Google Search Engine

தலைப்புகளில் தேட

தேதிவாரியாக பதிவுகள்

August 2013
S M T W T F S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031

Archives

Visitors since 22-3-13

Free counters!
இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 15,681 முறை படிக்கப்பட்டுள்ளது!

மின்னல் சமையல் -30 வகை ஸ்பெஷல் குறிப்புகள் 1

01வேலைக்குப் போகிறவர்களானாலும் சரி, இல்லத்தரசிகளானாலும் சரி… காலையில் கண் விழித்த உடனேயே, ‘சாப்பிடுவதற்கும், கையில் எடுத்துச் செல்வதற்கும் என்ன சமையல் செய்வது’ என்ற பரபரப்புடன் ஆரம்பித்துவிடுகிறது… கடிகாரத்துடனான ஓட்டப் பந்தயம்! இந்தப் பந்தயத்தில் நீங்கள் வெற்றிக் கோட்டை தொடுவதற்கு உதவும் வகையில், மிகவும் குறைந்த நேரத்தில் தயாரிக்கக்கூடிய ’30 வகை திடீர் சமையல்’ .ரெசிபிகளுடன் வந்து உதவிக்கரம் நீட்டுகிறார் சமையல் கலை நிபுணர் ஆதிரை வேணுகோபால்.

”உடனடியாக செய்யக்கூடிய இந்த ரெசிபிகளை, முடிந்த அளவு உடலுக்கு ஊட்டச் சத்து தரும் பொருட்களை கொண்டு தயாரித்து அளித்திருக்கிறேன். இவற்றை செய்து பரிமாறுங்க… நீங்களும் தேவையான அளவு சாப்பிட மறந்துடாதீங்க” என்று பரிவுடன் கூறும் ஆதிரையின் ரெசிபிகளை, பிரமாதமாக அலங்கரித்திருக்கிறார் செஃப் ரஜினி.

மீல்மேக்கர் டிக்கிஸ்

தேவையானவை: மீல்மேக்கர் – 20, இஞ்சி – சிறு துண்டு (சுத்தம் செய்து கொள்ளவும்), பூண்டு – 6 பல், பச்சை மிளகாய் – 3, வெங்காயம் – ஒன்று, மைதா மாவு – ஒரு டேபிள்ஸ்பூன், பிரெட் தூள், எண்ணெய், உப்பு – தேவையான அளவு.

11_002செய்முறை: இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாய் மூன்றையும் மிகவும் பொடியாக நறுக்கி கொள்ளவும். மீல்மேக்கரை கொதி நீரில் 2 நிமிடம் போட்டு எடுத்து, பச்சைத் தண்ணீரில் இருமுறை நன்கு அலசி தண்ணீரை நன்றாகப் பிழிந்து எடுக்கவும். இதனுடன் இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாய், உப்பு சேர்த்து கெட்டியாக அரைத்து கொள்ளவும். பிறகு, பொடியாக நறுக்கிய வெங்காயம், மைதா சேர்த்து நன்கு பிசைந்து, விரும்பிய வடிவத்தில் தட்டி, பிரெட் தூளில் புரட்டிக் கொள்ளவும். தவாவில் சிறிதளவு எண்ணெய் விட்டு, புரட்டி எடுத்த  டிக்கிஸை போட்டு இருபுறமும் பொன்னிறமானதும் எடுக்கவும்.

கீரை  தால் கிரிஸ்பி

தேவையானவை: கடலைப்பருப்பு – 100 கிராம், காய்ந்த மிளகாய் – 2, பெருஞ்சீரகம் – ஒரு டீஸ்பூன், பூண்டு – 2 பல், முருங்கைக்கீரை – ஒரு கப் (ஆய்ந்தது), பொட்டுக்கடலைப் பொடி – ஒரு டேபிள்ஸ்பூன், கடுகு – அரை டீஸ்பூன், வெங்காயம் – ஒன்று (மிகவும் பொடியாக நறுக்கவும்), நறுக்கிய கறிவேப்பிலை – சிறிதளவு, எண்ணெய், உப்பு – தேவையான அளவு.

