Google Search Engine

தலைப்புகளில் தேட

தேதிவாரியாக பதிவுகள்

December 2024
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  

Archives

Visitors since 22-3-13

Free counters!
இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 2,261 முறை படிக்கப்பட்டுள்ளது!

கலைந்த கனவும் கலையாத மனமும்

அறிவு கூர்மையும், உழைக்கும் உறுதியும் இருந்து விட்டால் கூட காணும் கனவு நனவாக முடியும் என்கிற கட்டாயமில்லை. விதியின் தீர்மானமும் ஒத்துழைத்தால் மட்டுமே ஒரு கனவு நனவாக முடியும் என்ற கசப்பான உண்மையை ஒரு ஏழை இளைஞன் தன் வாழ்வில் உணர்ந்தான்.

மைசூரைச் சேர்ந்த அந்த இளைஞன் ஒரு ஆசிரியரின் மகன். பள்ளிக்கூடத்தில் அவன் மிக புத்திசாலியான மாணவன் என்று பெயரெடுத்தான். அவனுடைய நீண்ட நாள் கனவு ஐஐடியில் (IIT- Indian Institute of Technology) பொறியியல் . . . → தொடர்ந்து படிக்க..

இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 2,792 முறை படிக்கப்பட்டுள்ளது!

கான்கார்ட் விமானங்கள்

ஒலியின் வேகத்தை விட வேகம் – கான்கார்ட் விமானங்கள்

1969ஆம் ஆண்டு பறக்கத் தொடங்கிய கான்கார்ட் விமானங்கள் ஏன் பறக்காமல் சிறகொடிக்கப்பட்டன? காரணங்கள் தெரிந்து கொள்ள ஆவலாய் இருகிறதா? கொஞ்சம் கொசுவர்த்தி சுத்துவோம்.

பறக்கத் தொடங்கியதிலிருந்தே வேகமாய் பறக்க வேண்டும் என்ற ஆவல் மனிதரிடையே இருந்து வந்தது. அதுவும் ஒலியின் வேகத்தை விட அதிக வேகத்தில், அதாவது மணிக்கு 1,225 கிலோமீட்டர் வேகத்தில் பறப்பது என்பது ஒரு மைல்கல்லாக இருந்தது. ராணுவ விமானங்கள் பல . . . → தொடர்ந்து படிக்க..

இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 2,275 முறை படிக்கப்பட்டுள்ளது!

டாக்டர் E.A. சித்திக் அவர்களுக்கு பத்மஸ்ரீ

அரிசி விஞ்ஞானி டாக்டர் E.A. சித்திக் அவர்களுக்கு பெருமைக்குரிய பத்மஸ்ரீ விருது

இளையான்குடியில் பிறந்து அரிசி ஆராய்ச்சியில் உலக அளவில் புகழ் பெற்ற விஞ்ஞானி டாக்டர் E.A. சித்திக் அவர்கள் இந்த ஆண்டின் பத்மஸ்ரீ விருதுக்கு இந்திய அரசால் தேர்வு செய்யப்பட்டுள்ளார். டாக்டர் சித்திக் அவர்கள் தற்பொது ஹைதராபாத்தில் வசித்து வருகின்றார்.

குடியரசு தினவிழாவை முன்னிட்டு இந்திய அரசு ஒவ்வொரு ஆண்டும் பல்வெறு துறைகளில் சிறப்பாக பணியாற்றியவர்களை பத்ம விருதுகளுக்காக தேர்வு செய்கின்றது. டாக்டர் E.A. சித்திக் . . . → தொடர்ந்து படிக்க..

இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 2,861 முறை படிக்கப்பட்டுள்ளது!

தோப்பில் முகம்மது மீரான்

அட..பட்டணத்து வாசம் – தோப்பில் முகம்மது மீரான் [இந்தியாவின் தென்கோடியாம் முக்கடலும் சங்கமிக்கும் குமரி மாவட்டம். கடலும் கடல் சார்ந்த நிலமுமான நெய்தல் நிலம். இரண்டுவிதமான கலாச்சாரப் பிணைப்பு என்பது இங்கு கூடுதல் சிறப்பு. இங்கு துறைமுகத்தையொட்டிய ஒரு கிராமம், தேங்காய்ப்பட்டிணம். பல்வேறு வரலாற்றுப் பெருமைகளைக் கொண்ட அந்த கிராமத்திற்கு 1997ல் ஒரு இலக்கியவாதியின் வழியாக மேலும் ஒரு சிறப்பு கிடைத்தது. முஸ்தபாகண்ணு என்ற கதாபாத்திரத்தை ‘சாய்வு நாற்காலி’ என்ற நாவலின் வழியாக அவர் உயிரூட்டியபோது இலக்கிய . . . → தொடர்ந்து படிக்க..

இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 3,292 முறை படிக்கப்பட்டுள்ளது!

இஸ்லாமிய கல்வியின் அவசியம் (AV)

மௌலவி முபாரக் மஸ்ஊத் மதனி அவர்கள் 20-01-2011 அன்று ரஹீமா தஃவா நிலையத்தில் இஸ்லாமிய கல்வியின் அவசியம் என்ற தலைப்பில் உரையாற்றினார்கள். வாசகர்கள் அந்த உரையினை வீடியோ – ஆடியோ வழியில் கேட்க / டெளன்லோடு செய்ய வசதி செய்யப்பட்டுள்ளது. . . . → தொடர்ந்து படிக்க..

இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 8,184 முறை படிக்கப்பட்டுள்ளது!

கணித மேதை இராமானுஜன்

கணித மேதை சீனிவாச இராமானுஜன் (டிசம்பர் 22, 1887 – ஏப்ரல் 26, 1920) உலகத்தை வியக்கச் செய்த ஒப்பரிய பெரும் கணித மேதை. இவர் தமிழ் நாட்டிலுள்ள ஈரோட்டில் பிறந்தார். இவருடைய தந்தையார் கும்பகோணம் சீனிவாசய்யங்கார், தாயார் ஈரோடு கோமளத்தம்மாள். இராமானுசர் 33 அகவை முடியும் முன்னரே இறந்துவிட்டார். இவர் 1914 முதல் 1918 முடிய உள்ள சில ஆண்டுகளிலேயே 3000க்கும் அதிகமான புதுக் கணிதத் தேற்றங்களைக் கண்டுபிடித்தார்.

இவர் எளிய குடும்பத்தில், ஏழ்மையான நிலையில் . . . → தொடர்ந்து படிக்க..

இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 27,036 முறை படிக்கப்பட்டுள்ளது!

நமது கடமை – குடியரசு தினம்

இந்திய சுதந்திரத்திற்கு முன் 1946 டிச. 9ல் அரசியல் நிர்ணய சபை கூட்டப்பட்டது. அதன் தற்காலிகதலைவராக சச்சிதானந்த சின்கா தேர்வானார். இந்திய சுதந்திரசட்டம் 1947 ஜூனில் நிறைவேறியது. 1947 ஆக.15ல் இந்தியா சுதந்திரம் அடைந்தது.

1947ல், அரசியல் நிர்ணய சபை தலைவர் சின்கா மறைவையொட்டி, டாக்டர் ராஜேந்திர பிரசாத் அதன் தலைவரானார். முதல் குடியரசு தலைவராகவும் அவர் பொறுப்பேற்றார். இந்தியாவிற்கு அரசியலமைப்பு வரைவுக்குழு அமைக்கப்பட்டது. அதன் தலைவராக டாக்டர் பீமாராவ் அம்பேத்கர் பொறுப்பேற்றார். அக்குழு தந்த வரைவினை . . . → தொடர்ந்து படிக்க..

இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 4,236 முறை படிக்கப்பட்டுள்ளது!

வாழ்க்கைப் பாடம்

அந்த ஆசிரியரை எல்லா மாணவர்களும் நேசித்தார்கள். காரணம் கஷ்டமான பாடத்தையும் எளிமையான உதாரணங்களைக் கொண்டு புரிய வைப்பதில் அவர் வல்லவராக இருந்தார். அவரிடம் படித்த மாணவர்கள் பெரிய பெரிய பதவிகளை வகித்தார்கள். பலரும் பல நாடுகளுக்குச் சென்று பிரகாசித்தார்கள். பெரிய தொழிலதிபர்களாகத் திகழ்ந்தார்கள். அவர்களுக்கு எத்தனையோ ஆசிரியர்கள் இருந்திருந்த போதிலும் அவர் மேல் காட்டிய அன்பையும் மரியாதையையும் அவர்கள் மற்றவர்களிடம் காட்டவில்லை. அந்த ஆசிரியரிடம் மட்டும் பெரும்பாலான மாணவர்கள் இன்னும் கடிதம் மூலமும், ஈ மெயில் மூலமும் . . . → தொடர்ந்து படிக்க..

இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 31,367 முறை படிக்கப்பட்டுள்ளது!

கணவன் மனைவி – அற்புதமான விஷயங்கள்

(கணவன் மனைவி ஒவ்வொருவரும் தெரிந்து கொள்ள வேண்டிய அற்புதமான விஷயங்கள்.)

