Google Search Engine

தலைப்புகளில் தேட

தேதிவாரியாக பதிவுகள்

January 2018
S M T W T F S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  

Archives

Visitors since 22-3-13

Free counters!
இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 3,937 முறை படிக்கப்பட்டுள்ளது!

”இதுதான் சென்னை தண்ணீர் பிரச்னைக்குத் தீர்வு..!” –

”இதுதான் சென்னை தண்ணீர் பிரச்னைக்குத் தீர்வு..!” – சொல்கிறார் ‘நிஜ’ பஞ்சவன் பாரிவேந்தன் #VikatanExclusive

 இரா.கலைச் செல்வன்

 தே.அசோக்குமார்

சென்னையின் மிக மோசமான மழை நாள்களில் ஒன்று அது. சாலையின் வெள்ளத்தில் மிதந்து சென்றுகொண்டிருந்த மக்கள் கூட்டத்தை அந்த ஜன்னல் கண்ணாடியின் வழி பார்த்துக்கொண்டிருந்த போது அந்தக் குரல் கேட்டது…

“சென்னையை நான் இப்படி எதிர்பார்க்கவில்லை. இந்த நகரின் மீது காதல் கொண்ட ஓர் இதயம் கூட இங்கில்லை என்றே நினைக்கிறேன். இருந்திருந்தால் இந்த நகரம் இப்படி ஆகியிருக்க முடியாது… ஆனால், இதை மீட்டெடுக்க என்னிடம் ஒரு திட்டமிருக்கிறது. ஆனால், இங்குள்ள யாரும் அதை ஒரு நாளும் செய்ய மாட்டீர்கள் ” என்றபடியே அந்த மரநாற்காலியில் பேச உட்கார்கிறார் சோனம் வாங்சக் (Sonam Wangchuk).

அவருடனான உரையாடலைத் தொடங்குவதற்கு முன்னர், அவரின் கதையைக் கொஞ்சம் தெரிந்துகொள்ளலாம்.

சென்னையைக் காப்பாற்ற ஒரே வழி – நிஜ பஞ்சவன் பாரிவேந்தன்

இந்தியாவின் வட உச்சியில், இமயமலை மடியில் அமைந்திருக்கும் லடாக் பகுதி. சோனம் பிறந்த கிராமத்தில் மொத்தமே பத்துக் குடும்பங்கள்தான். பள்ளிக்கூடம் கிடையாது. தன் அம்மாவிடம்தான் ஆரம்பக் கல்வியைப் பயில்கிறார். கொஞ்சம் வளர்கிறார். பள்ளிக்கூடம் செல்கிறார். தனக்குப் பிடித்த பொறியியல் படிப்பை முடிக்கிறார். அவருக்கு இருந்த மதிப்பெண்ணிற்கும், திறமைக்கும் உலகில் எங்கு வேண்டுமானாலும் வேலைக்குப் போயிருக்கலாம். ஆனால், சோனமிற்கு அதில் விருப்பமில்லை. இந்தியக் கல்விமுறையில், பள்ளிக்கூடங்களில் மிகப் பெரிய கோளாறுகள் இருப்பதை உணர்கிறார். அதை மாற்ற முயற்சிக்க களம் காண்கிறார். தன் நண்பர்கள் சிலரோடு சேர்ந்து 1988ம் ஆண்டு “செக்மோல்” (SECMOL – Student’s Educational & Cultural Movement of Ladakh) எனும் அமைப்பைத் தொடங்குகிறார். லடாக் பகுதி பள்ளிகளில் வேலைகளைத் தொடங்கி, பின்னர் ஒரு மாற்றுக் கல்வி நிறுவனத்தைத் தொடங்குகிறார். இந்தப் பள்ளிக்கூடம் ஒவ்வொரு குழந்தையின் கனவு உலகம்.

