தலைப்புகளில் தேட

தேதிவாரியாக பதிவுகள்

March 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  

UserOnline

இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 7,014 முறை படிக்கப்பட்டுள்ளது!

வாழ்க்கையில் தோல்வியா? சற்று திசை திருப்புங்கள்! வெற்றி நிச்சயம்

தோல்வி என்பது ஒரு விஷயத்தை மீண்டும் பரிசீலனை செய்ய ஒரு வாய்ப்பு. எங்கோ தவறி இருக்கிறோம் என்பதைப் புலப்படுத்தும் நமக்குத் தெளிவுபடுத்தும் ஒரு நிகழ்ச்சி. அதை ஒரு பாடமாக எடுத்துக் கொள்ள வேண்டும். பல நேரம் நாம் செல்லும் திசையைத் திருப்புவதற்காக அத்தகைய தோல்விகள் ஏற்படுவதுண்டு.

தோல்வியின் நன்மை

ஒரு இளைஞர் இருந்தார். ஒரு பெண்ணைக் குறிப்பிட்டு அவளுடன் தான் பழகி வருவதாகவும் அந்தப் பெண்ணுக்கும் தன்னை பிடித்திருப்பதாகவும் . . . → தொடர்ந்து படிக்க..

இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 6,818 முறை படிக்கப்பட்டுள்ளது!

மாற்ற முடியாததை ஏற்றுக் கொள்ளுங்கள்!

வாழ்ந்து படிக்கும் பாடங்கள் 24

பெரும்பாலான மனிதர்கள் ஒரு கற்பனை உலகில் வாழ்கிறார்கள். அவர்கள் நம்புவதும், எதிர்பார்ப்பதும் பெரும்பாலும் யதார்த்த வாழ்க்கைக்கு ஒத்துப் போவதாக இருப்பதில்லை. நிஜமாக முடியாத ஒரு நேர்கோடான, சீரான வாழ்க்கைக்காக ஆசைப்படுகிறார்கள். அப்படி ஒரு வாழ்க்கை யாருக்குமே என்றுமே இது வரை அமைந்ததில்லை. இனி அமையப் போவதுமில்லை. அதனால் அவர்கள் எதிர்பார்ப்புகளும், நடைமுறை நிஜங்களும் ஒன்றுக்கு ஒன்று முரணாகவே இருக்க, அவர்கள் வாழ்க்கை முழுவதையும் பிரச்சினைகளாகவே காண்கிறார்கள். அதன் காரணமாக . . . → தொடர்ந்து படிக்க..

இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 3,085 முறை படிக்கப்பட்டுள்ளது!

இஸ்லாத்தை அறிய விரும்பும் அன்பர்களுக்கு

அன்பு சகோதர/சகோதரிகளுக்கு,

உங்கள் அனைவர் மீதும் இறைவனின் சாந்தியும் சமாதானமும் நிலவுதாக…ஆமீன்.

இந்த கடிதத்தை படிக்க சில நிமிடங்கள் செலவிடுவதன் மூலம் உங்கள் வாழ்க்கைக்கான தேடல் புதிய திசையை நோக்கி பயணப்படலாம். திறந்த மனதோடு சிந்திக்கக்கூடிய, பாரபட்சம் காட்டாத உண்மையை அறிய விரும்பும் சகோதரர்/சகோதரி நீங்கள் என்று நாங்கள் நம்புகின்றோம். மேலும் தொடர்வதற்கு முன்னால், இந்த கடிதத்தின் நோக்கம் என்னவென்று சொல்ல விரும்புகின்றோம். இஸ்லாம் என்னும் வாழ்க்கை நெறி குறித்த சுருக்கமான அறிமுகமே இந்த கடிதம்.

. . . → தொடர்ந்து படிக்க..

இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 2,850 முறை படிக்கப்பட்டுள்ளது!

திட்டமில்லாமல் திண்டாடாதீர்கள்

வாழ்ந்து படிக்கும் பாடங்கள் 21

வாழ்க்கையில் அலட்டிக் கொள்ளாமல் அதிகம் சாதித்த மனிதர்களை நீங்கள் பார்த்திருக்கலாம். சொல்லிக் கொள்ளும் அளவுக்கு அவர்கள் கடுமையாக உழைப்பது போல் பார்வைக்குத் தெரியாது. ஆனாலும் அவர்கள் நிறைய சாதனைகள் புரிந்து கொண்டிருப்பார்கள். அவர்கள் வாழ்க்கை முறையைக் கூர்ந்து பார்த்தால் அதற்கு காரணம் கண்டிப்பாக விளங்கும். அவர்கள் திட்டமிட்டு ஒரு ஒழுங்குமுறையுடன் செயல்படுபவர்களாக இருப்பார்கள்.

