Google Search Engine

தலைப்புகளில் தேட

தேதிவாரியாக பதிவுகள்

Archives

Visitors since 22-3-13

Free counters!
இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 4,629 முறை படிக்கப்பட்டுள்ளது!

மாணவர்களுக்கான வழிகாட்டி நிகழ்ச்சி

தினமலர், எஸ்.ஆர்.எம்., பல்கலை இணைந்து, மதுரை லட்சுமி சுந்தரம் ஹாலில் நடத்தும் “வழிகாட்டி’ நிகழ்ச்சி, இன்று நிறைவு பெறுகிறது. பல ஆண்டுகளாக கல்விச்சேவையில் ஈடுபட்டு வரும் தினமலர், பிளஸ் 2 முடித்த மாணவர்கள், அடுத்து என்ன படிக்கலாம் என ஆலோசனை வழங்குவதற்காக, வழிகாட்டி நிகழ்ச்சியை நடத்துகிறது. இன்று, தகவல் தொழில்நுட்பத் துறையின் தற்போதைய நிலை, மீடியா துறையில் பெருகிவரும் பணிவாய்ப்புகள், வளமான வேலைவாய்ப்பு தரும் பயோடெக் மற்றும் பயோ இன்ஜினியரிங் படிப்புகள், கல்லூரியில் வெற்றியாளராக இருங்கள், 60 முதல் 80 சதவீத மதிப்பெண் பெறுபவர்களுக்கான வழிகாட்டுதல், வங்கிகள் தரும் கல்விக்கடன்கள் ஆகிய தலைப்புகளில் கருத்தரங்குகள் நடந்து 26 மார்ச்சில் முடிவடைந்துள்ளது.

பிளஸ் 2 முடித்து, நான்காண்டுகள் சி.ஏ., படித்தால், 21வயதில் மாதம் 60ஆயிரம் ரூபாய் வரை சம்பளம் பெறலாம்

சி.ஏ.,- ஐ.சி.டபிள்யூ.ஏ.,- ஏ.சி.எஸ்., படிப்புகள் பற்றி ஆடிட்டர் சேகர் பேசியதாவது:

  • பத்தாண்டுகளுக்கு முன் கல்லூரி முடித்தவர்கள் மட்டுமே சி.ஏ., படிக்க முடிந்தது.
  • தற்போது பிளஸ் 2 முடித்த உடனேயே சி.ஏ., நுழைவுத் தேர்வு எழுதலாம்.
  • இதில் ஏழு பாடங்கள் இருக்கும். மார்ச் 31க்குள் பதிவு செய்ய வேண்டும்.
  • அனைத்தும் கொள்குறி வகை வினாக்களாக இருக்கும்.
  • ஜூன் 19ல் தேர்வு நடக்கும். 200 மதிப்பெண்கள்.
  • தவறான விடைகளுக்கு மதிப்பெண் குறையும்.
  • இதில் தேர்ச்சி பெற்றால் சி.ஏ., படிக்கலாம்.
  • சி.ஏ., படிப்புக்கென தனியாக கல்லூரி கிடையாது.
  • வீட்டிலிருந்து தான் படிக்க வேண்டும்.
  • படிக்கும் போது, ஆடிட்டரிடம் உதவியாளராக சேர்ந்து மாதம் 3000 ரூபாயிலிருந்து உதவித்தொகை பெறலாம்.
  • சி.ஏ., முடித்த உடனேயே பி.எச்டி., படிப்பில் சேரலாம். மற்ற படிப்புகளுக்கு இந்த சலுகை கிடையாது.
  • தேர்ச்சி பெற்ற பின், நிறுவனங்கள் வீடு தேடி வந்து வேலை வாய்ப்பை வழங்கும்.
  • வேலை செய்ய விருப்பமில்லாதவர்கள் தனியாக பயிற்சி செய்யலாம்.
  • இந்தியாவில் சி.ஏ., படித்தவர்கள் 10 லட்சம் பேர் தேவை.
  • தற்போது 1.65 லட்சம் பேர் மட்டுமே உள்ளனர்.
  • மிகப்பெரிய இடைவெளி இருப்பதால், வேலைவாய்ப்புகள் குவிந்துள்ளன.
  • சி.ஏ., போலவே ஏ.சி.எஸ்.,/ ஐ.சி.டபிள்யூ., படிப்புகளையும் தேர்ந்தெடுக்கலாம்.

