தபர்ருஜ் என்றால் என்ன?
‘அஞ்ஞானக் காலத்தில் (பெண்கள்) ‘தபர்ருஜ்’ செய்ததைப் போன்று நீங்கள் செய்யாதீர்கள்’ என்று ஸூரத்துல் அஹ்ஜாப் மூலமாக இறைவன் கூறுகிறான்.‘தபர்ருஜ்’ என்பதற்கு மார்க்க அறிஞர்கள் பின்வருமாறு விளக்கம் தருகிறார்கள்.
وَقَرْنَ فِي بُيُوتِكُنَّ وَلَا تَبَرَّجْنَ تَبَرُّجَ الْجَاهِلِيَّةِ الْأُولَىٰ ۖ وَأَقِمْنَ الصَّلَاةَ وَآتِينَ الزَّكَاةَ وَأَطِعْنَ اللَّهَ وَرَسُولَهُ ۚ إِنَّمَا يُرِيدُ اللَّهُ لِيُذْهِبَ عَنْكُمُ الرِّجْسَ أَهْلَ الْبَيْتِ وَيُطَهِّرَكُمْ تَطْهِيرًاِ
(நபியின் மனைவிகளே!) நீங்கள் உங்கள் வீடுகளிலேயே தங்கியிருங்கள்; முன்னர் அஞ்ஞான காலத்தில் (பெண்கள்) திரிந்து கொண்டிருந்ததைப் போல் நீங்கள் திரியாதீர்கள்; தொழுகையை முறைப்படி உறுதியுடன் கடைப்பிடித்து தொழுங்கள்; ஜகாத்தும் கொடுத்து வாருங்கள். அல்லாஹ்வுக்கும், அவனுடைய தூதருக்கும் கீழ்படியுங்கள்; (நபியின்) வீட்டையுடையவர்களே! உங்களை விட்டும் அசுத்தங்களை நீக்கி, உங்களை முற்றிலும் பரிசுத்தமாக்கிவிடவே அல்லாஹ் நாடுகிறான். (33:33)
தபர்ருஜ் என்றால் என்ன?
‘பெண்கள் தங்களின் அழகு மற்றும் அலங்காரங்களை அந்நிய ஆடவருக்கோ அல்லது மஹர்ரமற்றவர்களுக்கோ (திருமணம் செய்ய ஆகுமான உறவினர்கள் மற்றும் பிறர்) வெளிக்காட்டுவதும், பொது இடங்களில் மேக்கப்புடன் தங்களை அலங்கரித்துக் கொண்டு தோன்றுவதும், அந்நிய ஆண்களின் இச்சையைத் தூண்டும் வேறு எந்த விதமான காரியங்களைச் செய்வது தபர்ருஜ் ஆகும்’
தபர்ருஜ் செய்வதனால் விளையும் தீமைகள்:-
இமாம் அத்தாபி அவர்கள் தங்களின் ‘அல் கபாயிர்’ (பெரும் பாவங்கள்) என்ற நூலில் கூறுகிறார்கள்: ‘பெண்கள் சபிக்கப்படுவதற்கான மற்ற விஷயங்களில் மறைத்துள்ள தங்களுடைய அலங்காரத்தை வெளிக்காட்டுவதும், வெளியே செல்லும்போது வாசனை திரவியங்கள் உபயோகிப்பதும், வண்ணமயமான அல்லது சிறிய வெளிப்புற ஆடை அணிவதும் அடங்கும். தபர்ருஜ் என்பது இது அனைத்தையும் உள்ளடக்குகின்றது. மேன்மைக்குரிய அல்லாஹ் தபர்ருஜையும் அதைச் செய்யும் பெண்களையும் வெறுக்கிறான்’
தபர்ருஜ் மோசமானது:-
உமையா பின்த் ருகையா (ரழி) அவர்கள் இஸ்லாத்தைத் தழுவுவதற்காக நபியவர்களிடம் வந்தபோது அன்னார் அவருக்குப் பின்வருமாறு அறிவுறுத்தினார்கள்: ‘நீர் அல்லாஹ்வுக்கு எதனையும் இணைவைக்கக்கூடாது, திருடக் கூடாது, விபசாரத்தில் ஈடுபடக் கூடாது, நீர் உமது குழந்தைகளைக் கொல்லக் கூடாது, அவதூறு கூறலாகாது, ஓலமிட்டு அழுது புலம்பக் கூடாது, நீர் ஜாஹிலிய்யத்தில் போல ‘தபர்ருஜ்’ எனும் அழகையோ கவர்ச்சியையோ வெளிக்காட்டக் கூடாது.’ (அஹ்மத்)
அல்லாஹ்வின் தூதரவர்கள் தபர்ருஜை ஷிர்க், விபச்சாரம், திருட்டு போன்ற மற்ற மோசமான செயல்களுடன் சமமாக்கி சொல்கின்ற அளவுக்கு தபர்ருஜ் மோசமானது.
