Google Search Engine

தலைப்புகளில் தேட

தேதிவாரியாக பதிவுகள்

May 2016
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  

Archives

Visitors since 22-3-13

Free counters!
இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 9,532 முறை படிக்கப்பட்டுள்ளது!

30 வகை கூட்டு! 2/2

   119 மிக்ஸ்டு வெஜிடபிள் புளிக் கூட்டு

தேவையானவை: நறுக்கிய வள்ளிக்கிழங்கு, சேனைக்கிழங்கு, அவரை, பீன்ஸ், கேரட் துண்டுகள் எல்லாம் சேர்த்து – 200 கிராம், கடுகு, மஞ்சள்தூள், கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பு – தலா கால் டீஸ்பூன், தனியா – அரை டீஸ்பூன், காய்ந்த மிளகாய் – 4, புளி – எலுமிச்சை அளவு, தேங்காய் துருவல் – 2 டேபிள்ஸ்பூன், எண்ணெய், உப்பு – தேவையான அளவு.

.

செய்முறை: வள்ளிக்கிழங்கு, சேனைக்கிழங்கு, அவரை, பீன்ஸ், கேரட் துண்டுகளுடன் மஞ்சள்தூள், உப்பு சேர்த்து, புளியைத் தண்ணீர் விட்டு கரைத்து ஊற்றி வேகவிடவும். கடலைப்பருப்பு, தனியா, காய்ந்த மிளகாயை சிறிது எண்ணெயில் வறுத்து தேங்காய் சேர்த்து அரைத்துக் கொள்ளவும். அரைத்த விழுதை வெந்த காய்கறிக் கலவையில் கொட்டி, கொதிக்க விடவும். கெட்டியானதும் இறக்கவும். சிறிது எண்ணெயில் கடுகு, உளுத்தம்பருப்பு தாளித்துச் சேர்க்கவும்.

 சேப்பங்கிழங்கு-தக்காளி ரோஸ்டட் கூட்டு

120 தேவையானவை: வேக வைத்து, சிறு துண்டுகளாக நறுக்கி, எண்ணெயில் பொரித்து எடுத்த சேப்பங்கிழங்கு – 150 கிராம், கடுகு, மஞ்சள்தூள் – தலா கால் டீஸ்பூன், பொடியாக நறுக்கிய வெங்காயம் – 50 கிராம், தக்காளி சாறு – ஒரு கப், மிளகாய்த்தூள் – 2 டீஸ்பூன், கறிவேப்பிலை – சிறிதளவு, எண்ணெய், உப்பு – தேவையான அளவு.

.

செய்முறை: கடாயில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் கடுகு, கறிவேப்பிலை தாளித்து, நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து வதக்கவும். இதில் தக்காளி சாறு, உப்பு, மஞ்சள்தூள், மிளகாய்த்தூள் சேர்த்துக் கொதிக்கவிடவும். வறுத்து வைத்துள்ள சேப்பங்கிழங்கை கடைசியாக சேர்த்து, இரண்டு நிமிடம் கொதிக்கவிட்டு இறக்கவும்.

சாதம், சப்பாதிக்கு ஏற்ற சைட் டிஷ் இது!

பூசணி வடகம் புளிக் கூட்டு

121தேவையானவை: நறுக்கிய பூசணித் துண்டுகள் – 250 கிராம், பூசணி வடகம் – 10, மஞ்சள்தூள், பெருங்காயத்தூள் – தலா கால் டீஸ்பூன், புளி – எலுமிச்சை அளவு, கடுகு, கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பு – தலா அரை டீஸ்பூன், கறிவேப்பிலை, நறுக்கிய கொத்தமல்லி – சிறிதளவு, எண்ணெய், உப்பு – தேவையான அளவு.

.

பூசணி வடகம் செய்ய: 100 கிராம் உளுத்தம்பருப்பை ஊற வைத்து, 4 காய்ந்த மிளகாய் சேர்த்து அரைத்து, 50 கிராம் பூசணி துருவலை கலந்து… ஒரு டீஸ்பூன் உப்பு, அரை டீஸ்பூன் பெருங்காயத்தூள் சேர்த்து சிறிய உருண்டையாக செய்து, வெயிலில் காய வைத்து எடுத்து வைக்கவும்.

