Google Search Engine

தலைப்புகளில் தேட

தேதிவாரியாக பதிவுகள்

April 2024
S M T W T F S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  

Archives

Visitors since 22-3-13

Free counters!
இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 3,154 முறை படிக்கப்பட்டுள்ளது!

டானிக்! டானிக்!! டானிக்!!!

இரும்புக்கு டானிக், இதயத்துக்கு டானிக், மூளைக்கு டானிக், கிட்னிக்கு டானிக் என டானிக் சாப்பிட்டு ஆரோக்கியமாக இருக்க ஆசைப்படுவோரின்எண்ணிக்கை அதிகரித்திருக்கிறது. அவர்களைக் குறிவைத்து வணிக உலகமும் சாமர்த்தியமாக, வேகமாக விற்பனையாகும் வீட்டு நுகர்பொருட்களை (FMCG-FAST MOVING CONSUMER GOODS), வேகமாக விற்பனையாகும் ஆரோக்கிய உணவுகளாக (FMHG- FAST MOVING HEALTH GOODS) மதிப்புக் கூட்டி விற்பனை செய்கிறது. கொஞ்சம் அக்கறை; கொஞ்சம் உறுத்தல்; நிறையப் பயம் நிறைந்த நடுத்தர வர்க்கமும், இணையம் மூலமும் . . . → தொடர்ந்து படிக்க..

இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 2,640 முறை படிக்கப்பட்டுள்ளது!

கருவறைக்குள் சிசு செய்யும் லூட்டிகள்!

குழந்தைகள் என்றாலே அழகு தான், அவர்களது சிரிப்பும், அழுகை, முக பாவனைகள், கொட்டாவி விடுவது, உறங்கும் நிலை என அனைத்தும் அழகு தான். ஆனால், கருவறைக்குள் இவற்றில் என்னென்ன செயல்களை எல்லாம் சிசு செய்யும் என உங்களுக்கு தெரியுமா?

நாம் கூறிய இவற்றில் பெரும்பாலானவற்றை சிசு கருவறைக்குள்ளேயே செய்ய ஆரம்பித்துவிடும். இனிப்பு ஃப்ளுயிட்களை ரசித்து விழுங்குதல், அம்மாவின் குரலை கேட்டு அசைதல் என கருவறைக்குள் சிசு செய்யும் லூட்டிகள் நிறைய . . . → தொடர்ந்து படிக்க..

இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 4,214 முறை படிக்கப்பட்டுள்ளது!

சிவப்பணுக்களை உருவாக்கும் லைச்சி பழம்!

லைச்சி ( லிச்சி) பழம் நாம் அதிகம் அறியப்படாத பழம். சீனாவை பூர்வீகமாக கொண்ட இந்த பழம் மலேசியா, இந்தியா, வங்கதேசம் போன்ற நாடுகளில் அதிகமாக கிடைக்கிறது. லிச்சி பழம் சிவப்பு நிறத்தில் ஒரு பெரிய விதை போல மூடபட்டு இருக்கும் அதனுள்ளே வெள்ளை நிறத்தில் பழம் உள்ளது.. முட்டை வடிவத்தில் இருக்கும். இது பல ஊட்டச்சத்துகளை கொண்டுள்ளது. லிச்சி பழம் வெப்ப மண்டல பகுதிகளில் காணப்படுகிது.

எதற்காக லிச்சி பழத்தை . . . → தொடர்ந்து படிக்க..

இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 8,127 முறை படிக்கப்பட்டுள்ளது!

சிறுநீர் கல்லடைப்பு – இயற்கை முறை சிகிச்சை!

சிறுநீரக கல் பிரச்னை என்பது, இன்றைக்கு பரவலாக அனைவரையும் தாக்கக்கூடிய நோயாக மாறி வருகிறது. சிறுநீரில் உள்ள கிரிஸ்டல் எனப்படுகிற உப்புகள் (கால்சியம், ஆக்சலேட், யூரிக் அமிலம் ஆகியவை) ஒன்று திரண்டு, சிறுநீர்ப் பாதையில் பல்வேறு அளவுள்ள கற்களை உருவாக்குகிறது. சிறுநீர், சிறுநீரகத்தில் உற்பத்தியாகி, சிறுநீர் குழாய் வழியே, சிறுநீர்ப் பைகளுக்கு வந்து, பிறகு வெளியேறுகிறது. சிறுநீரகத்தில்தான் கல்லும் உற்பத்தியாகிறது. அது அங்கேயே தங்கி, வளர்ந்து அடைப்பு ஏற்படுத்துகிறது என்கின்றனர் டாக்டர்கள்.