2செய்முறை: கடலைப்பருப்பை அரை மணி நேரம் ஊற வைத்து… காய்ந்த மிளகாய், பெருஞ்சீரகம், பூண்டு, உப்பு சேர்த்து கொரகொரப்பாக அரைத்துக் கொள்ளவும். வாணலியில் எண்ணெய் விட்டு, காய்ந்ததும் கடுகு தாளித்து… வெங்காயம், கறிவேப்பிலை சேர்த்து நன்கு வதக்கி, அரைத்த கடலைப்பருப்பு விழுது, பொட்டுக்கடலைப் பொடி சேர்த்து நன்கு கிளறி, ஆய்ந்த கீரையை சேர்த்து ஒரு நிமிடம் நன்கு புரட்டி… பிறகு இறக்கி, சுடச்சுட பரிமாறவும்.

மூங்தால்  பனீர் சப்பாத்தி

தேவையானவை: கோதுமை மாவு – 2 கப், நெய் – ஒரு டேபிள்ஸ்பூன், பாசிப்பருப்பு – முக்கால் கப், பனீர் துருவல் – 2 டேபிள்ஸ்பூன், பச்சை மிளகாய், பூண்டு – தலா 2 (மிக்ஸியில் விழுதாக அரைத்து கொள்ளவும்), எண்ணெய், உப்பு – தேவையான அளவு.

3செய்முறை: பாசிப்பருப்பை குக்கரில் 2 விசில் வரும் வரை வேக விட்டு எடுத்து, ஆறியதும் மிக்ஸியில் சற்று கொரகொரப்பாக அரைக்கவும். வாணலியில் எண்ணெய் விட்டு… பூண்டு – பச்சை மிளகாய் விழுதை நன்கு வதக்கவும். பிறகு, அரைத்த பாசிப்பருப்பு விழுது, பனீர் துருவல், உப்பு சேர்த்துக் கிளறி இறக்கவும்.

கோதுமை மாவில் நெய் மற்றும் தேவையான அளவு உப்பு, தண்ணீர் சேர்த்து நன்கு பிசைந்து மெல்லிய சப்பாத்திகளாக திரட்டவும். ஒரு சப்பாத்தியின் நடுவே பாசிப்பருப்பு – பனீர் கலவையை வைத்து அதன் மேலே இன்னொரு சப்பாத்தி வைத்து ஓரங்களை நன்கு ஒட்டி, தவாவில் போட்டு, இருபுறமும் எண்ணெய் விட்டு சுட்டு எடுக்கவும்.

ஆலு ஸ்டஃப்டு சப்பாத்தி

தேவையானவை: கோதுமை மாவு – 2 கப், நெய் – ஒரு டேபிள் ஸ்பூன், உருளைக்கிழங்கு – 2, சீரகம், மிளகாய்த்தூள் – தலா ஒரு டீஸ்பூன், மஞ்சள்தூள் – கால் டீஸ்பூன், பச்சை மிளகாய், வெங்காயம் – தலா ஒன்று (மிகவும் பொடியாக நறுக்கவும்), எண்ணெய், உப்பு – தேவையான அளவு.

4செய்முறை: வேக வைத்து, நன்கு மசித்த உருளைக்கிழங்கு, சீரகம், மிளகாய்த்தூள், மஞ்சள்தூள், பச்சை மிளகாய், வெங்காயம், சிறிதளவு உப்பு ஆகியவற்றை ஒன்றாக சேர்த்துப் பிசைந்து கொள்ளவும். கோதுமை மாவில் நெய், தேவையான அளவு உப்பு, தண்ணீர் சேர்த்துப் பிசைந்து கிண்ணங்களாக செய்து, நடுவே உருளைக்கிழங்கு கலவையை வைத்து மூடி, சப்பாத்திகளாக திரட்டி, தவாவில் போட்டு, எண்ணெய் விட்டு சுட்டு எடுக்கவும்.

ஓட்ஸ் அடை

தேவையானவை: புழுங்கல் அரிசி, ஓட்ஸ், துவரம்பருப்பு, பாசிப்பருப்பு – தலா அரை கப், வெங்காயம் – 3 (மிகவும் பொடியாக நறுக்கவும்), காய்ந்த மிளகாய் – 4, தேங்காய் துருவல் – ஒரு டேபிள்ஸ்பூன், பொடியாக நறுக்கிய கறிவேப்பிலை – சிறிதளவு, எண்ணெய், உப்பு – தேவையான அளவு.