நாணம் (வெட்கம்) விலகின் ஈமானும் விலகிவிடும்:-
இஸ்லாம் வெட்கமெனும் பண்புக்கு கூடிய முக்கியத்துவம் அளிக்கிறது. ‘ஒவ்வொரு மதத்திற்குமுரிய ஒரு விஷேட ஒழுக்கப் பண்பு உண்டு. இஸ்லாத்திற்குரிய ஒழுக்கப் பண்பு வெட்கமாகும் என்றார்கள் நபி (ஸல்) அவர்கள்.’ (முவத்தா)
பர்தா (‘ஹிஜாப்’) அணிவதன் நோக்கம்:-
ஒரு பெண் பர்தா அணிவதன் நோக்கம், தன்னுடைய உடல் பாகங்களையும், தன்னுடைய அழகு அலங்காரங்களையும் மறைப்பது தான். ஆனால் அந்த பர்தாவே வண்ணமயமானதாகவும், கண்ணைக் கவரக்கூடியதாகும் இருப்பின், அதை அணிவதின் நோக்கத்தையே அர்த்தமற்றதாக்கி விடுகிறது. இதற்கெதிரானது ‘தபர்ருஜ்’ எனும் வட்டத்தில் அடங்கும்.
‘சிலவேளை ஒரு பெண் மற்றவரின் கவனத்தை ஈர்க்கும் எண்ணத்துடன் தலையை மூடும் துணியை பளிச்சிடும் பல வண்ண நிறத்தில் கவர்ச்சிகரமாக அணிந்தால் அதுவும் ‘தபர்ருஜ்’ எனும்
தடை செய்யப்பட்ட கவர்ச்சிகாட்டலாகும்;’ என மௌலானா மௌதூதி (ரஹ்) அவர்கள் தனது
அல்ஹிஜாப் எனும் நூலில் விளக்குகிறார்கள்.
பர்தா அணியும் முறை:-
அப்துல்லாஹ் இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்: ‘பர்தாவானது அதற்குக் கீழுள்ள ஆடைகளை மறைத்திட வேண்டும். ஒரு முஸ்லிம் பெண்மணி தொழும்போது உபயோகிக்கும் உடையும் இவ்வாறே இருக்க வேண்டும். மெல்லிய, உள்ளே உள்ளவைகளை காண்பிக்கக்கூடிய உடைகள் ஆண்களை கிளர்ச்சிக்குள்ளாக்குகின்றன. மெல்லிய உடையை அணியும் பெண்கள் உடை அணிந்தும் அணியாதவர்கள் என நபி (ஸல்) அவர்கள் குறிப்பிடுகின்றார்கள்.
உடை அணிந்தும் அணியாதது போன்ற பெண்கள்:-
இறுக்கமான அல்லது மெல்லிய உள்ளே உள்ளவைகளை காண்பிக்கும் அல்லது மறைப்பதை விட அதிகம் வெளிப்படுத்திக் காண்பிக்கும் உடைகளை அணிபவர்கள் உடை அணிந்தும் அணியாதது போன்றவர்களாவார்கள்.
நபி (ஸல்) அவர்களால் சபிக்கப்பட்டவர்கள்:-
நபி (ஸல்) அவர்கள் கூறுகின்றார்கள்: ‘உடை அணிந்தும் அணியாதது போன்றும் ஒட்டகத்தின் மிதிலைப் போன்று தங்களின் தலையில் ஏற்படுத்திக் கொண்டு பெண்கள் என் சமுதாயத்தில் தோன்றுவார்கள். அவர்களை சபியுங்கள். அவர்கள் சபிக்கப்பட்டவர்கள் ஆவார்கள்’ ஆதாரம்: தபரானி.
