அல்லாஹ் மீது நாம் தவக்கல் வைத்து செய்யும் காரியங்கள் பல வெற்றி பெறுவது இல்லையே என்று நாம் நினைப்பது உண்டு. காரியங்கள் வெற்றி பெற அல்குர்ஆன் அழகான தீர்வைத் தருகின்றது. அதனை நாம் சரியாக கடைபிடிப்பது இல்லை. எனவே நம் காரிங்கள் தோல்வியில் முடிகின்றன.
குர்ஆன் காண்பிக்கும் அழகிய வழி என்ன? முதலில் சரியான திட்டமிடல் மற்றும் அதற்கான ஏற்பாடுகள் அதன்பின் சரியான பொறுப்பாளனிடம் ஒப்படைத்தல். எந்தக் காரியத்தையும் சரியாக முடிக்கக் கூடிய நம்பிக்கையான பொறுப்பாளன் அல்லாஹ்வைத் தவிற வேறு யாரும் இருக்க முடியாது. அவனிடம் பொறுப்பை ஒப்படைத்து நம் செய்த முன்னேற்பாட்டுடன் செய்யும் காரியம் நிச்சயம் வெற்றி பெறும். வரலாற்றிலேயும் இன்றைய வாழ்க்கையிலும் பல உதாரணங்களைக் காணலாம். இறுதியாக வெற்றியையோ தோல்வியையோ தருவது அல்லாஹ் தான். அவன் நாடியது தான் நடக்கும். அந்த முடிவை பொறுமையுடன் ஏற்றுக் கொண்டால் நிச்சயம் இல்வாழ்கையும் மறுவாழ்க்கையும் சிறக்கும்.. மேலும்….
ரமளான் இரவு நிகழ்ச்சி – ஜுபைல் த ஃ வா நிலையம்
வழங்கியவர்: அஷ்ஷைஹ் ஜக்கரியா அஃப்ழலுல் உலமா, அழைப்பாளர், தம்மாம்.
நாள்: 01-ஆகஸ்ட்-2013 வியாழன் இரவு – இடம்: எஸ்.கே.எஸ். கேம்ப் பள்ளி வளாகம்