Google Search Engine

தலைப்புகளில் தேட

தேதிவாரியாக பதிவுகள்

February 2016
S M T W T F S
 123456
78910111213
14151617181920
21222324252627
2829  

Archives

Visitors since 22-3-13

Free counters!
இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 2,227 முறை படிக்கப்பட்டுள்ளது!

பத்ம விபூஷன் டாக்டர் வி. சாந்தா!

doctor_2140144hநாட்டின் உயர்ந்த விருதுகளில் ஒன்றான பத்ம விபூஷன் விருது பெற்றவர்களில் ஒருவர் தான் சென்னை அடையாறு புற்றுநோய் மருத்துவமனை தலைவர் டாக்டர் வி. சாந்தா ஆவார்கள். எண்பத்தெட்டு வயதாகும் இவர் இன்னமும் கைவிரல் நடுக்கமின்றி அறுவை சிகிச்சை செய்கிறார்,, மருத்துவமனையின் ஒரு ஒரத்தில் உள்ள ஒரு அறையிலேயே தங்கிக்கொண்டு நோயாளிகளின் நோய் தீர்ப்பதையே தனக்கான நாளின் பெரும் கடமையாக செயல்பட்டுவருகிறார். சென்னை மயிலாப்பூரில், 1927ல், பிறந்த சாந்தா, 1949ல், “மெட்ராஸ் மெடிக்கல் காலேஜ்’ல், மருத்துவ பட்டப்படிப்பை முடித்தார். இவர் – இயற்பியல் துறையில் நோபல் பரிசினை வென்ற சர். சி.வி. ராமானின் பேத்தியும், நோபல் பரிசினை வென்ற வானவியல் விஞ்ஞானி டாக்டர் எஸ். சந்திரசேகரின் தந்தை வழி மருமகளும் ஆவார்.

ஏற்கனவே பல விருதுகளைப் பெற்றுள்ளார். அவற்றுள் பத்மஸ்ரீ, ஆசிய நோபல் பரிசு என்று புகழ்பெற்ற விருதான “ராமன் மகசேசே’  மற்றும் அவ்வையார் விருதுகள் முக்கியமானவைகளாகும். எண்பத்தெட்டு வயதாகியும் இன்னமும் கைவிரல் நடுக்கமின்றி அறுவை சிகிச்சை செய்கிறார்,, மருத்துவமனையின் ஒரு ஒரத்தில் உள்ள ஒரு அறையிலேயே தங்கிக்கொண்டு நோயாளிகளின் நோய் தீர்ப்பதையே தனக்கான நாளின் பெரும் கடமையாக செயல்பட்டுவருகிறார்.

பணம் இல்லாத காரணத்தால் ஏழை மக்கள் பாதிக்கப்படக் கூடாது என்ற சேவை மனப்பான்மையோடு அடையாறில் செயல்பட்டுவரும் புற்றுநோய் மருத்துவமனையில் தன்னை இணைத்துக்கொண்டு கடந்த அறுபது ஆண்டுகளாக தான்வேறு புற்றுநோய் மருத்துவமனை வேறு என்று பிரித்துப்பார்க்கமுடியாத அளவிற்கு ஒன்றிப்போயிருப்பவர்.

நன்கொடை கொடுக்கவேண்டும் என்று நமது நாட்டினர் மட்டுமல்ல உலகில் யார் ஒருவர் எண்ணினாலும் முதலில் நினைவிற்கு வருவது இந்த மருத்துவமனைதான் அதற்கு காரணம் டாக்டர் சாந்தாதான். புற்றுநோய் மருந்துகளின் விலை கட்டுப்படியாக நிலைக்கு போனபோது சம்பந்தபட்ட மத்திய அமைச்சரை இங்குள்ள குழந்தைகள் வார்டுக்கு வரவழைத்து நிலமையின் கொடுமையை உணரவைத்தவர் இதன் காரணமாக இந்தியா முழுவதும் புற்றுநோய் மருந்துகளுக்கு வரிவிலக்கு பெற்றுத்தந்தவர்.

