Google Search Engine

தலைப்புகளில் தேட

தேதிவாரியாக பதிவுகள்

May 2014
S M T W T F S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031

Archives

Visitors since 22-3-13

Free counters!
இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 4,499 முறை படிக்கப்பட்டுள்ளது!

பராஅத் இரவின் சிறப்பு என்ன?

நாம் இப்பொழுது ரமழானிற்கு முந்தைய மாதமான ஷஃபானிலே இருக்கிறோம். ஷஃபான் நபியவர்கள் அதிகமாக நோன்பு நோற்ற மாதம் என்பதை பின்வரும் புகாரியின் ஹதீஸ் சொல்கிறது.1969. ஆயிஷா(ரலி) அறிவித்தார்:

صحيح البخاري (3/ 38):
1969 – حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ يُوسُفَ، أَخْبَرَنَا مَالِكٌ، عَنْ أَبِي النَّضْرِ، عَنْ أَبِي سَلَمَةَ، عَنْ عَائِشَةَ رَضِيَ اللَّهُ عَنْهَا، قَالَتْ: كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ ” يَصُومُ حَتَّى نَقُولَ: لاَ يُفْطِرُ، وَيُفْطِرُ حَتَّى نَقُولَ: لاَ يَصُومُ، فَمَا رَأَيْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ اسْتَكْمَلَ صِيَامَ شَهْرٍ إِلَّا رَمَضَانَ، وَمَا رَأَيْتُهُ أَكْثَرَ صِيَامًا مِنْهُ فِي شَعْبَانَ “

“(இனி) நோன்பை விடவே மாட்டார்கள்’ என்று நாங்கள் கூறுமளவுக்கு நபி(ஸல்) அவர்கள் நோன்பு நோற்பார்கள்: ‘(இனி) நோன்பு நோற்கவே மாட்டார்கள்’ என்று நாங்கள் கூறுமளவுக்கு நோன்பைவிட்டுவிடுவார்கள்! ரமளானைத் தவிர வேறெந்த மாதத்திலும் முழு மாதமும் நபி(ஸல்) அவர்கள் நோன்பு நோற்றதை நான் பார்த்ததில்லை; ஷஅபான் மாதத்தில் தவிர (வேறெந்த மாதத்திலும்) அதிகமாக அவர்கள் நோன்பு நோற்றதை நான் பார்த்ததில்லை!”

அவ்வாறு நோன்பு பிடிக்க முடியாது விட்டாலும் ஆகக் குறைந்தது ஒரு நோன்பாவது நோற்க வேண்டுமென நபியவர்கள் வலியுறுத்தியுள்ளார்கள் .

صحيح مسلم (2/ 820):
199 – (1161) حَدَّثَنَا هَدَّابُ بْنُ خَالِدٍ، حَدَّثَنَا حَمَّادُ بْنُ سَلَمَةَ، عَنْ ثَابِتٍ، عَنْ مُطَرِّفٍ – وَلَمْ أَفْهَمْ مُطَرِّفًا مِنْ هَدَّابٍ – عَنْ عِمْرَانَ بْنِ حُصَيْنٍ رَضِيَ اللهُ عَنْهُمَا، أَنَّ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ لَهُ – أَوْ لِآخَرَ -: «أَصُمْتَ مِنْ سُرَرِ شَعْبَانَ؟» قَالَ: لَا، قَالَ: «فَإِذَا أَفْطَرْتَ، فَصُمْ يَوْمَيْنِ»

இந்த ஷஃபானின் இறுதியில் நீர் நோன்பு நோற்கவில்லையா?’ என்று கேட்டார்கள். அம்மனிதர் ‘இல்லை! இறைத்தூதர் அவர்களே!’ என்றார். நபி(ஸல்) அவர்கள் ‘நீர் (ரமளான்) நோன்பை முடித்து விட்டால் இரண்டு நாள்கள் நோன்பு நோற்பீராக!’ என்று கூறினார்கள்.  ஸஹீஹ் முஸ்லிம்

எனவே ஷஃபான் ஒரு சிறப்பான மாத் நபியவர்கள் நோன்பு நோற்ற நோன்பு நோற்க வலியுறுத்திய மாதம். எனவே நாமும் இம்மாதத்தில் நாமும் நோன்பு நோற்க கடமைப்பட்டிருக்கிறோம். ஆனாலும் சிலர் நபியவர்கள் இந்த மாதத்திற்கு வழங்கிய முக்கியத்துவத்தையும் தாண்டி சில நூதனங்களையும் பலஹீனமான ஹதீஸ்களையும்  அமுல்படுத்துவதைப் பார்க்கிறோம். குறிப்பாக ஷஃபான் 15 சிறப்பித்து வரும் செய்திகள் அனைத்தும் பலஹீனமானவையே அந்த பலஹீனமான ஹதீஸ்கள் பின்வருமாறு:

