Google Search Engine

தலைப்புகளில் தேட

தேதிவாரியாக பதிவுகள்

February 2005
S M T W T F S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728  

Archives

Visitors since 22-3-13

Free counters!
இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 3,406 முறை படிக்கப்பட்டுள்ளது!

மலர் நகர்த்திய மலை..

என்னமாய்க கேட்டு விட்டான் அந்தப் பயல்?

என் உடம்பே ஒரு வித பயத்தில் ஆட ஆரம்பித்து விட்டது! தூக்கம் வர மறுத்தது!

திரும்பத் திரும்ப அவனது வார்த்தைகளைச் சுற்றியே மனது வட்டமிட்டது!

இந்தப் பிஞ்சு மூளைக்குள் இவ்வளவு யோசனையா? நினைத்து நினைத்து மாய்ந்து போனேன்!

“அம்மா.. ” என்று அவன் மறுபடியும் ஏதோ பேச ஆரம்பித்ததும், அவசரம் அவசரமாக அவன் வாயை மூடும்படி அதட்டினேன.

“சும்மா தூங்கு காசிம்! அதிகப்பிரசங்கித்தனமா அத இதப் பேசிக்கிட்டிருக்காம!”

அவன் அதற்குப் பிறகு பேசவில்லை

இருந்தாலும் என்னுள் அமைதி இல்லை. புரண்டு புரண்டு படுத்தேன்.

அவனுக்கு ஆறு முடிந்து ஏழு வயதுதான் தொடங்கியிருக்கிறது. இருந்தாலும் வயதை மீறிய பெரிய மனுசத்தனம் ஆரம்பத்திலிருந்தே!

சென்ற ரமளானிலேயே அழுது அடம்பிடித்து பதினைந்து நோன்பை முழுதாகப் பிடித்து விட்டான்! அதுவும் கூட ஒரு நாள் விட்டு ஒரு நாள் நான் ஸஹருக்கு எழுப்பியதால் தான்!

தினமும் எழுப்பியிருந்தால், முப்பது நோன்பையும கரை சேர்த்திருப்பான் என்பது சர்வநிச்சயம்!

ஸஹருக்கு எழுப்பாத நேரத்தில் காலையில் தரையில் புரண்டு அடம் பிடித்து அழுவான் – காலையில் உணவு உண்ண வைப்பதற்குள் போதும் போதும் என்றாகிவிடும்.

ஸஹருக்கு மணி அடித்தது காதில் விழவில்லை – அலாரம் அடிக்காமல் மக்கர் செய்து விட்டது – வீட்டில் ஒருவருமே நோன்பில்லை” என்று பலவாறாகப் பொய் சொல்லி அவனை சமாதானப்படுத்த வேண்டும்!

“அப்படின்னா நீங்களும்் சாப்பிடுங்கள்” என்று ஆரம்பித்து விடுவான். “நான் அப்பவே சாப்பிட்டுவிட்டேன்” என்று மற்றொரு பொய் சொல்ல வேண்டும்.

“வீட்டுக் வரும் நண்பர்கள் – உறவினர்கள் யாரானாலும், நீங்க எத்தனை நோன்பு?” என்று தவறாமல் விசாரித்த விட்ட “நான் இத்தனை நொனு:ப” என்று விரல் விட்டு எண்ண ஆரம்பித்து விடுவான்.

திருஷ்டிபட்டு விடப் பொகிறதே என்பதாற்காக “கண்ணைக் கையைக்” காட்டி எச்சரித்தாலும் அதைக் கண்டு கொள்ளாமல் ஹஸருக்கு என்னென்ன சாப்பிட்டான், நோன்பு வைக்க என்னென்ன சாப்பிட்டான், நோன்பு திறக்க என்னென்ன சாப்பிடப் போகிறான் என்பதை ஆரம்பித்து விடுவான்.

சென்ற வருடமே அப்படி நடந:து கொண்வனுக்கு இப்போது கேட்கவா வேண்டும்?

எங்கே சென்ற வருத்தைப் போல ஸஹருக்கு எழுப்பாமல் விட்டுவிடப் பொகிறேனோ என்ற பயத்தில், இரவு முழுக்கத் தூங்காமல் கொட்டக் கொட்ட விழித்திருந்து ஸஹருக்கு மணி அடித்தவுடன் என்னை வந்து எழுப்பி விட்டவன் அவன்தான்!