புற்றுநோய் குறித்த விழிப்புணர்விற்காக பெரிதும் பாடுபட்டு வருபவர் சமீபத்தில் மத்திய அமைச்சர் ஒருவர் புகைபிடிப்பதால் புற்றுநோய் வருவதில்லை என்று சொன்ன போது தனது கண்டனத்தை கடுமையாக பதிவு செய்தவர். புற்று நோய் ஆரம்பத்திலேயே கண்டுபிடிக்கப்பட்டால் குணப்படுத்தக்கூடிய நோய்தான் என்பதை கிராமம் கிராமமாக பிரச்சாரம் செய்துவருபவர்.

உதவி செய்வதற்கு நர்ஸ்கூட இல்லாத காலகட்டத்தில் இவரே மருத்துவராகவும் இவரே நர்சாகவும் இருந்து செயல்பட்டவர்.இரவு 11 மணி வரை அறுவை சிகிச்சை செய்துவிட்டு அவர்களை கவனித்துக்கொள்வதற்காக குடிசையிலேயே தங்கியவர்.இன்று பிரம்மாண்டமாய் எழுந்து நிற்கும் இந்த மருத்துவ மனையின் சேவைகளைப் பற்றி இந்தியா முழுக்க பேச வைத்ததில் இவரது பங்கு மிக அதிகம்.

புற்றுநோய் என்ற சொல்லைக் கேட்டதுமே பொதுவாகப் பலருக்கும் பயம்தான் ஏற்படும். இந்த பயம் ஐம்பது ஆண்டுகளுக்கு முன்னால் தோன்றினால் பரவாயில்லை. காரணம், இப்போதிருக்கும் அளவுக்கு அன்று மருத்துவ வசதிகளோ சிகிச்சை முறைகளோ கிடையாது. “இன்றைய சூழலில் புற்றுநோய் குறித்து பயப்படத் தேவையில்லை” என்கிறார் சென்னை அடையாறு புற்றுநோய் மருத்துவமனை தலைவர் டாக்டர் வி. சாந்தா.

muthulaxmiஇந்தியாவின் முதல் பெண் மருத்துவர் டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி. இவருடைய தங்கை 1923-ம் ஆண்டு புற்றுநோயால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தார். இதையடுத்து புற்றுநோய் சிகிச்சைக்கு என தனியாக ஒரு மருத்துவமனை அமைக்க வேண்டும் என முத்துலட்சுமி ரெட்டி முடிவு செய்தார். அதற்கான முயற்சியில் தீவிரமாகவும் இறங்கினார். ஆனால், புற்றுநோய்க்கு எதற்கு மருத்துவமனை, புற்றுநோய் வந்தால்தான் உயிரிழந்து விடுகிறார்களே என அப்போதைய அரசு உள்பட பலரும் மருத்துவமனை தொடங்க ஆர்வம் காட்டவில்லை.

ஆனால் இந்த அறுபது ஆண்டுகளில் பல வியக்கத்தக்க முன்னேற்றங்கள், மாறுதல்கள் ஆகியன புற்றுநோயை குணப்படுத்தும் சிகிச்சை முறைகளில் ஏற்பட்டுள்ளன. குணப்படுத்தவே முடியாது என்ற சூழலில் இருந்து புற்றுநோயைக் குணப்படுத்த முடியும் என்ற நிலைக்கு இன்றைய மருத்துவம் வளர்ந்துள்ளது. இவ்வளவு ஏன்? புற்றுநோயைத் தடுக்கவும் முடியும். இந்த உண்மை பற்றிய அறியாமையினால்தான் புற்றுநோய் பற்றிய பல தவறான கருத்துகள் நிலவி வருகின்றன.

“புற்றுநோய் என்பது ஒரு தனி நோய் அல்ல. பல விதமான நோய்கள் இதனுள் அடக்கம். அனைத்துப் புற்றுநோய்களும் ஒரே மாதிரியாக இருக்காது. ஒன்றுக்கொன்று வேறுபாடு உண்டு. இதன் தாக்கத்தின் வெளிப்பாடும் ஒரே மாதிரி இருக்காது” என்று சொல்லும் டாக்டர் சாந்தா, புற்றுநோய் குறித்த அடிப்படை உண்மைகளைக் கூறினார்.