5செய்முறை: அரிசியை தனியாகவும், பருப்புகளை ஒன்று சேர்த்தும் 2 மணி நேரம் ஊற வைத்து… காய்ந்த மிளகாய், உப்பு சேர்த்து சற்று கொரகொரப்பாக அரைக்கவும். ஓட்ஸை அரை மணி நேரம் ஊற வைத்து இதனுடன் சேர்க்கவும். வாணலியில் சிறிது எண்ணெய் விட்டு வெங்காயம், கறிவேப்பிலையை வதக்கி மாவில் சேர்க்கவும். தேங்காய் துருவல் சேர்த்து நன்கு கலக்கவும். தோசைக்கல்லில் எண்ணெய் விட்டு, மாவை அடைகளாக வார்த்து, இருபுறமும் சிவந்த பின் எடுக்கவும்.

ஸ்வீட் சோயா

தேவையானவை: சோயா உருண்டைகள் – 20 (வேக வைத்து, நீரைப் பிழிந்து மிக்ஸியில் ஒரு சுற்று சுற்றவும்), பொடித்த பனங்கற்கண்டு – 100 கிராம், மைதா – கால் கப், தேங்காய் துருவல் – 2 டேபிள்ஸ் பூன், நெய், ஏலக்காய்த்தூள் – சிறிதளவு,  எண்ணெய் – தேவையான அளவு, உப்பு – ஒரு சிட்டிகை.

6செய்முறை: மைதாவை தண்ணீர் விட்டுக் கரைத்துக் கொள்ளவும். வாணலியில் சிறிது நெய் சேர்த்து, சோயாவை போட்டு லேசாக வதக்கி, பொடித்த பனங்கற்கண்டை சேர்த்து நன்கு சுருள கிளறவும். இதனுடன் ஏலக்காய்த்தூள், உப்பு, தேங்காய் துருவல் சேர்த்துக் கிளறி… ஆறியதும் உருண்டைகளாக பிடிக்கவும். மைதா கரைசலில் உருண்டகளைத் தோய்த்து, எண்ணெயில் பொரித்தெடுக்கவும்.

புதினா மசாலா சப்பாத்தி

தேவையானவை: கோதுமை மாவு – 2 கப், பொடியாக நறுக்கிய புதினா, பொடியாக நறுக்கிய கொத்தமல்லி – தலா ஒரு கைப்பிடி, இஞ்சி – சிறு துண்டு (சுத்தம் செய்து கொள்ளவும்), பூண்டு – 3 பல், பச்சை மிளகாய் – 2, நெய் – சிறிதளவு, எண்ணெய், உப்பு – தேவையான அளவு.

71செய்முறை: புதினா, கொத்தமல்லி, இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாய், சிறிதளவு உப்பு ஆகியவற்றை ஒன்றாக சேர்த்து மிக்ஸியில் அரைக்கவும். கோதுமை மாவுடன் அரைத்த விழுது, நெய், கொஞ்சம் உப்பு மற்றும் தேவையான தண்ணீர் சேர்த்து நன்கு தளர பிசையவும். மாவை சின்னச் சின்ன சப்பாத்திகளாக திரட்டி, தோசைக்கல்லில் போட்டு, சுற்றிலும் எண்ணெய் விட்டு, வேகவிட்டு எடுக்கவும்.

வாழைப்பூ  வெங்காய அடை

தேவையானவை: புழுங்கல் அரிசி – ஒரு கப், துவரம்பருப்பு, கடலைப்பருப்பு – தலா அரை கப், இஞ்சி – சிறு துண்டு (சுத்தம் செய்யவும்), பூண்டு – 4 பல்,  காய்ந்த மிளகாய் – 6, பெருஞ்சீரகம் – ஒரு டீஸ்பூன், சிறிய வாழைப்பூ –  ஒன்று (நரம்புகளை எடுத்துவிட்டு, சுத்தம் செய்து, பொடியாக நறுக்கிக் கொள்ளவும்), வெங்காயம் – ஒன்று (பொடியாக நறுக்கவும்), துருவிய சீஸ் – ஒரு டேபிள்ஸ்பூன், எண்ணெய்,8 உப்பு – தேவையான அளவு.

செய்முறை: அரிசியை தனியாகவும், பருப்புகளை ஒன்று சேர்த்தும் 2 மணி நேரம் ஊறவிடவும். முதலில் அரிசியை மிக்ஸியில் போட்டு சிறிது நேரம் ஓடவிட்டு, பிறகு பருப்புகள், இஞ்சி, பூண்டு, காய்ந்த மிளகாய், பெருஞ்சீரகம், உப்பு சேர்த்து சற்று கொரகொரப்பாக அரைத்துக் கொள்ளவும். வாணலியில் சிறிது எண்ணெய் விட்டு வெங்காயத்தை வதக்கி, பிறகு வாழைப்பூ சேர்த்து வதக்கி… இதை மாவில் கொட்டி கலந்து கொள்ளவும்.

