Google Search Engine

தலைப்புகளில் தேட

தேதிவாரியாக பதிவுகள்

December 2013
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  

Archives

Visitors since 22-3-13

Free counters!
இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 4,866 முறை படிக்கப்பட்டுள்ளது!

பக்கத்து வீட்டு அங்கிளை, நம்ம வீட்டுக்கு…

 “பக்கத்து வீட்டு அங்கிளை, நம்ம வீட்டுக்கு வர வேணாம்னு சொல்லுங்கம்மா!”

பத்து வயதான அந்த குட்டிப்பெண், படிப்பில் படு சுட்டி. விளையாட்டில் அவளை மிஞ்ச ஆளில்லை. எப்போதும் பரபரவென ஒரு பட்டாம்பூச்சியைப் போல் சுற்றிகொண்டிருந்த குழந்தை, திடீரென வீட்டில் யாருடனும் அதிகம் பேசுவதில்லை. நண்பர்களுடன் சேர்ந்து விளையாடுவதில்லை. சரியாகச் சாப்பிடுவதில்லை. முதல் ஐந்து ரேங்குக்குள் வருகிறவள் இந்த முறை தேர்வில் இரண்டு பாடங்களில் ஃபெயில். அவள் ரேங்க் கார்டைப் பார்த்த பிறகுதான் பெற்றோர் அலர்ட் ஆனார்கள்.

“என்னாச்சு… ஏன் எப்பவும் டல்லா, ஏதோ பயந்த மாதிரியே இருக்க?” என்று கவலையுடன் கேட்டபோது, குழந்தையிடம் அழுகையைத் தவிர வேறு பதிலில்லை. தன் தவிப்பை அடக்கிக்கொண்டு, “ஏண்டா..?” என்று தன் மடியில் சாய்த்துக்கொண்டு பக்குவமாக அம்மா கேட்க, “அந்த பக்கத்து வீட்டு அங்கிளை நம்ம வீட்டுக்கு வர வேணாம்னு சொல்லுங்கம்மா ப்ளீஸ்…” என்று அழுகையினூடே தயங்கித் தயங்கி பிஞ்சு சொன்னதைக் கேட்ட தாய்க்கு, நடந்த விபரீதம் ஓரளவுக்குப் புரிந்து விட்டிருந்தது.

avl30aஆத்திரத்தையும் அழுகையையும் மீண்டும் அடக்கிக்கொண்டு, “குட்டிம்மாவை என்ன பண்ணினார் அந்த அங்கிள்?” என்று கேட்க, “நான் தனியா இருக்கும்போது அந்த அங்கிள் சும்மா சும்மா என்னைக் கிள்ளறார், என்னென்னமோ பேசறார்… எனக்குப் பிடிக்கவே இல்ல…” என்று குழந்தை மேலும் அழுதிருக்கிறது. பின் அந்த அயோக்கியனை எச்சரித்த பெற்றோர், வீட்டை காலி செய்துகொண்டு வேறு ஏரியாவுக்கே சென்றுவிட்டனர்.

“இது ஏதோ ஒரு குழந்தைக்கு நேர்ந்த அனுபவமல்ல. நூற்றில் ஐம்பது குழந்தைகள் இதுபோல பாலியல் தொந்தரவுக்கு ஆட்படுகிறார்கள். அதை வெளியே சொல்ல அச்சம், கூச்சப்படுவதால் அந்த விபரீதம் அதிகமாக வெளிச்சத்துக்கு வராமலேயே இருக்கிறது. ஏன்… உங்கள் வீட்டுக் குழந்தைக்குக்கூட இதுபோல ஏதாவது ஒரு கெட்ட அனுபவம் நிகழ்ந்திருக்கலாம். காரணம்… குழந்தைகள் மீதான பாலியல் வன்முறையில் இந்தியாவுக்கு உலக அளவில் முதலாவது இடம்!” – அதிர்ச்சித் தகவல் தந்து பேச ஆரம்பித்தார் குழந்தைகளுக்கு ஏற்படும் பாலியல் வன்முறைகளுக்கு எதிராகச் செயல்பட்டு வரும் சமூக ஆர்வலரும் ஆராய்ச்சியாளருமான விஜயலட்சுமி.