அந்தோணி ராபின்ஸ் என்ற பிரபல சுயமுன்னேற்ற எழுத்தாளர் திட்டமில்லாமல் வாழ்பவர்கள் நயாகரா . . . → தொடர்ந்து படிக்க..

இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 2,779 முறை படிக்கப்பட்டுள்ளது!

ஸ்டூடன்ட் ஸ்டார்! – ஹாலிஸ் நிசார்

”சின்ன வயசுல விளையாட்டா ஐ.ஏ.எஸ்., ஆகணும்னு சொல்லிட்டே இருப்பேனாம். அதை சீரியஸா எடுத்துக்கிட்ட என் அப்பா -அம்மா, எல்.கே.ஜி படிக்கும்போது இருந்தே எனக்கு திருக்குறள்லாம் சொல்லிக் கொடுத்தாங்களாம். அவங்க போட்டுக் கொடுத்த கோட்டுல இப்போ நான் ரோடு போட்டுட்டு இருக்கேன்!”-பளிச் பல்ப் ஒளிரும் கண்கள் ஹாலிஸ் நிசாருக்கு. இந்தியன் இன்ஸ்டிட்யூட் ஆஃப் சயின்ஸ் நிறுவனத்தால் ‘இளம் விஞ்ஞானி’ என அங்கீகரிக்கப்பட்ட திறமைசாலி.

”கல்லூரி செமஸ்டர் தேர்வுகளில் இதுவரை மொத்தம் 18 பேப்பர்ல . . . → தொடர்ந்து படிக்க..

இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 5,645 முறை படிக்கப்பட்டுள்ளது!

இரு கைகளையும் இழந்த தன்னம்பிக்’கை’ வாலிபரின் சாதனை

தர்மபுரியில், இரு கைகளை இழந்த வாலிபர், தேசிய அளவிலான நீச்சல் போட்டியில், நான்கு பதக்கங்கள் வென்று இந்திய அளவில் நீச்சல் போட்டியில் தனி நபர் சாம்பியன் பட்டத்தை வென்று சாதனை படைத்துள்ளார். சாதனைக்கு ஊனம் தடையில்லை என்பதை, பல்வேறு சாதனைகள் மூலம் தமிழகத்தில் பல மாற்று திறனாளிகள் நிரூபித்து வருகின்றனர்.

ஊனத்தை பற்றி கவலைப்படாமல் மற்றவர்களை போல் வாழ வேண்டும் என்ற எண்ணத்தில், தர்மபுரியை சேர்ந்த வாலிபர், தொடர்ந்து பல்வேறு சாதனைகள் . . . → தொடர்ந்து படிக்க..

இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 2,882 முறை படிக்கப்பட்டுள்ளது!

பிரச்னைகளுடன் உறங்கச் செல்லுங்கள்! தீர்வுகளுடன் எழுந்து வாருங்கள் !

என்னங்க இது? தூக்கம் வரலீங்கறதே ஒரு பிரச்னை; அதோடு பல பிரச்னைகளையும் நெனச்சுப் பார்த்து, தூங்கப்போனா தூக்கம் வருங்களா?’ இது பலரது கேள்வி. நியாயமானதுதான்.

எந்தவிதமான பிரச்னைகளுடன் தூங்கச்செல்வது என்பது மிக முக்கியம். நமது உடல் பலம், மனோசக்தி இரண்டுமே பெரும்பாலான பிரச்னைகளுக்கு சுமுகமான தீர்வுகளைக் கொடுத்துவிடும். இதற்கும் மேலாக, தீர்வுகளே தெரியாத பிரச்னைகள் எல்லோருக்குமே உண்டு. ஒரு சிலவற்றைமற்றவர்களிடம் கூறி, ஆலோசனை பெறலாம். சிலவற்றையாரிடமும் கூறமுடியாது.

பிரச்னைகள் . . . → தொடர்ந்து படிக்க..

இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 2,625 முறை படிக்கப்பட்டுள்ளது!

விளைவை மாற்ற செயலை மாற்றுங்கள்!

வாழ்ந்து படிக்கும் பாடங்கள் 20

எதை விதைக்கிறோமோ அதைத் தான் அறுவடை செய்ய முடியும் என்பது விதி. துவரையை விதைத்து அவரை விளைச்சலை எதிர்பார்க்க முடியாது. தாவரவியலில் மட்டுமல்ல இந்த உண்மை மனிதனின் வாழ்வியலிலும் கூட மாற்ற முடியாத அடிப்படை விதியாக இருக்கிறது. எதையெல்லாம் செய்கிறோமோ அதற்கான விளைவுகளை நாம் சந்தித்தே ஆக வேண்டும்.