இந்தச் சிறுவயதில் மார்க்கப் பேணுதலில் அவனுக்கு இருந்த அதீதமான ஆர்வம் எனக்குப் பெருமையாகத்தான் இருந்தது.

ஆலிமசாவின் சம்சாரம் கூட அன்றொருநாள் ஊருணி கரையில் வைத்து ஆலிம்சா, காசிம் நொன்பிருப்பதை சிலகித்துப் பெசியதாக் சொன்னவொத அவனைப் பெற்ற வயிறு குளிர்ந்து போயிற்று!

ஆனால் இன்று இப்படியொரு குண்டைத்தூக்கி போடவான் என்ற நான் எதிர்பார்க்கவில்லை, கொஞ்சமும்!

ஒரு கணம் அதிர்ந்து போனேன்!

பள்ளிவாசலில் நோன்பு திறந்துவிட்டு வந்தவன் முகம் சிவந்திருந்தது – அழுதிருப்பது போலிருந்தது! சிறுவர்களுக்கள் ஏதாவது அடித்துப் பிடித்து விளையாடிக் கொண்டிருக்கலாம் என்று நினைத்து அலட்சியமாக இருந்து விட்டேன்.

நோன்பு திறந்தவுடன் வேலைகள் பிலுபிலுவென்ற பிடித்துக் கொண்டு விட்டபடியால் அவனைக் கண்காணிக்க முடியவில்லை.

மஹரிப் தொழுது, கொஞ்ச நேரம் ஓதிவிட்டு இரவு உணவுக்கான ஆயத்தங்களைச் செய்து விட்டு எழுந்த போது தான் வழக்கமாக அடுப்படியையே சுற்றிக் கொண்டிருக்கும் காசிம் கண்ணில்படிடவில்லையே என்று நினைத்துக் கொண்டேன்.

டைனிங் டேபிளில் எல்லாவற்றையம் எடுத்து தயார்ப்படுத்திவிட்டு “காசிம், காசிம்” என்று குரல் கொடுத்தேன் – பதில் இல்லை.

உள்ளே சென்று பார்த்தேன் – அறையில் அப்படியே தூங்கிப் போயிருந்தது தெரிந்தது – தட்டி உசுப்பினேன். பரபரப்போடு எழுந்தான்!

என்னத்தா சாப்டாமத் தூங்கிட்டே?” என்றேன் – பாவம் நோன்பு திறந்த மயக்கத்தில் பிள்ளை துவண்டு விட்டதே என்ற நெகிழ்ச்சி என்னுள்!

“அம்மா..! நோன்பு பிடிக்காட்டா பெரிய பாவந்தானே?”

“ஆமா! அதுல என்ன சந்தேகம் உனக்கு?”

“நோன்பு பிடிக்காதவங்களை அல்லா நரகத்துல போட்டு வதைப்பானாமே?”

“ஆமா காசிம்! உனக்கு யாரு அதைச் சொன்னது?”

“ஆலிம்சா சொன்னாக!”

“சரி சரி! அத அப்பொறமா பேசிக்குவோம்! வா, சீக்கிரம்! வந்து சீக்கிரமா சாப்பிட்டுட்டு தராவீஹ் தொழப் போகனுமில்ல?” – அவசரப்படுத்தினேன் நான். ஏதோ பெரிய மனுசனைப் போல சிந்தித்தவாறே எழுந்து வந்தான்!

எனக்குள் சிரித்துக்கொண்டேன். அவன் முகக்குறிப்பின் தீவிரத்தைப் பார்த்து!

“பச்சைப் பிள்ளைகளின் மனதில் பதிய வைக்க வேண்டிய மார்க்க அனுஷ்டாங்களைச் சொல்லிக்காட்ட வேண்டியதுதான் – அதற்காக குழந்தைகளை இப்படியா பயங்காட்டுவது இந்த ஆலிம்சா? கொஞ்சம் இங்கிதமாக – பக்குவமாகச் சொல்லிக் காட்ட வேண்டாம்?” எனக்குள் நினைத்துக் கொண்டேன். வழக்கமான துடிப்பு – துள்ளல் எதுவுமில்லாமல் ஏனோ தானோவென்று சாப்பிட்டு முடித்து விட்டு தராவீஹ் தொழுவதற்கு ஓடினான்.

