Google Search Engine

தலைப்புகளில் தேட

தேதிவாரியாக பதிவுகள்

July 2016
S M T W T F S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  

Archives

Visitors since 22-3-13

Free counters!
இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 1,979 முறை படிக்கப்பட்டுள்ளது!

கடலாடியில் (இராமநாதபுரம்) அனல் மின் நிலையம்!

kadalaadi thermalராமநாதபுரம் மாவட்டத்தில் அமைய உள்ள, கடலாடி அனல் மின் நிலைய திட்டத்திற்கான, சாத்தியக்கூறு அறிக்கை தயாராகி உள்ளது. ராமநாதபுரம் மாவட்டம், கடலாடி என்ற இடத்தில், தமிழ்நாடு மின் வாரியம், 4,000 மெகாவாட் திறன் உடைய, அனல் மின் நிலையம் அமைக்க முடிவு செய்து உள்ளது. இதற்கான அறிவிப்பை, முதல்வர் ஜெயலலிதா, 2015 செப்டம்பரில், சட்டசபையில் வெளியிட்டார். இதையடுத்து, இத்திட்டம் குறித்த, முதல்கட்ட சாத்தியக்கூறு அறிக்கை தயாரிக்கும் பணி, தனியார் நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டது.

அந்த நிறுவனம், கடலாடி மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில், கள ஆய்வு செய்து, சாத்தியக்கூறு அறிக்கையை தயாரித்து, மின் வாரியத்திடம் வழங்கி உள்ளது.

இதுகுறித்து, மின் வாரிய அதிகாரி ஒருவர் கூறியதாவது: மின் நிலையம் அமைய உள்ள இடம், சாதகம் மற்றும் பாதக அம்சங்கள் உள்ளிட்ட விவரங்கள், சாத்தியக்கூறு அறிக்கையில் உள்ளன. இதைத்தொடர்ந்து, விரிவான திட்ட அறிக்கை தயாரிப்பு; மத்திய சுற்றுச்சூழல், வனம், கடலோர ஒழுங்குமுறை மேம்பாட்டு ஆணைய அனுமதி கோரும் பணிகள் விரைவில் துவங்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

‘மேக் இன் இந்தியா’ : கடலாடி அனல் மின் நிலையம், 24 ஆயிரம் கோடி ரூபாய் செலவில் அமைக்கப்பட உள்ளது. மத்திய அரசின், ‘மேக் இன் இந்தியா’ திட்டத்தின் கீழ், இந்திய நிறுவனங்கள் அல்லது இந்தியாவில் தொழிற்சாலை வைத்து உள்ள வெளி நாட்டு நிறுவனங்களுக்கு மட்டுமே, இதற்கான கட்டுமான பணிகளை வழங்க, மின் வாரியம் முடிவு செய்து உள்ளது.

ராமநாதபுரம் மாவட்டம், கடலாடி வட்டத்தில் ரூ. 24,000 கோடியில் 4,000 மெகா வாட் திறனுள்ள மாபெரும் அனல் மின் நிலையம் நிறுவப்படும்

ராமநாதபுரம் மாவட்டம், கடலாடி வட்டத்தில் ரூ. 24,000 கோடியில் 4,000 மெகா வாட் திறனுள்ள மாபெரும் அனல் மின் நிலையம் நிறுவப்படும் என்று முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார்.
சட்டப் பேரவையில் 110 விதியின் கீழ் அவர் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிவிப்பு:
தமிழகத்தை மின்சாரத்தில் தன்னிறைவு பெற்ற மாநிலமாக மாற்றுவதற்காக “தமிழ்நாடு தொலைநோக்குத் திட்டம் 2023′-இல் நிர்ணயித்த இலக்கான 20,000 மெகா வாட் மின் நிறுவுதிறனை ஏற்படுத்தும் நோக்கத்துடன், பல்வேறு திட்டங்கள் அறிவிக்கப்பட்டு அதற்கான பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.

நடப்பாண்டில் புதிய திட்டங்கள் மேற்கொள்ளப்பட உள்ளன. ராமநாதபுரம் மாவட்டம், கடலாடி வட்டத்தில் 4,000 மெகா வாட் திறன் கொண்ட ஒரு மாபெரும் அனல் மின் நிலையம் ரூ. 24,000 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்படும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்தத் திட்டத்துக்குத் தேவையான சுமார் 3,000 ஏக்கர் நிலம் நல்லாம்பட்டி வருவாய்க் கிராமத்தில் கண்டறியப்பட்டுள்ளது. தேவையான திட்ட அனுமதிகளைப் பெற்ற பிறகு இந்த மின் திட்டம் தொடங்கப்படும்.

துணை மின் நிலையங்கள்: மின் கட்டமைப்பை வலுப்படுத்தும் வகையில் 400 கிலோ வோல்ட், 230 கிலோ வோல்ட் துணை மின் நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. மின் கட்டமைப்பை மேலும் வலுப்படுத்தும் வகையில், வடசென்னையில் 765 கிலோ வோல்ட் துணை மின் நிலையம், ரூ. 2,335 கோடியில் நிறுவப்படும்.

இந்தத் தொகுப்பு மின் நிலையம், அரியலூரில் உள்ள 765 கிலோ வோல்ட் மின் நிலையம், புளியந்தோப்பில் உள்ள 400 கிலோ வோல்ட் துணை மின் நிலையங்களுடன் இணைக்கப்படும்.
வடசென்னை, எண்ணூரில் அமையவிருக்கும் அனல் மின் நிலையங்களில் உற்பத்தியாகும் மின்சாரத்தை வெளியேற்ற இது வழிவகை செய்யும்.

அரியலூரில் 765 கிலோ வோல்ட் துணை மின் நிலையம் ரூ. 2,121 கோடியில் நிறுவப்படும். இந்தத் துணை மின் நிலையம், திருவலத்தில் உள்ள 765 கிலோ வோல்ட் துணை மின் நிலையத்துடன் இணைக்கப்பட்டு, வட சென்னை, எண்ணூரில் அமைய உள்ள அனல் மின் நிலையங்களில் உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்தை எடுத்துச் செல்ல உதவும்.

கோவையில் 765 கிலோ வோல்ட் துணை மின் நிலையம் ரூ. 2,335 கோடி மதிப்பீட்டில் நிறுவப்படும். இந்தத் துணை மின் நிலையம் அரியலூர் 765 கிலோ வோல்ட் துணை மின் நிலையம், 400 கிலோ வோல்ட் திறனுள்ள எடையார்பாளையம், ராசிபாளையம் துணை மின் நிலையங்களுடன் இணைக்கப்பட்டு, கோவை, சேலம், மேட்டூர் பகுதிகளின் மின் கட்டமைப்பை வலுப்படுத்தும்.

தடையில்லா மின்சாரம்: எனது தலைமையிலான அதிமுக அரசு 2011-இல் பொறுப்பேற்றதிலிருந்து, தமிழ்நாடு மின் உற்பத்தி, பகிர்மானக் கழக மின் திட்டங்கள், கூட்டு முயற்சித் திட்டங்கள், மத்திய மின் உற்பத்தித் திட்டங்களிலிருந்து கிடைக்கும் பங்கு, மின் கொள்முதல் என 5,954 மெகா வாட் மின்சாரம் மின் கட்டமைப்புடன் இணைக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக, தமிழகத்தில் தடையில்லா மின்சாரம் கிடைத்து வருகிறது என்றார் முதல்வர் ஜெயலலிதா.