சென்னையைக் காப்பாற்ற ஒரே வழி – நிஜ பஞ்சவன் பாரிவேந்தன்

பள்ளிக்கூடம் ஒரு நாடாகச் செயல்படுகிறது. இங்கு பாராளுமன்றம் உண்டு. விவசாயம், சுற்றுலா, அறிவியல் எனப் பல துறைகள் உண்டு. ஒவ்வொருவரும் களத்தில் இறங்கி பாடங்களைப் பயில்கின்றனர். நிசப்தமான வகுப்பறையும், மனப்பாடப் பாடங்களும் இங்கு அறவே கிடையாது. இந்தப் பள்ளியில் சேர எந்த மதிப்பெண்ணும் தகுதி அல்ல. ஒரே தகுதி இதற்கு முன்னர் படித்த பள்ளிகளில் நீங்கள் தோல்வியடைந்திருக்க வேண்டும். ஆம்… சோனம் இதை “தோற்றவர்களின் பல்கலைக்கழகம்” என்றே அழைக்கிறார். அதாவது, இந்தியக் கல்விப் பாடங்களில் தோற்றவர்கள். அதே சமயத்தில், வாழ்வில் ஆகச் சிறந்த வெற்றிகளை ஈட்டுபவர்கள். வாழ்க்கையின் ஒவ்வொரு நொடியையும் பெரும் மகிழ்ச்சியோடு வாழ்பவர்கள். இந்தப் பள்ளியில் படித்து முடித்து இன்று பல்வேறு துறைகளில் சாதனையாளர்களாக பலர் இருக்கிறார்கள். எல்லாவற்றிற்கும் மேலாக இமயமலைப் பகுதியில் இருக்கும் தண்ணீர் பஞ்சத்தைப் போக்க சோனமும், அவரது மாணவர்களும் சேர்ந்து சில வருடங்களுக்கு முன்பு கண்டுபிடித்த ” ஐஸ் ஸ்டூபா” (Ice Stupa) உலகளவில் பெரும் கவனத்தை ஈர்த்தது. லடாக் பகுதியின் தண்ணீர் பிரச்னைக்கான முக்கியத் தீர்வாக அது இருந்து வருகிறது.

சென்னையைக் காப்பாற்ற ஒரே வழி – நிஜ பஞ்சவன் பாரிவேந்தன்

இன்னும்  எளிமையாக சோனம் குறித்து சொல்ல வேண்டுமென்றால், 3 இடியட்ஸ் படத்தின் “ஃபுன்சூக் வாங்க்டூ” கதாபாத்திரம் இவரை அடிப்படையாகக் கொண்டுதான் வடிவமைக்கப்பட்டது. அதாவது இவர்தான் “நண்பன்” படத்தின் நிஜ “பஞ்சவன் பாரிவேந்தன்”.

உங்கள் வாழ்வின் எந்த நிகழ்வு உங்களை இந்தியக் கல்விமுறையில் மாற்றம் வேண்டும் என்று நினைக்க வைத்தது?

“ஒரு குறிப்பிட்ட நிகழ்வு அல்ல என்னை இது நோக்கி தள்ளியது. நீங்கள் கொஞ்சம் யோசித்துப் பாருங்கள்… உங்கள் வாழ்வின் 15 வருடங்களைப் பள்ளிக்கூடத்தில் கழிக்கிறீர்கள். அதிலிருந்து நீங்கள் பெறுவது என்ன. அது நீங்கள் மகிழ்ச்சியாக, மனநிறைவோடு, நிம்மதியாக, உண்மையாக வாழ உண்மையிலேயே உதவுகிறதா. நீங்கள் ஒரு தற்சார்பு வாழ்வை வாழ துளி அளவேனும் உதவுகிறதா. இயல்பாக என்னுள் எழுந்த இந்தக் கேள்விகளுக்கு, ‘இல்லை’ என்பதே பதிலாக இருந்தது. அந்தக் கேள்விகளுக்கான சரியான விடைகளைத் தேடி பயணிக்கத் தொடங்கினேன். பயணித்துக்கொண்டிருக்கிறேன்.”

சென்னையைக் காப்பாற்ற ஒரே வழி – நிஜ பஞ்சவன் பாரிவேந்தன்

ஆனால், இதே கல்வி முறைதானே இத்தனை ஆண்டுகளாக இங்கிருக்கிறது. எண்ணற்ற டாக்டர்களையும், என்ஜினீயர்களையும், அதிகாரிகளையும் உருவாக்கி இருக்கின்றனவே?

