Google Search Engine

தலைப்புகளில் தேட

தேதிவாரியாக பதிவுகள்

August 2013
S M T W T F S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031

Archives

Visitors since 22-3-13

Free counters!
இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 2,476 முறை படிக்கப்பட்டுள்ளது!

நீங்கள் எப்படிப்பட்ட வேலையை தேடுகிறீர்கள்?

மருத்துவம், பொறியியல் போன்ற தொழிற் படிப்பாக இருந்தாலும் சரி, வணிகம், கலை, அறிவியல் போன்ற படிப்பாக இருந்தாலும் சரி, ஒரு மாணவர் தான் பெற்ற கல்வி மூலமாக அடைந்த திறனின் அடிப்படையில்தான் வேலை வாய்ப்பினை பெற முடியும். மருத்துவம் படித்துவிட்டு கிளிக்கிலேயே காலம் கழித்தவர்களும் உண்டு, தையற்கடை நடத்தி அதில் வெற்றி பெற்றவர்களும் உண்டு. எனவே, மதிப்பெண்ணும், தேர்ச்சியும் கல்வியை பொறுத்தது என்றால், பணி வாய்ப்பு திறமையைப் பொறுத்ததாகும்.

ஒரு சிலர் படிக்கும் போதே இதுவாக வேண்டும், அதுவாக வேண்டும் என்று கனவு காண்பார்கள். அந்த கனவை நோக்கி பயணிப்பார்கள். ஆனால், சிலர் படித்து முடித்து பணி வாய்ப்பைத் தேடும் போது வில தமக்கு எந்த விதமான பணி வாய்ப்பு சரியாக வரும் என்று தெளிவில்லாமல் இருப்பார்கள்.

அதுபோன்றவர்களுக்கு சற்று நிதானமாக அவர்களது திறமையை வெளிக்கொணரவே  இந்த கட்டுரை.

நாங்கள் கீழே கொடுத்துள்ள கேள்விகளுக்கு நன்கு சிந்தித்து பதிலளியுங்கள். பதில்களின் அடிப்படையில் உங்கள் பணி வாய்ப்பை அறிந்து கொள்ளலாம்.

1. யாருக்கும் கீழே பணி செய்ய விரும்புகிறீர்களா?

அ. அனுபவத்தைப் பெற வேண்டுமென்பதால் விரும்புகிறேன்

ஆ. யாருக்கும் கீழே பணியாற்ற விரும்பவில்லை.

இ. எந்த வேலையும் தெரியாததால் பணியாற்றுவேன்

2. சாதிக்க வேண்டும் என்ற எண்ணம் எப்போதும் இருந்து கொண்டே உள்ளதா?

அ. ஆம். எப்போதும் அதே சிந்தனைதான்.

ஆ. எதையாவது சாதிக்க வேண்டும் என்று எண்ணுவேன்

இ.  சாதனை எல்லாம் முடியாத காரியம்

3. எதிர்ப்புகளை சந்திக்கும் போது உங்கள் நிலை?

அ. எனக்குள் உள்ள திறமையை அறிந்து கொள்ள வாய்ப்பாக கருதுவேன்

ஆ. எந்த தடையையும் உடைக்கும் சக்தி எனக்குள்ளது.

இ. எனக்கு மட்டும் ஏன் இப்படி நடக்கிறது என்று எண்ணுவேன்

4. ஒருவரை சந்திக்கும் போது அவரது எந்த விஷயம் உங்களை அதிகம் பாதிக்கும்?

அ. அவரிடம் உள்ள நல்ல குணங்கள், திறமையை பார்ப்பேன்.

ஆ. அவரிடம் உள்ள நல்ல, தீய குணங்களைப் பார்ப்பேன்

இ. அவரிடம் உள்ள தீய குணங்களைப் பார்ப்பேன்.

5. ஒரு சம்பவத்தை உங்களிடம் யாராவது கூறினால் அது பற்றி?