. . . → தொடர்ந்து படிக்க..

இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 1,758 முறை படிக்கப்பட்டுள்ளது!

எதற்காக குளிக்கிறோம்?

பல பேருக்கு எதற்காக குளிக்கிறோம் என்றே தெரியவில்லை!

உண்மையில் நம்மில் பல பேருக்கு எதற்காக குளிக்கிறோம் என்றே தெரியவில்லை. அழுக்கு போகவா…..! நிச்சயம் கிடையாது…..! மாத மளிகை பட்டியலில் சோப்பு டப்பாவை வாங்கி அடுக்கி வைத்து கொள்கிறோம்.

சோப்பு எதற்காக கண்டுபிடிக்கப்பட்டது தெரியுமா… கப்பலில் இயந்திரத்தோடு இயந்திரமாக வேலை செய்வோருக்கு உடலில் திட்டு திட்டாக ஆயில் படிந்துவிடும். இந்த கடின எண்ணெய்யை . . . → தொடர்ந்து படிக்க..

இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 1,357 முறை படிக்கப்பட்டுள்ளது!

எங்க ஏரியா உள்ள வராதே

எங்க ஏரியா உள்ள வராதே… மனிதர்களை எச்சரிக்கும் விலங்குகள்!

பாதுகாப்பிற்கு முன்னுரிமை!

கடந்த வருடம் டெல்லி உயிரியல் பூங்காவில், வெள்ளைப்புலியை சுற்றுலாப் பயணிகள் தடுப்பு சுவருக்கு வெளியே நின்று பார்த்துக் கொண்டிருந்தனர். தனது நண்பர்களுடன் வந்திருந்த ஹிமான்சு என்ற மாணவர், விஜய் என்ற வெள்ளைப்புலி அடைக்கப்பட்டிருந்த இடத்திற்கு விதிமுறைகளை மீறி தடுப்புச்சுவரை தாண்டி சென்றுள்ளார். அப்போது தவறி ஆழமான அகழிக்குள் விழுந்தவரை, வெள்ளைப்புலி தூக்கிச் சென்றதில் அவர் . . . → தொடர்ந்து படிக்க..

இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 1,443 முறை படிக்கப்பட்டுள்ளது!

கரப்பான் பூச்சி தொல்லை போக்க எளிய வழிகள்!

கரப்பான் பூச்சி தொல்லை போக்க எளிய வழிகள் வீட்டிலேயே உண்டு!

உலமே அழிந்தாலும், அழியாத ஒரு உயிரினம் தான் கரப்பான் பூச்சி. அத்தகைய கரப்பான் பூச்சி வீட்டிற்கு அழையா விருந்தாளியாக வந்து பெரும் தொல்லையைக் கொடுக்கும். அதிலும் வீட்டுச் சமையலறையினுள் நுழைந்து லைட் போட்டால் போதும், நடு வீட்டில் ஆட்டம் போட்டுக் கொண்டிருந்த கரப்பான் பூச்சிக் கூட்டமே ஆங்காங்கு மறைய ஓடும். அப்படி மறைய ஓடும் கரப்பான் பூச்சிகள், சமையலறையில் உள்ள . . . → தொடர்ந்து படிக்க..

இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 1,804 முறை படிக்கப்பட்டுள்ளது!

மறந்துபோன கோடை பானங்கள்

வாயுக்கள் நிரப்பப்பட்டு, `சுவையூட்டிகள்’ சேர்க்கப்பட்டு, கெடாமல் இருக்க ரசாயனக் கலவைகள் கலக்கப்பட்டு, பழங்களின் சத்து என்று பொய் முலாம் பூசப்பட்டு, பல் கூச்சம் உண்டாகும் அளவுக்கு `சில்’லெனக் கிடைக்கும் செயற்கைக் குளிர்பானங்களைத் தொடர்ந்து அருந்துவதால் எலும்பு அடர்த்தி குறைவு நோய், வயிற்றுப் புண், செரியாமை, உடல் பருமன், நீரிழிவு மற்றும் புற்றுநோய் போன்றவை நம் மீது எதிர்பாராத தாக்குதல் நடத்த அதிக வாய்ப்புள்ளது என்கின்றன ஆராய்ச்சிகள்.

கடந்த இருபது ஆண்டுகளாகப் பன்னாட்டு . . . → தொடர்ந்து படிக்க..

இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 1,261 முறை படிக்கப்பட்டுள்ளது!