இரவு 9 மணிக்குச் சரியாக பரபரப்பாக உள்ளே வந்தார் காசிமின் அத்தா – என் கணவர்! நாளெல்லாம் அலைந்து திரிந்த களைப்பு முகத்தில்!

அவசரம் அவசரமாக உடையைக் களைந்து விட்டு குளித்தார்.

அவர் சாப்பாட்டு மேஜையில் உட்கார்ந்ததும் “இக்லூ” பாக்ஸில் சூடாக தயார் செய்து வைத்திருந்த  சப்பாத்தியை எடுத்து பரிமாறினேன்.

“தராவீஹ்க்குப் போயிட்டானா காசிம் குட்டி, உம்மு?” என்று கேட்டு கொண்டே சாப்பிட்டு முடித்தார்.

காலை ஆறுமணிக்குக் கிளம்பினால் கேம்ப் கேம்ப் ன்று நாயாக அலையும் உத்தியோகம் அவருக்கு! வழியில் கிடைக்கும் உணவை உண்டு உண்டு அலுத்துச் சலித்துப் போய் விட்டது. அடிக்கடி வயிற்றுத் தொந்தரவு வேறு! இரவில் உண்பது ஒன்றுதான் உருப்படியான சாப்பாடு!

சனி ஞாயிறு என்று கூட பார்க்காமல் ஓடிப்போய் விடுவார் வேலை வேலையென்று! என்ன செய்வது? கை நிறைய சம்பளம் கொடுக்கும் முதலாளிக்கு கஷ்டப்பட்டு உழைக்கத் தானே வேண்டும்?

எங்கெல்லாம் அலைந்து விட்டு வந்தாரோ, “நான் கொஞ்சம் நேரத்தோடயே கிளம்பிப் போகனும், உம்மு! தூக்கம் அசத்துது – சீக்கிரம் படுக்கை போட்டுத்தா” என்றார் கொட்டாவி விட்டுக் கொண்டே!

படுத்த ஒரு சில நிமிடங்களில் தூங்கியும் போனார்!

தராவீஹ் முடிந்து வந்த காசிம், வரும்போதே “அத்தா வந்துட்டாகலாம்மா?” என்று கேட்டுக கொண்டேதான் வந்தான் – அத்தா மீது அவனுக்கு உயிர்!

“ஆமத்தா, அத்தா களைப்பா வந்து சாப்பிட்டுட்டுப் படுத்துட்டாக! வா சீக்கிரமாக நாமலும் படுப்போம்! ஸஹருக்கு எழும்பணும்” என்று அவசரப்படுத்தினேன் நான் – என் உடம்பு கெஞ்சியது எனக்கல்வா தெரியும்?

அத்தாவின் அருகில் சென்ற காசிம் அவர் தூங்குவதையே பார்த்துக் கொண்டு கொஞ்ச நேரம் நின்றான்!

பிறகு திரும்பி வந்து பாயில் படுத்துக் கொண்டான். நானும் லைட்டை அணைத்துவிட்டு அவன் அருகில் படுத்துக் கொண்டேன்.

கொஞ்ச நேரத்தில் சன்னமான விசும்பல் ஒலி! பதறிப்போய் “காசிம்! காசிம்” என்றேன்.

“அம்மா…” என்றான் விம்மலினூடே!

“உனக்கு என்னத்தா ஆச்சு?” என்றேன் ஆதங்கத்தோடு.

“அம்மா! நோன்பு பிடிக்காதவங்க வாயில அல்லா நெருப்புத் தண்ணிய ஊத்துவானாமே?” என்றான் பரிதாபமாக.

“ஆமா அதுக்கென்ன இப்ப? நீதேன் கரெக்டா நோம்பு வச்சிருக்கியே! நீ ஏன் பயப்படனும்?” என்றேன் ஆசுவாசமாக அவனை அணைத்துக் கொண்டே.