அ. ஆராய்ந்து உண்மை என்றால் மட்டுமே நம்புவேன்

ஆ. சம்பவத்தைக் கூறிய நபர் பற்றியும் ஆராய்வேன்

இ. அவர் கூறிய விஷயத்தை அப்படியே ஏற்றுக் கொள்வேன்.

6. உங்கள் நண்பர்கள் உங்களிடம் அதிகமாக எதிர்பார்ப்பது?

அ. என்னுடன் இனிமையாக நேரத்தைப் போக்க விரும்புவர்

ஆ. என்னிடம் பிரச்சினைகளைக் கூறி அறிவுரை கேட்பர்

இ. எப்போதும் எதையாவது புலம்புவார்கள்

7. நீங்கள் முன்னேற வேண்டும் என்றால் என்ன வேண்டும் என்று நினைக்கிறீர்கள்?

அ. எனக்குள் உள்ள திறமையை வெளிக் கொண்டு வந்து ஊக்கமளிக்கும் ஒரு நபர்

ஆ. என் திறமைகளை வெளிப்படுத்த ஒரு வாய்ப்பு

இ. எனக்கு வேண்டியது ஒரு நல்ல வேலை

8. மற்றவர்கள் ஒரு வேலையைச் செய்யும் போது உங்களது நிலை?

அ. அவர்களை ஊக்கப்படுத்தி தைரியமூட்டுவேன்.

ஆ. அதில் உள்ள பாதகங்களை எடுத்துக் கூறி எச்சரிக்கையாக செல்ல அறிவுறுத்துவேன்

இ. ஒரு முறைக்கு இரு முறை யோசித்து செய்யச் சொல்வேன

9. மற்றவர்கள் தவறாக நடக்கும் போது நீங்கள் என்ன செய்வீர்கள்?

அ. அவர்களது குறையை தட்டிக் கேட்க நாம் யார் என்று இருந்துவிடுவேன்

ஆ. நேருக்கு நேராக நீங்கள் செய்வது தவறு என்று சொல்வேன்.

இ. அவர்களை பழிவாங்கும் விதத்தில் நானும் தவறாக நடப்பேன்

10. நீங்கள் செய்த ஒரு முயற்சியில் வெற்றி அல்லது தோல்வி அடைந்தால்?

அ. வெற்றி பெற்றால் மகிழ்வேன், தோல்வி அடைந்தால் அடுத்த வெற்றிக்கு முயற்சிப்பேன்

ஆ. வெற்றி அல்லது தோல்வி அடையக் காரணம் என்ன என்று தெரிந்து கொள்வேன்

இ. வெற்றி பெற்றால் மகிழ்வேன், தோல்வி அடைந்தால் வறுத்தப்படுவேன்.

இவைகளுக்கு நன்கு சிந்தித்து உங்களுக்கு ஏற்ற பதில்களை குறித்துக் கொள்ளுங்கள். இதில் எந்த வகையான பதிலை நீங்கள் அதிகமாக குறித்துள்ளீர்கள் என்று கணக்கெடுங்கள்.

நீங்கள் அதிகமாக என்ற விடையை தேர்வு செய்திருந்தால்..

ஒரு நல்ல நிறுவனத்தில் உழியராக பணியாற்றி படிப்படிகா முன்னேறி, நல்ல அனுபவத்துடன் உயர் பதவிகளை அடையும் தகுதி உங்களுக்கு உள்ளது. எந்த வேலையையும் அனுபவத்தோடு செய்ய வேண்டும் என்று எண்ணுபவர்கள் நீங்கள். எனவே, உங்கள் பணி சிறப்பாக இருக்கும். எந்த வேலையை செய்தாலும் அதில் தன்னிறைவைக் காண்பீர்கள். ஐ.டி., பொறியியல், மருத்துவம், செய்தித் தொடர்பு போன்ற துறைகளில் நீங்கள் பணியாற்றலாம். அரசுப் பணிக்கும் முயற்சிக்கலாம். அரசு பணி கிடைத்தாலும், தொடர்ந்து தேர்வுகளை எழுதி மேலதிகாரியாக உயரும் மனப்பான்மை கொண்டவர்கள் நீங்கள். ஆசிரியர் பணி, நீதித்துறை, சுங்கத்துறை போன்றவற்றிலும் உங்கள் திறமைக்கேற்ற பணி வாய்ப்பைப் பெறலாம். பொதுவாக படிப்படியாக முன்னேறி பெரிய பதவிகளை வகிக்கும் நபர்கள் அ விடைகளை தேர்வு செய்வார்கள்.