சுவர்க்கத்தின் நறுமணத்தைக் கூட நுகராத பெண்கள்:-
மற்றொரு நபிமொழியில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இந்த பெண்களை (அதாவது மேற்கூறப்பட்ட பெண்களைக்) குறிப்பிட்டுக் கூறுகிறார்கள்: ‘அவர்கள் சுவர்க்கத்தில் அனுமதிக்கப்பட மாட்டார்கள். மேலும், அதன் சுகந்தத்தைக் கூட நுகர மாட்டார்கள். அதன் சுகந்தமோ நீண்ட தூரத்திற்கு பரவக்கூடியதாகும். அதாவது அவர்கள் சுவர்க்கத்தை விட்டு மிக அதிக தொலைவில் இருப்பார்கள்’ (ஸஹீஹ் முஸ்லிம்).
பொது இடங்களுக்கு செல்லும்போது வாசனைத் திரவியங்களைப் பூசிக்கொண்டு பெண்கள் செல்லக்கூடாது:-
பொது இடங்களுக்கு செல்லும்போது வாசனைத் திரவியங்கள் உபயோகிப்பதை ஒரு பெண் கண்டிப்பாக தவிர்ந்து கொள்ள வேண்டும். தங்கள் வீடுகளுக்கு அப்பால் வாசனைத் திரவியங்கள் உபயோகிப்பதை தடுக்கும் பல நபிமொழிகள் உள்ளன.
ஆண்மையைப் பறிக்கும் பெண்களின் ஆடைகள் !
பெண்கள் கவர்ச்சிகரமான ஆடைகள் அணிவதாலும், கவர்ச்சிப் பதுமைகளாக வலம் வருவதாலும் ஆண்களின் ஆண்மை பாதிக்கப்படுவதாய் ஒரு புதிய ஆராய்ச்சி தனது முடிவை வெளியிட்டிருக்கிறது.
அமெரிக்க ஆராய்ச்சியாளர்களின் இந்த ஆராய்ச்சி நீண்ட நெடிய முப்பது வருடங்கள் நடத்தப்பட்ட ஆய்வு என்பது குறிப்பிடத் தக்கது. அறுபது வயதுக்கு மேலான ஆண்களில் 60 விழுக்காடு பேர் புரோஸ்ட்ரேட் புற்று நோயால் தாக்கப்படுவதும், முப்பது வயதுக்கு மேற்பட்ட 35 விழுக்காடு ஆண்களிடம் இந்த புற்றுநோய் அறிகுறி மற்றும் ஆண்மைக்குறைவு இருப்பதாகவும் புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.
ரஷ்யாவின் லீனாய்ட் எனும் மருத்துவர் இது குறித்து கூறுகையில், நவீனப் பெண்களின் இத்தகைய ஆடைக் கலாச்சாரமும், வசீகரிக்கும் வனப்பை வெளிக்காட்டும் மோகமும், ஆண்களின் மனதில் பல்வேறு கிளர்ச்சிகளை ஏற்படுத்துவதாகவும், அவர்களுடைய ஏக்கங்களை அதிகரிப்பதாகவும், தாம்பத்திய வாழ்வின் திருப்தியைத் திருடிக் கொள்வதாகவும் பல்வேறு காரணங்களை அடுக்குகிறார்.
இப்படி பாலியல் ரீதியான கிளர்ச்சிக்கு ஆண்களை இட்டுச்செல்லும் பெண்களின் ஆடைப் பழக்கம் ஆண்களிடம் கனவுகளை வளர்த்தும், நிஜத்தை ஏற்றுக் கொள்ள முடியாத மனநிலைக்குத் தள்ளியும் அவர்களை மனம் மற்றும் உடல் சார்ந்த பல்வேறு நோய்களுக்கு இட்டுச் செல்கிறதாம்.
அரேபிய நாடுகளில் இத்தகைய சிக்கல்கள் மிகவும் குறைவு. முதலில் இதற்கு கால நிலையும், உணவுப் பழக்கவழக்கங்களே காரணம் என கருதப்பட்டது. ஆனால் அதே காலநிலை, உணவுப் பழக்கத்தில் மேலை நாட்டினரால் அரேபிய ஆண்களைப் போல இருக்க முடியவில்லை. இது ஆராய்ச்சியாளர்களை வெகுவாகக் குழப்பியிருக்கிறது. அந்த குழப்பம் அவர்களுடைய கவனத்தை பிற காரணிகளின் மேல் திரும்பியிருக்கிறது. உடலை முழுதும் மறைக்கும் ஆடை அணியும் கலாச்சாரத்தைக் கொண்டுள்ள பெண்கள் வாழும் அரேபிய நாடுகளில் இத்தகைய சிக்கல்கள் பெரும்பாலும் இல்லை என்பதனால் இதற்கும் ஆடைக்கும் ஏதேனும் தொடர்பு இருக்குமா எனும் யோசனை முளைத்திருக்கிறது.