122செய்முறை: புளியை தண்ணீர் விட்டு கெட்டியாக கரைத்துக் கொள்ளவும். பூசணித் துண்டுகளை மஞ்சள்தூள் சேர்த்து வேக வைத்து, புளிக் கரைசலை விட்டு, உப்பு சேர்த்துக் கொதிக்கவிடவும். எண்ணெயில் பூசணி வடகத்தை வறுத்து சேர்க்கவும். சிறிது எண்ணெயில் கடுகு, உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு, பெருங்காயத்தூள், கறிவேப்பிலை தாளித்துக் கொட்டி இறக்கி, கொத்தமல்லி தூவி பரிமாறவும்.

மரவள்ளிக் கிழங்கு புளிக் கூட்டு

123தேவையானவை: தோல் சீவி, பொடியாக நறுக்கிய மரவள்ளிக் கிழங்கு – 200 கிராம், தேங்காய்ப் பால் – ஒன்றரை டம்ளர், பொடியாக நறுக்கிய வெங்காயம் – ஒரு டேபிள்ஸ்பூன், பொடியாக நறுக்கிய தக்காளி – 2 டேபிள்ஸ்பூன், கடுகு, உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு – தலா ஒரு டீஸ்பூன், பொடியாக நறுக்கிய இஞ்சி, பூண்டு – தலா ஒரு டேபிள்ஸ்பூன், எண்ணெய், உப்பு – தேவையான அளவு.

.

செய்முறை: மரவள்ளிக் கிழங்கு துண்டுகளைத் தேங்காய்ப் பாலுடன் சேர்த்து நன்கு வேக வைக்கவும். கடாயில் சிறிது எண்ணெய் விட்டு, காய்ந்ததும் கடுகு, உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு, தாளித்து… தக்காளி, வெங்காயம், சேர்த்து வதக்கவும். இஞ்சி, பூண்டு, உப்பு போட்டு, வெந்த மரவள்ளிக் கிழங்கு துண்டுகளை சேர்த்து, 5 நிமிடம் கொதிக்கவிட்டு இறக்கவும்.

சாப்பாடு, டிபன் எல்லாவற்றுக்கும் ஏற்ற சைட் டிஷ் இது!

சேப்பங்கிழங்கு-தேங்காய்ப் பால் கூட்டு

     124தேவையானவை: வேக வைத்து தோலுரித்த சேப்பங்கிழங்கு – 150 கிராம், கெட்டியான தேங்காய்ப் பால் – தலா ஒன்றரை டம்ளர், மஞ்சள்தூள் – கால் டீஸ்பூன், பச்சை மிளகாய் விழுது, கடுகு – தலா ஒரு டீஸ்பூன், கறிவேப்பிலை, பொடியாக நறுக்கிய கொத்தமல்லி, உப்பு – சிறிதளவு, எண்ணெய் – ஒரு டீஸ்பூன்.

.

செய்முறை: தேங்காய்ப் பாலில் சேப்பங்கிழங்கு, மஞ்சள்தூள், உப்பு, பச்சை மிளகாய் விழுது சேர்த்து இரண்டு நிமிடம் கொதிக்க விட்டு இறக்கவும். எண்ணெயில் கடுகு, கறிவேப்பிலை தாளித்துக் கொட்டி, கொத்தமல்லி தூவி கலக்கவும்.

பொடி சேர்த்த காய்கறி கூட்டு

தேவையானவை: மீந்து போன காய்கறிக் கலவை (வீட்டில் மிச்சம் மீதி இருக்கும் எந்த காயையும் சேர்க்கலாம்) – 200 கிராம், சாம்பார் பொடி – 2 டீஸ்பூன், மஞ்சள்தூள் – கால் டீஸ்பூன், தேங்காய் துருவல் – 2 டீஸ்பூன், வேக வைத்த பயத்தம்பருப்பு – 2 டேபிள்ஸ்பூன், பெருங்காயத்தூள், கடுகு, உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு – தலா கால் டீஸ்பூன், எண்ணெய், உப்பு – தேவையான அளவு,

செய்முறை: காய்கறியில் தேவையான தண்ணீர் விட்டு மஞ்சள்தூள் சேர்த்து வேகவிடவும். வெந்த பயத்தம்பருப்பு, உப்பு, சாம்பார் பொடி, பெருங்காயத்தூள் போட்டு, வெந்த காய்களையும் போட்டு மேலும் 5 நிமிடம் கொதிக்கவிட்டு இறக்க வும். சிறிது எண்ணெயில் கடுகு, உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு தாளித்து, தேங்காய் துருவல் சேர்த்து வதக்கிக் கொட்ட வும்.

