Google Search Engine

தலைப்புகளில் தேட

தேதிவாரியாக பதிவுகள்

December 2011
S M T W T F S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031

Archives

Visitors since 22-3-13

Free counters!
இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 4,918 முறை படிக்கப்பட்டுள்ளது!

தமிழ்நாட்டின் மொத்த கடன் 1 இலட்சத்து 1349 கோடி

55 ஆண்டுகளுக்கு முன்பு தென்மாவட்டத்தில் நாகரீகமே எட்டிப்பார்க்காத ஒரு குக்கிரமத்தில் நடத்த உண்மை சம்பவம்.
சாலை வசதியே இல்லாத ஊர்ஃ அந்த கிராமத்தில் இருந்த ஒரு பண்ணையார் வீட்ல் அவர்கள் குடும்பத்தினர் எங்காவது போய் வர கூண்டு வண்டி வைத்து இருந்தனர்.  அந்த ஊரில் காரை பார்க்காதவர்களே பலர் உண்டு.ஒரு நாள் அந்த பெரியவரின் ஒரு மகன் அந்த காலங்களில் 1944 மாடல் என்று கூறப்பட்ட ஒரு பழையகாரைக் கொண்டு வந்து, அதற்கு மாலை போட்டு பெருமையாக தன்ன தகப்பனார் முன்பு கொண்டு வந்து நிறுத்தினார் ஊரே திரண்டு வந்து காரை வேடிக்கை பார்த்தது.ஆனால் பெரியவர் பெருமைப்படவில்லை  வருந்தத்தோடு சொன்னார் நீ வெளியே வட்டிக்கு கடன் வாங்கி இந்த காரை வாங்கிக் கொண்டு வந்து இருக்கிறாய் இதில் எனக்கு பெருமை இல்லை வருத்தம் தான். நீ உன் கையில் உள்ள வருமானமத்தில் ஒரு சைக்கிள் வாங்கிக் கொண்டு வா உன்னை பெருமையோடு பாராட்டுவேனன் என்றார். கிராம முன்சீப்பாக இருக்கும் உன் அண்ணன் சைக்கிளில் போவதைப் பார்த்து மகிழ்ச்சி அடையும் என் மனதுக்கு உன் காரைப் பார்த்தால் மகிழ்ச்சி வரவில்லையே என்றார் இது தான் ஒவ்வொரு வீடும் நாடும் பின்பற்ற வேண்டிய பொருளாதார தத்துவமாகும்.
வரவுக்கேற்ற வகையில் அரசுகள் செலவுகளை நிர்ணயித்து கொள்ள வேண்டும்இந்த நிலையில் தமிழக அரசுக்கு இருக்கும் மொத்த கடன் தொகையை கேட்டால் கடன் பட்டார் நெஞ்சம் கோல கலங்கினான்  என்பார்களே அதே உணர்வு தமிழ்நாட்டில் உள்ள 7 கோடியே 21லட்சம் மக்களுக்கும் ஏற்படுகிறது தமிழ்நாட்டின் மொத்த ஒரு லட்சத்தது 1349 கோடி ரூபாய்  ஆகும். கேட்பதற்கு தலை சுற்றுகிறது அல்லவா? இது நம் ஒவ்வொருவர் தலையிலும் சுமத்தப்பட்டுள்ள கடனாகும்.
மற்ற மாநிலங்களின் கடன் எவ்வளவு? என்று பார்த்தால் தான் நாம் எந்த அறவு கடனில் தத்தளித்துக் கொண்டு இருக்கிறோம் என்று புரியும். தமிழக அரசு ஆண்டுக்கு வட்டியாக மட்டும் ஆண்டுக்கு ஏறத்தாழ ரூ. 10 ஆயிரம் கோடி கட்ட வேண்யிருக்கிறது (ஏமாளியான மக்களின் வரிசுமைகள் ஏற்றிக்கொண்டு இருக்கிறர்கள் இந்த ஆடம்பர அரசியல்வாதிகள்)
தமிழ் நாட்டின் இவ்வளவு பெரிய சுமை இப்போது திடீரென்று ஏற்பட்டதில்லை. காலங்கலமாக கொஞ்சம் கொஞ்சமாக ஏற்றி வைக்கப்பட்ட பெரிய சுமையாகும்.
மறைந்த நாஞ்சில்  மனோகரன் தான் பேசும் எல்லா கூட்டங்களில் எல்லாம் ஏதாவது ஒரு ஆங்கில பழமொழி கடுமையாக உழை, நிறைய சம்பாதி வீட்டைக்கட்டு, ஒரு கார் வாங்கு, திருமணம் செய்துகொள் இன்பமாக வாழ்க்கையை கழி என்பது தான் நமது மக்களுக்கு உழைக்க வேண்டும் தங்கள் உழைப்பில் ஈட்டிய பணத்தில் பொருட்களை வாங்க வேண்டும் கஷ்டமில்லாத வாழ்க்கை வாழ வேண்டும் என்ற உணர்வு மங்கி ஓசியில் அரசு ஏதாவது கொடுத்தால் போதும் என்ற உணர்வு தளிர்த்துவிட்டது.
அரசியல் கட்சிகளும் இந்த இலவசங்களை அள்ளி அள்ளிக் கொடுத்தால் தான் ஓட்டு கிடைக்கும் என்ற உணர்வில் வாரி வாரி வழங்கியது. அரசின் வருமானங்கள் எல்லாம் இலவசங்களுக்கு போய்விட்டது. மற்றும் அரசின் ஆடம்பர விழாங்களும், குளறுபடியான நிர்வாகங்களும். அரசு கட்டிடங்களை
இடிப்பதும் மாற்றுவதும். என பல விளையாட்டுகளை அரசியல்வாதிகள் செய்துவிட்டு ஆட்சி முடிந்ததும் அயல் நாடுகளில் சுற்றுலா என சொகுசு வாழ்கை வாழ்வதும் விலை ஏற்றும் தவிர்கக முடியாது என்ற வார்த்தைகள் ஓட்டு போட்ட மக்களுக்கான பதில். கடன்காரராகும் மக்கள் வேறு என்னதான் செய்ய முடியும்
நன்றி: கிராமத்து காக்கை