கோடையில் சுற்றுலா

கோடை விடுமுறை எப்போது வரும், குடும்பத்துடன் டூருக்குச் செல்லலாம் என ஒரு காலத்தில் ஆர்வத்தோடு எதிர்பார்த்திருந்த மனநிலை, தற்போது கொஞ்சம் கொஞ்சமாக மாறிவருகிறது. மாறாக, நினைத்தால் டூர் கிளம்பும் மனநிலை, பலருக்கும் எழ ஆரம்பித்திருக்கிறது. `ரெண்டு நாள் லீவு இருக்கு. ஒரு எட்டு கொடைக்கானல் போயிட்டு வந்துடலாமா?’ என பலரும் நினைத்தவுடன் கிளம்பிவிடுகிறார்கள். ஆனாலும் கோடைவிடுமுறை… அதற்கான மவுசு இன்னும் குறையாமல்தான் இருக்கிறது. சரி… அலுவலக டென்ஷனில் இருந்து விடுபட்டு, ஹாயாக சம்மர் டூர் . . . → தொடர்ந்து படிக்க..

இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 1,448 முறை படிக்கப்பட்டுள்ளது!

நேற்று பொறியாளர் இன்று விவசாயி!

நேற்று பொறியாளர் இன்று விவசாயி…விவசாயிகளின் விதியை மாற்றி எழுதிய மதுசந்தன்

ஓரே நாளில் ஒருவரின் வாழ்க்கை மாறும்…. ஒரே இரவிலும் இந்த வாய்ப்பு வரலாம். திருப்புமுனை என்பது எப்போது வரும், எங்கிருந்து வரும் என சொல்ல முடியாது. எங்கிருந்தாவது வந்து, நம் வாழ்க்கையை கலர்ஃபுல்லாக மாற்றிக்காட்டிவிடும். அதற்கு உழைப்பையும் அர்ப்பணிப்பையும் செலுத்த நாம் எந்நேரமும் செலுத்த தயாராக இருக்கவேண்டியது அவசியம். அப்படி வாழ்க்கையில் திருப்புமுனையை சந்தித்த ஒருவரின் . . . → தொடர்ந்து படிக்க..

இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 1,545 முறை படிக்கப்பட்டுள்ளது!

நிலநடுக்கத்துக்கு ‘எல் – நினோ’ காரணமா?

‘ஒரு மிகச் சிறிய செயல், அதன் தொடர்ச்சியான சம்பவங்களால், எதிர்பார்க்க முடியாத மாபெரும் விளைவைத் தோற்றுவிக்கும்’ என்பது தான், வண்ணத்துப் பூச்சியின் விளைவு எனும், ‘கேயாஸ் தியரி’ எனப்படும் கேயாஸ் கோட்பாடு.

இந்த கோட்பாட்டை உருவாக்கிய எட்வர்ட் லோரன்ஸ், ‘பிரேசில் நாட்டில் பறந்து கொண்டிருக்கும் ஒரு வண்ணத்துப் பூச்சியின் சிறகின் படபடப்பால் ஏற்படும் சலனத்துக்கும், டெக்ஸாசில் ஏற்படும் சூறாவளிக்கும் தொடர்பு உண்டு’ என்றார். எங்கோ நடக்கும் ஒரு செயல், மற்றொரு இடத்தில் . . . → தொடர்ந்து படிக்க..

இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 1,194 முறை படிக்கப்பட்டுள்ளது!

பார்க்க பார்க்க சலிக்காத வால்பாறை!

கோவை மாவட்டத்தில் உள்ள சுற்றுலா தலங்களின் முக்கிய இடமாக வால்பாறை உள்ளது. வால்பாறையை மையமாக கொண்டு அதை சுற்றியுள்ள 25 இடங்களை 3 நாளில் பார்க்க முடியும். வால்பாறையில் உள்ள சுற்றுலா தலங்களுக்குச் செல்லும் வழியில் அரசு மற்றும் தனியார் தேயிலை தோட்டங்கள் உள்ளது.

இடையிடையே குறுக்கிடும் மித, அடர்வனப்பகுதிகள் பசுமையுடன் கண்ணைக் கவரும்.கோவையில் இருந்து 100 கி.மீ.தூரத்திலும், பொள்ளாச்சியில் இருந்து 60 கி.மீ.,தூரத்திலும் உள்ளது வால்பாறை. கோவையில் இருந்து மூன்றரை மணிநேரத்தி லும், . . . → தொடர்ந்து படிக்க..