Google Search Engine

தலைப்புகளில் தேட

தேதிவாரியாக பதிவுகள்

April 2014
S M T W T F S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  

Archives

Visitors since 22-3-13

Free counters!
இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 4,691 முறை படிக்கப்பட்டுள்ளது!

உடலினை உறுதி செய்!

உடற்பயிற்சிக்கு நேரம் இல்லை என்று நினைப்பவர்கள் பின்னர் ஒருநாள் மருத்துவமனைக்குச் செல்ல நேரம் ஒதுக்க வேண்டியிருக்கும் – எர்வர்ர் ஸ்டேன்லி நான் ரொம்பவும் பிஸியாக இருக்கிறேன். எனக்கு உடற்பயிற்சி செய்ய நேரமில்லை என்கிறார்கள் சிலர். பிஸியாக இருப்பது வரவேற்கத்தக்கதுதான். மன அழுத்தம் (Stress), மனச்சோர்வு (Depression) போன்ற மனநோய்களிலிருந்து விடுதலை பெற ஒரே வழி பிஸியாக இருப்பதாகும். பிஸியாக இருப்பவர் யார்? எல்லா பணிகளையும் செய்து முடிப்பவரைத்தான் பிஸியானவர் என்று கூற முடியும். “A busy man is one woo finds time for every toing”. எனவே ஒரு மணிநேரம் உடற்பயிற்சி என்ற கடமையை நிறைவேற்றும் மனிதனே தன்னை பிஸியானவர் என்று கூறிக்கொள்ள முடியும். உடற்பயிற்சி செய்ய நேரம் ஒதுக்க முடியவில்லை என்றாலும்கூட அன்றாட வேலைகளைக் கவனிக்கும்போதுகூட உடற்பயிற்சியில் ஈடுபடலாம். அதற்கு சில யோசனைகள். அ.    பஸ் நிலையத்திலிருந்தோ, ரயில் நிலையத்திலிருந்தோ வீர்டிற்கு நடந்து விடலாம். ஆர்டோவிற்கு அதிக பணம் கொடுத்து அவதிப்படுவதைத் தவிர்க்கலாம். ஒரு கல்லில் இரு மாங்காய்கள். நான் கூட எழும்பூர் இரயில் நிலையத்திலிருந்து அண்ணாநகர் வளைவு வரை காரில் வருவேன். அங்கிருந்து முகப்பேரிலிருக்கும் எனது வீர்டிற்கு நடந்தே சென்றுவிடுவேன். ஒரு மணிநேரத்தில் 8 கி.மீ. தூரம் நடந்ததும் காலை 6.30 மணி ஆகிவிடும். அன்றைய உடற்பயிற்சியும் ஆகிவிர்டது; அதிகாலையில் வீர்டில் உள்ளவர்களைத் தர்டி எழுப்புவதும் தவிர்த்தாகிவிர்டது. நேரம் இருந்தால் எந்த தூரமும் நடக்கும் தூரம் தான். ஆ.    பஸ் நிலையத்திலோ, இரயில் நிலையத்திலோ காத்திருக்கும் நேரத்தில் நிற்பதற்கு பதில் நடக்கலாம். இ.    மார்க்கெர்டுக்கு மோர்டார் சைக்கிளில் செல்வதற்குப் பதிலாக சைக்கிளில் செல்லலாம் அல்லது நடந்தே செல்லலாம். சைக்கிள் மிதிப்பதில் கௌரவக் குறைவு எதுவுமில்லை. மேல்நாடுகளில் கோடீஸ்வரர்கள் கூட சைக்கிளில் பயணம் செல்கின்றனர். அவர்களும் உடற்பயிற்சிக்காகத் தான் சைக்கிள் பயணம் செய்கின்றனர். ஈ.    உங்களது அலுவலகத்தில் லிப்ர் இருந்தாலும் படியிலேயே ஞறுங்கள், படியிலேயே இறங்குங்கள். அப்படி காலையிலும், மாலையிலும், உணவு வேளையிலும் ஞறி இறங்குவதே ஒரு நல்ல உடற்பயிற்சியாகும். சோர்வு அடையும்போது கூட ஒருமுறை ஞறி இறங்கலாம். தினமும் இரண்டு மாடிகள் படிக்கர்டில் ஞறி இறங்கினால் ஆண்டொன்றிக்கு மூன்று கிலோ உடல் எடைக் குறையும். உ.    ஞதாவது அலுவலகத்திற்கு சென்று ஓர் அதிகாரியை பார்க்கச் செல்கிறீர்கள். அதிகாரி அங்கு வர ஒரு மணிநேரம் ஆகும் என்றால் அங்கு ஒரு நாற்காலி போர்டு அமருவதைவிட அந்த அலுவலத்தில் அப்படியே ஒரு மணிநேரம் நடந்து அன்றைய உடற்பயிற்சித் தேவையைப் பூர்த்தி செய்து கொள்ளலாம். பந்தோபஸ்து டியூர்டிக்கு அமர்த்தப்படும் காவலர்கள் கூட பணியின் போது பக்கத்து வீர்டிலிருந்து ஒரு நாற்காலி வாங்கி அமர்ந்து கொள்வார்கள். அவர்களுக்கு நான் கூறிய அறிவுரை கூட, உர்காருவதை விர்டுவிர்டு நடக்க வேண்டும் என்பதாகும். ஊ.    ஞாயிற்றுக்கிழமைகளில் பிஸியாக இருக்க வாய்ப்பில்லை. அன்றைய தினம் குடும்பத்துடன் ஒரு நீண்ட நடைப்பயணம் (5 கி.மீ.) செல்லலாம். எ.    கோயிலுக்கோ, சினிமா அரங்கிற்கோ நடந்தே போகலாம். வரும்போது ஆர்டோவில் வந்து சேர்ந்துவிடலாம். ஏ.    வீர்டுவேலைகளை வேலை ஆர்களைத் தேடாமல் நாமே செய்யலாம். நமது துணிகளை நாமே துவைப்பது, தேய்ப்பது, வீர்டைப் பெருக்குவது, சமைப்பது, ஒர்டடை அடிப்பது போன்ற செயல்கள் அனைத்தும் உடற்பயிற்சிகளே. தண்ணீர் கொண்டு வா என்று அம்மாவிடம் கேர்காமல் நாமே நடந்து சென்று தண்ணீர் எடுக்கலாம். இன்னும் சொல்லப்போனால் அம்மாவுக்கு நாமே தண்ணீர் எடுத்துத் தரலாம். இச்செயல் உடற்பயிற்சியாவதோடு மர்டுமல்லாமல் குடும்ப நல்லுறவையும் மேம்படுத்தும். தன்னம்பிக்கையையும் வளர்க்கும். ஐ.    வீர்டிற்கு வெளியே சென்று நடக்கவோ, ஜிம்மிற்குச் சென்று உடற்பயிற்சி செய்யவோ வசதி இல்லை என்றால் வீர்டிலேயே உடற்பயிற்சி செய்து கொள்ளலாம். இரவு உணவுக்குச் சற்று முன்னர்கூட உடற்பயிற்சி செய்யலாம். ஒ.    காவல்துறையில் மிக உயர்ந்த அதிகாரிகள் சிலர் தங்களது இருக்கையின் அருகில் நின்று கொண்டு தபால்களைப் பார்ப்பதைக் கவனித்திருக்கிறேன். அதற்காக ஒரு தனி மேஜையையும் அவர்கள் வைத்துள்ளனர். மூன்று மணி நேரம் உர்காருவதற்குப் பதில் நிற்பதால் உடலுக்கு ஓரளவுக்கு உடற்பயிற்சி கிடைக்கிறது. ஓ.    அன்றாடம் அலுவலகத்தில் செய்ய வேண்டிய வேலைகளை நீங்களே செய்யலாம். தண்ணீர் கொண்டு வா என்று மற்றவரிடம் கேர்பதைவிட நீங்களே தண்ணீர் பிடித்து குடிக்கலாம். அலுவலகத்தில் உங்களது கோப்புகளைப் பீரோவிற்குச் சென்று நீங்களே எடுக்கலாம். ஒள.     படிக்கும் மாணவர்கள் சோர்வடையும்போது புத்தகத்துடன் நடந்து கொண்டே படிக்கலாம். படித்த மாதிரியும் இருக்கும், உடற்பயிற்சி செய்த மாதிரியும் இருக்கும்.

