Google Search Engine

தலைப்புகளில் தேட

தேதிவாரியாக பதிவுகள்

April 2013
S M T W T F S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  

Archives

Visitors since 22-3-13

Free counters!
இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 5,155 முறை படிக்கப்பட்டுள்ளது!

சூப்பர் ப்ளாஸ்டிக் – களிமண்ணிலிருந்து!

இந்த உலகத்தை அழிக்க அணுகுண்டு, உயிரியல் ஆயுதம், உலகப் போர் இப்படி எதுவுமே வேணாம். பொதுமக்களாகிய நாம நம் அன்றாட வாழ்க்கையில் பயன்படுத்தும் சில பொருட்களே போதும். என்ன அப்படிப்பார்க்குறீங்க? அட உண்மையத்தாங்க சொல்றேன். ஏன்னா, சுற்றுச்சூழல் பாதிப்பு அப்படீங்கிற கண்ணுக்குத் தெரியாத(?) (சிலது கண்ணுக்கும் தெரியும்!) பலவகை பாதிப்புகளை நாமதான் செய்றோம்னு தெரியாமலே செஞ்சுக்கிட்டு இருக்கோம் பல நூறு வருஷங்களா?!

சுற்றுச்சூழல்னா என்ன?  நம்மைச் சுற்றியுள்ள நிலம், காற்று, தாவரங்கள், நுண்ணுயிர்கள், விலங்குகள், நீர்நிலைகள் இப்படி எல்லாம் சேர்ந்ததுதாங்க சுற்றுச்சூழல். அந்தச் சுற்றுச்சூழலை நம் அன்றாட வாழ்க்கை நடைமுறைகள் நல்லவிதமாகவும், தீயவிதமாகவும் என இருவகையில் பாதிக்கின்றன! நல்லமுறையா பாதிக்கிற விஷயங்கள்னு பார்த்தா, நாம் அன்றாடம் உட்கொள்ளும் தாவர, விலங்கு சார்ந்த உணவுகள் மூலமாக, இயற்க்கை சமநிலைக்கு அவசியமான உயிர்களின் பிறப்பு/இறப்புக்கு ஒரு வகையில் நாம் காரணமாவதை உதாரணமாகச் சொல்லலாம்!

plastic_household_itemsஆனா, மனிதனால் சுற்றுச்சூழலுக்கு ஏற்படும் தீயவைகள்னு பார்த்தா, ஒரு பெரிய பட்டியலே போடலாம். உதாரணமா, வாகனங்களைப் பயன்படுத்துவது மூலமா சுற்றுச்சூழலில் உள்ள காற்றை மாசுபடுத்துவது, குப்பைகளை சரியாகப் போடாமல் அசுத்தம் செய்வது, மரங்களை அழிப்பது ஆனால் மறந்தும் ஒரு மரக்கன்றுகூட நடுவதே கிடையாது  இப்படிப் பல! இதுல பலவற்றை நம்ம ஒழுக்கம் மூலமா கட்டுப்படுத்திடலாம். ஆனா, சிலவற்றை கட்டுப்படுத்த ஒழுக்ககம் மட்டுமே இருந்தால் போதாது!

வேறென்ன வேணும் அப்படீங்கிறீங்களா? தொழில்நுட்பம் வேணும்! உதாரணமாச் சொல்லனும்னா, நம்ம சுற்றுச்சூழல் மற்றும் அன்றாட வாழ்க்கையில அப்படியே பின்னிப்பிணைந்துவிட்ட “ப்ளாஸ்டிக்” எனும் செயற்க்கை பொருளான ப்ளாஸ்டிக்காலான பைகள், பொருள்கள் போன்றவற்றைச் சொல்லலாம்! இந்த ப்ளாஸ்டிக்கினால் சுற்றுச்சூழலுக்கு ஏற்படுற பாதிப்புகள் இருக்கே, ஒன்னுல்ல ரெண்டுல்ல…..ஏராளம்! அத நாம இன்னொரு பதிவுல விளக்கமா பார்ப்போம்.