“புற்றுநோய் ஒரு பகுதியை மட்டும் பாதிக்கும் நோய் இல்லை. மனித உடலிலுள்ள செல்கள் சம்பந்தப்பட்டது. எவ்வாறு பலதரப்பட்ட நோய்கள் மனித உடலின் பல பாகங்களில் தோன்றுகிறதோ அதேபோல்தான் புற்றுநோயும்.

கர்ப்பப்பை புற்றுநோய், மார்பகப் புற்றுநோய், ரத்தப் புற்றுநோய், நுரையீரல் புற்றுநோய் ஆகிய அனைத்தும் ஒரே மாதிரியானவை அல்ல. ஒவ்வொரு புற்றுநோயின் தன்மையும் குணப்படுத்தும் முறையும் வெவ்வேறாக இருக்கும்.

கர்ப்பப்பை புற்றுநோய் மற்றும் மார்பகப் புற்றுநோயை ஆரம்ப கட்டத்திலேயே கண்டுபிடிப்பதற்கு நவீன சாதனங்கள் தற்போது உள்ளன. ஆரம்பத்திலேயே புற்றுநோயைக் கண்டுபிடித்தால் குணப்படுத்த வாய்ப்பு உள்ளது” என்று நம்பிக்கை தருகிறார் டாக்டர் சாந்தா.

புற்றுநோய் ஏன்?
டாக்டர் சாந்தா சொல்லும் காரணங்கள்….

மகசேசே விருதுபெற்ற மருத்துவர். 61 வருடங்களாக மருத்துவமனையையே தன் வீடாக மாற்றிக்கொண்டவர். திருமணம், குடும்பம் என தன் வாழ்க்கையை சுருக்கிக்கொள்ளாமல், மருத்துவ சேவைக்காக அர்ப்பணித்துக்கொண்டவர். 88 வயதிலும் தினமும் நோயாளிகளைச் சந்தித்து, அவர்கள் துயர்போக்கி வருகிறார். டாக்டர் சாந்தாவை சந்தித்த போது….

“இன்றைக்குக் காய்ச்சல் வருவது போல், புற்றுநோய் வருகிறது. இந்த அளவுக்கு அதிகரித்திருப்பதற்கு என்ன காரணம்?”

“மோசமான சூழல், தவறான உணவுப் பழக்கம், சுகாதாரமின்மை, உடற்பயிற்சி இல்லாதது எனப் பல காரணங்களால் இன்றைக்கு நோய்கள் அதிகரித்துவிட்டன. நோய்கள் வந்த பின் கவனிப்பதைவிட, வரும் முன் காப்பதே தப்பிக்க வழி. இன்றைக்குச் சந்தோஷமாக இருந்தோமா என்பதுதான் முக்கியம், நாளையைப் பற்றி கவலை இல்லை என இன்றைய தலைமுறையினர் நினைக்கின்றனர். இது தவறு. இன்றைக்கு செய்கிற தவறுகள் தான், எதிர்காலத்தில் நோய்களாக வந்து தாக்கும். கொழுப்பு ஆகாரங்களைத் தவிர்ப்பது, காய்கறி, பழங்கள், சமச்சீரான உணவு முறைகளைப் பின்பற்றுவது, உடற்பயிற்சி என வாழ்க்கைமுறையை மாற்றிக்கொள்ள வேண்டும்.

பெண்கள் மாதம் ஒருமுறை மார்பகத்தை சுய பரிசோதனை செய்து கொள்ளவேண்டும். ஏதேனும் கட்டிகள் இருந்தால், உடனே மருத்துவரை அணுக வேண்டும். மல்ட்டிபிள் பார்ட்னர்களுடன் செக்ஸில் ஈடுபடுவது, ஒட்டுமொத்த நோய்களும் வருவதற்கு காரணமாகிவிடும். வாழ்க்கைமுறை பற்றிய புரிதல் இல்லாமல், எதை எதையோ நாகரிகம் எனக் கருதாமல், முறையான வாழ்க்கையை ஆண், பெண் இருவரும் மேற்கொள்ள வேண்டும்.