நான்காண்டு கடின உழைப்பு வாழ்க்கை பாதையை வசதியானதாக மாற்றிவிடும். 24 மணி நேரம் என்பது அனைவருக்கும் கொடுக்கப்பட்ட பொதுவான சொத்து. அதை பொழுதுபோக்குக்காக அதிகம் செலவிடாமல், படிப்புக்காக மாற்றிக் கொள்ள வேண்டும். வாழ்க்கையில் வெற்றி பெற வேண்டுமென நினைத்தால், பொழுதுபோக்குகளை தள்ளிவிட வேண்டும்.

17 வயதில் படித்து 21 வயதில் மாதம் 60 ஆயிரம் ரூபாய் முதல் சம்பளம் கிடைக்கும் ஒரே படிப்பு சி.ஏ., தான், என்றார்.

பாரா மெடிக்கல் படிப்புக்கு கட்டணமும் குறைவு : பேராசிரியர் சிவக்குமார் தகவல்

தமிழகத்தில் பாரா மெடிக்கல் படிப்புகளுக்கு நன்கொடை வாங்குவதில்லை. கட்டணமும் குறைவு, வேலைவாய்ப்பும் அதிகம்,” என, எஸ்.ஆர்.எம்., பல்கலை பிசியோதெரபி துறை டீன் வி.பி.ஆர்., சிவக்குமார் தெரிவித்தார்.

வழிகாட்டி நிகழ்ச்சியில் “பாரா மெடிக்கல் படிப்புகள்’ குறித்து அவர் பேசியதாவது:

  • மருத்துவத்துறைக்கு உறுதுணையாக மருத்துவம் சார்ந்த பாராமெடிக்கல் துறை செயல்படுகிறது.
  • இளநிலையில்
    • பிசியோதெரபி,
    • நர்சிங்,
    • ஆக்குபேஷனல் தெரபி,
    • ஸ்பீச் தெரபி,
    • ஆடியோலஜி மற்றும்
    • ஸ்பீச் பேதாலஜி

    படிப்புகள் உள்ளன.

  • இப்படிப்புகளுக்கு உள்நாட்டிலும், வெளிநாடுகளிலும் வேலைவாய்ப்புகள் உள்ளன.
  • இந்தியாவில் மட்டும் நர்சிங் பணிக்கு ஒரு லட்சம் பேர் தேவைப்படுகின்றனர்.
  • மற்ற எந்த துறைக்கும் இல்லாத சிறப்பாக, வேலை பார்த்து ஓய்வு பெற்ற பின்னும், கிளினிக் துவங்கலாம்.
  • படித்து முடித்த உடனே வேலைக்குச் சென்றால் நல்ல சம்பளம் கிடைக்கும்.

தனியாக கிளினிக் அமைத்தால் உடனடியாக பயன்தராது. நம்பிக்கையின் அடிப்படையில் மக்கள் வரும் போது, அளவிடமுடியாத அளவு லாபம் வரும்.

தமிழகத்தில் நன்கொடை தராமல், குறைந்த கட்டணத்தில் படிக்கும் ஒரே படிப்பு பாரா மெடிக்கல்.

  • பிளஸ் 2 வில் இயற்பியல், வேதியியல் மற்றும் உயிரியல் பாடத்தை எடுக்க வேண்டும்.
  • சராசரி மற்றும் அதற்கு மேல் மதிப்பெண் பெறும் மாணவர்கள் இதை படிக்கலாம்.
  • தமிழகத்தில் மூன்று கல்லூரிகளில் “ஆடியோலஜி மற்றும் ஸ்பீச் பேதாலஜி’ பாடம் உள்ளது.
  • படிப்புகளுக்கு விண்ணப்பிக்கும் முன், அந்த கல்லூரியில் பெரிய மருத்துவமனைகளுடன் ஒப்பந்தம் உள்ளதா, மருத்துவமனையில் பயிற்சி பெற்ற வல்லுனர்கள், பரிசோதனை வசதி இருக்கிறதா என்பதை ஆராய வேண்டும்.
  • இளநிலையில் உள்ள நான்கு பாடங்களுக்கும், இந்திய கவுன்சில் தனியாக இருக்கிறது. மற்ற துறைகளுக்கு இல்லாத சிறப்பு இது. எனவே அங்கீகாரத்துடன் கிளினிக் ஆரம்பிக்கலாம்.
  • மருத்துவமனை, மறுமலர்ச்சி துறை, சிறப்புப் பள்ளிகள், கல்வி நிறுவனங்கள், சுகாதாரப் பயிற்சி நிலையங்கள், தொழில் நிறுவனங்களில் சுகாதாரம், முதியோர் இல்லம், ஆராய்ச்சி மையம், விளையாட்டு துறைகளில் வேலைவாய்ப்புகள் குவிந்துள்ளன.
  • மற்றவர்களுக்கு சேவை செய்த ஆத்ம திருப்தியும், அதன் மூலம் நல்ல சம்பளமும் கிடைக்கும் இத்துறையை தேர்வு செய்யும் மாணவர்களின் எண்ணிக்கை குறைந்து வருகிறது.
  • ஆனால் வேலைவாய்ப்புகளின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே செல்வதால், மாணவர்கள் இத்துறையின் சிறப்புகளை உணர்ந்து படிக்க வரவேண்டும், என்றார்.