“ஆமா! நான் நோன்பு வச்சிருக்கேன். நீங்களும் நோன்பு வச்சிருக்கீங்க! நம்மல அல்லாஹ் ஒன்னும் செய்ய மாட்டான்! ஆனா அத்தா நோன்பு வைக்கிறதில்லையே? அத்தா வாயில் நெருப்புத் தண்ணிய ஊத்திப்புடுவானே, அல்லா? அதை நெனைச்சுத்தேன் அழுதுகிட்டிருக்கேன்” அவன் வார்த்ததைகள் சரளமாய் வந்து விழுந்தன.

பொட்டில் அடித்தது மாதிரி இருந்தது எனக்கு!

என்ன பதில் சொல்வதென்று புரியாமல் மலைத்து நின்றேன்.

பகீரென்றிருந்தது – வயிற்றைப் பிசைந்தது!

மிரள மிரள அந்தப் பிஞ்சு முகத்தையே அந்த மங்கிய வெளிச்சத்தில் பார்த்தேன்.

நேரம் காலம் என்ற வித்தியாசமில்லாத இந்த உத்தியோகத்தில் – மணிக்கொருதரம் சாயாவும், நாளுக்கு ரெண்டு பேக்கெட்  சிகரெட்டையும் புகைத்துக் கொண்டு ஊர் ஊராகச் சுற்றி திரியம் பிழைப்பில் இந்த மனுஷனை எப்படி நோன்பு வைக்கச் சொல்லி வற்புறுத்துவது?

என் கண்கள் கலங்கின!

காசிம் தொடர்ந்தான், “அம்மா நாமே ஒன்னு செய்வோமா?” நாம புடிக்கிற நோம்பை அத்தாவுக்கு எடுத்துக்கிறச் சொல்லி நிய்யத்து வச்சுடுவோமா?”

அப்படியே அவனைக் கட்டிக் கொண்டு அழுதேன். இந்த பிஞ்சு மனத்தின் பாசம் என்னை நெகிழ்த்து விட்டது.

அப்படி இப்படி சமாதானம் சொல்லி அவனைப் படுக்க வைத்து விட்டுத் தூக்கம் வராமல் புரண்டு கொண்டிருந்தேன்.

அவனும் கூட அலுப்பில் தூங்கியிருக்க வேண்டும்.

அலாரம் ஸஹர் நேரத்தைக் காட்ட ஒலித்தது!

எழுந்து அடுப்படிக்குச் சென்று எல்லாவற்றையும் தயார்படுத்தி வைத்து விட்டு காசிமை எழுப்பிக் கொண்டு டைனிங் ஹாலுக்கு வந்தேன்!

அங்கே..!

அவர் .. காசிமின் அத்தா!

“என்னங்க  இந்த நேரத்துல?”

“இந்த நேரத்துல எதுக்கு வருவாங்க, உம்மு? ஸஹர் செய்யத்தேன்”

என்ன பதில் சொல்வதென்று புரியாமல் விழித்துக் கொண்டு நின்றேன் நான்!

என்ன நினைத்தாரோ, திடீரென்று குனிந்து காசிமை வாரி அணைத்து மாறிமாறி முத்தங் கொடுத்தார் -” எனக்கு ஆசாணாகிப் போய்ட்டேடா அத்தா” என்றார் கண்கள் பணிக்க!

இரவில் நடந்த எங்கள் உரையாடலை அவர் கேட்டிருக்க வேண்டும்! மெய்மறந்து நின்றேன் நான், உணர்ச்சிக் கொந்தளிப்பில்’

“எனக்கான பர்ளை நான்தேனே நிறைவேத்தனும் உம்மு! சம்பாத்தியம் சம்பாத்தியம’ என்று சொல்லி இந்த உலக வாழ்க்கைக்கே அல்லாடிக்கிட்டிருந்தா அந்த நிரந்தர வாழ்க்கைக்கு எப்பத் தேடுகிறது? சரி சரி! சீக்கிரமா சாப்பாட்டை வையி! நேரம் போய்க்கிட்டே இருக்கு!”

நான் பரபரப்போடு பரிமாற ஆரம்பித்தேன். – உள்மனம் அல்ஹம்துலில்லாஹ் என்று உச்சரித்துக் கொண்டே இருந்தது.

காசிமை திரும்பிப் பார்த்தேன!

அந்த பிஞ்சு முகத்தில்தான் எத்தனை மலர்ச்சி! மகிழ்ச்சி!