தோசைக்கல்லில் மாவை அடைகளாக ஊற்றி, மேலே சிறிது சீஸ் சேர்த்து, சுற்றிலும் எண்ணெய் விட்டு, பொன்னிறமாக சுட்டு எடுக்கவும்.

பிரெட் வித் ஸ்வீட் கார்ன் கிரேவி

தேவையானவை: பிரெட் ஸ்லைஸ் – 10, ஸ்வீட் கார்ன் – 2, பெரிய வெங்காயம் – 2 (மிகவும் பொடியாக நறுக்கவும்), இஞ்சி – பூண்டு விழுது, மிளகாய்த்தூள் – தலா ஒரு டீஸ்பூன், தக்காளி சாஸ் – அரை கப், வெண்ணெய், ஃப்ரெஷ் க்ரீம் – தலா 2 டேபிள்ஸ்பூன், சர்க்கரை, உப்பு – சிறிதளவு.

9செய்முறை: ஸ்வீட் கார்னுடன் சிறிது உப்பு சேர்த்து வேகவிடவும். முத்துக்களை உதிர்த்துக் கொள்ளவும். வாணலியில் சிறிதளவு வெண்ணெய் விட்டு, உருகியதும் இஞ்சி – பூண்டு விழுது சேர்த்து நன்கு வதக்கவும். பிறகு வெங்காயம் சேர்த்து வதக்கவும். இதனுடன் மிளகாய்த்தூள், தக்காளி சாஸ், சர்க்கரை, உப்பு, உதிர்த்த கார்ன் சேர்த்து நன்கு கொதிக்கவிட்டு இறக்கி (தேவைப்பட்டால் சிறிது நீர் சேர்த்துக் கொள்ளலாம்), ஃப்ரெஷ் க்ரீம் சேர்க்கவும்.

பிரெட் ஸ்லைஸில் வெண்ணெய் தடவி தவாவில் டோஸ்ட் செய்து, அதன்மேல் கார்ன் கிரேவியை பரவலாக சேர்த்துப் பரிமாறவும்.

மேத்தி சப்பாத்தி

தேவையானவை: கோதுமை மாவு – 2 கப், மஞ்சள்தூள் – கால் டீஸ்பூன், கடலை மாவு – ஒரு டேபிள்ஸ்பூன், வெந்தயக் கீரை – 2  சிறிய கட்டு (இலைகளை மட்டும் ஆய்ந்து, சுத்தம் செய்யவும்), மிளகாய்த்தூள் – அரை டீஸ்பூன், அம்சூர் பவுடர் (மாங்காய்த்தூள்) – 2 டீஸ்பூன், நெய் சிறிதளவு, எண்ணெய்,  உப்பு – தேவையான அளவு.

10செய்முறை: கொடுக்கப்பட்டுள்ள அனைத்துப் பொருட்களையும் (எண்ணெய் நீங்கலாக) ஒன்று சேர்த்து தேவையான தண்ணீர் விட்டு நன்கு பிசைந்து கொள்ளவும். பிசைந்த மாவை சின்னச் சின்ன சப்பாத்திகளாக திரட்டி, தோசைக்கல்லில் போட்டு, சுற்றிலும் எண்ணெய் விட்டு சுட்டு எடுக்கவும்.

இதற்கு ஆனியன் ராய்தா சிறந்த காம்பினேஷன்.

காரசார வேர்க்கடலை பொடி

தேவையானவை: வறுத்து, தோல் நீக்கிய வேர்க்கடலை – 2 கப், வறுத்த வெள்ளை எள் – ஒரு டேபிள்ஸ்பூன், காய்ந்த மிளகாய் – 6 (வெறும் வாணலியில் லேசாக வறுக்கவும்), பூண்டு – 6 பல், உப்பு – தேவையான அளவு.

11செய்முறை: கொடுக்கப்பட்டுள்ள பொருட்கள் அனைத்தையும் ஒன்று சேர்த்து மிக்ஸியில் நைஸாக அரைத்தெடுக்கவும். சூடான சாதத்தில் சிறிது நெய் விட்டு வேர்க்கடலைப் பொடியைப் போட்டு பிசைந்து சாப்பிட… சுவை அள்ளும்!