பாகற்காய்-கொண்டைக் கடலை கூட்டு

124aதேவையானவை: பொடியாக நறுக்கிய பாகற்காய் – 200 கிராம், வேக வைத்த கொண்டைக் கடலை – 100 கிராம், புளி – நெல்லிக்காய் அளவு, கடுகு, உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு, மஞ்சள்தூள் – அரை டீஸ்பூன், தேங்காய் துருவல் – 2 டேபிள்ஸ்பூன், கறிவேப்பிலை, எண்ணெய், உப்பு – தேவையான அளவு.

வறுத்து அரைக்க: உளுத்தம்பருப்பு – 2 டீஸ்பூன், மிளகு – ஒரு டீஸ்பூன், காய்ந்த மிளகாய் – 3.

செய்முறை: கொண்டைக் கடலையை வேக வைத்து கரகரப்பாக அரைக்கவும். புளியை தண்ணீர் விட்டு கரைத்து பாகற்காயில் ஊற்றி மஞ்சள்தூள், உப்பு சேர்த்து சிறிது தண்ணீர் விட்டு வேகவிடவும். அரைக்கக் கொடுத்துள்ள பொருட்களை சிறிது எண்ணெயில் வறுத்து, தேங்காய் துருவல் சேர்த்து விழுதாக அரைக்கவும். புளிக் கரைசல், அரைத்த விழுது, வெந்த பாகற்காய், அரைத்த கொண்டைக் கடலை சேர்த்து கொதிக்க விடவும். சிறிது எண்ணெயில் கடுகு, உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு, கறிவேப்பிலையை தாளித்து சேர்க்கவும்.

பீட்ரூட்-தேங்காய் கூட்டு

125தேவையானவை: பொடியாக நறுக்கிய பீட்ரூட் – 150 கிராம், தேங்காய் துருவல் – ஒரு டேபிள்ஸ்பூன், மஞ்சள்தூள் – கால் டீஸ்பூன், பச்சை மிளகாய் – 2, இஞ்சி பேஸ்ட் – ஒரு டீஸ்பூன், கடுகு, உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு – தலா ஒரு டீஸ்பூன், கறிவேப்பிலை, நறுக்கிய கொத்தமல்லி, எண்ணெய், உப்பு – தேவையான அளவு.

செய்முறை: தேங்காய் துருவல், பச்சை மிளகாயை விழுதாக அரைத்துக் கொள்ளவும். கடாயில் சிறிது எண்ணெய் விட்டு கடுகு தாளித்து… கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பு சேர்த்து சிவக்க வறுக்கவும். நறுக்கிய பீட்ரூட்டை இதில் போட்டு தேவையான தண்ணீர் விட்டு மஞ்சள்தூள், உப்பு சேர்த்து வேகவிடவும். இஞ்சி பேஸ்ட், அரைத்த தேங்காய் விழுதைச் சேர்த்து, மேலும் சிறிது நேரம் கொதித்ததும் இறக்கி… கறிவேப்பிலை, கொத்தமல்லி தூவி பரிமாறவும்.

காராமணி-வேர்க்கடலை புளிக் கூட்டு

126aதேவையானவை: காராமணி – ஒரு கப், வேர்க்கடலை – அரை கப் (2 மணி நேரம் தண்ணீரில் ஊற வைக்கவும்), புளி – எலுமிச்சை அளவு, கடுகு, உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு, மஞ்சள்தூள் – தலா கால் டீஸ்பூன், கறிவேப்பிலை, நறுக்கிய கொத்தமல்லி – சிறிதளவு, எண்ணெய், உப்பு – தேவையான அளவு.

.

வறுத்து அரைக்க: கடலைப்பருப்பு, தனியா – தலா 2 டீஸ்பூன், காய்ந்த மிளகாய் – 3 (சிறிது எண்ணெயில் வறுத்து, விழுதாக அரைத்துக் கொள்ளவும்).

செய்முறை: காராமணியையும், வேர்க்கடலையையும் ஒன்றாக வேக வைக்கவும். புளியைத் தண்ணீர் விட்டு கெட்டியாகக் கரைத்து இதில் ஊற்றி, அரைத்த விழுது, உப்பு, மஞ்சள்தூள் சேர்த்து கொதிக்கவிட்டு இறக்கவும். சிறிது எண்ணெயில் கடுகு, உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு தாளித்து… கொத்தமல்லி, கறிவேப்பிலை தூவி பரிமாறவும்.