பெண்கள் உள்ளுறுப்புகளை சுத்தமாகவைத்திருப்பதன் மூலம், கர்ப்பப்பைவாய் புற்றுநோயைத் தவிர்க்கலாம். 40 வயதைத் தாண்டிய பெண்கள், வருடம் ஒருமுறை ஸ்கிரீனிங் டெஸ்ட் செய்துகொள்ள வேண்டும். எதிலும் ஒரு கட்டுப்பாடு அவசியம். ஒரு பெண் நன்றாக இருந்தால்தான் குடும்பம் நன்றாக இருக்க முடியும். இதை, ஒவ்வொரு குடும்ப உறவுகளும் உணர்ந்து, வீட்டுப் பெண்களை வருடம் ஒருமுறை மருத்துவப் பரிசோதனைக்கு உட்படுத்தினாலே, நோய்களை ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து, குணப்படுத்திவிட முடியும்“

“பெண்களின் வாழ்க்கைமுறையில், மருத்துவரீதியாகத் தற்போது எதாவது மாற்றங்களைப் பார்க்கிறீர்களா? பெண்களுக்குத் தங்கள் உடல் பற்றிய அக்கறை இருக்கிறதா?”

“கனிவும் அன்பும் நிறைந்தவள் பெண். கல்வி, ஆளுமை, சுதந்திர உணர்வு, பயமற்ற நிலை எனப் பெண்கள் இன்றைக்கு, ஆண்களுக்கு நிகராக வளர்ந்து நிற்கிறார்கள். ஆனால், கணவன், குழந்தைகள் எனக் குடும்பத்தை அக்கறையாகக் கவனிக்கும் பெண்கள், தங்கAdyar+-+Mainள் உடல்நலத்தில் எந்த அக்கறையும் எடுத்துக்கொள்வது இல்லை. வலிகளைக்கூட வெளியே சொல்லாமல் தாங்கிக்கொண்டு, முடியாத நேரத்தில்தான் டாக்டரிடம் வருகிறார்கள். காலம் கடந்து வரும்போது, நோய் முற்றிவிடுகிறது. இதுதான் என்னை வருத்தப்படவைக்கிறது.

மேல்தட்டு மக்களிடம் கொஞ்சம் மருத்துவம் குறித்த விழிப்புஉணர்வு இருக்கிறது. நடுத்தர மற்றும் கிராமப் பெண்களின் நிலைதான் இன்னும் பரிதாபம். பெண்களுக்கு இலவசமாகப் பரிசோதனை செய்ய, ஒவ்வொரு கிராமமாகச் சென்றிருந்தோம். அங்குள்ள பெண்கள் யாருமே தங்களைப் பரிசோதித்துக்கொள்ள முன் வரவில்லை. ‘கணவருக்கும் பிள்ளைங்களுக்கும் பாருங்க’ எனச் சொல்லிவிட்டு, ஒதுங்கிக் கொண்டார்கள். அவர்களிடம் பலமுறை பேசி, ஒப்புக்கொள்ளவைத்து, பரிசோதித்தால் பெரும்பாலான பெண்களுக்குக் கர்ப்பப்பை வாய்ப் புற்று நோய் இருந்தது தெரியவந்தது. சிறு வயதில் தாயாகி வாழ்க்கை முழுவதும் அவதிப்படும் பெண்கள், நம் தமிழக கிராமங்களில் இருக்கத்தானே செய்கிறார்கள். தங்களை கவனித்துக்கொள்வது பற்றிய விழிப்புஉணர்வு கொஞ்சம்கூட இல்லை.

