இயற்கையாக மனிதன் எந்த ஒரு நன்மையையும் தான் மட்டும் அனுபவிக்க வேண்டும் என்றே நினைப்பான். அதே போல் ஒரு தீமையோ அல்லது பாதிப்போ நடந்தால் அது தமக்கு நடக்கக் கூடாது என்றே நினைப்பான்.. ஆனால் நாம் அடையும் நன்மைகளை அடுத்தவர்களுக்காகவும் பகிர நினைப்பது என்பது மிக உயர்ந்த குணம். இது பாராட்டப்படகூடியதாகும். அன்று ஹிஜரத்தின் போது அன்சாரித் தோழர்கள் முஹாஜிர்களுக்கு செய்த நன்மையை அல்லாஹ் பாரட்டி அல்குர்ஆனில் ”… அவர்கள் மதீனாவில் முஹாஜிர்களுக்கு) முன்னரே ஈமானுடன் வீட்டை அமைத்துக் கொண்டவர்கள், அவர்கள் நாடு துறந்து தங்களிடம் குடியேறி வந்தவர்களை நேசிக்கின்றனர், அன்றியும் அ(வ்வாறு குடியேறிய)வர்களுக்குக் கொடுக்கப் பட்டதிலிருந்து தங்கள் நெஞ்சங்களில் தேவைப்பட மாட்டார்கள், மேலும், தங்களுக்குத் தேவையிருந்த போதிலும், தங்களைவிட அவர்களையே (உதவி பெறுவதற்குத் தக்கவர்களாகத்) தேர்ந்தெடுத்துக் கொள்வார்கள் – இவ்வாறு எவர்கள் உள்ளத்தின் உலோபித்தனத்திலிருந்து காக்கப்பட்டார்களோ, அத்தகையவர்கள் தான் வெற்றி பெற்றவர்கள் ஆவார்கள். (அல்குர்ஆன் 59:9) என்று வெற்றியாளர்கள் என்று கூறுகிறான். இப்னு தைமியா ரஹ் அவர்கள் ”தனக்கு தேவையிருந்தும் அடுத்தவரின் தேவையை முற்படுத்தி தன் தேவையை பிற்படுத்தி உதவி செய்பவர் மிகவும் சிறந்தவர் என்று கூறுகிறார்கள். மேலும் விவரம் அறிய பிறருக்கு நன்மை செய்வோம் என்ற தலைப்பில் அஜ்மல் அப்பாஸி அவர்களின் இந்த வீடியோவைப் பார்க்கவும்.