Google Search Engine

தலைப்புகளில் தேட

தேதிவாரியாக பதிவுகள்

August 2013
S M T W T F S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031

Archives

Visitors since 22-3-13

Free counters!
இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 4,885 முறை படிக்கப்பட்டுள்ளது!

சுய தொழில்கள் – ஊறுகாய்

தொட்டுக் கொள்ள ஊறுகாய் இருந்தால் போதும்  

தயிர் சாதம் ஆனாலும் சரி தக்காளி சாதம் ஆனாலும் சரி தொட்டுக் கொள்ள ஊறுகாய் இருந்தால் போதும் என்று கூறுபவர்கள் ஒவ்வொரு வீட்டிலும் நாம் இயல்பாக காண முடியும். ஊறுகாய் இல்லாமல் சாப்பிட்டால் சாப்பிட்டதற்கு அர்த்தமே இல்லை என்று சொல்லுபவர்களும் பலர் உள்ளனர். இந்த ஊறுகாயை தயாரிப்பதையே தனது தொழிலாக கொண்டுள்ளார் தேன் துளி மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர் மகாலட்சுமி.

பொருளாதார பின்தங்கிய குடும்பத்தை சார்ந்த இவர் தான் இருப்பது வாடகை வீடு என்பதால் தனியார் தொண்டு நல மையத்தின் உதவியுடன் தொழிலை மேற்கொண்டு வருகிறார். நகைப்பட்டறை வைத்திருந்தவர்கள் அந்த தொழில் நலிவடைந்தால் மிகவும் நெருக்கடியான சூழலில் வாழ்ந்து வருகின்றனர். அதிகம் கல்வியறிவு இல்லாத இவர் வேலைக்கு சென்று குடும்பத்திற்கு உதவ இயலவில்லையே என்பது இவரது மன வருத்தம். கல்வியில் பெரிதாக சாதிக்காவிட்டாலும் சமையல் கலையில் வல்லவர்.

ld1412ஊறுகாய் தயாரிப்பதற்கு பயிற்சி பெற்று தற்போது தயாரித்து சந்தை படுத்தியும் வருகிறார். இவரது வைவண்ணத்தில் எலும்மிச்சை, மாங்காய், நார்த்தங்காய், இஞ்சி, பூண்டு உள்ளிட்ட பல்வேறு வகையான ஊறுகாய் மல்லி தொக்கு, ஜாதிக்காய் தொக்கு, கருவேப்பிள்ளை தொக்கு என 25 வகையான ஊறுகாய், தொக்கு வகைகளை தயாரிக்கிறார்.இது குறித்து மகாலட்சுமி கூறியதாவது:

எட்டாம் வகுப்புவரை மட்டுமே படித்துள்ளேன். கல்வி கற்கவில்லை என்ற வருத்தம் திருமணம் முடிந்து குறிப்பிட்ட சூழல் வரை எனக்கு தெரியவில்லை. ஆனால், என் கணவர் தொழில் நலிவடைந்து செய்வதறியாமல் தவித்த போது தான் கல்வியின் முக்கியத்துவத்தை புரிந்துகொண்டேன். வேலைக்கு சென்று என் குடும்பத்திற்கு உதவ முடியாமல் இருந்தேன் அதன் பின்புதான் மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்களின் ஆலோசனைப்படி ஊறுகாய் தயாரிப்பதற்கு பயிற்சி பெற்று தற்போது தொழில் செய்து வருகிறேன்.

தொண்டு நிறுவனத்தில் நாங்கள் ஊறுகாய்களை தயாரிப்போம்.இரண்டு பேர் சேர்ந்தால் நாள் ஒன்றுக்கு 10 கிலோ வரை தயாரிக்க முடியும். நல்ல பயிற்சி இருந்தால் போதும் இதனை எளிதாக செய்யலாம். ஊறுகாய் என்பது எளிதில் தீரக்கூடிய ஒரு வகையான உணவு பொருள் என்பதால் தரமுடன் தயாரித்தால் தொடர்ந்து விற்பனை இருந்து கொண்டே இருக்கும். நான் தற்போது 225 கிராம் பாட்டிலில் ஊறுகாய் விற்பனை செய்து வருகிறேன். 225 கிராம் பாட்டில் ரூ 35க்கு விற்று விடுவேன். இதில் கிடைக்கும் வருவாய் என் குடும்பத்திற்கு மிகவும் உதவியாக இருக்கும். என் குடும்பத்திற்கு என்னால் இயன்ற அளவிற்கு உதவுகிறேன் என்பதில் எனக்கு மகிழ்ச்சி என்றார்.

தொண்டு நிறுவனத்தில் நாங்கள் ஊறுகாய்களை தயாரிப்போம். 2 பேர் சேர்ந்தால் நாள் ஒன்றுக்கு 10 கிலோ வரை தயாரிக்க முடியும். நல்ல பயிற்சி இருந்தால் போதும் இதனை எளிதாக செய்யலாம். ஊறுகாய் என்பது எளிதில் தீரக்கூடிய உணவு பொருள் என்பதால் தரமுடன் தயாரித்தால் தொடர்ந்து விற்பனை இருந்து கொண்டே இருக்கும். ஊறுகாய் தயாரிப்பது என்பது மிகவும் எளிது. ஒவ்வொரு காய்க்கும் தகுந்தவாறு அதில் சேர்க்கும் பொருட்கள் சிறிது மாறுபடும்.அதை தவிர அனைத்து ஊறுகாயும் தயாரிப்பது என்பது ஒரே மாதிரி தான் இருக்கும். ஊறுகாய் தயாரிக்க எந்த காயானாலும் சரி நல்ல தரமான காயாக ஒட்டு மொத்தமாக கொள்முதல் செய்து கொள்ளவேண்டும். பழங்களில் தரமில்லை என்றால் நாம் எப்படி தயாரித்தாலும் அதில் சுவை இருக்காது.

சுவை முக்கியம்…
நாம் தயாரிக்கும் காய் எதுவாக இருந்தாலும் அதனை நன்கு சுத்தம் செய்து அதில் இருக்கும் காம்பு, விதை, கொட்டை போன்ற தேவையற்ற பாகங்களை நீக்கி விடவேண்டும். அதன் பின்பு சிறு சிறு துண்டுகளாக நறுக்கி 10 சதவீதம் உப்பு கலந்த தண்ணீரில் 3 மாதங்கள் ஊறவிடவேண்டும். 3 மாதங்கள் ஊறிய துண்டுகளை தண்ணீரில் ஒரு முறை கழுவி எடுத்துக்கொள்ளவேண்டும். இப்போது நன்கு பதமாக காய்கள் நமக்கு கிடைக்கும். இதில் மிளகாய் பொடி, உப்பு, பெருங்காயம், வெந்தய பொடி, போன்றவற்றை தேவையான அளவு சேர்த்து சிறிது நேரம் அப்படியே வைக்கவேண்டும். அதன் பின்பு வழக்கம் போல் எண்ணெய், கடுகு, கருவேப்பிள்ளை, பெருங்காயம் போன்றவற்றை சேர்த்து தாழித்து பின் ஆறவைக்கவேண்டும். நன்கு ஆறிய பின்பு கவர், அல்லது டப்பா போன்றவற்றில் அடைத்து சந்தை படுத்தலாம்.

நன்றி: பயனுள்ள தகவல்கள்