முதலாவது ஆதாரம்:

إن الله ليطلع في ليلة النصف من شعبان . فيغفر لجميع خلقه . إلا لمشرك أو مشاحن
روي عن معاذ بن جبل -ابن حبان (1980)، وأبي ثعلبة الخشني-الكبير(590)، وعبدالله بن عمرو- أحمد (6642)، وأبي موسى الأشعري-ابن ماجه(1390)، وأبي هريرة- البزار في مسنده (ص245-زوائده) ، وأبي بكر الصديق-البزار(80)، وعوف بن مالك-البزار(2754)، وعائشة-ابن ماجه(1389)وأحمد(26060) .


‘அல்லாஹ் ஷஃபான் 15வது இரவில் அடியார்களை உற்று நோக்கி இணைவப்பவரையும் பாவத்தில் மூழ்கியவனையும் தவிர மற்ற அனைவருக்கும் பாவங்களை மன்னிக்கிறான்’ என்று நபியவர்கள் கூறினார்கள். (இப்னுமாஜஹ்-1390 மற்றும் பல நூற்கள்)

இந்த செய்தி பல நபித்தோழர்கள் வழியாக அறிவிக்கப்பட்டிருந்தாலும் அனைத்து வழிகளும் பலஹீனமானதாகும்.

01) முஆத் இப்னு ஜபல் வழியாக அறிவிக்கப்பட்டுள்ள செய்தியில் மக்ஹ{ல் தனது ஆசிரியர் யார் என்பதைச் சரியாக சொல்லாததனால் இது தொடர்பறுபட்ட பலஹீனமான அறிவிப்பாளர் வரிசையாகும்.

02) அபூ ஸஃலபா வழியாக அறிவிக்கப்படும் செய்தியில் அல்அஹ்வஸ் இப்னு ஹகீம் என்பவர் இடம் பெறுகிறார் இவர் மிகவுமே பலஹீனமானவர்.

03) அப்துல்லாஹ் இப்னு அம்ர் வழியாக அறிவிக்கப்படும் செய்தியில் இப்னு லஹீஆ மற்றும் ஹயய் இப்னு அப்தில்லாஹ் இடம் பெறுகின்றார். இதில் முதலாமவரைவிட இரண்டாமவர் மிகவும் பலஹீனமானவர்.

04) அபூ மூஸா அல்அஷ்அரி வழியாக அறிவிக்கப்படும் செய்தியில் லஹ்ஹாக் என்பவர் யாரென்றே அறியப்படாதவர்.

05) அபூ ஹ{ரைரா வழியாக அறிவிக்கப்படும் செய்தியில் ஹிஷாம் இப்னு அப்திர்ரஹ்மான் என்பவர் யாரென்றே அறியப்படாதவர்.

06) அபூ பக்ர் வழியாக அறிவிக்கப்படும் செய்தியில் இடம்பெறும் அப்துல் மலிக் ஹதீஸ்களையில் நிராகரிகக்கப்பட்டவர்.

07) அவ்ப் வழியாக அறிவிக்கப்படும் செய்தியில் இப்னு லஹீஆ மற்றும் அப்துர்ரஹ்மான் இப்னு ஸியாத் இடம்பெறுகிறார் இவ்விருவருமே பலஹீனமானவர்கள்.

08) ஆயிஷா வழியாக அறிவிக்கப்படும் செய்தியில் ஹஜ்ஜாஜ் இப்னு இர்தா இடம்பெறுகிறார் இவர் மனனத்தில் பலஹீனமானவர் இன்றும் தனக்கு யார் சொன்னார் என்ற விடயத்தில் இருட்டடிப்பு செய்பவர்.
மேற்குறிப்பிட்ட பலஹீனங்கள் ஒன்றையொன்று நிவர்த்தி செய்து ஹதீஸை ஸஹீஹ் என்ற தரத்திற்கு கொண்டுவரக்கூடிய இலேசான பலஹீனங்கள் கிடையாது. எனவே இந்தச் செய்தி ஏற்கத்தக்கதல்ல.