கணவன் மண வாழ்வின் ஆரம்பத்திலிருந்தே அனைவருக்கும் மகிழ்வாய் குடும்பம் நடத்த ஆசைதான். அது சிலருக்கு எளிதாகவும் அனேகருக்கு சிரமமாகவும் இருக்கிறது.

குடும்ப மகிழ்ச்சிக்கு என்ன தேவை?

கணவன் மனைவி எதிர்பார்ப்புகள் என்னென்ன? குழந்தைகளை தன்னம்பிக்கையுடன் வளர்ப்பது எப்படி? குடும்ப மகிழ்ச்சியில் உறுப்பினர்களின் பங்கு என்ன? வரவு, செலவை வரையறுப்பது எப்படி?

குடும்ப மகிழ்ச்சிக்கு எது தேவை?

1. வருமானம் 2. . . . → தொடர்ந்து படிக்க..

இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 1,941 முறை படிக்கப்பட்டுள்ளது!

அந்தரத்தில் தொங்கும் சேது திட்டம் நிறைவேறுமா?

சுப்ரீம் கோர்ட் உத்தரவு என்பது, சேது சமுத்திர திட்டத்தின் ஒரு இடமான ஆதம்ஸ் பாலப்பகுதிக்கு மட்டுமே பொருந்தும். இன்னொரு இடமான பாக் ஜலசந்தி பகுதிக்கு இந்த உத்தரவு பொருந்தாது. ஆனாலும், அதிகாரிகளின் மெத்தன போக்கு காரணமாக, கடந்த இரண்டு ஆண்டுகளாக இங்கு பணிகள் அனைத்தும் முடக்கி வைத்துள்ளனர். இதனால், வரும் ஜுலை வரப்போகும் பச்சவுரி குழு அறிக்கைக்கு பிறகும் கூட, சேது சமுத்திர திட்டம் நிறைவேற்றபடுமா என்ற கேள்விக்குறி எழுந்துள்ளது.

சேது சமுத்திர திட்டத்தை நிறைவேற்ற, கடந்த . . . → தொடர்ந்து படிக்க..

இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 3,086 முறை படிக்கப்பட்டுள்ளது!

தற்கொலை – இஸ்லாமிய செய்தி!

தற்கொலை – இன்றைய செய்தியும் இஸ்லாமிய செய்தியும்!

தற்கொலை குறித்த இன்றைய செய்தி: உலகிலேயே இளம் வயதில் தற்கொலை செய்து கொள்வோரின் எண்ணிக்கை தென்னிந்தியாவில் அதிகம். இந்தியாவைப் பொறுத்த வரை ஒரு லட்சம் பேருக்கு 11 பேர் என்ற விகிதத்தில்தற்கொலை செய்து கொள்கின்றனர். நாட்டின் மொத்த எண்ணிக்கையில் சென்னை மூன்றாம் இடத்தில் இருப்பதாகவும், இங்கு தற்கொலை செய்துகொள்வோரின் விகிதம் 11 விழுக்காடு என தற்கொலை செய்துகொள்வோரின் எண்ணிக்கை ஒவ்வொரு ஆண்டும் அதிகரித்து வருவதுமிகவும் கவலையளிப்பதாக உள்ளது.

சமீப . . . → தொடர்ந்து படிக்க..

இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 3,139 முறை படிக்கப்பட்டுள்ளது!

ஹாஜி எம்.கே.ஏ. ஜப்பார்

பெரும்பாலான தமிழ் முஸ்லிம்களின் – அதிலும் தென்மாவட்டங்களைச் சேர்ந்தவர்களின் -வாழ்வியலுக்கு இரண்டு கால்கள் உள்ளன. ஒன்று தமிழகக்கால்; தென்கிழக்காசியாவின் நாடுகளான மலேசியா, சிங்கப்பூர், பர்மா, சைகோன், லாவோஸ், வியட்நாம், சிலோன் என்ற ஸ்ரீலங்கா போன்றவற்றில் மற்றது.

அந்தக்காலத்தில் 10 வருடங்களுக்கு ஒரு முறையும் அதற்கு மேலும் ‘சபுர்’ செய்தவர்கள் இருந்துள்ள வரலாறும் புதிய செய்தி அல்ல.

என்றாலும் சில ஊர்களைச் சேர்ந்த முன்னோர்கள் தங்களது குடும்பங்களுடன் குடிபெயர்ந்து அந்தந்த நாடுகளிலேயே தங்களது வாழ்வாதாரங்களை உருவாக்கிக் கொண்டார்கள். தங்கள் . . . → தொடர்ந்து படிக்க..