“குழந்தைகளுக்கு ஏற்படும் இந்த பாலியல் தொந்தரவுகள், ‘லோ கிளாஸ்’ மக்களிடம்தான் நடக்கிறது என்ற நமது புரிதல், தவறான ஒன்று. இது எல்லா மட்டத்திலேயும் பரவலாக நடக்கிறது. நாம் மிகவும் நம்புகிற அக்கம்பக்கத்தினர், நெருங்கிய உறவினர்கள்தான் மிகப்பெரும்பாலும் ‘இப்படி’ நடந்துகொள்கிறார்கள்Õ’ என்றவர், இந்த ஆபத்திலிருந்து குழந்தையை மீட்பதில் பெற்றோரின் பங்குதான் முக்கியம் என்பதையும் வலியுறுத்தினார்.

“ஒரு குழந்தையிடம் அதிகமான ஒட்டுதலுடன் இருப்பவர் அம்மாதான். எனவே, ‘நம்ம அம்மாகிட்ட என்ன பிரச்னைனாலும் சொல்லலாம்… அவங்க நம்மை பத்திரமா பார்த்துப்பாங்க’ எனும் நம்பிக்கையை தம் குழந்தைகளிடம் ஏற்படுத்துவது ஒரு அம்மாவின் பொறுப்பு. அவர்களின் அளவுக்கதிகமான கண்டிப்பால், ‘அம்மாகிட்ட சொன்னா நம்மைத் தான் திட்டுவாங்க’ என்று எண்ணி, குழந்தைகள் தங்களுக்கு நேரும் இதுபோன்ற விஷமத்தனமான சில்மிஷங்களை தங்களுக்குள்ளேயே புதைத்துக் கொள்ளாமல் பார்த்துக் கொள்வதும் அம்மாவின் கையில்தான் இருக்கிறது” என்றவர், இந்த விஷயத்தில் குழந்தையுடனான தாயின் அணுகுமுறை எப்படி இருக்கவேண்டும் என்பதையும் விளக்கினார்.

“குழந்தைகளிடம், ‘இப்படி நடந்தா… என்ன செய்வடா..?’ என்று சில கேள்விகளைக் கேட்டு, அசாதாரணமான சூழ்நிலையை எப்படிச் சமாளிப்பது என்பதை கற்றுக்கொடுங்கள். உதாரணமாக, ‘திடீர்னு மார்க்கெட்டுல நீயும் நானும் பிரிஞ்சுட்டா எப்படி அம்மாவைக் கண்டுபிடிப்ப…?’ போன்ற கேள்விகளைக் கேட்கும்போதே, ‘உன்ன யாராவது ‘அங்க, இங்க’ தொட்டா என்ன பண்ணுவ?’ போன்ற கேள்விகளையும் கேட்டு, பதில் சொல்ல வையுங்கள். ‘உடம்புல ‘இங்க’யெல்லாம் தொட்டா, அது ‘பேட் டச்’. அப்படி யார் தொட்டாலும் அம்மாகிட்ட சொல்லணும்’ போன்ற விஷயங்களை குழந்தைக்குப் பொறுமையாக, கவனமாக சொல்லித் தாருங்கள்” என்று சொன்ன விஜயலட்சுமி, தொடர்ந்தார்…

“‘யாராவது ‘பேட் டச்’ செஞ்சா, ‘தொடாதீங்க’னு தைரியமா சொல்லணும்’ என்றும், ‘அப்படியும் கைய எடுக்கலைனா, ‘தொடாதீங்க’னு சத்தம் போட்டுக் கத்தணும்’ என்றும் குழந்தைகளுக்கு சொல்லிக் கொடுங்கள். முக்கியமாக, குழந்தை திடீரென்று இயல்புக்கு மாறாக நடந்துகொண்டால், உடனே ‘ஸ்பெஷல் அட்டென்ஷன்’ கொடுங்கள்!” என்ற விஜயலட்சுமி,

“மேற்சொன்ன எல்லா விஷயங்களும் பெண் குழந்தைகளுக்கு மட்டுமல்ல, ஆண் குழந்தைகளுக்கும்தான். ஏனெனில், ஆண் குழந்தைகளும் இப்போது பரவலாக பாலியல் வன்முறைக்கு உட்படுத்தப்படுகிறார்கள் என்பது, வருத்தமான உண்மை!” என்றார் நிறைவு செய்யும் விதமாக.
ம்… குழந்தைகளை குழந்தைகளாகவே பார்த்துக் கொள்ள வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம் நாம்!

நன்றி: அவள்விகடன்