இரண்டாவது ஆதாரம்:

سنن ابن ماجه –  1388 – حدثنا الحسن بن علي الخلال . حدثنا عبد الرزاق . أنبأنا ابن أبي سبرة عن إبراهيم بن محمد عن معاوية بن عبد الله بن جعفر عن أبيه عن علي بن أبي طالب قال  : – قال رسول الله صلى الله عليه و سلم ( إذا كانت ليلة النصف من شعبان فقوموا ليلها وصوموا نهارها . فإن الله ينزل فيها لغروب الشمس إلى سماء الدنيا . فيقول ألا من مستغفر لي فأغفر له ألا من مسترزق فأرزقه ألا مبتلى فأعافيه ألا كذا ألا كذا حتى يطلع الفجر )
وفي الزوائد إسناده ضعيف لضعف ابن يسرة واسمه أبو بكر بن عبد الله بن محمد بن أبي يسرة . قال فيه أحمد بن حنبل وابن معين يضع الحديث

‘அல்லாஹ் ஷஃபான் 15வது இரவில் சூரிய அஸத்தமனத்தின் போது முதல் வானத்திற்கு இறங்கி என்னிடத்தில் பாவமன்னிப்புத் தேடுபவர் யார்? அருள் வேண்டுபவர் யார்? துயர் நீங்கக் கேட்பவர் யார்? மன்னிப்பதற்கும் அருள் வழங்கவும் ஆரோக்கியம் வழங்கவும் நான் தயாராக இருக்கிறேன். விடியும் வரையில் கூறிக் கொண்டே இருப்பான். எனவே அவ்விரவில் எழுந்து வணங்குங்கல் பகலில் நோன்பு வையுங்கள்.’ என்று நபியவர்கள் கூறினார்கள்.

(அறிவிப்பவர்; அலீஇஆதாரம்: இப்னுமாஜஹ்:1388)

تهذيب التهذيب – (ج 12  ص 32)
وقال صالح بن أحمد عن أبيه أبو بكر بن أبي سبرة يضع الحديث وكان بن جريج يروي عنه وقال عبد الله بن أحمد عن أبيه ليس بشيء كان يضع الحديث ويكذب …….. وقال الدوري ومعاوية بن صالح عن بن معين ليس حديثه بشيء وقال الغلابي عن بن معين ضعيف الحديث وقال بن المديني كان ضعيفا في الحديث وقال مرة كان منكر الحديث هو عندي مثل بن أبي يحيى وقال الجوزجاني يضعف حديثه وذكره يعقوب بن سفيان في باب من يرغب في الرواية عنهم وقال البخاري ضعيف وقال مرة منكر الحديث وقال النسائي متروك الحديث وقال بن عدي عامة ما يرويه غير محفوظ وهو في جملة من يضع الحديث ………….”

இச்செய்தியின் அறிவிப்பாளர் வரிசையில் இப்னு ஸபரா இடம் பெறுகிறார் இவர் பொய் சொல்வதாக பல அறிஞர்கள் விமர்சித்துள்ளனர்.

இவர் ஹதீஸ்களை புனைந்து சொல்பவர் என்று இமாம் அஹ்மத் மற்றும் இப்னு அதீ அவர்களும் இவரை விமர்சித்துள்ளார்கள். இவர் மதிக்கத்தக்கவர் அல்ல என்ற இப்னு மஈனும் பலஹீனமானவர் என்று இப்னுல் மதனீயும் ஜவ்ஸ்ஜானியும் இவரை விமர்சிக்கின்றனர். இவர் நிராகரிக்கத்தக்கவர் என்று இமாம் புகாரி மற்றும் நஸாஈயும் விமர்சிக்கின்றனர்.  ( பார்க்க: தஹ்தீபுத் தஹ்தீப் 12ஃ32 )எனவே இச்செய்தி மிக பலஹீனமானதாகும்

மூன்றாவது ஆதாரம்:

(تاريخ دمشق – (ج 10 ص 408
عن ابي أمامة الباهلي قال قال رسول الله ( صلى الله عليه وسلم ) خمس ليال لا تر فيهن الدعوة أول ليلة من رجب وليلة النصف من شعبان وليلة الجمعة وليلة الفطر وليلة النحر .
قرأت بخط أبي الفرج عبد بن علي حدثني أبو الفرج الإسفرايني وقد جرى ذكر بندار الروياني قال قال لي عبد العزيز النخشبي وأردت أسمع منه شيئا لا تسمع منه فإنه كذاب أو كما قال

‘ஐந்து நாட்களின் இரவுகளில் கேற்கப்படும் துஆக்கள் மறுக்கப்படமாட்டாது: ரஜப் மாதத்தின் முதலிரவுஇ ஷஃபானின் 15வது இரவு, ஜும்ஆ இரவு, நோன்புப் பெருநாள் இரவுஇ உழ்ஹியாப் பெருநாள் இரவு’ என்று நபியவர்கள் கூறினார்கள்.       (தாரீகு இப்னு அஸாகிர் 10-408)

இந்தச்செய்தியை அறிவிப்பவர்களில் புன்தார் என்பவர் பொய்யர் என்ற விமர்சனத்தை ஹதீஸைப்பதிவு செய்து இமாம் இப்னு அஸாகீர் ஹதீஸின் கீழேயே குறிப்பிடுகிறார். எனவே செ;செய்தி இட்டுக்கட்டப்பட்டதாகும்.