கேரட்-பீன்ஸ்-இஞ்சி கூட்டு

126தேவையானவை: தோல் சீவி, பொடியாக நறுக்கிய கேரட், பீன்ஸ் – தலா 100 கிராம், இஞ்சி துருவல் – ஒரு டீஸ்பூன், பச்சை மிளகாய் – 2, தேங்காய் துருவல் – கால் கப், சீரகம் – ஒரு டீஸ்பூன், தேங்காய் எண்ணெய் – 2 டீஸ்பூன், மஞ்சள்தூள் – கால் டீஸ்பூன், கடுகு, உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு – தலா ஒரு டீஸ்பூன், கொத்தமல்லி, கறிவேப்பிலை, நல்லெண்ணெய், உப்பு – தேவையான அளவு,

.

செய்முறை: கடாயில் நல்லெண்ணெய் விட்டு, காய்ந்ததும் சீரகத்தைப் போட்டு வறுக்கவும். பிறகு நறுக்கிய காய்கறிகள், மஞ்சள்தூள் சேர்த்து வதக்கி, தேவையான தண்ணீர் விட்டு வேகவிடவும். இஞ்சி, பச்சை மிளகாய், தேங்காய் துருவலை மிக்ஸியில் அரைத்து, கொதிக்கும் காய்கறி கலவையில் சேர்த்து, உப்பு போட்டு மேலும் சிறிது நேரம் கொதிக்க விட்டு இறக்கவும். தேங்காய் எண்ணெயில் கடுகு, உளுத்தம் பருப்பு, கடலைப்பருப்பு, கறிவேப்பிலை தாளித்துக் கொட்டி, கொத்தமல்லி தூவி பரிமாறவும்.

 பரங்கிக்காய் – காராமணி கூட்டு

127தேவையானவை: தோல் சீவி, பொடியாக நறுக்கிய பரங்கிக்காய் – 150 கிராம், ஊற வைத்து, வேக வைத்த காராமணி – 2 டேபிள்ஸ்பூன், தேங்காய் துருவல் – 2 டேபிள்ஸ்பூன், சீரகம் – ஒரு டீஸ்பூன், கறிவேப்பிலை – சிறிதளவு, பச்சை மிளகாய் – 2, கடுகு – கால் டீஸ்பூன், எண்ணெய், உப்பு – தேவையான அளவு.

.

செய்முறை: தேங்காய், பச்சை மிளகாய், சீரகத்தை கரகரப்பாக அரைக்கவும். பரங்கிக் காயுடன் வேக வைத்த காராமணியை சேர்த்து தண்ணீர் விட்டு, உப்பு, அரைத்த விழுதைப் போட்டு 5 நிமிடம் கொதிக்க விடவும். சிறிது எண்ணெயில் கடுகு, கறிவேப்பிலை தாளித்துக் கொட்டி இறக்கவும்.

சுட்ட கத்திரி கூட்டு

தேவையானவை: பெரிய கத்திரிக்காய் – 1, பொடியாக நறுக்கிய தக்காளி, வெங்காயம் – தலா 50 கிராம், புளி – சிறிய எலுமிச்சை அளவு, மிளகாய்த்தூள் – 2 டீஸ்பூன், கடுகு, உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு – தலா ஒரு டீஸ்பூன், பெருங்காயத்தூள் – கால் டீஸ்பூன், எண்ணெய், உப்பு – தேவையான அளவு.

128செய்முறை: கத்திரிக்காயின் மேல் எண்ணெய் தடவி, அடுப்பின் மீது வைத்து மிதமான தீயில் சுட்டெடுக்கவும். தோல் நன்றாக சுருங்கியதும் ஆற வைத்து, தோல் உரித்து ஒரு பாத்திரத்தில் போட்டு மசித்துக் கொள்ளவும். புளியை தண்ணீர் விட்டு கெட்டியாக கரைத்துக் கொள்ளவும். கடாயில் எண்ணெய் விட்டு, காய்ந்ததும் கடுகு தாளித்து… உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு போட்டு வறுத்து, நறுக்கிய தக்காளி, வெங்காயத்தை போட்டு வதக்கவும். பிறகு, மசித்து வைத்துள்ள கத்திரிக்காயை சேர்த்து வதக்கி… புளிக் கரைசல், பெருங்காயத்தூள், உப்பு, மிளகாய்த்தூள் சேர்த்து கெட்டியாகக் கொதிக்க வைத்து இறக்கவும்.

