தீனுல் இஸ்லாம் எல்லா விசயங்களிலும் ஒரு நடுநிலையான போக்கை கொண்ட மார்க்கமாகும். வணக்கமானாலும் சரி மற்றவைகளானாலும் இதே நிலை தான். ஒருவர் இரவு முழுக்க வணங்க வேண்டுமென்றாலும அல்லது தினந்தோரும் பகலில் நோன்பு பிடிக்க வேண்டுமென்றாலும் அனுமதிக்காது. நபிகளார் ஸல் அவர்கள் ஷஃபான் மாதம் வந்து விட்டால் தொடர்ந்து நோன்பு பிடிப்பார்கள். அல்லாஹ் அவர்களுக்கு கொடுத்த தனி சிறப்பால் இவ்வாறு நோன்பு நோற்பார்கள். ஆனால் மற்றவர்களுக்கு தடை செய்துள்ளார்கள். இந்த மாதத்தில் தான் நமது வருடாந்திர அமல்கள் எல்லாம் அல்லாஹ்விடம் எடுத்துச் செல்லப்படுவதால் இந்த மாதத்தில் அதிகமாக நோன்பு நோற்பவர்களாக இருந்துள்ளார்கள். 15ந்தாவது நாளில் அல்லாஹ் தனது அருளால் மக்களை மன்னிக்கின்றான் இரு சாரார்களைத் தவிர. ஆனால் நம்மில் ஒரு கூட்டம் கண்டு கொள்வது இல்லை. மற்றவர்கள் அளவு கடந்து பல வகையான அமல்களை புதிதாக ஏற்படுத்தியுள்ளார்கள். இது போன்ற பல அமல்கள் அளவு கடந்தவைகள் மற்றும் ஆதாரமற்றவைகள். நடைமுறையில் உள்ள பல பித்அத்கள் பற்றி அறிய ஷேக் மன்சூர் மதனி அவர்களின் வீடியோவைப் பார்க்கவும்…