நான்காவது ஆதாரம்:


معرفة الصحابة لأبي نعيم الأصبهاني – (ج 17  ص 77
5333 – حدثنا أبو عمرو بن حمدان ، قال : ثنا الحسن بن سفيان ، ثنا أحمد بن سيار ، ثنا أبو عباد المصري ابن أخت حماد بن سلمة ، ثنا المفضل بن فضالة القتباني ، عن عيسى بن إبراهيم القرشي ، عن سلمة بن سليمان الجزري ، عن مروان بن سالم ، عن ابن كردوس ، عن أبيه ، قال : قال رسول الله صلى الله عليه وسلم : « من أحيا ليلتي العيد وليلة النصف من شعبان ، لم يمت قلبه يوم تموت القلوب

‘யார் இரு பெருநாள் இரவுகளையும் ஷஃபான் 15 வது இரவையும் வணக்கத்தால் உயிர்ப்பிக்கிறாரோ உள்ளங்கள் இறந்துவிடும் நாளில் அவரது உள்ளம் இறக்காமல் இருக்கும்’ என்று நபியவர்கள் கூறினார்கள்.
(மஃரிபதுஸ் ஸஹாபா-5333)

இந்த ஹதீஸில் இடம்பெறும் மர்வான் இப்னு ஸலாம் அல்கிபாரி மிகவும் பலஹீனமானவர்.

تهذيب التهذيب – (ج 10  ص 84)
قال عبد الله بن أحمد عن أبيه ليس بثقة وقال العقيلي والنسائي كذلك وقال النسائي في موضع آخر متروك الحديث وقال قال البخاري ومسلم منكر الحديث وقال بن أبي حاتم عن أبيه منكر الحديث جدا ضعيف الحديث ليس له حديث قائم قلت يترك حديثه قال لا يكتب حديثه وقال أبو عروبة الحراني كان يضع الحديث وقال الحاكم أبو أحمد حديثه ليس بالقائم………..

“இமாம்களான அஹ்மத், உகைலி, நஸாஈ போன்றோர் இவர் நம்பகமானவரல்ல என்று குறிப்பிடுகின்றாரகள்;. இன்னொரு இடத்தில் இமாம் நஸாஈ அவர்களும் மற்றும் புகாரி, முஸ்லிம், அபூ ஹாதீம் போன்றோர் இவர் நிராகரிக்கப்பட்டவர் என்றும் ஹர்ரானி அவர்கள் இவர் ஹதீஸ்களை புனைபவர் என்றும் விமர்சிக்கின்றனர்.”                        (தஹ்தீபுத்தஹ்தீப் 10ஃ84)

மேற்கூறப்பட்ட அனைத்து ஹதீஸ்களும் பலஹீனமானவை என்பதால் 15 ஆம் நாளில் இன்று நடந்து வரும் பிரத்தியோக தொழுகைகள் மற்றும் நோன்புகள் அனைத்தும் பித்அத்களாகும்.

இன்னும் ஒன்றையும் நாம் கவனிக்கவேண்டும் மேற்சொல்லப்பட்ட ஹதீஸ்கள் ஏற்கத்தக்கவை என்று வைத்துக்கொண்டாலும் 15ஆம் நாள் நோன்பு பிடிப்பது சிறப்பானது இரவில் தொழுவது சிறப்பானது என்பதற்குத்தவிர இன்று நடந்துவரும்.

1- 1000 முறை ஸூரதுல் இக்லாஸை ஓத 100 ரக்அத் தொழல்.
2- 12 ரக்அத்துக்கள் தொழல் ஒவ்வொன்றும் 30 முறை ஸூரா இக்லாஸ் ஓதல்.
3- 3 யாஸீன் ஓதல்.
4- பராஅத் என்ற எண்ணத்தில் நோன்பு நோற்றல்.
5- ரொட்டி வாழைப்பழம் வழங்கள்.
6- ‘ஷஃபான் துஆ’ ஓதல்.
7- அந்த நாளை விஷேஷமாகக் கொண்டாடல்.

இதுபோன்ற வழிகெட்ட நடைமுறைகளுக்கு எந்த ஆதாரமும் கிடையாது. அல்லாஹ்வுக்கும் அவனது தூதரும் சொல்லித்தராதவைகளை மார்க்கமாக நாமாக உருவாக்கிச்செய்தால் அல்லாஹ்விக்கே அவனது மார்க்கத்தைக் கற்றுக்கொடுத்த குற்றத்திற்கு நாம் ஆளாகிவிடுவோம்.எனவே நபிவழிப்படி இம்மாதத்தில் அமல் செய்து மறுமையில் வெற்றிபெற முயற்சிப்போமாக