 

மொழிப்பாடம் படித்தவர்களுக்கு “கவர்ச்சிகர’ சம்பளம்:பேராசிரியர் கு.ஞானசம்பந்தன் பேச்சு

மொழிப்பாடம் படித்தவர்களுக்கு பேராசிரியர் உட்பட பல்வேறு பணிகளின் மூலம் கவர்ச்சிகரமான சம்பளம் வழங்கப்படுகிறது,” என, தினமலர் வழிகாட்டி நிகழ்ச்சியில் பேராசிரியர் கு.ஞானசம்பந்தன் தெரிவித்தார்.

மொழிப்பாடங்களின் எதிர்காலம் குறித்து அவர் பேசியதாவது:பிள்ளைகளுக்கு எது சரியாக வரும் என்பதை அறிந்து, அதற்கேற்ற படிப்பை தேர்ந்தெடுக்க வைப்பது தான் பெற்றோர்களின் கடமை. தமிழ், ஆங்கில மொழியை தேர்ந்தெடுத்து படித்தால் பேராசிரியராகலாம். அரசுப் பணி மட்டுமல்லாமல், தனியார் கல்லூரிகளில் கூட அதிகளவு சம்பளம் தருகின்றனர். வெறும் படிப்போடு நிறுத்தி விடாமல் பிற திறமைகளையும் வளர்த்துக் கொள்ள வேண்டும். தற்போதைய காலத்திற்கு கம்ப்யூட்டர் கல்வியறிவு முக்கியம். கம்ப்யூட்டரும், இணையதளமும் பழகிவிட்டால் உலகமே உங்கள் கைகளில் நிற்கும். அடுத்து வரும் காலங்களில் ஆசிரியர்களே இல்லாத கம்ப்யூட்டர் கல்வி வரும் போது, மாணவர்களுக்கு கை கொடுக்கும்.

பிள்ளைகள் கதை, கவிதை, கட்டுரை எழுதி வீட்டில் காண்பித்தால், அவர்களை உற்சாகப்படுத்த வேண்டும். கவிதை எழுதுவதன் மூலம் மனஅழுத்தம் குறையும். இத்தகைய மாணவர்கள் மொழிப்பாடத்தை தேர்ந்தெடுத்து படித்தால், உச்சரிப்பு, வாசிப்பு மூலம் நிறைய சம்பாதிக்கலாம். கதை, வசனம் எழுதமுடியும். எந்த மொழி படித்தாலும் ஆங்கிலத்தை முழுமையாக கற்றுக் கொள்ள வேண்டும். இருமொழி படித்தால், மொழி பெயர்ப்பு துறையில் சாதிக்கலாம். வெளியில் சென்று வேலை பார்க்க வேண்டியதில்லை.

வீட்டிலிருந்தபடியே கம்ப்யூட்டரில் மொழிபெயர்ப்பு செய்யமுடியும். மொழியை கையாளத் தெரிந்தவர்கள் “ஸ்கிரிப்ட்’ தயாரிக்கலாம். மீடியாத் துறையில் மொழி தெரிந்தவர்களுக்கு எண்ணற்ற வேலைவாய்ப்புகள் உள்ளன. எந்தத்துறையை தேர்ந்தெடுத்தாலும் இலக்கியத்தைப் போல இனிக்காது. இலக்கியம் தெரிந்தால் பிற துறை வல்லுனர்களையும் பேச்சு, செயலின் மூலம் சந்தோஷப்படுத்தலாம். உலக இலக்கியங்கள் அனைத்தும் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளதால் ஆங்கில மொழி படிப்பது அவசியம், என்றார்.

