Google Search Engine

தலைப்புகளில் தேட

தேதிவாரியாக பதிவுகள்

November 2013
S M T W T F S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930

Archives

Visitors since 22-3-13

Free counters!
இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 4,938 முறை படிக்கப்பட்டுள்ளது!

அறிந்து கொள்வோம்! -1

  • உலகில் உள்ள விஷ மரங்களில் இந்தோனேசியாவில் உள்ள ‘உபர்ஸ்’ மரம்தான் அதிக விஷமானது.
  • ஒவ்வொரு முழு நிலவுக்கும் இடைப்பட்ட காலம் 29 1/2 நாட்கள்
  • புகழ்பெற்ற ஈஃபில் டவரின் பிளானை வரைய ஆறாயிரம் சதுர கஜம் காகிதம் தேவைப்பட்டதாம்.
  • உலகில் மிக அகலமான பாலம் சிட்னி ஹார்பர் பாலம்.
  • உலகில் அடிக்கடி பூகம்பம் ஏற்படும் நாடு ஜப்பான் அல்ல; மெக்சிகோ
  • நண்டுக்கு ஐந்து ஜோடி கால்கள் உண்டு. செவுல்களால்தான் அது மூச்சுவிடும்.
  • வைக்கோலால் ஆன தொப்பிகளை ஈக்வடாரில் அதிகம் பயன்படுத்துகிறார்கள்
  • இந்தியாவில் அதிகம் பயிராகும் மிளகாய் ரகம் – ஹங்கேரியன் ‘பாப்ரிகா’
  • இந்தியாவில் மலை ஏறுவதற்கான கிளப்புகள் அதிக அளவில் மேற்கு வங்க மாநிலத்தில்தான் உள்ளன.
  • சுறா மீனை ஜப்பானியர்கள் ‘கடல் தங்கம்’ என்று அழைக்கிறார்கள்
  • ‘சிரிப்’ என்ற பறவை நீர்ப்பரப்பின் மேல் தன் கூட்டைக் கட்டுகிறது.
  • முதல் உலகப் போர் 1914 முதல் 1918 வரை.
  • இரண்டாம் உலகப் போர் 1939 முதல் 1945 வரை.
  • இரண்டாம் உலகப் போருக்குப்பின் 1945-ம் ஆண்டு ‘உலக ஐக்கிய நாடுகள் சபை’ அமைக்கப்பட்டது.
  • பழந்தமிழர் காலம் சுமார் கி.மு.10,000 ஆண்டில் தொடங்குவதாக கூறப்படுகிறது.
  • லட்சத்தீவில் மொத்தமுள்ள 36 தீவுகளில் 11 மட்டும் மக்கள் வசிக்கிறார்கள்.
  • இறந்து போனவர்களின் உடலை பதம் செய்து காப்பாற்றுவதற்கு பெயர் ‘எம்பாம்’.
  • ‘இம்பாலா’ என்ற மான் ஒரே தாவலில் 8 அடி உயரம் துள்ளி 25 அடி தூரம் பாயும்.
  • அமெரிக்காவில் ஹெலிகாப்டர்களை டாக்சிகளாக பயன்படுத்துகிறார்கள். இதை ‘சாப்பர்ஸ்’ என்று அழைக்கிறார்கள்.
  • தலைவலிகளில் 47 விதங்கள் இருக்கின்றன.
  • மனித சிந்தனையின் வேகம் மணிக்கு 150 மைல் செயல்படுகிறதாம்.
  • ‘செரியம்’ எனப்படும் பொருளை நகத்தால் கீறினாலே தீப்பற்றிக் கொள்ளும்.
  • கழுகு பறக்கும்போது அதன் கால்களும், தலையும் கீழ் நோக்கியே இருக்கும்.
  • உலகில் மிகுதியான மக்களால் பயன்படுத்தப்படுவது ரோமன் எழுத்துக்கள்தான்.
  • வெயில் 150 டிகிரிக்கும் மேலாக அடித்தால்தான் ஒட்டகத்திற்கு வியர்க்கும்.
  • நேபாள வீரர் “ஆக்ரிட்டா ஷெர்பா” என்பவர் பத்து முறை எவரெஸ்ட்டை அடைந்ததால், அவருக்கு “பனிச் சிறுத்தை மனிதன்” என்ற சிறப்பு பட்டம் உண்டு.
  • தேசியக் கொடியில் “ஆலமரம்” இடம்பெற்றுள்ள நாடு லெபனான்.
  • மாட்டுச்சாண எரிபொருளில் உள்ள முக்கியமான வாயு “மீத்தேன்”.
  • முயலின் உடலில் அபாய அறிவிப்புக் கொடுக்கும் பகுதி வால்.
  • முட்டையிலிருந்து குஞ்சு பொரிக்கும் ஆண் இன மீன் “கடல் குதிரை”.
  • பாங்க ஆஃப் இங்கிலாந்து 1804-ம் ஆண்டு முதல் 1806-ம் ஆண்டு வரை பிரிட்டிஷ் டாலர்களான வெள்ளி டாலர் நாணயங்களை கொள்ளுப் பட்டறையால் அடித்து வெளியிட்டது.
  • விண்வெளியில் ஆறுமுறை பயணித்த பெருமை “கேப்டன் ஜான் வாட்ஸ் எங்” என்ற அமெரிக்கருக்கு உண்டு.
  • சயாமிய மொழியில் “நான்” என்ற சொல்லை ஒன்பது விதமான சொற்களால் வெளிப்படுத்தலாம். உலகில் வேறு எந்த மொழிக்கும் இந்தச் சிறப்பு இல்லை.
  • 13 நாட்டு எல்லைகளைக் கொண்டுள்ள ஒரே நாடு சீனா
  • உலகின் மிகப்பெரிய வளைகுடா – மெக்ஸிகோ வளைகுடா.
  • நீர் பனிக்கட்டியாக உறையும்போது அதன் பரிமாணம் அதிகமாகும்.
  • அமெரிக்காவின் கொடி “ஓல்டு குளோரி” எனப்படுகிறது.
  • “அமாரிக்” எத்தியோப்பியாவில் பேசப்படும் மொழி.
  • மூங்கிலில் சுமார் 500 வகைகள் உள்ளன.
  • குரங்குகளுக்குப் பல வகையான நிறங்களைப் பிரித்தறியும் ஆற்றல் உண்டு.
  • முப்பதாம் வருட விழாவை ஆங்கிலத்தில் “பெர்ல் ஜூப்ளி” என்று அழைப்பார்கள்.
  • பிச்சைக்காரர்களுக்கு பென்ஷன் வழங்கிய நாடு – இலங்கை.
  • சீக்கியர்களின் கடைசி குரு – “குரு கோவிந்த் சிங்
  • “சகாரா” 35 லட்சம் சதுர மைல் பரப்பில் உள்ளது.
  • சந்திரனைப் போன்று வீனஸ் கோளுக்கும் பிறைகள் உண்டு.
  • பாலில் இல்லாத சத்து “இரும்புச்சத்து”
  • நாட்டில் பெட்ரோலியம் கண்டுபிடிக்கும் மையம் “டோராடூன்” என்ற இடத்தில் உள்ளது.
  • இந்திய நேரம் “அலகாபாத்” என்ற இடத்தின் நேரத்தை வைத்து கணக்கிடப்படுகிறது.

நன்றி: யாழ்