“கூடவே நிறைய, பிரச்னைகளையும் கூடத்தான். பூமி வெப்பமயமாதல், மாசு, தண்ணீர் பஞ்சம், விவசாய அழிவு, அதி நுகர்வு கலாசாரம் என இதே கல்வி முறைதான் இத்தனை பிரச்னைகளையும் உருவாக்கியிருக்கிறது. இந்தக் கல்வி முறை எதை நோக்கிப் போகிறது என்ற தெளிவே இல்லாமல் இருக்கிறதே. அதே மாதிரி இது ஏதோ பல்லாயிரம் ஆண்டுகளாக நம் நாட்டில் இருப்பதாக நம்ப வேண்டாம். அது சுத்தப் பொய். நாம் வாழும் இந்தச் சூழல், சமூகம்… கடந்த 300 ஆண்டுகளின் தாக்கத்தினால் உருவாக்கப்பட்டது. இந்தப் பூமி அளவற்ற செல்வத்தைக் கொண்டுள்ளது , நமக்குத் தேவையான எதையும், எவ்வளவையும் நாம் தோண்டி எடுத்துக் கொள்ளலாம் என்ற எண்ணத்தை தொழிற்புரட்சி நமக்குள் விதைத்தது. ஆனால், இதோ…இன்று இங்கு நிற்கிறோம். செய்த மொத்தத் தவறுகளின் தண்டனைக் காலத்தில் நிற்கிறோம். இந்த அனைத்துப் பிரச்னைகளையும் உருவாக்கியது இந்தக் கல்வி முறைதான் எனும் போது, அதற்கான தீர்வையும் அது தானே கொடுக்க வேண்டும். ஆனால் கொடுக்கிறதா. நம் கல்விமுறை பிரச்னைகளை உருவாக்குகிறதே தவிர, தீர்வுகளை அல்ல.”

– லடாக் பகுதியில் 1995யில் 10ம் வகுப்பு பொதுத் தேர்வின் தேர்ச்சிவிகிதம் 5% மட்டுமே. “செக்மோல்”யின் தொடர் செயல்பாடுகளால் அது கடந்த 2015யில் 75% எட்டியுள்ளது.

– செக்மோல் பள்ளிக்கூடம் முழுக்கவே சூரிய மின்சக்தி ஆற்றலைக் கொண்டு இயங்குகிறது. அதை மாணவர்களும், ஆசிரியர்களுமே இணைந்து உருவாக்கினர்.

இதற்குத் தீர்வுதான் என்ன?

“தற்சார்பு வாழ்க்கைதான். நம் தேவைகளை நாமே உற்பத்தி செய்துகொள்ள வேண்டும். இயற்கையின் ஆற்றலை நம் பேராசைகளுக்காக அல்லாமல், தேவைகளுக்கு மட்டுமே உபயோகப்படுத்திக் கொள்ள வேண்டும். இந்த வாழ்க்கையைப் பள்ளிக்கூடங்களில் மட்டுமே கற்பிக்க முடியும். பள்ளிக்கூடமும், பாடமும் மாணவர்களை மகிழ்ச்சிப்படுத்த வேண்டும்.  இயற்கையோடு இயைந்த வாழ்க்கையை வாழ அடுத்த தலைமுறைக்குச் சொல்லித்தர வேண்டும். இன்றைய தலைமுறையை மீட்டெடுக்க முடியும் என்ற நம்பிக்கை எனக்கில்லை. ஆனால், வருங்காலத்தை நிச்சயம் மாற்றியமைக்க முடியும்.”

ஆனால், இப்படி இருந்தால் இந்தப் போட்டி உலகில் மாணவர்களால் சமாளிக்க முடியுமா?

“அர்த்தமற்ற இந்தப் போட்டிக்கு ஏன் அவர்களை பலிகடா ஆக்க வேண்டும். இது என்ன போட்டி. மக்கள் கும்பல், கும்பலாக சவக்குழியில் விழுந்து தற்கொலைதான் செய்துகொண்டிருக்கிறார்கள். அந்தப் போட்டியில் நம் பிள்ளைகள் தோற்றுப் போய், மிக மெதுவாக நடந்து அந்த சவக்குழிகளில் இறங்குவதுதான் நல்லது.”

சென்னையைக் காப்பாற்ற ஒரே வழி – நிஜ பஞ்சவன் பாரிவேந்தன்

ஐஸ் ஸ்டூபா என்பது என்ன? (Ice Stupa) :