பிளஸ் 2 முடித்து, நான்காண்டுகள் சி.ஏ., படித்தால், 21வயதில் மாதம்

60ஆயிரம் ரூபாய் வரை சம்பளம் பெறலாம்,” என தினமலர் வழிகாட்டி

நிகழ்ச்சியில், ஆடிட்டர் ஜி.சேகர் தெரிவித்தார். சி.ஏ., / ஏ.சி.எஸ்.,/ ஐ.சி.டபிள்யூ

படிப்புகள் குறித்து ஆடிட்டர் ஜி. சேகர் பேசியதாவது: பத்தாண்டுகளுக்கு முன்

கல்லூரி முடித்தவர்கள் மட்டுமே சி.ஏ., படிக்க முடிந்தது. தற்போது பிளஸ் 2

முடித்த உடனேயே சி.ஏ., நுழைவுத் தேர்வு எழுதலாம். இதில் ஏழு பாடங்கள்

இருக்கும். மார்ச் 31க்குள் பதிவு செய்ய வேண்டும். அனைத்தும் கொள்குறி

வகை வினாக்களாக இருக்கும். ஜூன் 19ல் தேர்வு நடக்கும். 200 மதிப்பெண்கள்.

தவறான விடைகளுக்கு மதிப்பெண் குறையும். இதில் தேர்ச்சி பெற்றால் சி.ஏ.,

படிக்கலாம்.

சி.ஏ., படிப்புக்கென தனியாக கல்லூரி கிடையாது. வீட்டிலிருந்து தான் படிக்க

வேண்டும். படிக்கும் போது, ஆடிட்டரிடம் உதவியாளராக சேர்ந்து மாதம் 3000

ரூபாயிலிருந்து உதவித்தொகை பெறலாம். சி.ஏ., முடித்த உடனேயே பி.எச்டி.,

படிப்பில் சேரலாம். மற்ற படிப்புகளுக்கு இந்த சலுகை கிடையாது. தேர்ச்சி

பெற்ற பின், நிறுவனங்கள் வீடு தேடி வந்து வேலை வாய்ப்பை வழங்கும்.

வேலை செய்ய விருப்பமில்லாதவர்கள் தனியாக பயிற்சி செய்யலாம்.

இந்தியாவில் சி.ஏ., படித்தவர்கள் 10 லட்சம் பேர் தேவை. தற்போது 1.65 லட்சம்

பேர் மட்டுமே உள்ளனர். மிகப்பெரிய இடைவெளி இருப்பதால்,

வேலைவாய்ப்புகள் குவிந்துள்ளன. சி.ஏ., போலவே ஏ.சி.எஸ்.,/ ஐ.சி.டபிள்யூ.,

படிப்புகளையும் தேர்ந்தெடுக்கலாம்.

நான்காண்டு கடின உழைப்பு வாழ்க்கை பாதையை வசதியானதாக மாற்றிவிடும்.

24 மணி நேரம் என்பது அனைவருக்கும் கொடுக்கப்பட்ட பொதுவான சொத்து.

அதை பொழுதுபோக்குக்காக அதிகம் செலவிடாமல், படிப்புக்காக மாற்றிக்

கொள்ள வேண்டும். வாழ்க்கையில் வெற்றி பெற வேண்டுமென நினைத்தால்,

பொழுதுபோக்குகளை தள்ளிவிட வேண்டும். 17 வயதில் படித்து 21 வயதில்

மாதம் 60 ஆயிரம் ரூபாய் முதல் சம்பளம் கிடைக்கும் ஒரே படிப்பு சி.ஏ., தான்,

என்றார்.

வெளிநாட்டு கல்வி பயின்றவர்களுக்கு இந்தியாவில் வாய்ப்பு எப்படி?: கல்வி ஆலோசகர் ஆலோசனை

அரசியல் தலைவர்கள், மேதைகள் வெளிநாட்டு கல்வி பயின்று இந்தியாவில் வெற்றிக் கொடி நாட்டியுள்ளனர். மகாத்மாகாந்தி, அம்பேத்கர், பிரதமர் மன்மோகன் சிங் வரை வெளிநாட்டு கல்வி பயின்றவர்கள் தான்.

இந்தியாவில் கல்வி பயின்று 15 ஆண்டுகள் கழித்து ஏற்படும் முன்னேற்றம், பதவி உயர்வு, ஊதிய உயர்வு அனைத்தும், வெளிநாட்டில் கல்வி பயின்ற ஐந்தாண்டுகளில் கிடைத்துவிடும்.

