Google Search Engine

தலைப்புகளில் தேட

தேதிவாரியாக பதிவுகள்

May 2024
S M T W T F S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031  

Archives

Visitors since 22-3-13

Free counters!
இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 2,449 முறை படிக்கப்பட்டுள்ளது!

ரமலான் சங்கலபம்

நம் மீது இரக்கமுள்ள அல்லாஹ் நமது இம்மை வெற்றிக்கு சம்பாதித்துக் கொள்வதற்காக இன்னொரு ரமலானைத் தந்து இன்னருள் பாலித்திருக்கிறான்!

வருடம் முழுக்க அழுக்கேறியிருந்த கல்பை சுத்தி செய்துகொள்ளும் வாய்ப்பாக்கித் தந்திருக்கிறான்!

சில வருடங்களாக நாம் ஒவ்வொரு ரமலானிலும் ஒரு சங்கல்பம் செய்து கொள்வதை வழக்கமாக்கிக் கொண்டிருக்கிறோம்!

அதனை ஒட்டி இதோ நம் பார்வைக்கு ஓர் ஆலோசனை!

நமது குடும்பவாழ்வியல் சமீப காலமாக பலவிதமான நெருக்கடிக்கு ஆளாகியிருப்பதை மறுப்பதற்கில்லை. பொருளாதார மந்தம் ஒருவகை நெருக்கடியை ஏற்படுத்தியிருக்கிறதென்றால், . . . → தொடர்ந்து படிக்க..

இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 2,354 முறை படிக்கப்பட்டுள்ளது!

எதிர்பாராமல் ஓர் ஆசுவாசம்!

நடந்து முடிந்த நாட்டின் பதினைந்தாம் பொதுத்தேர்தல் அனைத்து ஊடகக் கணிப்புகளையும் தகர்த்து விட்டு ஒரு புதிய ராஜபாட்டைக்குச் சாளரம் திறந்திருக்கிறது! மதமாச்சரிய சக்திகள் வீறுகொண்டெழும் என்று எந்த முன்னுரைப்பும் அறியத்தராவிட்டாலும், மாறிய கூட்டணிக் காட்சிகளும், கொள்கையற்ற கோஷ்டி சேரல்களும் வாக்குச் சிதறலுக்கு வழியமைத்து உறுதியான அரசமைவுக்கு இடைஞ்சலாகிவிடுமோ என்ற அச்சம் இருந்தது. இடதுசாரிகள் திடீரென ஞானோதயம் வந்ததுபோல திசைமாறிப் பயணித்தது வேறு நாட்டின் மீது அக்கறை கொண்டவர்களை அலைக்கழித்தது. அதிலும் குறிப்பாக காங்கிரஸ் வடக்கே எந்த முன்னேற்றத்தையும் . . . → தொடர்ந்து படிக்க..

இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 2,938 முறை படிக்கப்பட்டுள்ளது!

ஹுஸைன் முபாரக் ஒபாமா!

வஅலைக்குமஸ்ஸலாம், ஹுஸைன் முபாரக் ஒபாமா!

கெய்ரோவில் பல்கலைக்கழக வளாகத்தில் உலக முஸ்லிம்களுக்கு நீங்கள் நிகழ்த்திய உரையில் கூறிய சலாத்துக்கு எங்களது பதிலை ஏற்றுக் கொள்ளுங்கள்!

இந்த பதிலைச் சொல்வதற்கு முன் நாங்கள் கொஞ்சம் யோசிக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டது.

உரையை நேரடி ஒளிபரப்பில் கேட்டது மட்டுமல்லாமல், திரும்பவும் இருமுறை கேட்டு, முழுமையான உரையை எழுத்தில் படித்து, அவ்வுரையின் சாதக பாதகங்களை அலசிய தேர்ந்த ஆய்வாளர்களின் கருத்துக்களை கவனமாக ஆய்ந்து, இந்த பதிலை உங்களுக்கு நாங்கள் . . . → தொடர்ந்து படிக்க..

இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 3,049 முறை படிக்கப்பட்டுள்ளது!

துபாய் நமக்கு ஒரு தொப்புள் கொடி!

அமெரிக்காவின் லேமென் பிரதர்ஸ் மூலதன வங்கி திவாலான போது உலகம் பொருளாதார நெருக்கடியில் மூச்சுத்திணறத் தொடங்கியது. பல நாடுகள் தடுமாற்றம் கண்டன. சில நாடுகள் தொடக்க கால அதிர்ச்சியிலிருந்து படிப்படியாக மீண்டு வந்தாலும் பெரும்பாலான நாடுகள் இன்னும் மூச்சு விட சிரமப்படவே செய்கின்றன.

இந்த நேரத்தில் சென்ற மாதத்தில் துபையிலிருந்து புறப்பட்டு வந்து தாக்கிய ஓர் அதிர்ச்சியான தகவல் உலகத்தை இன்னுமொரு உலுக்கு உலுக்கிவிட்டது. துபையின் மிகப் பெரிய நிறுவனமான ‘துபை வோர்ல்ட்’ தான் வங்கிகளிடம் பெற்ற . . . → தொடர்ந்து படிக்க..

இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 1,741 முறை படிக்கப்பட்டுள்ளது!

இர்ரம் காட்டிய புதிய உத்தி

26 – 06 – 2005 அன்று, உத்திரப்பிரதேசம் மீரட் நகரத்தின் சாதர் பஜார் பகுதியில் வசிக்கும் செல்வி இர்ரம் இதுவரை எந்த முஸ்லிம் பெண்ணும் செய்யாத ஒரு காரியத்தைச் செய்து செய்தியில் இடம் பெற்றுள்ளார்.

அவருக்கும் , லக்னோவில் மருந்துக்கம்பெனி நடத்தும் ஜியாவுல் சித்தீக் மணமகணுக்கும் அன்று திருமணம் நடக்கவிருந்தது. எல்லா ஏற்பாடுகளும் தயார்! நிக்காஹ்வுக்கு சில நிமிடங்களுக்கு முன்பு சினிமாவில் வருவதுபோல, மாப்பிள்ளை வீட்டார் தங்கள் கைவரிசையைக் காட்டத்தொடங்கினர். ஒரு காரும், 3 லட்சம் . . . → தொடர்ந்து படிக்க..

இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 1,947 முறை படிக்கப்பட்டுள்ளது!

ஆபத்தான முன்னுதாரணம்

உயிரைத் தந்தது இறைவன். அதை எடுத்துக் கொள்ளும் உரிமையும் அவனுக்குத்தான் இருக்கிறது. இது பரவலாக அறியப்பட்ட- ஒப்புக்கொள்ளப்பட்ட உண்மை. அதனால்தான் தற்கொலை கூட தண்டனைக்குரிய குற்றமாகக் கருதப் படுகிறது.

இந்த நிலையில் உயிரை அழிக்கும் உரிமை மனிதனுக்கு இருக்கிறதா? “இருக்கிறது” என்று அடித்துச் சொல்லியிருக்கிறது அமெரிக்க உச்ச நீதிமன்றம்.

டெர்ரி சியாவோ என்ற பெண்மணி 15 வருடங்களுக்கு முன்பு ஒரு விபத்தில் சுய நினைவை இழந்து கோமா நிலைக்கு ஆளானார். அவருக்கு அளிக்கப் பட்ட சிகிச்சைகளினால் அவர் . . . → தொடர்ந்து படிக்க..