Google Search Engine

தலைப்புகளில் தேட

தேதிவாரியாக பதிவுகள்

December 2024
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  

Archives

Visitors since 22-3-13

Free counters!
இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 5,733 முறை படிக்கப்பட்டுள்ளது!

மாணவர்களுக்கு நினைவாற்றல் மேம்பட

“பரீட்சைக்கு நல்லாத்தான் படிச்சேன். ஆனா தேர்வு அறைக்குள்ள நுழைஞ்சு வினாத்தாளை வாங்கிய உடனே எதுவுமே ஞாபகத்துக்கு வர மாட்டேங்குது. படிச்சது எல்லாம் மறந்து போகுது” என்று புலம்பும் மாணவச் செல்வங்கள் ஏராளம்.

“நினைவாற்றல் என்பது எல்லோருக்கும் பொதுவானதே. எல்லோருடைய மூளைக்குள்ளும் ஒரு நூலகம் போன்ற நினைவு அடுக்குகள் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. அதில் நீங்கள் தகவல்களை சேமிக்கும் முறையை வைத்து, உங்கள் நினைவுத்திறன் அமைகிறது” என்று விஞ்ஞானம் சொல்கிறது.

. . . → தொடர்ந்து படிக்க..

இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 2,842 முறை படிக்கப்பட்டுள்ளது!

வித்தியாசமான உதவி! – சிறுகதை

ஒரு காட்டில் ஒரு இளைஞன் நடந்து போய்க் கொண்டிருந்தான். அவனுக்குப் பசியெடுத்தது. ஒரு மரத்தில் உயரத்தில் கனிந்த பழங்கள் இருப்பதைக் கண்டான். மரத்தின் மேல் சரசரவென்று ஏறி அவற்றில் சில பழங்களைப் பறித்துத் தின்றான். மிகக் கனிந்த வாசனையுள்ள பழங்கள் கிளைகளின் நுனியில் இருந்தன. அவற்றை எட்டிப் பறிக்கக் கிளையின் மேல் நகர்ந்து சென்ற போது அவனது பாரம் தாங்காமல் ஒரு கிளை முறிந்து விட்டது.

சட்டென்று சுதாரித்த அவன் கீழே இருந்த ஒரு கிளையைப் பிடித்துக் . . . → தொடர்ந்து படிக்க..

இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 3,370 முறை படிக்கப்பட்டுள்ளது!

நல்லவர் ஆவதும் தீயவர் ஆவதும் பெற்றோர் வளர்ப்பில்

உங்களுக்குத் தெரியுமா? சுயஆளுமைத் தன்மையுள்ள குழந்தையால்தான் புதிய முயற்சிகளைத் தன்னம்பிக்கையுடன் எதிர்கொள்ள முடிகின்றது. சமுதாயத்தில் எல்லோருடனும் வலுவான நட்புடன் உறவாட முடிகின்றது. பள்ளி வாழ்வும், நண்பர்களும் உங்கள் குழந்தையின் சுய மதிப்பீட்டைக் குறைக்கலாம். மனம் தளராதீர்கள்! எந்தக் குழந்தையும் நல்ல குழந்தைதான் மண்ணில் பிறக்கையில்; பின் நல்லவர் ஆவதும் தீயவர் ஆவதும் பெற்றோர் வளர்ப்பதில்தான்!

உங்கள் குழந்தையின் சுயமதிப்பீட்டை அதிகரிக்கவும், தளரா தன்னம்பிக்கை கொள்ளவும் சில யோசனைகள் :

முதலில், உங்கள் குழந்தையின் மீது . . . → தொடர்ந்து படிக்க..

இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 11,061 முறை படிக்கப்பட்டுள்ளது!

சுத்தம் சிந்திப்போம்!

இறைவா!

உண்ணப் பழமும்; உரிக்கத் தோலும்;

தின்ன வாயும்; விழுங்க நாவும் வைத்தாய்!

ஆனால்…! நாங்கள்…!!

தோலை உரித்து வீதியில் வீசி சுவைத்து உண்டோம்!

பழத்தை இங்கே!

நாவின் ருசியில் விரல்கள் மறந்தன!

அதனால்…

சாலையில் நடந்த சடுகுடு கிழவர்

வைத்தார் காலை! நேரமும் காலை!

வாழையின் தோலோ கிழவரைக் கண்டதா?

வழுக்கல் குணத்தால் சாய்த்தது அவரை!

அவரோ!

தாளாக் கால்வலி தன்னனை வாட்ட

வைத்தியர் வீட்டை நாடிச் செல்லுகையில்

பழத்தோல் பட்டுப் பட்டென வீழ்ந்தார் !

. . . → தொடர்ந்து படிக்க..

இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 2,363 முறை படிக்கப்பட்டுள்ளது!

பள்ளிக்கூடங்களில் மாறும் பண்புகள்!

கொல்கத்தாவிலுள்ள லாமார்ட்டின் என்கிற கான்வென்ட் பள்ளியின் தலைமை ஆசிரியரின் மிரட்டலுக்கும், அச்சுறுத்தலுக்கும் ஆளாகிய எட்டாம் வகுப்பில் படித்துக் கொண்டிருந்த ரவன்ஜித் என்ற மாணவனின் தற்கொலைச் செய்தியைக் கேட்ட பெற்றோர்கள் அதிர்ச்சிக்கு உள்ளானார்கள். கான்வென்ட் பள்ளிகளால் வகுக்கப்பட்ட கொள்கை, நியதி, நெறி, ஒழுக்கம் ஆகிய பாதையிலிருந்து தடம் புரளுகிற ஒவ்வொரு மாணவனும், பள்ளி நிர்வாகிகளால் கொடுக்கப்படும் தண்டனையை அனுபவிக்கிறார்கள். இந்தப் பள்ளிகள் தவறுகளின் அளவுகோலின் அடிப்படையில் (அதாவது சிறிய தவறாகயிருந்தால் சிறிய தண்டனையாகவும், பெரிய தவறாகயிருந்தால் . . . → தொடர்ந்து படிக்க..

இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 2,016 முறை படிக்கப்பட்டுள்ளது!

சீரியல்கள் குடும்பத்தை சீரழிக்குமா…

எப்படா சூரியன் மறையும்னு தவங்கிடக்கிற பெண்களை பட்டணம் முதல் பட்டிகாடு வரை பரவலாக காணமுடிகிறது… காரணங்கள் பல அல்ல ஒன்றே…அது சீரியல்கள் என்கின்றனர் பெண்கள்..

திண்டிவனம் நகராட்சியில் பெண்களுக்கான பயிற்சியில் சிறப்பு பயிற்சியாளராக வெளிச்சம் செரீன் மற்றும் வெளிச்சம் மாணவர்களை அழைத்திருந்தனர் நகராட்சி நிர்வாகம்..

தாய்மார்களுக்கும் குழந்தைகளுக்குமான உறவு குறித்து பேச தொடங்கினார் செரின் அவர்கள்.. பெண்கள் தான் சமூகத்தை பிரசவிக்கிற மொத்த பங்களிப்பை பெற்றுள்ளார்கள். சமூகத்தை சரியாக வளர்த்தெடுக்கிற பக்குவம் . . . → தொடர்ந்து படிக்க..

இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 2,188 முறை படிக்கப்பட்டுள்ளது!

அன்பே தீர்வு

பல வருடங்களுக்கு முன் அமெரிக்காவில் உள்ள ஜான் ஹாப்கின்ஸ் பல்கலைக் கழகப் பேராசிரியர் ஒருவர் மாணவர் குழு ஒன்றை ஏற்படுத்தி அந்தக் குழுவிடம் வித்தியாசமான ஒரு ஆராய்ச்சிப் பணியை ஒப்படைத்திருந்தார். ”பின் தங்கிய குடிசைப் பகுதி ஒன்றிற்குச் செல்லுங்கள். 12 வயது முதல் 16 வயது வரை உள்ள 200 சிறுவர்களைத் தேர்ந்தெடுங்கள். அவர்களைப் பற்றிய முழு விவரங்களைச் சேகரியுங்கள். பின் அவர்களுடைய எதிர்காலம் எப்படி இருக்கும் என்று உங்கள் அனுமானத்தைச் சொல்லுங்கள்” என்று அவர்களிடம் . . . → தொடர்ந்து படிக்க..

இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 2,721 முறை படிக்கப்பட்டுள்ளது!

பள்ளி மாணவர்களை பாடாய் படுத்தும் சா…தி.

சாதிகள் இல்லையடி பாப்பா என பாடிய காலம் போய்.. எங்கும் சாதிகள் எனும் தீ பரவிபோய்… சாதி பேய்பிடித்தாடுவது தான் கொடுமை.. தீண்டாமை கொடுமையால் அருகிலுள்ள பள்ளியில் பயில முடியாமல், 4.5 கி.மீ., தொலைவில் உள்ள பள்ளிக்கு செல்லும் பரிதாபமான நிலை, சத்தி அருகேயுள்ள கிராம குழந்தைகளுக்கு ஏற்பட்டுள்ளது. சத்தி அருகே செண்பகப்புதூர் பஞ்சாயத்துக்குட்பட்டது குட்டை மேட்டூர் காலனி. இங்கு 100 குடும்பங்களை சேர்ந்த தாழ்த்தப்பட்ட மக்கள் வசிக்கின்றனர். அனைவருமே கூலித்தொழில் செய்து வரும் ஏழைகள்.இப்பகுதி மாணவர்கள் . . . → தொடர்ந்து படிக்க..

இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 10,974 முறை படிக்கப்பட்டுள்ளது!

நீண்ட அடர்த்தியான கூந்தல் வேண்டுமா?

இன்றைய காலத்தில் சுத்தமான நீர் இல்லாததாலும், இயற்கை முறையில் தலைக்குக் குளிக்காமல் இரசாயனக் கலப்பு நிறைந்த ஷாம்பு, சோப்பு போன்றவற்றால் குளிப்பதாலும் இளம் வயதிலேயே தலை முடி கொட்டி விடுகிறது.

 

முடி என்னமோ எளிதாகக் கொட்டி விடுகிறது. ஆனால் அதனை மீண்டும் முளைக்க வைக்கவோ, மேலும் முடி கொட்டாமல் காப்பாற்றுவதோ இன்றைய மருத்துவத்தில் பெரும் சவாலாக உள்ளது.

வேப்பிலை ஒரு கையளவு எடுத்து அதனை தண்ணீர் போட்டு . . . → தொடர்ந்து படிக்க..

இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 5,713 முறை படிக்கப்பட்டுள்ளது!

கோடையை சமாளிக்க குளுகுளு டிப்ஸ்!

கோடை வருவதற்கு முன்பே வெயில் வறுத்தெடுக்க ஆரம்பிச்சிருச்சு. கோடையை சமாளிக்க குளுகுளு டிப்ஸ் இங்கே.

காலை நேரங்களில் ஆப்பிள் ஜுஸ் சாப்பிட்டு வரலாம். நாள் முழுவதும் புத்துணர்வாக இருப்பதுடன் ஜீரண சக்தியும் அதிகரிக்கும். இது சருமத்தையும் மென்மையாக வைத்திருக்க உதவும். வியர்வை நாற்றத்தைப் போக்க தினமும் பூலாங்கிழங்கு, சந்தனம் தேய்த்துக் குளித்து வந்தால் நாள் முழுவதும் வாசனையாக இருக்கும். தினசரி ஒரு தக்காளி சாப்பிட்டு வந்தால் உடல் சூடு தணியும். உடம்பும் தளதள வென்று இருக்கும். பேரீச்சம் . . . → தொடர்ந்து படிக்க..

இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 2,028 முறை படிக்கப்பட்டுள்ளது!

தேர்வுகள் முடிந்துவிட்டது – விடுமுறையை..

தேர்வுகள் முடிந்துவிட்டது – விடுமுறையை பயனுள்ளதாக மாற்றுவோம்

10 -ஆம் வகுப்பு மற்றும் 12 – ஆம் வகுப்பு தேர்வுகள் முடிந்துவிட்டது. மாணவர்களும், பெற்றோர்களும் நிம்மதி பெருமூச்சுடன் தேர்வுக் முடிவுகளை எதிர்பாத்த வண்ணம் இருக்கின்றனர். இடையில் 6 முதல் 10 வாரம் வரை மாணவர்களுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. இந்த விடுமுறை நாள்களை எதிர்காலத்தில் தமது கல்வி அறிவு சிறக்க பயன்படும் வகையில் மாணவர்கள் பயன்படுத்த வேண்டும்.

விடுமுறை நாள்களின் . . . → தொடர்ந்து படிக்க..

இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 5,057 முறை படிக்கப்பட்டுள்ளது!

சிக்கன் 65? ஒரு அதிர்ச்சி ரிப்போர்ட்…..!

ராகவனுக்கு முப்பது வயதுகூட ஆகவில்லை. அவருக்கு கேன்சர் என்று மருத்துவர்கள் சொன்னதும், ஒட்டுமொத்த குடும்பமே அதிர்ச்சியில் உறைந்து போனது. காரணம் ராகவனிடம் மது, புகை என்று எந்த கெட்ட பழக்கமும் இல்லை. பிறகு எப்படி கேன்சர்? தலையைப் பிய்த்துக்கொண்ட மருத்துவர்கள் கடைசியாக அவரது உணவுப் பழக்கத்தை ஆராய்ந்தபோதுதான் உண்மை தெரியவந்தது. அசைவப்பிரியரான ராகவன் தினமும் சாப்பாட்டில் சிக்கன் 65 இல்லாமல் சாப்பிடவே மாட்டாராம். அதுவும் செக்கச் சிவந்த நிலையில் மொறு மொறுவென்று இருக்கும் சிக்கன் 65ஐத்தான் விரும்பிச் . . . → தொடர்ந்து படிக்க..