புள்ளி விவரத்தின் படி, அமெரிக்காவில் 12 சதவீத டாக்டர்கள் இந்தியர்கள். 12 சதவீத விஞ்ஞானிகள், 34 சதவீத மைக்ரோ சாப்ட் நிறுவன பணியாளர்கள், 28 சதவீத ஐ.பி.எம்., பணியாளர்கள் இந்தியர்கள் தான். மொத்தம் 23 சதவீதம் பேர் அமெரிக்க குடியுரிமை பெற்றுள்ளனர்.

இந்தியாவில் ஆண்டுதோறும் இரண்டு லட்சம் மாணவர்கள் வெளிநாட்டு கல்வி பயில்கின்றனர். இதில் அமெரிக்கா, கனடா, பிலிப்பைன்ஸ், சைப்ரஸ், மாஸ்கோவில் கல்வி பயில்பவர்கள் அதிகம். ஆசிய நாடுகளிலும் வெளிநாட்டு மாணவர்கள் கல்வி பயில்கின்றனர். வெளிநாட்டில் இடஒதுக்கீடு, நிர்வாக ஒதுக்கீடு கிடையாது. திறமையின் அடிப்படையில் சேர்க்கையும், கல்வி உதவித்தொகையும் வழங்கப்படும். மாணவர்கள் படிக்கும் விருப்பப்பாடத்தை இடையில் மாற்றிக் கொள்ளவும் வாய்ப்பு கிடைக்கும்.

பட்டப்படிப்பை முழுதுமாக வெளிநாட்டில் படித்தால் அதிக செலவாகும். அதற்கு பதிலாக, முதல் நான்கு செமஸ்டர்கள் உள்நாட்டிலும், கடைசி இரண்டு செமஸ்டர்கள் வெளிநாட்டிலும் படிக்கும் வசதி உள்ளது. இந்தியாவில் இல்லாத படிப்புகளை மட்டுமே வெளிநாட்டில் தேர்ந்தெடுக்க வேண்டும் என்ற நிலை மாறிவிட்டது. எனவே விருப்ப பாடத்தை தேர்வு செய்து படிக்கலாம். இதற்கு வங்கிகளும் கடன் வழங்குகின்றன.

  • அமெரிக்கா செல்வதற்கு “டோபல்‘, இங்கிலாந்து செல்ல “ஐ.இ.எல்.எஸ்.,’ நுழைவுத் தேர்வு எழுத வேண்டும்.
  • இங்கிலாந்து மற்றும் அமெரிக்கர்களின் ஆங்கில உச்சரிப்பு, பேசும் விதம், எழுதும் விதம் ஆகியவற்றை கற்றுத் தரும் குறைந்த கால படிப்புகள் இவை.
  • இந்தியாவில் ஜூன் அல்லது ஆண்டில் ஒருமுறை மட்டும் கல்வியாண்டு நடக்கிறது.
  • அமெரிக்கா, ஆஸ்திரேலியா, கனடாவில் ஓராண்டில் இருமுறை கல்விச் சேர்க்கை நடத்தப்படுவதால், பாஸ்போர்ட், விசா எடுத்துச் செல்வதற்கு வசதியாக இருக்கும்.
  • சீனா, ஜப்பான் நாடுகளில் மருத்துவம் படிக்க விரும்பினால், இந்திய மருத்துவ கவுன்சிலின் அங்கீகாரம் பெற்ற பல்கலை அல்லது கல்லூரியா என்பதை தெரிந்து கொள்ள வேண்டும்.
  • இல்லாவிட்டால் படித்த நேரம், படிக்கும் காலம், பணம் வீணாகிவிடும். எனவே, முறையான, தரமான, அங்கீகாரமான வெளிநாட்டு படிப்பை தேர்ந்தெடுக்க வேண்டும், என்றார்.

அரசுத் தேர்வுகளில் கலை, அறிவியல் மாணவர் ஆதிக்கம்

அரசு போட்டித் தேர்வுகளில் கலை, அறிவியல் படித்த மாணவர்களே அதிகளவில் வெற்றி பெறுகின்றனர்,” என தினமலர் வழிகாட்டி நிகழ்ச்சியில் எஸ்.ஆர்.எம்., பல்கலை பேராசிரியர் கே. சுந்தரபாண்டியன் தெரிவித்தார்.