அதன் பின்பே பெண்களின் ஆடைக்கும் ஆண்களின் ஆரோக்கியத்துக்கும் இடையேயான இந்த தொடர்பு தெரியவந்திருக்கிறது. தெருவிலும், பணித்தளங்களிலும், பொது இடங்களிலும் சந்திக்கும் பெண்களின் வசீகரிக்கும் தோற்றமும், உடைகள் மறைக்காத உடலின் பாகங்கள் தூண்டிவிடும் பாலியல் சிந்தனைகளும், ஆண்களின் மனதில் பதிந்து அவர்களுடைய ஏக்கங்களை விரிவடைய வைத்து ஏமாற்றத்தை அதிகரிப்பதே இந்த ஆண்மைக்குறைவு மற்றும் புரோஸ்ட்ரேட் புற்று நோய் இவற்றின் மூல காரணம் என்று இந்த ஆராய்ச்சி தனது முடிவை ஆதாரங்களுடன் வரையறை செய்திருக்கிறது.
முக்கால்வாசி ஆண்மைக்குறைபாடுகளும் இத்தகையதே என்பது இந்த ஆராய்ச்சியின் தீர்க்கமான முடிவாகும்.
பெண்களின் கவர்ச்சிகரமான நடைபாதைகளில் ஆண்களின் ஆரோக்கியத்தைப் புதைக்கும் கல்லறைகள் முளைத்துக் கொண்டே இருக்கின்றன என்பது அதிர்ச்சியூட்டும் செய்தியாக இருக்கும் அதே வேளையில், தேவையற்ற பாலியல் கனவுகளை வளர்க்காமல் நட்புணர்வுடன் அடுத்த பாலினரை நோக்கும் மனநிலையை ஆண்கள் வளர்த்துக் கொள்ள வேண்டும் என்றும் இந்த ஆராய்ச்சி எச்சரிக்கை செய்கிறது.
நற்குணம் படைத்த மனைவி
மேலும், ஈமான் கொண்டவர்களுக்கு ஃபிர்அவ்னின் மனைவியை அல்லாஹ் உதாரணமாக கூறுகிறான். அவர் ‘இறைவா! எனக்காக உன்னிடத்தில், சுவர்க்கத்தில் ஒரு வீட்டைக் கட்டித் தருவாயாக! இன்னும் ஃபிர்அவ்னை விட்டும், அவன் செயல்களை விட்டும் என்னை காப்பாற்றுவாயாக! இன்னும் அநியாயக்கார சமூகத்தாரிடமிருந்தும் என்னைக் காப்பாற்றுவாயாக’ என்று (பிரார்த்தித்துக்) கூறினார்.’ திருக்;குர்ஆன் 66 –11
நல்ல மனைவியானவள் இரத்த பந்த உறவு முறைகளை முறிக்காமலும், கணவருக்கு கீழ்ப்படிந்து நடக்க கூடியவளாகவும் இருக்க வேண்டும். தன்னுடைய பெற்றோர்களிடமும், மற்றும் குழந்தைகளிடமும் எந்த மாதிரியாக நடந்துக்கொள்ள வேண்டும். வெளி இடங்களிலும், வெளி நபர்களிடமும், பொது இடங்களிலும் எப்படி நடந்துக்கொள்ள வேண்டும் என்ற மனைவிகளுக்குரிய பல பங்குகளை பற்றி திருமறையானது பல இடங்களில் குறிப்பிடுகிறது.
ஒரு மனிதன் எவ்வளவு தான் நன்னடத்தையுள்ளவனாக இருந்தாலும் சரிதான். அவனுடைய மனைவி நன்னடத்தை உடையவளாக இல்லையெனில், அவனால் ஒரு போதும் இவ்வுலகில் நிம்மதியுடனும், மன அமைதியுடனும் வாழ்ந்திட முடியாது
அண்ணல் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் :‘உலகின் அனைத்துப் பொருள்களும் அனுபவிப்பதற்காக உள்ளவைதாம்! அவற்றில் சிறந்த பொருள் நன்னடத்தை உள்ள மனைவி!’ அறிவிப்பாளர் : அப்துல்லாஹ் இப்னு அம்ர் (ரலி) ஆதாரம் : முஸ்லிம், மிஷ்காத்