பனி மலைகளிலிருந்து உருகி வரும் நீர்தான் இமயமலை மக்களுக்கு உயிராதாரம். பூமி வெப்பமயமாதலின் காரணமாக, கடந்த 50 ஆண்டுகளில் இந்தப் பகுதியின் 14% பனிமலைகள் முற்றிலுமாக மறைந்துப் போயிருக்கின்றன. ஜனவரி, பிப்ரவரி மாதங்களில் ஓடைகளில் அதிகத் தண்ணீர் ஓடும். ஆனால், ஏப்ரல், மே மாதங்களில் வற்றிப் போய்விடும். இதற்குத் தீர்வாக, அதிக தண்ணீர் ஓடும் குளிர்காலங்களில் முள் செடிகளைக் கொண்டு, ஆங்காங்கே ஒரு பிரமிட் வடிவம் உருவாக்கப்படும். (-) 30 டிகிரி இருக்கும் இரவு நேரங்களில், ஓடையிலிருந்து பைப் மூலம் இழுக்கப்படும் தண்ணீர், வெட்ட வெளியில் மேல் நோக்கி பீய்ச்சி அடிக்கப்படும். அப்படிப் பொழியும் தண்ணீர் அந்த பிரமீட் கூம்புகளில் பனியாக உறைந்து, ஒரு சிறு பனிமலைபோல் காட்சி தரும். அதிக வெயில் படாத இடங்களில் அமைக்கப்படும் இது, 4 மாதங்கள் வரை கரையாமல் இருந்து, வெயில் காலங்களில் கரைந்து மக்களின் நீர்த்தேவையைப் பூர்த்தி செய்கிறது.

“ஐஸ் ஸ்டூபா” யோசனை எப்படி வந்தது?

“அவசியத்தின் காரணமாக. தேவைதான் கண்டுபிடிப்புகளுக்கான அடிப்படை. எங்கோ பெரும் நகரங்களில் வாழ்பவர்கள் செய்யும் பிழைகளால், எங்கள் இமயமலைப் பகுதியில் பெரும் தண்ணீர் பஞ்சம் ஏற்பட்டுள்ளது. பூமி வெப்பமயமாதலின் காரணமாக, பனி மலைகள் அதிவேகமாக கரைகின்றன. ஜனவரி, பிப்ரவரி மாதங்களில் ஆர்ப்பரித்து ஓடும் ஓடைகள், ஏப்ரல், மே மாதங்களில் முழுமையாக வறண்டு விடுகின்றன. இதை சமன் செய்யும் ஒரு முயற்சிதான் ஐஸ் ஸ்டூபா. அது கைகொடுத்திருப்பது பெரும் மகிழ்ச்சி.”

ஒரு ஐஸ் ஸ்டூபா 20 லட்சம் லிட்டர் தண்ணீரைக் கொண்டிருக்கும். 60லிருந்து 70 அடி உயரம் வரை இருக்கும்.

சென்னையைக் காப்பாற்ற ஒரே வழி – நிஜ பஞ்சவன் பாரிவேந்தன்

சென்னையின் பிரச்னையும் கிட்டத்தட்ட அதேதான். ஒரு சமயம் மழை, வெள்ளம். ஒரு சமயம் தண்ணீரில்லாமல் வறட்சி. இதற்கு எது தீர்வாக இருக்கும்?

“தண்ணீர்ப் பிரச்னையைப் பொறுத்தவரையில் ஒவ்வொரு பகுதிக்கும் ஒவ்வொரு மாதிரியான தீர்வைத் தேட வேண்டும். இமயமலையின் ஐஸ் ஸ்டூபா சென்னையில் எடுபட வாய்ப்பே இல்லை. இங்கு தண்ணீர் பிரச்னை என்பது இயற்கையாக உருவானது அல்ல. நீர் நிலைகளின் ஆக்கிரமிப்புகளில் தொடங்கி இந்த நகர அமைப்பே மிகவும் சிக்கல் வாய்ந்ததாக இருக்கிறது. சென்னையை மீட்டெடுக்கும் கடைசி வாய்ப்பும், தருணமும் இதுதான். சென்னையை நகரமயமாக்கியதை மாற்றி கிராமமயமாக்க வேண்டும். பெரியவர்களை எல்லாம் கிராமங்களிலேயே விட்டுவிட்டு இளைஞர்கள் திசையற்று நகரங்களில் சுற்றிக்கொண்டிருக்கிறார்கள். இங்கு யாரும் நிம்மதியாக இருப்பதாகத் தெரியவில்லை. நகரங்களை விட்டு வெளியேறி கிராமங்களில் குடியேறுங்கள். தற்சார்பு வாழ்க்கைக்குத் திரும்புங்கள். எல்லாம் சரியாகிவிடும். ஆனால், இதை யார் கேட்பார்கள் யார் செய்வார்கள்” என்ற பெரும் கேள்வியோடு முடிக்கிறார் சோனம் வாங்சக்.

வெளியே மழை இன்னும் வேகமெடுத்திருந்தது…

சந்திப்பு உதவி: The Entrepreneurs Organisation