இன்று இருக்கும் சூழலில், யாருக்கு என்ன நிகழும் எனச் சொல்லமுடியாது. 80 வயதைத் தாண்டியும் யார் உதவியும் இல்லாமல் நடந்திட்டு இருந்த எனக்கு, 2013-ல் திடீர் என்று வழுக்கி விழுந்து எலும்பு முறிவு ஏற்பட்டது. முதுகு, இடுப்பில் ஆபரேஷன் நடந்தது. வாக்கிங் ஸ்டிக் உதவியுடன்தான் நடக்கிறேன். இதை ஏன் சொல்கிறேன் என்றால், ஒவ்வொரு பெண்ணும் தனக்கு வரும் பாதிப்புகள், நோய்களைத் துணிச்சலாக எதிர்கொள்ள வேண்டும். மனது திடமாக இருந்தால், நோய்களை வரவிடாமல் செய்யலாம்.”

டாக்டர் சாந்தா தனக்கு இதுவரை கிடைத்த பத்மஸ்ரீ,பத்மபூஷன்,மகேச,அவ்வையார் விருதுகள் உள்ளீட்ட அனைத்து விருதுகள் அதற்கான பணம் பெருமை என்று அனைத்தையும் மருத்துவமனை வளர்ச்சிக்கே திருப்பியவர்.இந்த விருதும் பெருமையும் கூட மருத்துவமனைக்கும் நோயாளிகளின் நலனிற்கே பயன்படட்டும் என்கிறார் அமைதியாக.

விருதுகளால் பலருக்கு பெருமை சிலரால்தான் விருதுகளுக்கு பெருமை அந்த வகையில் இந்த பத்மவிபூஷன் விருதிற்கு டாக்டர் சாந்தாவால் பெருமை கிடைத்துள்ளது என்றே சொல்லலாம்.

அரிய தொண்டு

புற்றுநோய் கொடுமையானது. உடல்களில் புண் ஏற்பட்டு நோயாளியை பரங்கரமாக வாட்டி வதக்கும். புற்றுநோய் சிகிச்சைக்கு பல லட்சம் ரூபாய் செலவாகும். இன்றைய சூழலில், இந்நோய்க்கு சிறந்த முறையில் சிகிச்சை அளித்து வரும், அடையாறு புற்றுநோய் மருத்துவமனை, ஒரு லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் ஆரம்பிக்கப்பட்டது.

புண்ணியகோடி முதலியார் தானமாக கொடுத்த நிலத்தில், இந்தியப் பெண்கள் சங்கம் அளித்த நிதி உதவியுடன், இந்தியாவின் முதல் பெண் டாக்டர் முத்துலட்சுமி ரெட்டியின் முயற்சியால், 1954-ஆம் ஆண்டு ஜூலை 18-ஆம் தேதி அடையாறு புற்றுநோய் மருத்துவமனை தொடங்கப்பட்டது.

இந்த மருத்துவமனையின் வளர்ச்சிக்கு அதன் தலைவர் டாக்டர் சாந்தாவின் பங்களிப்பு மகத்தானது. கடந்த 50 ஆண்டுகளாக அவர் ஆற்றிவரும் தன்னலமற்ற மருத்துவ சேவையினால் இந்த மருத்துவ மனை பல சாதனைகளைப் படைத்துள்ளது. அவரது சேவையைப் பாராட்டி உலகின் மிகப்பெரிய விருதுகளில் ஒன்றான மகசேசே விருது, பத்மஸ்ரீ, பத்மபூஷண் பெற்றவர். அதோடு பன்னாட்டு மகளிர் தினத்தில் அவ்வையார் விருதும் அவருக்கு வழங்கப்பட்டது. இவர் மிகவும் எளிமையும் பணிவும் நிறைந்தவர்.

மருத்துவ சேவையில் குறிப்பாக பெண்கள், குழந்தைகள் மருத்துவ த்தில் தமிழகம் முன்னிலையில் உள்ளது. டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு உதவித் திட்டத்தின் மூலம் ஆண்டுதோறும் 6 லட்சம் பெண்கள் பயனடைந்து வருகின்றனர்.