இது போன்ற உடல் உழைப்புகள் வழக்கமான உடற்பயிற்சிக்கு பக்கபலமாக இருக்க வேண்டுமே தவிர, இதுவே பிரதான உடற்பயிற்சியாக இருந்துவிடக்கூடாது. வாரத்திற்கு மூன்று நார்கள் ஞதாவது ஓர் ஞரோபிக் உடற்பயிற்சி என்பது மிகவும் அத்தியாவசியமானதாகும். அதாவது குறைந்த பர்சம் 20 நிமிடங்கள் அதிவேகமாக நடக்க வேண்டும். முடிந்தால் ஓட வேண்டும். நமது சொத்துகளிலேயே உயர்ந்த சொத்தான உடல் நலத்தை ஈர்ட பெரிய மூலதனம் ஒன்றும் தேவையில்லை. இதற்குத் தேவையானது தினமும் 30 நிமிடங்கள் தான். 24 மணிநேரத்தில் 30 நிமிடங்களை உங்களால் ஒதுக்க முடியாதா? உங்களுக்குள் இருக்கும் ஒருவரைக் கேர்டுப் பாருங்கள். நிச்சயமாக முடியும் என்பதுதான் அவரது பதிலாக இருக்கும். உங்களுக்குள் இருக்கும் அந்த நபர் யார்? ……………

சைலேந்திர பாபு