Google Search Engine

தலைப்புகளில் தேட

தேதிவாரியாக பதிவுகள்

November 2017
S M T W T F S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  

Archives

Visitors since 22-3-13

Free counters!
இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 1,585 முறை படிக்கப்பட்டுள்ளது!

உணவுப் பொருள்களை செம்புப் பாத்திரங்களில் வைக்கலாமா?

  சமையல் பாத்திரங்கள், நாளுக்கு நாள் மாறிக்கொண்டே வருகின்றன. தொடக்கத்தில், மண் பாத்திரங்களில் சமையல் செய்தார்கள். அதன்பிறகு எவர்சில்வர், பித்தளை, செம்புப் பாத்திரங்கள் புழக்கத்துக்கு வந்தன. உதாரணமாக, ஒருகாலத்தில் கல்லால் செய்த தோசைக்கல்தான் வழக்கத்தில் இருந்தது. ஆனால், இன்றைக்கு எண்ணெய் பயன்படுத்தாமல், பாத்திரத்தில்  உணவு ஒட்டாமல் இருக்கும் `நான்ஸ்டிக்’ சமீபத்திய டிரெண்ட் ஆகிவிட்டது.

சமைக்கும் பாத்திரங்களில் ஏற்பட்ட இந்த மாற்றங்கள் நாம் சாப்பிடப் பரிமாறப்படும் பாத்திரங்களிலும் ஏற்பட்டுள்ளன. வாழை இலை தொடங்கி சில்வர், செம்புப் பாத்திரங்கள், பிளாஸ்டிக் பாத்திரங்கள் எனக் கடந்து வந்திருக்கிறோம். ஆனாலும், செம்புப் பாத்திரங்களை அதிகம் பயன்படுத்துவது, உடல்நலத்தைக் காக்கும் என்கிறார்கள் மருத்துவர்கள். செம்புப் பாத்திரத்தைப் பயன்படுத்துவதால் ஏற்படும் நன்மைகள் குறித்து சித்த மருத்துவர் செந்தில் கருணாகரன் கூறும் சில தகவல்களை இங்கே பார்ப்போம்.டாக்டர்.செந்தில் கருணாகரன்

“செம்புப் பாத்திரங்களில் உணவுகளை வைத்திருப்பதால், அந்தப் பாத்திரங்களில் இருக்கும் அமிலம் உணவுடன் கலந்துவிடும். பொதுவாக, உப்பு மற்றும் புளிப்புச் சத்து கொண்ட உணவுகளுடன் செம்பு கலப்பது உடல் உபாதைகளுக்கு வழிவகுக்கும் என்பதால், குழம்பு மற்றும் பொரியல், கூட்டு வகைகளைப் போன்று புளி சேர்த்து சமைக்கும் எந்த உணவையும் செம்புப் பாத்திரத்தில் சேமித்து வைக்கக் கூடாது.  ஆனால்,  செம்புப் பாத்திரங்களைப் பயன்படுத்தி உணவு பரிமாறலாம். சாதம் வடிப்பவர்கள், செம்புப் பாத்திரங்களில் சாதம் வடிக்கலாம்.

செம்புப் பாத்திரங்கள் – நன்மைகள்

உடலுக்குப் பாதிப்பை ஏற்படுத்தும் இ.கோலி (E. Coli)  மற்றும் Staphylococcus aureus பாக்டீரியாக்களை, செம்பில் உள்ள சத்துகள் அழித்துவிடும். சுத்தமான நீரைப் பருக நினைப்பவர்கள், செம்புப் பாத்திரங்களில் தண்ணீரைச் சேமித்துப் பயன்படுத்துவது கண்டிப்பாக நல்ல பலனைத் தரும்.


மைலின் (myelin) என்ற உறைக்கு இடையே, மூளையில் உள்ள நரம்பு மண்டலங்கள், எப்போதும் தூண்டப்பட்டுக் கொண்டே இருக்கும். செம்புப் பாத்திரங்களின் மூலம் கிடைக்கப்பெறும் செம்புச் சத்துகள், மைலின் சுரப்பதற்கு துணைபுரியும் பாஸ்போலிப்பிடு (phospholipids) உற்பத்திக்கு உதவுகிறது. இதனால், மைலின் வலுப்பெற்று, மூளையின் செயல்பாடு வேகம் பெறத் தொடங்கும்.