இந்தியாவின் முதல் பெண் மருத்துவரான முத்துலெட்சுமி ரெட்டி, 75 ஆண்டுகளுக்கு முன், சென்னையில், புற்றுநோய் சிகிச்சைக்கென பிரத்தியேக மருத்துவமனையை அமைக்க முயன்றபோது, அவரின் முயற்சிக்கு, அப்போது அரசின் ஆதரவு கிடைக்கவில்லை. பலகட்ட முயற்சிக்குப் பின், இந்திய பெண்கள் சங்கத்திடம் இருந்து, ஒரு லட்சம் ரூபாய் நிதி பெற்று, அடையாறு, காந்தி நகர், கெனால் பேங்க் சாலையில், 12 படுக்கைகள் கொண்ட, அடையாறு புற்றுநோய் மருத்துவ மனையை தொடங்கினார். 1952ம் ஆண்டு, அக்டோபர், 10ம் தேதி, அப்போதைய பிரதமர் ஜவகர்லால் நேருவால் அடிக்கல் நாட்டப்பட்டு 1954ம் ஆண்டு, ஜூன் 18ம் தேதி முதல் இம்மருத்துவமனை செயல்பட்டுக் கொண்டிருக்கிறது.

டாக்டர் முத்துலெட்சுமி ரெட்டியின் மகன் டாக்டர் கிருஷ்ணமூர்த்தி, டாக்டர் சாந்தா ஆகியோரின் விடாமுயற்சி, அயராத உழைப்பு, செல்வந்தர்கள் அளித்து வரும் நன்கொடை ஆகியவற்றால், உள்கட்டமைப்பு, நவீன சிகிச்சை வசதி என நாளுக்கு நாள் இம்மருத்துவ மனை வளர்ச்சி பெற்றது.

1982ம் ஆண்டு அடையாறு, சர்தார் படேல் சாலையில் தொடங்கப்பட்ட, கிளை மருத்துவமனை, 2009ம் ஆண்டு முதல், 44 படுக்கை வசதியுடன் செயல்பட்டு வரும், குழந்தைகள் புற்றுநோய் சிகிச்சை மையம் உள்ளிட்டவற்றுடன் சேர்த்து, 450 படுக்கை வசதியுடன், அடையாறு புற்றுநோய் மருத்துவமனை இன்று பிரம்மாண்ட வளர்ச்சி பெற்றுள்ளது.

* டாக்டர் முத்துலெட்சுமி புதுக்கோட்டை அரசினர் கல்லூரியில் காலடி எடுத்து வைத்த முதல் பெண். 1907இல் சென்னை மருத்துவக் கல்லூரியில் நுழைந்து 1912 இல் மருத்துவராய் வெளிவந்தவர் இவர். இந்தியாவிலேயே டாக்டர் பட்டம் பெற்ற முதல் பெண்மணி. டாக்டர் சுந்தர ரெட்டி என்பாரை மணந்ததால் முத்துலட்சுமி ரெட்டி ஆனார்.

பெண் குழந்தைகளுக்கு எட்டு வயதிலேயே திருமணம். பத்து வயதிலேயே விதவைக் கோலம். பருவம் எய்தும் முன்னரே, மொட்டுக்கள் கருகும் பரிதாப நிலை. இதுதான் அன்றைய நிலை. பால்ய விவாகத்தை சட்டசபையில் சாரதா சட்டத்தை முன்மொழிந்து, பெண்களைக் குழந்தைத் திருமணம் என்னும் கொடுமையில் இருந்து, காப்பாற்றியவர் முத்துலட்சுமி. அடையாறு புற்றுநோய் மருத்துவமனை, ஆதரவற்ற பெண்களுக்கான அவ்வை இல்லம், குழந்தைகள் பாதுகாப்பு இல்லம் இவையெல்லாம் முத்துலட்சமி ரெட்டியின் அயரா உழைப்பால் உதயம் கண்டவையாகும். முத்துலட்சுமி அம்மையாரின் முயற்சியால் உருவான குழந்தைகள் பாதுகாப்பு இல்லம்தான் இன்று உருமாறி, குற்றம் புரிந்த சிறுவர்கள் எதிர்காலத்தில் திருந்தி வாழ வழி செய்யும் சிறுவர் சீர்திருத்தப் பள்ளிகளாகக் காட்சியளிக்கின்றன.