ஆனா இன்றைய பதிவுல, ப்ளாஸ்டிக் பயன்பாட்டையும் நிறுத்தாமல், அதே சமயம் சுற்றுச்சூழலையும் பாதிக்காமல், தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி எப்படி ப்ளாஸ்டிக்கை பயன்படுத்துவது அப்படீன்னு வாங்க பார்ப்போம்…..

சூப்பர் ப்ளாஸ்டிக்: களிமண்ணிலிருந்து ஒரு புதுயுக ப்ளாஸ்டிக்!

“மக்கும் ப்ளாஸ்டிக், மக்காத ப்ளாஸ்டிக் இப்படி சில ப்ளாஸ்டிக் வகைகளைப் பத்தி இதுவரைக்கும் கேள்விப்பட்டிருக்கோம். அது என்ன சூப்பர் ப்ளாஸ்டிக்? பேரே ஒரு தினுசா இருக்கு?!” அப்படீன்னுதானே யோசிக்கிறீங்க! அது வேற ஒன்னுமில்லீங்க,  உலகத்திலேயே முதல் முறையாக, ஆர்கனோ க்ளே (organoclays) என்னும் ஒருவகை களிமண்ணிலிருந்து, விலைகுறைவான, பெருமளவில் தயாரிக்கக்கூடிய வகையில் ஒரு புதுயுக ப்ளாஸ்டிக் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

அதற்க்கு “சூப்பர் ப்ளாஸ்டிக்” என்றும் பெயரிடப்பட்டுள்ளதாக, ACS’ Macromolecules என்னும் வேதியல் வார இதழில் சமீபத்தில் ஒரு செய்தி வெளியாகியுள்ளது! இந்த புதுவகை ப்ளாஸ்டிக் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படுத்தாது என்கிறார்கள் இதனைக் கண்டுபிடித்த விஞ்ஞானி மிரியம் ராஃபெய்ல்விச்சும் (Miriam Rafailovich) அவரது சக ஆய்வாளர்களும்! அப்படியா….பரவாயில்லியே!

இந்த சூப்பர் ப்ளாஸ்டிக்கை கண்டுபிடிக்க பயன்படுத்தப்பட்ட தொழில்நுட்பம் அதிநவீன “நேனோடெக்னாலஜி” என்பது குறிப்பிடத்தக்கது!  இந்த வகை ப்ளாஸ்டிக்குகள் தயாரிப்பதில் குறைவான விலை, குறைவான தூசு உருவாகும் என்கிறார்கள் ஆய்வாளர்கள். மேலும், மிகவும் அதிகப்படியான வெப்பத்திலும் குலையாமல் இருக்கும் திறனைக் கொண்டதாம் இந்த சூப்பர் ப்ளாஸ்டிக். அதாவது, 600 டிகிரி ஃபாரன்ஹீட்டுக்கு மேலும் திடமாக இருக்குமாம் (beyond 600 degrees Fahrenheit)! அடேங்கப்பா….?!

நாம் அன்றாட வாழ்க்கையின் தேவைகளுக்கு பொதுவாக பயன்படுத்தும் ஸ்டய்ரீன் வகை ப்ளாஸ்டிக்குடனும் இது பொருந்துவதால், இனி இவ்வகை ப்ளாஸ்டிக்குகளை பயனடுத்தி பல வகையான ப்ளாஸ்டிக் பொருட்களை உருவாக்கிக்கொள்ளலாமாம்! அதுமட்டுமில்லாம, அதிகமான தீயில் கருகாத தன்மையோடு இருப்பதால், தீ சார்ந்த வேலைகளுக்கு இவ்வகை ப்ளாஸ்டிக்காலான பொருட்களை பயன்படுத்திக்கொள்ளலாம் என்றும் தெரிவித்திருக்கிறார்கள் இதனைத் தயாரித்த விஞ்ஞானிகள்!

அப்பாடா….! எப்படியோ ஒரு வழியா ப்ளாஸ்டிக் தொல்லை குறைஞ்சா சரி. நீங்க என்ன நினைக்கிறீங்க?

நன்றி: மேலிருப்பான்