Google Search Engine

தலைப்புகளில் தேட

தேதிவாரியாக பதிவுகள்

February 2014
S M T W T F S
 1
2345678
9101112131415
16171819202122
232425262728  

Archives

Visitors since 22-3-13

Free counters!
இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 2,356 முறை படிக்கப்பட்டுள்ளது!

வேலை தேடும் வேலை!

நம்மில் பலர் இன்று வேலை தேடுவதையே பெரிய வேலையாக கருதி செயல்படுகின்றனர். இந்த கால இளைஞ்ர்கள் வேலை தேடும் கொள்கையை முனைப்புடன் செயல்படுத்தும் அதே நேரத்தில், எப்படி வேலை தேடவேண்டும், எங்கு வேலை தேடவேண்டும், யார் மூலம் வேலை தேடவேண்டும், என்றெல்லாம் ந்னறாக அலசி ஆராய்ந்து, நல்ல வழியில் சென்று முய்ற்சிக்க வேண்டும். குறுக்கு வழியில் சென்றால் குடும்பத்துக்கு அவப்பெயரும், மேலும், தனக்கு கெட்டபெயரையும்தான் தேடிக்கொள்ளவேண்டும்.

ஒருவன் வேலை சம்பந்தமாக முக்கிய பிரமுகர் (வி.ஐ.பி) ஒருவரிடம் சென்றான்.கூடவே தனது தந்தையையும் அழைத்துச்சென்றான்.அவ்னது தந்தையும் அந்த பிரமுகரை வணங்கி தனது மகனுக்கு வேலை வாங்கி தரும்படி வேண்டினார்.”சரி,பார்க்கலாம், உங்கள் பையன் எந்த நிறுவனத்திற்கு மணு செய்துள்ளான்?” எனக் கேட்டார்.” எங்கேயும் இல்லை அய்யா, தாங்கள் பார்த்து எங்கேயாவது வாங்கி கொடுங்கள், என் பையன் திற்மையை பிறகு பாருங்கள்” என்றார் .பிரமுகருக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை. சற்று யோசித்துவிட்டு, “சரி நான் என்னைய்யா, மற்றவர்களுக்கு வேலை தரும் அளவிற்கு எந்த நிறுவனமும் நடத்தவில்லையே,என்னால்யாரிடமாவது சொல்லி, வேலை தரச்சொல்லலாமே தவிர, நான் எப்படி வேலை தர முடி யும்?. அதுவும் நீங்கள் எங்காவது ‘வேலைக்கு ஆள் கேட்டிருக்கின்றர்கள். அதற்கு மணு செய்துள்ளேன், கொஞ்சம் ஏற்பாடு செய்யுங்கள்’ என்றால் சரி. அதை விடுத்து, சும்மா வந்து நின்றுகொண்டு ‘எனக்கு எங்கேயாவது வேலை வாங்கி கொடுங்கள் ‘என்றால் என்னால்  எப்படி செய்யமுடியும்?.என்று கேட்டார்.

” நாங்கள் இப்போது என்ன செய்ய வேண்டும், என்று கூறுங்கள்? அதன்படி நாங்கள் செய்கின்றோம்’  என்று தந்தையும் த்னயனும் விவரத்தை ந்ன்றாக அறிந்துகொண்டு அங்கிருந்து புறப்பட்டனர்  இது ஒருவகையான வேலை தேடும் நிலைப்பாடு.

தந்தயும் மகனும் இனி எந்தெந்த நிறுவனங்களில் ஏறி, இறங்க இருக்கின்றன்ரோ அது அவர்களுக்குத்தான் வெளிச்சம்.

இனி  இன்னொருவகையான வேலை தேடும் முறையைப்பார்ப்போம்..

ஒரு நிறுவனத்தில்,சில குறிப்பிட்ட வேலைக்கு ஆட்கள் தேவை என விளம்பரம் வந்தது.அந்த நிறுவனத்திற்கு தேவையான ஆட்களை விட ஏறத்தாழ ஐம்பது மடங்கு அதிகமாக விண்ணப்பங்கள் வந்து சேர்ந்து விட்டன. மேலும் இறுதி நாளன்று மாலை 5.00 மணியளவில் ஒரு விண்ணப்பதாரர் வந்து தனது விண்ணப்பத்தைச் சமர்ப்பித்தார்.