விதைகளின் தன்மை விளைச்சலில் தெரிவது போல செயல்களின் தன்மை அதன் விளைவுகளில் தெரியும். நடும் போது . . . → தொடர்ந்து படிக்க..

இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 3,583 முறை படிக்கப்பட்டுள்ளது!

காலேஜ் கார்னர் – செல்வி ஹலிமா

செல்வி ஹலிமா – அன்னை ஹாஜிரா பெண்கள் கல்லூரி

தங்கள் வாழ்க்கையை, வலியை, இழப்புகளை, அவமானங்களை, புறக்கணிப்புகளை என்று வாழ்வின் பெரும்பகுதியை கடந்துவிட்ட அங்கன்வாடி ஊழியரின் மகள் அமெரிக்க பல்கலையில் படித்துவந்துள்ள நிகழ்வுகள் தான் இந்த மாதக் காலேஜ் கார்னரில் பார்ப்பது. திருநெல்வேலி மாவட்டம் செங்கோட்டையை சேர்ந்தவர் பாத்திமா. அங்கன்வாடி ஊழியர். இவரது மூத்த மகள் ஹலிமா. வயது 20. நெலலை மேலப்பாளையம் அன்னை ஹாஜிரா பெண்கள் கல்லூரியில் கம்ப்யூட்டர் சயின்ஸ் பிரிவில் 3ம் ஆண்டு பயில்கிறார்.

. . . → தொடர்ந்து படிக்க..

இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 3,297 முறை படிக்கப்பட்டுள்ளது!

கதவைத் திற சூரியன் வரட்டும் -APJ

இழைனர்களுக்கு ஒரு vitamin தொடர் – Dr.APJ.அப்துல் கலாம்

ராஷ்டிரபதிபவனில் எனக்கு இரண்டு அலுவலகங்கள் இருந்தன. ஒன்று கீழ் தளத்திலும் இன்னொன்று முதல் மாடியிலும் இருந்தன. என்னுடைய பணிகள் ஆரம்பித்த ஒரு சில நாட்களுக்குள்ளேயே நான் ஒரு விஷயத்தைக் கவனித்தேன். அநேகமாக எல்லா கதவுகளும் ஜன்னல்களுமே அழகான திரைச்சீலைகளால் மூடப்பட்டிருந்தன. அதனால் சூரிய வெளிச்சம் உள்ளேயே வர முடியாத அளவுக்கு ஒளி குறைவாக இருந்தது. அலுவலகத்தின் வேலை நேரம் முடியும் வரை எல்லா விளக்குகளுமே . . . → தொடர்ந்து படிக்க..

இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 2,786 முறை படிக்கப்பட்டுள்ளது!

நம்பும் படியே நடக்கும்!

அமெரிக்கப் பத்திரிக்கையாளரும், பேராசிரியருமான நார்மன் கசின்ஸ் (Norman Cousins) கலிபோர்னியா பல்கலைகழகத்தில் மனித உணர்வுகள் உடலில் ஏற்படுத்தும் பாதிப்புகளைப் பற்றி ஆராய்ச்சிகளும் நடத்தியவர். அவர் ஒரு பேட்டியில் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரத்தில் நடந்த ஒரு கால் பந்துப் போட்டியின் போது நேரில் கண்ட தன் அனுபவத்தைப் பகிர்ந்து கொண்டார். பெருந்திரளாக அந்த விளையாட்டைக் காண வந்திருந்த ரசிகர்களில் சிலர் திடீரென்று நோய்வாய்ப்பட்டனர். அவர்கள் அனைவரும் அங்கிருந்த குளிர்பான எந்திரம் ஒன்றிலிருந்து குளிர்பானம் குடித்திருப்பது தெரிய வந்தது. அது . . . → தொடர்ந்து படிக்க..

இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 4,385 முறை படிக்கப்பட்டுள்ளது!

சலீம் அலி – பறவையியல் ஆர்வலர்

“காக்கை குருவி எங்கள் ஜாதி” என்று பாடியதின் மூலம் பறவை இனங்களின் மீது தனக்குள்ள அன்பை வெளிப்படுத்திய மகாகவி பாரதி வாழ்ந்த சமகாலத்தில் பம்பாயில் வாழ்ந்த பறவையியல் ஆர்வலரான சலீம் அலி என்று அழைக்கப்பட்ட “சலீம் மொய்சுத்தன் அப்துல் அலி” என்பர், இந்திய பறவைகளை பற்றி செய்த ஆராய்ச்சிகளுக்காக மூன்று கவுரவ டாக்டர் பட்டங்களையும், இந்திய அரசின் உயரிய விருதான ‘பத்ம விபூஷன்’ விருதையும் பெற்றார்.

1896 – ஆம் ஆண்டு . . . → தொடர்ந்து படிக்க..