மகாத்மா காந்தி ஒத்துழையாமை இயக்கத்தைத் தொடங்கிய போது சற்றும் தயங்காமல் மேலவைத் துணைத் தலைவர் பதவியை உதறித் தள்ளியவர் முத்துலட்சுமி ரெட்டி.

* அரை நூற்றாண்டிற்கும் மேலாகப் புற்றுநோய் மருத்துவத்தில் சேவை உணர்வுடன் பணியாற்றி வரும், அடையாறு புற்றுநோய் மருத்துவமனை முதல்வர் சாந்தா கூறியதாவது:

“எங்கள் மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளில், அவர்களின் வருமானத்திற்கேற்ப, 60 சதவிகிதம் பேருக்கு இலவசமாகவும், 40 சதவிகிதம் பேருக்குக் குறைந்த கட்டணத்திலும் சிகிச்சை அளிக்கப்படுகிறது. எங்களை நாடிவருவோருக்குத் தரமான சிகிச்சை வழங்குவதில், நாங்கள் எந்த சமரசமும் செய்து கொள்வதில்லை.

கதிர்வீச்சு, மருந்து, அறுவை என புற்றுநோய்க்கான அனைத்து சிகிச்சை முறைகளிலும் ‘கார்ப்பரேட்’ மருத்துவமனைகளுக்கு இணை யான சிகிச்சை வழங்கி வருகிறோம். ஆண்டிற்கு சராசரியாக 1.2 லட்சம் பேர் இம்மருத்துவமனையில் உள் மற்றும் வெளிநோயாளிகளாக சிகிச்சை பெறுகின்றனர். தமிழக அரசு எங்கள் மருத்துவமனைக்கு வழங்கி வந்த 1.3 கோடி ரூபாய் ஆண்டு நிதியை சமீபத்தில், 2.5 கோடியாக உயர்த்தியது. இதேபோன்று மத்திய அரசின் நிதியுதவியும் விரைவில் உயர்த்தப்படும் என எதிர்பார்க்கிறோம்” என்றவர் சற்று நிறுத்தி,

“கடந்த 15 ஆண்டுகளாக வாய், தொண்டை, உணவுக்குழாய், நுரையீரல் புற்றுநோய்கள் அதிகரித்து வருவது வருத்தம் அளிக்கிறது. இதைத் தடுக்க சிகரெட், பான்பராக் போன்ற புகையிலை பழக்கத்தில் இருந்து இளைய தலைமுறை விடுபட வேண்டும்” என்றார்.

புற்றுநோய் சிகிச்சை மட்டுமின்றி, புற்றுநோய் மருத்துவம் தொடர்பான உயர் படிப்புகளையும் இம்மருத்துவமனை வழங்கி வருகிறது. தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக்கழகம், சென்னை பல்கலைக்கழகம் ஆகியவற்றின் கீழ் இயங்கும், டாக்டர் முத்துலெட்சுமி கல்லூரி, எம்.சிஎச்., (புற்றுநோய் அறுவை சிகிச்சை) – டி.எம்., (மருந்து சிகிச்சை) – எம்.டி. மற்றும் டி.எம்.ஆர்.டி. (கதிரியக்க சிகிச்சை), எம்.எஸ்சி. (மருத்துவ இயற்பியல்), பிஎச்.டி. உள்ளிட்ட படிப்புகளை வழங்கி வருகிறது.

புற்றுநோய் சிகிச்சை, புற்றுநோய் மருத்துவம் ஆகியவற்றுடன், இந்நோய் தடுப்புக்கான விழிப்புணர்வு நடவடிக்கைகளையும் இம்மருத்து வமனை நிர்வாகம் தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது. பள்ளி, கல்லூரி, பொது இடங்களில், புகையிலைக்கு எதிரான பிரசாரங்கள் அவ்வப்போது மேற்கொள்ளப்படுகின்றன. இளைஞர்கள் மத்தியில் உடல் ஆரோக்கியத்தின் முக்கியத்துவத்தை உணர்த்தும் வகையில், இம்மருத்துவமனை சார்பில் ஆண்டுதோறும் ‘இளைஞர் உடல்நலத் திருவிழா’ நடத்தப்படுகிறது.