உடல் சூட்டினை சீராக வைக்கும் தன்மை செம்பில் இருக்கிறது. இதனால், கொழுப்புச் சத்தைக் குறைத்து, செரிமானக் கோளாறுகளை நீக்கும். மேலும், செம்புப் பாத்திரம் ஒன்றில் தண்ணீர் நிரப்பி வைத்து, அதிகாலையில் வெறும் வயிற்றில் குடிப்பது, உடல் இளைக்க வழிவகுக்கும்.

மெலனின் என்ற தோல்களுக்குத் தேவைப்படும் நிறமி உற்பத்திக்கு, செம்புச் சத்து முக்கியமான ஒரு காரணமாகும். செம்புப் பாத்திரங்களில் சேமித்து வைக்கும் தண்ணீரை அருந்தும்போது, மெலனின் உற்பத்தி அதிகரிக்கும். சுற்றுப்புறத் தாக்குதல்களில் இருந்து தோல் காக்கப்படும். புதிய செல்கள் உருவாகத்தொடங்கும். காயம் ஏற்பட்டிருப்பவர்களுக்கு, அந்தக் காயங்கள் ஆறும். மேலும் அந்த இடத்தில்  பளபளப்பான, புத்துணர்ச்சி நிறைந்த புதிய தோல்கள் உருவாகும்.

ஆக, நம் உடலைப் பொறுத்தவரை செல் உருவாக்கம் தொடங்கி, பல்வேறு தேவைகளுக்கும் செம்புச் சத்து தேவைப்படுகிறது. சிலர் செம்புச் சத்து வேண்டும் என்பதற்காக, குறிப்பிட்ட அசைவ உணவுகளைச் சிலர் சாப்பிடுவதைக் காணமுடிகிறது. அவ்வாறானவர்கள், இரவு செம்புப் பாத்திரங்களில் தண்ணீர் சேமித்து வைத்து அதிகாலையில் வெறும் வயிற்றில் அதை அருந்தி வருவது நல்லது. செம்புச் சத்து அதிகமாகும்போது, ரத்தம் அதிகம் சுரக்கத் தொடங்கும். ரத்தச்சோகை பாதிப்பு இருப்பவர்கள், இதன்மூலம் அப்பிரச்னையிலிருந்து விடுபடலாம்.


செம்பின் முழு நன்மைகளைப் பெறவிரும்புபவர்கள், ஈயம் எதுவும் பூசாத செம்புப் பாத்திரங்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும். ஆன்டி-பயாடிக் மற்றும் அழற்சிகளைக் குறைக்கும் சத்துகளைச் செம்பு கொண்டிருக்கிறது என்பதால், செம்பு கலந்த தண்ணீர் மூட்டுவலிகளைக் குறைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

செம்புத் தாது ஒத்துக்கொள்ளவில்லையா?

சிலருக்குச் செம்பு ஒத்துக்கொள்ளாமல் போகும். செம்புப் பாத்திரத்தைப் பயன்படுத்தும்போது செரிமானக்கோளாறுகள், வாயிலிருந்து எச்சில் ஊறிக்கொண்டே இருப்பது போன்றவை ஏற்படும். இவ்வாறானவர்கள், பதற்றப்படாமல் எலுமிச்சம்பழச்சாற்றில் உப்புப்போட்டு குடிக்க வேண்டும். இது, பிரச்னையைச் சரிசெய்யும். செம்புப் பாத்திரம் பயன்படுத்துபவர்கள், அன்றாடம் அதைச் சுத்தப்படுத்தி (சாம்பல், தேங்காய்நார், புளி போன்றவற்றைக்கொண்டு) தான் பயன்படுத்த வேண்டும்.

நன்றி:  ஜெ.நிவேதா– விகடன்