Google Search Engine

தலைப்புகளில் தேட

தேதிவாரியாக பதிவுகள்

May 2016
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  

Archives

Visitors since 22-3-13

Free counters!
இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 3,235 முறை படிக்கப்பட்டுள்ளது!

நீர்க்கடுப்பு ஏற்படுவது ஏன்?

ஜூன் மாதம் வந்துவிட்டாலும் வெயிலின் தாக்கம் மட்டும் இன்னும் தணியவில்லை. கோடையில் ஏற்படும் ஆரோக்கியத் தொல்லைகளுள் சிறுநீர்க் கடுப்பு கவனிக்கப்படவேண்டிய ஒன்று. ஆண், பெண் என்ற பாகுபாடு இல்லாமல், குழந்தை, முதியோர் என்ற வித்தியாசம் இல்லாமல் அனைவரையும் பாதிக்கிற பிரச்சினை இது. எல்லாப் பருவத்திலும் இது வரலாம் என்றாலும், கோடையில் இதன் தாக்கம் கொஞ்சம் அதிகமாகவே இருக்கும்.

என்ன காரணம்?

உடலுக்குத் தேவையான அளவுக்குத் தண்ணீர் குடிக்காததுதான் நீர்க்கடுப்பு . . . → தொடர்ந்து படிக்க..

இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 1,831 முறை படிக்கப்பட்டுள்ளது!

100% வேலை வாய்ப்பு – புவித்தகவல் தொழில்நுட்பவியல்

புவித்தகவல் தொழில்நுட்பவியல் (Geo informatics)

இந்த படிப்புக்கு 100% வேலை வாய்ப்பு..!’ – நம்பிக்கை கொடுக்கிறது மத்திய பல்கலைக்கழகம்!

என்னதான் வேலையில்லா திண்டாட்டங்கள் அதிகரித்தபோதிலும் மாணவர்களிடயே இன்னும் இன்ஜினியரிங் மோகம் குறைந்ததாகத் தெரியவில்லை. மாணவர்கள் வேலைவாய்ப்புக்கு முட்டிமோதும் சூழலில், இன்றைய நடைமுறை வாழ்க்கையில் பட்டதாரி இளைஞர்கள் பலர், படித்துவிட்டு வேலை இல்லாததால், தினசரி வாழ்க்கைக்கு அல்லல்படும் அவலம் இந்தியாவில் நடந்துவருகிறது.

ஒரு காலத்தில் இன்ஜினியரிங் படிப்பு . . . → தொடர்ந்து படிக்க..

இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 2,029 முறை படிக்கப்பட்டுள்ளது!

கர்ப்பிணிப் பெண்கள் அதிகளவில் மீன் சாப்பிட்டால்?

கர்ப்பிணிப் பெண்கள் மீன் சாப்பிட்டால் பிறக்கும் குழந்தைகளுக்கு மூளை வளர்ச்சி மிக நன்றாக இருக்கும்.

கர்ப்பிணிப் பெண்கள் அதிகளவில் மீன் சாப்பிட்டால், அவர்களுக்குப் பிறக்கும் குழந்தைகளுக்கு மூளை வளர்ச்சி மிக நன்றாக இருக்கும் என்று ஆய்வில் தெரியவந்துள்ளது. மேலும, பிறக்கும் குழந்தைக்கு மூளை தொடர்பான நோய்கள் வராமலும் தவிர்க்கலாம் என்றும் தெரியவந்துள்ளது. லண்டன் மெட்ரோபாலிட்டன் பல்கலைக்கழகமும், அமெரிக்காவின் தேசிய நல்வாழ்வு மையமும் இணைந்து நடத்திய ஆய்வில் இந்த விவரங்கள் தெரியவந்தன. இது தொடர்பாக 11,875 . . . → தொடர்ந்து படிக்க..

இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 2,219 முறை படிக்கப்பட்டுள்ளது!

அன்பான மனைவி !

திருமண வாழ்வு என்பது பிரச்சனையையும் உள்அடக்கியது தான். சரித்திரத்தில் பார்த்தாலும் இன்றைய சூழ்நிலையில் எங்கு பார்த்தாலும் மகிழ்ச்சியும் பிரச்சனையும் கலந்தது தான் திருமண வாழ்க்கை. அன்பான மனைவி என்பவள் அழகிய முறையில் நடந்து கொண்டால் அன்பாக பண்பாக நடந்து கொண்டால் அன்றாடம் ஏற்படும் பிரச்சனைகள் எல்லாம் சீராகி விடும். ஒரு பெண்ணுக்கு திருமண வாழ்வு என்பது ஒரு அமானிதம். அல்லாஹ் அளித்த அருட்கொடை. நம் சமுதாயத்தில் இன்னும் பலர் வயதுகள் பல கடந்தும் கண்ணிகளாக . . . → தொடர்ந்து படிக்க..

இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 1,551 முறை படிக்கப்பட்டுள்ளது!

கரப்பான் பூச்சி தொல்லை போக்க எளிய வழிகள்!

கரப்பான் பூச்சி தொல்லை போக்க எளிய வழிகள் வீட்டிலேயே உண்டு!

உலமே அழிந்தாலும், அழியாத ஒரு உயிரினம் தான் கரப்பான் பூச்சி. அத்தகைய கரப்பான் பூச்சி வீட்டிற்கு அழையா விருந்தாளியாக வந்து பெரும் தொல்லையைக் கொடுக்கும். அதிலும் வீட்டுச் சமையலறையினுள் நுழைந்து லைட் போட்டால் போதும், நடு வீட்டில் ஆட்டம் போட்டுக் கொண்டிருந்த கரப்பான் பூச்சிக் கூட்டமே ஆங்காங்கு மறைய ஓடும். அப்படி மறைய ஓடும் கரப்பான் பூச்சிகள், சமையலறையில் உள்ள . . . → தொடர்ந்து படிக்க..

இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 1,595 முறை படிக்கப்பட்டுள்ளது!

வாயை மூடி பேசவும்…

வாய் துர்நாற்றம், பல் மருத்துவர்கள் தினம் தினம் சந்திக்கும் மிக மோசமான நிகழ்வு. ஒருவரோடு ஒருவர் பேசும்போது எழும் முக்கிய பிரச்னை இது. துர்நாற்றத்தின் காரணமாக, `இவர்களோடு பேசியிருக்க வேண்டாமே’ என்றுகூட சமயத்தில் தோன்றும். அதே நேரம், முகம் சுளித்தாலோ, பேசாமல் தவிர்த்தாலோ, அவர்கள் காயப்பட்டுவிடுவார்கள்.

சமீபத்தில் வாய் துர்நாற்றத்தால் விவாகரத்து வரைக்கும் சென்ற தம்பதியருக்கு, விவாகரத்துக்குப் பதிலாக ஒரு டாக்டர் தீர்வு அளித்தார். சின்னத் தீர்வுதான். ஆனால், . . . → தொடர்ந்து படிக்க..

இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 1,911 முறை படிக்கப்பட்டுள்ளது!

மறந்துபோன கோடை பானங்கள்

வாயுக்கள் நிரப்பப்பட்டு, `சுவையூட்டிகள்’ சேர்க்கப்பட்டு, கெடாமல் இருக்க ரசாயனக் கலவைகள் கலக்கப்பட்டு, பழங்களின் சத்து என்று பொய் முலாம் பூசப்பட்டு, பல் கூச்சம் உண்டாகும் அளவுக்கு `சில்’லெனக் கிடைக்கும் செயற்கைக் குளிர்பானங்களைத் தொடர்ந்து அருந்துவதால் எலும்பு அடர்த்தி குறைவு நோய், வயிற்றுப் புண், செரியாமை, உடல் பருமன், நீரிழிவு மற்றும் புற்றுநோய் போன்றவை நம் மீது எதிர்பாராத தாக்குதல் நடத்த அதிக வாய்ப்புள்ளது என்கின்றன ஆராய்ச்சிகள்.

கடந்த இருபது ஆண்டுகளாகப் பன்னாட்டு . . . → தொடர்ந்து படிக்க..

இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 1,697 முறை படிக்கப்பட்டுள்ளது!

மூட நம்பிக்கையின் மொத்த உருவங்கள்!

19.5.2016அன்று தமிழக வரலாற்றில் முக்கிய சட்டசபைத் தேர்தல் முடிவுகள் வந்த வண்ணம் இருக்கும்போது ஒரு சுவாரிசமான செய்தியினை இணைய தளத்தில் பார்க்க நேர்ந்தது. அது என்ன என்று உங்களுக்குக் கேட்க ஆவலாக இருக்கும். சீனாவில் ஒரு கிராமத்தில் ஒரு இளம் வயது பெண் திருமணமாகாமல் சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டாளாம். அவளது ஆவி அந்தக் கிராமத்தினை ஆட்கொள்வதாக மக்கள் நினைத்தார்களாம். அதே கிராமத்தில் சென்ற வாரம் ஒரு இளைஞன் திருமணமாகாமல் இறந்து விட்டானாம். . . . → தொடர்ந்து படிக்க..

இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 2,184 முறை படிக்கப்பட்டுள்ளது!

கிராமத்து கைமணம்! 1

சோளச்சோறு

பேரைச் சொன்னாலே சொக்கிப்போவாங்க கிராமத்து ஆளுங்க. அத்தனை சுவையான இந்த தானியத்தை நகர வாசிகள்ல எத்தனை பேருக்கு தெரியுமோ தெரியலை. இதுவரைக்கும் இல்லாட்டியும் பரவாயில்லை, இந்த வெயில் நேரத்துல குளிர்ச்சியான பொருட்களாத் தேடிப் பிடிச்சுச் சாப்பிடுவீங்கள்ல.. அதுல ஒண்ணா இந்தச் சோளத்தையும் சேர்த்துக்குங்க.

உடம்புக்குச் சத்தும் குளுமையும் தர்ற இந்தச் சோளத்தைச் சோறா ஆக்கறது எப்படிங்கறதைச் சொல்றேன். கூடவே குழம்பும் துவையலும்கூட இருக்கு. நான் சொல்ற பக்குவப் . . . → தொடர்ந்து படிக்க..

இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 1,600 முறை படிக்கப்பட்டுள்ளது!

பிறருக்கு நன்மை செய்வோம்

இயற்கையாக மனிதன் எந்த ஒரு நன்மையையும் தான் மட்டும் அனுபவிக்க வேண்டும் என்றே நினைப்பான். அதே போல் ஒரு தீமையோ அல்லது பாதிப்போ நடந்தால் அது தமக்கு நடக்கக் கூடாது என்றே நினைப்பான்.. ஆனால் நாம் அடையும் நன்மைகளை அடுத்தவர்களுக்காகவும் பகிர நினைப்பது என்பது மிக உயர்ந்த குணம். இது பாராட்டப்படகூடியதாகும். அன்று ஹிஜரத்தின் போது அன்சாரித் தோழர்கள் முஹாஜிர்களுக்கு செய்த நன்மையை அல்லாஹ் பாரட்டி அல்குர்ஆனில் ”… அவர்கள் மதீனாவில் முஹாஜிர்களுக்கு) முன்னரே . . . → தொடர்ந்து படிக்க..

இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 7,482 முறை படிக்கப்பட்டுள்ளது!

தைராய்டு குறைவாகச் சுரப்பது ஏன்?

‘உடல் எப்போதும் அசதியாகவே இருக்கிறது; கொஞ்சமாக உணவைச் சாப்பிட்டாலும், உடல் எடை கூடிக்கொண்டே போகிறது; மாதவிலக்கு சுழற்சி ஒழுங்காக ஏற்படுவதில்லை’… இப்படிச் சொல்பவர்களிடம், ‘உங்களுக்குத் தைராய்டு கோளாறு இருக்கிறதா?’ என்றுதான் கேட்கத் தோன்றும்.

இன்றைய பெண்களிடம் அதிகரித்துவரும் உடல்நலப் பிரச்சினைகளில், தைராய்டு சுரப்பி குறைவாகச் சுரக்கும் பிரச்சினை முக்கியமானது. பிறக்கும் குழந்தை முதல் இளம் வயதினர், நடுத்தர வயதினர் என்று பெண்களில் பலரையும் பாதிக்கும் பிரச்சினையாக இன்றைக்கு இது உருவெடுத்துள்ளது. இதை . . . → தொடர்ந்து படிக்க..

இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 1,358 முறை படிக்கப்பட்டுள்ளது!

கோடையில் சுற்றுலா

கோடை விடுமுறை எப்போது வரும், குடும்பத்துடன் டூருக்குச் செல்லலாம் என ஒரு காலத்தில் ஆர்வத்தோடு எதிர்பார்த்திருந்த மனநிலை, தற்போது கொஞ்சம் கொஞ்சமாக மாறிவருகிறது. மாறாக, நினைத்தால் டூர் கிளம்பும் மனநிலை, பலருக்கும் எழ ஆரம்பித்திருக்கிறது. `ரெண்டு நாள் லீவு இருக்கு. ஒரு எட்டு கொடைக்கானல் போயிட்டு வந்துடலாமா?’ என பலரும் நினைத்தவுடன் கிளம்பிவிடுகிறார்கள். ஆனாலும் கோடைவிடுமுறை… அதற்கான மவுசு இன்னும் குறையாமல்தான் இருக்கிறது. சரி… அலுவலக டென்ஷனில் இருந்து விடுபட்டு, ஹாயாக சம்மர் டூர் . . . → தொடர்ந்து படிக்க..