டாக்டர் கிருஷ்ணமூர்த்தி, டாக்டர் சாந்தா ஆகியோர் அரும்பாடு பட்டு வளர்த்த மருத்துவமனை இன்று வைர விழா கொண்டாடுகிறது.

சென்னை அடையாறு புற்றுநோய் மருத்துவமனை தலைவர் டாக்டர் வி.சாந்தா, மேலும் கூறும்போது, “தொற்றா நோய்கள் என்பவை கிருமிகளால் ஏற்படாமல் வாழ்க்கைமுறை மாற்றத்தால் இறப்பை ஏற்படுத்துகிறது. இந்தியாவில் தொற்றா நோய்களான புற்றுநோய், இதய நோய் போன்றவற்றால் ஒவ்வொரு நொடிக்கும் 10 பேர் இறக்கின்றனர். ஒரு கோடி பேர் இறப்பில் 52 லட்சம் பேர் இறப்புக்குத் தொற்றா நோய்களே காரணமாக இருக்கிறது.

2008–ம் ஆண்டில் ஏற்பட்ட இறப்புகளில் 53 சதவிகிதமும், 1990–ம் ஆண்டு ஏற்பட்ட இறப்புகளில் 40.4 சதவிகிதமும் தொற்றா நோய்களே காரணமாகும். ‘2015–ம் ஆண்டில் இது 59 சதவிகிதமாக அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

சரிவிகித உணவு உண்ணாமை, மது மற்றும் புகையிலைப் பொருட்களைப் பயன்படுத்துதல், உடல் உழைப்பின்மை ஆகிய மூன்று காரணிகளைச் சரிப்படுத்த தகுந்த வாழ்க்கை முறை மாற்றங்களை மேற்கொண்டால் தொற்றா நோய்களால் குறிப்பிட்ட காலத்திற்கு முன்பே ஏற்படும் 80 சதவிகித இறப்புகளைத் தடுக்க முடியும்.

இதய நோய், பக்கவாதம், நீரிழிவு நோய் போன்ற தொற்றா நோய்களால் ஏற்படும் சுமார் 3 லட்சம் இறப்புகளுக்கு உடல் உழைப்பின்மையே காரணமாகும்.

* அடையாறு புற்றுநோய் மருத்துவமனையின் 60 ஆண்டு கால சாதனை பயணத்தில் முக்கிய அம்சங்கள்:

கடந்த, 1954ம் ஆண்டு, தென்னிந்தியாவில் முதல் முறையாக, ஒருங்கிணைந்த புற்றுநோய் சிகிச்சை மையமாக, அடையாறு புற்றுநோய் மருத்துவமனை துவங்கப்பட்டது.

இந்தியாவில் முதல்முறையாக, 1956ம் ஆண்டு, இங்கு, கதிரியக்க புற்றுநோய் மருத்துவத் துறை ஏற்படுத்தப்பட்டது. 1960ம் ஆண்டு, இந்தியாவில் முதல் முறையாக, குழந்தைகளுக்கான புற்றுநோய் சிகிச்சை மையம் துவங்கப்பட்டது.

1971ம் ஆண்டு, புற்றுநோய்க்கான மருந்து முறை சிகிச்சை பிரிவு துவங்கப்பட்டது.

1974ம் ஆண்டு, இம்மருத்துவமனையை, புற்றுநோய் ஆய்வு மற்றும் சிகிச்சைக்கான மண்டல மையமாக, மத்திய அரசு அறிவித்தது.

ஐ.ஓ.ஆர்.டி., எனும், கதிரியக்க சிகிச்சை தொழிற்நுட்பம், 1995ம் ஆண்டு, அறிமுகப்படுத்தப்பட்டது.

2002ம் ஆண்டு உலக சுகாதார நிறுவனம் சார்பில் புகையிலை ஒழிப்பு மையம், இம்மருத்துவமனை வளாகத்தில் தொடங்கப்பட்டது. 2005ம் ஆண்டு ஆசியாவின் உயர்ந்த விருதான ‘மகசேசே’ விருதை இம்மருத்துவ நிறுவனம் பெற்றது.