ஆந்திரா பருப்பு பொடி

தேவையானவை: பொட்டுக்கடலை – ஒரு கப், காய்ந்த மிளகாய் – 6, சீரகம் – அரை டேபிள்ஸ்பூன், பூண்டு – 4 பல், உப்பு – சிறிதளவு.

12செய்முறை: வெறும் வாணலியில் காய்ந்த மிளகாய், சீரகத்தை வறுத்தெடுக்கவும். முதலில் மிக்ஸியில் மிளகாயை பொடித்து, பிறகு அதனுடன் சீரகம், பூண்டு, பொட்டுக்கடலை, உப்பு சேர்த்து நைஸாக அரைக்கவும். சூடான சாதத்தில் இந்த பொடியைப் போட்டு சிறிது நெய் சேர்த்து சாப்பிட்டால்… சூப்பர் சுவையில் இருக்கும்.

மசாலா இட்லி

தேவையானவை: இட்லி – 10, வெங்காயம், தக்காளி – தலா 2, கேரட் துருவல் – 2 டேபிள்ஸ்பூன், இஞ்சி – பூண்டு விழுது, மிளகாய்ப் பொடி, சாம்பார் பொடி, கரம்மசாலா பொடி – தலா ஒரு டீஸ்பூன், எண்ணெய், உப்பு – தேவையான அளவு.

13செய்முறை: வெங்காயம், தக்காளியை பொடியாக நறுக்கவும்,  இட்லிகளை ஓர் அங்குல சதுர துண்டுகளாக நறுக்கி, எண்ணெயில் பொரித்து தனியே எடுத்து வைக்கவும். வாணலியில் எண்ணெய் விட்டு, காய்ந்ததும் வெங்காயம், தக்காளி, கேரட் துருவல், இஞ்சி – பூண்டு விழுது சேர்த்து நன்கு வதக்கவும். பிறகு மிளகாய்ப் பொடி, சாம்பார் பொடி, கரம்மசாலா பொடி, உப்பை சேர்த்து வதக்கவும் (கொஞ்சம் நீர் தெளித்துக் கொள்ளலாம்). இதனுடன் பொரித்த இட்லி துண்டுகளை சேர்த்து ஒரு புரட்டு புரட்டி… சுடச்சுட பரிமாறவும்.

மல்ட்டி கிரெய்ன்ஸ் பொடி

தேவையானவை: பச்சைப்பயறு, வேர்க்கடலை, கறுப்பு உளுந்து, வெள்ளை சோளம், கடலைப்பருப்பு, பச்சரிசி, புழுங்கல் அரிசி – தலா கால் கப்,  காய்ந்த மிளகாய் – 8, பெருங்காயத்தூள் – அரை டீஸ்பூன், எண்ணெய், உப்பு – தேவையான அளவு,

14செய்முறை: தானிய வகைகளை வெறும் வாணலியில் தனித்தனியே நன்கு வறுத்தெடுக்கவும். வாணலியில் சிறிது எண்ணெய் விட்டு காய்ந்ததும்… காய்ந்த மிளகாய், பெருங்காயத்தூள் சேர்த்து வறுத்து, அனைத்து தானியங்கள் மற்றும் உப்பு சேர்த்து மிக்ஸியில் நைஸாக பொடிக்கவும்.

இந்தப் பொடியை சூடான சாதத்துடன் சேர்த்து, சிறிது நெய் விட்டு கலந்து சாப்பிடலாம்.

ஹனி சப்பாத்தி

தேவையானவை: கோதுமை மாவு – 2 கப், தேன் – ஒரு கப், வெள்ளை எள் – ஒரு டேபிள்ஸ்பூன், நெய் – 2 டேபிள்ஸ்பூன், எண்ணெய், உப்பு  – தேவையான அளவு.

15செய்முறை: வெள்ளை எள்ளை வெறும் வாணலியில் லேசாக வறுத்தெடுக்கவும். கோதுமை மாவுடன் தேன், நெய், வறுத்த எள், தேவையான உப்பு, தண்ணீர் சேர்த்து நன்கு பிசையவும். பிசைந்த மாவை சின்னச் சின்ன சப்பாத்திகளாக திரட்டி, தோசைக்கல்லில் போட்டு எண்ணெய் விட்டு பொன்னிறமாக சுட்டு எடுக்கவும்.

தொடரும்…

நன்றி – அவள் விகடன்