வாழைக் கச்சல் (பிஞ்சு) கூட்டு

128aதேவையானவை: நறுக்கிய கச்சல் வாழைக்காய் – 150 கிராம், தேங்காய் துருவல் – 2 டேபிள்ஸ்பூன், உளுத்தம்பருப்பு – 2 டீஸ்பூன், காய்ந்த மிளகாய் – 3, பெருங்காயத்தூள் – கால் டீஸ்பூன், கடுகு, மஞ்சள்தூள் – தலா அரை டீஸ்பூன், கறிவேப்பிலை – சிறிதளவு, உப்பு, எண்ணெய் – தேவையான அளவு.

.

செய்முறை: தேங்காய் துருவல், உளுத்தம்பருப்பு, காய்ந்த மிளகாய், பெருங்காயத்தூள் ஆகியவற்றை சிறிது எண்ணெயில் வறுத்து, தண்ணீர் தெளித்து அரைக்கவும். வாழைக்காயில் மஞ்சள்தூள் சேர்த்து லேசாக வேக வைக்கவும். அரைத்த விழுதை அதில் சேர்த்து, உப்பு போட்டு மேலும் சிறிது நேரம் கொதிக்க வைத்து இறக்கவும். எண்ணெயில் கடுகு, கறிவேப்பிலை தாளித்துக் கொட்டவும்.

 சேனை புளிச்சேரி

129தேவையானவை: தோல் சீவி, பொடியாக நறுக்கிய சேனைக்கிழங்கு – 150 கிராம், காய்ந்த மிளகாய் – 2, மிளகு – ஒரு டீஸ்பூன், தேங்காய் துருவல், கெட்டி மோர் – தலா 2 டேபிள்ஸ்பூன், கடுகு, உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு, மஞ்சள்தூள் – தலா கால் டீஸ்பூன், கறிவேப்பிலை – சிறிதளவு, தேங்காய் எண்ணெய் – 2 டீஸ்பூன், உப்பு – தேவையான அளவு.

செய்முறை: சிறிதளவு தேங்காய் எண்ணெயில் மிளகு, காய்ந்த மிளகாயை வறுத்து தேங்காய் துருவல் சேர்த்து விழுதாக அரைக்கவும். சிறிதளவு தண்ணீர் விட்டு வேகவிடவும். அரைத்த விழுதைச் சேர்த்து மேலும் சிறிது நேரம் கொதிக்க வைக்கவும். இறக்கும்போது கெட்டி மோர் விட்டு, ஒரு கொதி வந்ததும் இறக்கவும். தேங்காய் எண்ணெயில் கடுகு, உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு, கறிவேப்பிலை தாளித்துக் கொட்டவும்.

உருளைக்கிழங்கு-தேங்காய்ப் பால் கூட்டு

130தேவையானவை: தோல் சீவி, நறுக்கிய உருளைக்கிழங்கு – 200 கிராம், கடுகு – ஒரு டீஸ்பூன், பொடியாக நறுக்கிய வெங்காயம் – 2 டேபிள்ஸ்பூன், பச்சை மிளகாய் – 2, இஞ்சி துருவல் – ஒரு டீஸ்பூன், தேங்காய்ப் பால் – ஒரு டம்ளர், கறிவேப்பிலை – சிறிதளவு, எண்ணெய், உப்பு – தேவையான அளவு.

செய்முறை: இஞ்சி, பச்சை மிளகாயை விழுதாக அரைக்கவும். கடாயில் எண்ணெய் விட்டு, வெங்காயத்தைப் போட்டு வதக்கி, உருளைக்கிழங்கு சேர்த்து மேலும் சிறிது நேரம் வதக்கவும். இஞ்சி – பச்சை மிளகாய் விழுதை சேர்த்துக் கிளறி, கடைசியாக தேங்காய்ப் பால், உப்பு சேர்த்து இறக்கவும். சிறிது எண்ணெயில் கடுகு, கறிவேப்பிலை தாளித்துக் கொட்டவும்.

இந்தக் கூட்டு சப்பாத்தி, அடைக்கு தொட்டு சாப்பிட ருசியாக இருக்கும் .