நீங்கள் அதிகமாக என்ற விடையை தேர்வு செய்திருந்தால்..

பொதுவாகவே உங்களுக்கு மற்றவர்களிடம் வேலை செய்ய பிடிக்காது. நீங்கள் சொந்த தொழில் துவங்கி நடத்தலாம். புதிய பொருட்களை, விதிகளை கண்டுபிடிக்கும் ஆராய்ச்சியில் ஈடுபடலாம். உற்பத்தி, ஏற்றுமதி, இறக்குமதி துறைகளில் பணி வாய்ப்பு பெறலாம். இதழியல் துறையிலும் உங்களுக்கு நல்ல எதிர்காலம் இருக்கும். நுண்கலை, வரைதல், சினிமா, வடிவமைப்பு, பேச்சாளர் போன்ற துறைகளில் உங்களுக்கு ஏற்ற துறையை கண்டறிந்து கொள்ளுங்கள். எழுத்தாளர், காவல்துறை, அரசியல் போன்ற துறைகளிலும் ஆர்வம் இருக்கும். பெரிய நிறுவனங்களில் குழுவிற்கு தலைமை தாங்குதல் போன்ற பணிகளையும் மேற்கொள்ளலாம். எதுவாக இருந்தாலும் நீங்கள் சுயமாக முடிவெடுத்து செய்யும் பணியாக இருப்பின் அது உங்களுக்கு ஏற்றதாக இருக்கும்.

நீங்கள் அதிகமாக என்ற விடையை தேர்வு செய்திருந்தால்..

எந்த பணி வாய்ப்பாக இருந்தாலும் அதனை ஏற்று சிறப்பாக வேலை செய்வீர்கள். வங்கி, அரசுப் பணி, கணக்கர், கணிப்பொறி இயக்குபவர், மெஷின் ஆப்ரேட்டர், ஓட்டுநர், அரசு ஊழியர் பணியிடங்கள் உங்களுக்கு ஏற்றதாக இருக்கும். உங்களது வளர்ச்சி சற்று நிதானமாக இருக்கும். நீங்கள் செய்யும் வேலை உங்களது ஆர்வத்தை தூண்டும் வகையில் அமைந்துவிட்டால் அதில் கொடிகட்டிப் பறப்பீர்கள். அரசுப் பணிக்கு நீங்கள் தேர்வெழுதலாம். கால்சென்டர், ஆசிரியர், மேலாண்மைப் பணிகளும் உங்களுக்கு ஏற்றதாக இருக்கும். படித்த படிப்பைச் சார்ந்த துறையாக தேர்வு செய்தால் பணியில் சிரமத்தை தவிர்க்கலாம். எந்த வேலையையும் செய்யத் துவங்கும் முன்பே அதைப் பற்றி கணிக்க வேண்டாம். இந்த வரிசையில் உள்ளவர்கள் ஒன்று அடிக்கடி வேலை தேடும் அனுபவம் கொண்டவராக அல்லது ஒரே இடத்தில் பல வருடங்கள் பணியாற்றிய அனுபவம் உள்ளவர்களாக இருப்பார்கள்.

இந்த மூன்று அடிப்படையான விஷயங்களை வைத்து பொதுவாக எல்லா மாணவர்களையும் வகை பிரித்துவிட முடியாது. இது வெறும் அடிப்படை மட்டுமே. இதன் அடிப்படையில் நமக்கு எது சரியாக வரும் என்பதை உணர்ந்து அதற்கேற்ற வேலையாக தேடுங்கள். வாழ்த்துகள்.

நன்றி: தினமணி