கலை, அறிவியல் படிப்புகளுக்கான வாய்ப்புகள் குறித்து அவர் பேசியதாவது:பிளஸ் 2விற்கு பின் தொழிற்படிப்பை தேர்ந்தெடுக்காதவர்களுக்கு கலை, அறிவியல் துறைகளில் வாய்ப்புகள் கொட்டிக் கிடக்கின்றன. நல்ல கல்லூரியில் பொறியியல், மருத்துவப் படிப்பிற்கு இடம் கிடைத்தால் நல்லது தான். இல்லாவிட்டால் யோசிக்காமல் கலை, அறிவியல் படிப்பை தேர்ந்தெடுக்கலாம். பி.எச்டி., படித்தபின் “போஸ்ட் டாக்டரல்’ படிக்கலாம். கலை படித்தவர்கள் டி.லிட்., அறிவியல் படித்தவர்கள் டி.சயின்ஸ் படிக்கலாம். மற்ற படிப்புகளுடன் ஒப்பிடும்போது கல்லூரிகளில் சேர்க்கை மிக எளிது. கல்விக் கட்டணம் குறைவு. மூன்றாண்டுகளில் இளநிலை படிப்பை முடித்துவிடலாம். படிக்கும் போதே பகுதிநேர வேலை பார்ப்பதற்கு வாய்ப்புள்ளது. மற்ற திறன்களை வளர்த்துக் கொள்வதற்கு போதிய நேரமும் கிடைக்கும்.

தொழிற்படிப்பு மாணவர்களுக்கு, பாடங்களைத் தவிர மற்றவற்றில் கவனம் செலுத்த முடியாது. அரசுப் போட்டித் தேர்வுகளில் அதிகளவு வெற்றி பெறுபவர்கள் கலை, அறிவியல் படித்த மாணவர்கள் தான். இளநிலையில் அக்கவுண்டிங், அறிவியல் கணக்கீடுகள், நிறுவனச் சட்டம், இன்சூரன்ஸ், பங்கு சந்தை, வரி தொடர்பான படிப்புகள் நிறைய உள்ளன. படித்து முடித்தவுடன் இதுதொடர்பான நிறுவனங்களில் உடனடி வேலை வாய்ப்பு பெறலாம். சோஷியலாஜி படித்தால் ஐ.ஏ.எஸ்., தேர்வுக்கு பயிற்சி பெறுவது எளிது.

போலீஸ் நிர்வாகம், மக்கள் தொகை கணக்கெடுப்பு, நரம்பு மொழியியல் படிப்புகள் தற்போது மாணவர்களை கவர்கின்றன. பாடங்களை மனப்பாடம் செய்து மதிப்பெண் எடுக்க முடியாத மாணவர்கள் கூட, அவர்கள் விருப்பம் சார்ந்த காஸ்ட்யூம், பேஷன் டிசைனிங், ஜூவல்லரி, இன்டீரியர் டிசைனிங் துறையை தேர்ந்தெடுக்கலாம்.

வேலைக்குச் செல்ல விரும்பாத பெண்கள் மனை அறிவியல், உணவியல், உணவு அறிவியல் படிப்புகளை தேர்ந்தெடுத்தால் குடும்ப உறுப்பினர்களை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளலாம். நடிப்பு, விளம்பரம், அனிமேஷன், ஆடியோ, புத்தகம் வெளியிடுதல், நிகழ்ச்சி மேலாண்மை, எடிட்டிங், போட்டோகிராபி, ரேடியோ டெக்னிக், இதழியல் என எண்ணற்ற படிப்புகளும், அது தொடர்பான வேலைகளும் உள்ளன.

பிளஸ் 2 முடித்த உடனேயே ஆசிரியர் கல்வியில் டிப்ளமோ அல்லது டிகிரி படித்தபின் பி.எட்., படிக்கலாம். பி.எஸ்சி., மைக்ரோ பயாலஜி, பயோ பிசிக்ஸ் படிப்புகளுக்கு பி.எட்., பாடத்திட்டம் இல்லை. எனவே இத்தகைய படிப்பை தேர்ந்தெடுக்கும் முன் யோசிக்க வேண்டும்.படிக்கும் போதே போட்டித் தேர்வுக்கும் தயாரானால் வங்கி, ரயில்வே, டி.என்.பி.எஸ்.சி., எஸ்.எஸ்.சி., டி.ஆர்.பி., தேர்வில் வெற்றி பெறமுடியும், என்றார்.

நன்றி: தினமலர்