“நேரம் முடிந்து விட்டது.” எனக் கூறி அவருடைய வியண்ணப்பத்தை நிராகரித்தார், அங்கிருந்த கடை நிலை ஊழியர். ஆனால் விண்ணப்பதாரரோ, ‘தாம் வந்த பேருந்து சற்று தாமதமாக வந்து விட்டது, சற்று பொருத்தருள வேண்டும். தயவு செய்து ஏற்றுக்கொள்ளூங்கள்” என்று மன்றாடினார். ஆனால் கடைநிலை ஊழியர் அவரை பொருட்படுத்தாமல், தனது மேல்நிலை ஊழியரை வரவழைத்தார். வந்தவரும் விண்ணப்பத்தை ஏற்றுக்கொள்ள மறுத்தாரேயன்றி, விண்ணப்பத்தாரருக்கு ஆதரவாக செயல்படவில்லை. பிறகு இரண்டு முதுநிலை மேலாளர்கள் வந்தனர். அவர்களும் அதே பதிலைத்தான் தந்தனர். இவ்வளவையும், தாமதமாக வந்த வேறு சிலரும்,பார்த்துக்கொண்டிருந்துவிட்டு அங்கிருந்து சென்றுவிட்டனர்.

ஆனால் நமது நாயகனோ அங்கிருந்து செல்வதாக இல்லை.பின்னர் ஒரு வழியாக அங்கிருந்தவர்களிடம் அணுமதி பெற்றுக்கொண்டு மேலான்மை இயக்குனரை நேரடியாக சென்று சந்தித்து தனது காலதாமதத்துக்கான காரணத்தையும், தனது குடுமப நிலையையும், மிகத் தெளிவாக விவரித்தான். மேலான்மை இயக்குனரோ “நீ சொல்வது சரிப்பா, ஆனால் இந்த நிலையில் என்னால்  எதுவும் செய்யமுடியாத நிலையில் இருக்கின்றேனே” என்று இழுத்து.. “இப்பொழுது வந்துள்ள இவ்வளவு விண்ணப்பங்களையும் எப்படி பிரித்து,தகுதியானவர்களை தேர்ந்தெடுப்பது என்பதே பெரிய வேலையப்பா,” என்று அவர் கூறி முடிப்பதற்குள், “அய்யா, அந்த வேலையையாவது எனக்கு கொடுங்களேன். நான் அதை பிரித்து தேர்ந்தெடுக்கும் வேலையை பார்க்கின்றேனே?” என்றார் அதற்கும் எம் .டி.,,” முன்பே அதற்காக, ஒருசிலரை நியமித்துள்ளோமே” என்றார்.. இத்ற்கும் இந்த விடாக்கண்டன் கொடாக்கண்டனாக மாறி,” அவர்களில் நானும் ஒருவனாக இருக்கின்றேன அய்யா, எப்படியாவது எங்கள் குடும்பத்தை சில நாட்களாவது பட்டினியிலிருந்து காப்பாற்றிய புண்ணியம் உங்களைச்சாரும் ” என்று கூறினான்.

இதற்குமேல் எம்.டி.யால் ஏதும் பேசமுடியவில்லை. அவரும் மனிதர்தானே? எவ்வள்வு பெரிய இடத்தில் இருந்தாலும் மனம் எல்லோருக்கும் மனிதநேயத்துடந்தானே அமைந்துள்ளது?. பிறகு ஒருவாறு சமாளித்து,” சரி, சரி, நாளை வந்து என்னைப் பார். நான் ஏதாவது செய்கின்றேன்” என்றார்.

மறுநாள் நமது ஆள் சென்றார், வேலை கிடைத்தது. இவருடைய வேலைத்திறமையைப் பார்த்து தொடர்ந்து அந்த அலுவலகத்திலேயே வேலையில் சேர்ந்து நன்றாக பணியாற்றி அனைவரிடமும் நல்ல பெயர் வங்கினான்.
சில நாட்களில், அங்கு வேலை பார்க்கும்  அனைவரும், “நீ நல்ல திறமையும் யாரிடம் எப்படிப் பேசவேண்டும் என்ற புத்திசாலித்தனமும் உடைவன். உன்னைத்தான்யா  “”வந்தான் ,வென்றான்” என்று சொல்ல வேண்டும்” என்று கூறி அவனை திக்குமுக்காட செய்தனர்.