பலவித ஆய்வகங்களை நாம் பார்க்கிறோம் மற்றும் மருந்துகள், எலும்புகள், டி.என்.ஏ., கைரேகை போன்ற விஷயங்கள் ஆராயப்படுகின்றன. இதுபோன்ற நடவடிக்கைகள் மிகவும் சுவாரஸ்யமானவை.

ஒரு நல்ல கல்வி நிறுவனத்தில், மேற்கூறிய வசதிகள் சிறப்பாக கிடைக்கின்றன. இதன்மூலம், நமது திறமைகளை வளர்த்துக்கொள்ளும் வாய்ப்புகளை நாம் சிறப்பாக பெற முடிகிறது. மேலும், நிஜ உலகிற்குள் நாம் பிரவேசிக்கும் போதுதான், உண்மையான அனுபவங்கள் கிடைக்கின்றன.

முதுநிலைப் படிப்பு

இந்தியாவைப் பொறுத்தவரை, பாரன்சிக் அறிவியல் தொடர்பான இளநிலைப் படிப்பில், ஸ்பெஷலைசேஷன் எதுவும் வழங்கப்படுவதில்லை. ஒருவர், சிறந்த பாரன்சிக் நிபுணராக வேண்டுமெனில், அவர், முதுநிலைப் படிப்பையும் மேற்கொள்ள வேண்டும்.

முதுநிலைப் படிப்பை மேற்கொள்ளாத ஒருவர், இத்துறையில் நிபுணராக முடியாது. பல மாணவர்கள், இத்துறையில் முதுநிலைப் படிப்பை மேற்கொள்ள, வெளிநாடு செல்வதை வழக்கமாக கொண்டுள்ளனர்.

பணி வாய்ப்புகள்

இந்தியாவிலும், வெளிநாடுகளிலும், பாரன்சிக் அறிவியல் துறையிலும், எண்ணற்ற வேலை வாய்ப்புகள் நிறைந்துள்ளன. National investigation agency, CBI, Intelligence Bureau, Central / State police departments, Centre forensic science laboratory and State forensic science laboratory போன்ற அரசுத் துறைகளில், சிறப்பான பணி வாய்ப்புகள் உள்ளன.

மேலும், hospitals, banks, universities, defence/army units, quality control bureau, Narcotics department, Judicial services, Forest and wild life departments போன்ற இடங்களிலும் பணி வாய்ப்புகள் நிறைந்துள்ளன. இவைதவிர, பொருளாதார மாற்றங்களின் விளைவாக பல தனியார் துறைகளிலும், பாதுகாப்பு ஏஜென்சிகளிலும், வங்கிகளிலும், பன்னாட்டு கம்பெனிகளிலும், துப்பறியும் நிறுவனங்களிலும், மீடியாக்களிலும், காப்பீட்டு நிறுவனங்களிலும், இத்துறை நிபுணர்களுக்கான பணி வாய்ப்புகள் உள்ளன.

அனலிஸ்ட், கன்சல்டன்ட், துறை நிபுணர், விஞ்ஞானி உள்பட, பல்வேறு நிலைகளில், பணி வாய்ப்புகள் உள்ளன. பணியின் தன்மை மற்றும் பணிபுரியும் நிறுவனம் ஆகியவற்றைப் பொறுத்து, ஒருவர் பெறும் மாத சம்பளம் ரூ.10,000 முதல் ரூ.30,000 வரை இருக்கும்.

தொடக்கம் எப்படி?

சொந்த கன்சல்டன்சி தொடங்கலாம் அல்லது இத்துறையின் பிற ஏஜென்சிகளிடம் சேர்ந்து செயல்படலாம். அதேசமயம், இப்படிப்பை முடித்தவர், சட்டப் படிப்பு அல்லது பாராமெடிக்கல் படிப்புகளை மேற்கொண்டால், அதன்மூலம் அவரின் பிரகாசமான பணி வாய்ப்புகளுக்கு மேலும் வலு சேர்ப்பதாக இருக்கும்.

பொதுவாக, இத்துறையில் சாதிக்க வேண்டுமெனில், சொந்தமாக தொழில் தொடங்குவதே சிறப்பு என்பது பலரின் கருத்து. இத்துறையில் தொழில் துவங்க, ஏதேனும் ஒரு பிரிவிலாவது நிபுணத்துவம் பெற்றிருக்க வேண்டும் மற்றும் தன்னம்பிக்கை அதிகமாக இருக்க வேண்டும். வேறு பல துப்பறியும் ஏஜென்சிகளுடன், tie – up வைத்துக்கொண்டும் நம் சொந்த தொழிலை தொடங்கலாம்.

வெளிநாட்டு வேலைவாய்ப்புகள்

பிற நாடுகளில், இந்தியாவில் பாரன்சிக் சயின்சஸ் படித்த பட்டதாரிகளுக்கு நல்ல மதிப்பும், வேலை வாய்ப்புகளும் உள்ளன. துப்பறிதல் துறையில், சில அம்சங்களில், மேலை நாடுகளுக்கு இணையாகவும், சில அம்சங்களில், மேலை நாடுகளைவிட மேம்பட்டும் இருக்கிறோம்.

மேலும், வெளிநாட்டில் கிடைக்கும் சம்பளம் அபரிமிதமானது. பல வளர்ந்த நாடுகளில், Medical examiner, Crime laboratory analyst, Fraud examiner, Environment analyst, Crime scene examiners, Forensic psychologist, Genetic experts and Forensic engineers போன்ற பல்வேறான நிலைகளில், பணி வாய்ப்புகள் இருக்கின்றன.

நன்றி: தினமலர்