Google Search Engine

தலைப்புகளில் தேட

தேதிவாரியாக பதிவுகள்

December 2024
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  

Archives

Visitors since 22-3-13

Free counters!
இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 4,335 முறை படிக்கப்பட்டுள்ளது!

மனிதனின் ஆயுளை நீடிக்க செய்வதற்கான வழிகள்

இப்பாரினில் வந்து பிறந்துவிட்ட ஒவ்வொரு மனிதனும் தனது வாழ்நாளை நீடித்துக் கொள்ளவே விரும்புகின்றான். உலகத்தில் அதிகமான காலங்கள் வாழவே ஆசைப்படுகின்றான். அவ்வடிப்படையில் வாழும் நாம் ஒவ்வொருவரும் இக்கட்டுரையை கவனமாகவும் மிகவும் ஆர்வத்துடனும் வாசித்து இங்கு கூறப்பட்டுள்ள விடயங்களை அணு அணுவாக தானும் பின்பற்றி நடப்பதுடன், மற்றவர்களுக்கும் இதுபற்றி எடுத்துக்கூறியும் ஆலோசனை வழங்கியும் உதவி செய்வோம்.

தற்பொழுது மனித உயிர்களை பலி கொள்ளும் அனேகமான காரணிகளில் முக்கிய 10 காரணிகளை என இனங்கண்டுள்ள . . . → தொடர்ந்து படிக்க..

இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 5,372 முறை படிக்கப்பட்டுள்ளது!

நீரிழிவிற்கு கட்டியம் கூறும் தோல் நோய்

கழுத்தில் கறுத்த வெல்வெட் தோல் நீரிழிவிற்கு கட்டியம் கூறுகிறதா? (Acanthosis Nigricans)

அழகான இளம் பெண்ணான அவள் சற்றுக் குண்டாவனவளும் கூட. கழுத்து, கைகள், நெஞ்சு, வயிறு எங்கும் தாராளமான கொழுப்பு விளைச்சல் கண்டிருந்தது. எனது பார்வை அவளது முகத்தை விட்டு விலகி கழுத்தில் மேய்ந்தது.

எனது பார்வையின் பொருளை அவள் புரிந்து கொண்டதை அவள் வாய் திறந்து பேச ஆரம்பித்ததும் நோயை உறுதிபடுத்த முடிந்தது.

‘ஓம் டொக்டர்… இது கொஞ்சம் அசிங்கமாகக் கிடக்குத்தான். . . . → தொடர்ந்து படிக்க..

இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 5,077 முறை படிக்கப்பட்டுள்ளது!

இதயத்தை பாதுகாப்பது எப்படி?

2020-ம் ஆண்டில், இதயநோய் ஒரு கொள்ளை நோய் போலப் பரவும் என்று ஒரு மருத்துவ ஆய்வு கூறியிருக்கிறது. அந்த அபாயத்திலிருந்து நம்மைக் காத்துக்கொள்ள, இப்போதிலிருந்தே உணவு, உடற் பயிற்சி, வாழ்க்கைமுறை இதிலெல்லாம் கவனம் செலுத்தவேண்டும்.

உணவுக் கட்டுப்பாடு முதலாவதாக, உடல் எடையைக் குறைப்பதற்காக. அடுத்து, ரத்தத்தில் கொழுப்பு சத்தைக் குறைக்க, ரத்தத்தில் சர்க்கரையின் அளவைக் குறைக்க, பாதுகாப்பான சத்துகளைப் பெற… என்று மேலும் பலவித காரணங்களுக்காக உணவுக் கட்டுப்பாடு அவசியமாகிறது. கட்டுப்பாடான உணவால் மாரடைப்பு, . . . → தொடர்ந்து படிக்க..

இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 7,291 முறை படிக்கப்பட்டுள்ளது!

கண்களைப் பாதுகாக்கும் கிரீன் டீ

அதிகாலையில் எழுந்த உடன் டீ குடிக்காவிட்டால் சிலருக்கு எதையோ இழந்தது போல இருக்கும். கிரீன் டீ எனப்படும் பச்சைத் தேநீர் அருந்துவது பலரிடம் இன்றைக்கு பிரபலமடைந்து வருகிறது. உடலுக்குத் தேவையான ‘ஆண்ட்டி ஆக்ஸ்டெண்ட்” கிரீன் டீயிலிருந்து மிக அதிக அளவில் கிடைக்கிறது. வைட்டமின் ‘சி” யிலிருந்து கிடைக்ககூடிய ஆண்ட்டி ஆக்ஸிடண்ட் அளவை விட 100 மடங்கும் வைட்டமின் ‘ஈ” யிலிருந்து கிடைப்பதைவிட 25 மடங்கும் அதிகம் கிரீன் டீ யில் கிடைப்பதாக கூறப்படுகிறது. பொதுவாக பறிக்கப்பட்ட . . . → தொடர்ந்து படிக்க..

இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 5,094 முறை படிக்கப்பட்டுள்ளது!

வலிகளுக்கு விரல்களை உருட்டினால் தீர்வு

கை, கால் வலிகளுக்கு விரல்களை உருட்டினால் தீர்வு

சில நேரங்களில் நமக்கு கை கால்களில் வலி ஏற்படுவதுண்டு. அப்பொழுது கைகளை யாராவது அழுத்தி விடமாட்டார்களா? கால்களை சிறு குழந்தைகள் எவராவது மிதித்து விட மாட்டார்களா என்று தோன்றும். வலி நீக்கும் தைலங்களை கை கால்களில் தடவுவோம். மாத்திரைகளை விழுங்குவோம். ஆனாலும் வலி தொடர்ந்து இருந்து கொண்டே இருக்கும். சில வேளைகளில் சிறிது நிவாரணம் கிடைக்கும். இதற்கு முழு தீர்வு கிடைக்குமா என்று ஏங்குவோம். இதற்கு . . . → தொடர்ந்து படிக்க..

இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 5,193 முறை படிக்கப்பட்டுள்ளது!

கறிவேப்பிலையின் பயன்கள்

கறிவேப்பிலை ஒதுக்காதீர் மாறிவரும் இயந்திர யுகத்துக்கு ஏற்ப நோய்களும் புதிது புதிதாக வர ஆரம்பித்து விட்டன.

இப்பொதெல்லாம், இளம் வயதிலேயே, பார்வைக் கோளாறு, மாரடைப்பு போன்ற நோய்கள் ஏற்படுவது மக்களை பீதியடையச் செய்கிறது.நோய்களின் தாக்கத்தில் இருந்து நம்மைக் காத்துக் கொள்ள உடற்பயிற்சி மிக முக்கியம். அதோடு சரிவிகித உணவு அவசியம்.அதிலும் இயற்கையில் கிடைக்கும் உணவுப் பொருட்களில் எத்தனையோ சத்துக்கள் பொதிந்து கிடக்கின்றன.

நமது உணவுப் பொருட்களுடன் அன்றாடம் சேர்க்கப்படும் கறிவேப்பில்லையை சாப்பிடாமல் ஒதுக்கி விட . . . → தொடர்ந்து படிக்க..

இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 5,042 முறை படிக்கப்பட்டுள்ளது!

ஆற்றலை நல்கும் பப்பாளிப் பழம்!

ஆரோக்கியமான உணவுமுறையை கடைப்பிடித்தால், மருத்துவமனையை அணுக வேண்டிய நிலையே வராது. இதற்கு, நாம் உண்ணும் உணவில் மிகுந்த கவனம் செலுத்துவது அவசியம்.

உதாரணத்துக்கு எளிதில் நமக்கு கிடைக்கும் பப்பாளிப் பழத்தையே எடுத்துக் கொள்வோம். பப்பாளி பழம் உடல் நலனுக்கு உகந்த சிறந்த பழம். பழங்களில் மிக மிக குறைவான கலோரி பப்பாளியில்தான் உள்ளது 100 கிராம் பப்பாளியில் 32 கலோரிகளே உள்ளன. பப்பாளியை தினமும் உணவுடன் சேர்த்து கொண்டால் நோய் நொடியில்லாமல் ஆரோக்கியமாக வாழலாம்.

. . . → தொடர்ந்து படிக்க..

இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 9,145 முறை படிக்கப்பட்டுள்ளது!

முதுமையிலும் மூளையின் ஆற்றல் குறையாதிருக்க …

முதுமை நெருங்க நெருங்க மனிதன் எத்தனையோ ஆற்றல்கள் இழக்க நேர்கிறது. உடல் தளர்வது மட்டுமல்ல மூளையின் ஆற்றலும் படிப்படியாகக் குறைய ஆரம்பிப்பதை அவன் நிறையவே உணர்கிறான். முன்பு போல் அவனால் பலவற்றை நினைவில் வைத்துக் கொள்ள முடிவதில்லை. புதியனவற்றைக் கற்றுக் கொள்வது முன்பு போல் அவனுக்கு எளிதாக இருப்பதில்லை. இது பொதுவாக நாம் எல்லோரும் நம்பும் யதார்த்த நிலை என்றாலும் பல அறிவியல் ஆராய்ச்சிகள் இந்த நம்பிக்கை உண்மையைச் சாராதது என்று சொல்கின்றன. முதுமையிலும் . . . → தொடர்ந்து படிக்க..

இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 5,400 முறை படிக்கப்பட்டுள்ளது!

மாரடைப்பு ஏற்படுவதை அறிந்து கொள்வது எப்படி?

உலகளவில் பெரும்பாலான மக்களின் மரணத்திற்கு மாரடைப்பே முதற்காரணம். நம் நாட்டில் ஆண்களானாலும், பெண்களானாலும் இளம் வயதிலேயே கடுமையான மாரடைப்புக்கு ஆளாவது அதிகரித்து வருகிறது. மாரடைப்பை பொறுத்தளவில் மற்ற நாடுகளுக்கும், நமக்கும் மிகப்பெரிய வேறுபாடு உள்ளது. மற்ற நாடுகளை காட்டிலும், நம்நாட்டில் மாரடைப்பு இளம் வயதினரை (30 – 45) அதிகம் பாதிப்பது மட்டுமின்றி, அதன் வீரியமும், விளைவுகளும் மிகக் கடுமை.

மாரடைப்பு என்றால் என்ன?

அது எவ்வாறு ஏற்படுகிறது? யாருக்கெல்லாம் மாரடைப்பு வரும்? அதன் . . . → தொடர்ந்து படிக்க..

இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 4,996 முறை படிக்கப்பட்டுள்ளது!

மறந்துபோகாமல் இருக்க வேண்டுமா?

சற்று முன் கேட்ட டெலிபோன் நம்பரை உடனே திருப்பிச் சொல்ல முடிகிறது. ஒரு மணிநேரம் கழித்து அதே நம்பர் மறந்துவிடுகிறது. ஆனால் நமது சொந்த டெலிபோன் எண், பிறந்த தேதி போன்ற நம்பர்கள் என்றும் மறப்பதில்லை. ஏன் இப்படி?

நமக்கு இரண்டுவித ஞாபகசக்தி இருக்கிறது. தற்காலிக நினைவு மற்றது நிரந்தர நினைவு. நினைவுகள் யாவும் மூளையில் நரம்பு செல்களில் சேமிக்கப்படுகின்றன. ஒரு டெலிபோன் நம்பரைக் கேட்டதும் அதற்கான ஒரு நரம்புக்கூட்டம் . . . → தொடர்ந்து படிக்க..

இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 5,466 முறை படிக்கப்பட்டுள்ளது!

அம்மை நோய் வராமல் தடுப்பது எப்படி?

வெயில், மழை கலந்த சீதோஷ்ண நிலை தற்போது நிலவுவதால் வைரஸ்கள் வேகமாக பெருகி நோய்களை பரப்பி வருகின்றன. சளி, காய்ச்சல் தொடங்கி அம்மை உள்ளிட்ட பெரிய நோய்கள் வரை வைரஸ்களால் ஏற்படுகின்றன. அம்மை நோய்களில் இருந்து காத்துக் கொள்வது பற்றி ஆலோசனை சொல்கிறார் டாக்டர் முத்து செல்லக்குமார்.

வைரஸ் கிருமிகள் மிகவும் நுண்மையானவை. அவற்றின் ஆன்டி ஜீன்கள் அடிக்கடி மாற்றம் அடைவது, புதிய அவதாரம் எடுப்பது போன்ற காரணங்களால் வைரஸ்களுக்கு தடுப்பூசி கண்டுபிடிப்பது சவாலாக . . . → தொடர்ந்து படிக்க..

இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 4,055 முறை படிக்கப்பட்டுள்ளது!

குழந்தை அழுது கொண்டே இருக்கிறதா? உஷார்

குழந்தைகள் அழுவதுதான் அதன் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் என்பது பலரின் கருத்து. ஆனால் குழந்தைகள் தொடர்ந்து அழுவதால் அதன் மூளை வளர்ச்சி பாதிக்கப்படும் என்று சமீபத்திய ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.

நீண்ட நேரம் குழந்தை அழும்போது பெற்றோர்களின் கவனிப்பு இல்லாமல் போகும் பட்சத்தில் குழந்தைகளின் கற்றுக்கொள்ளும் திறன் குறைந்து போவதாகவும் மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.

மனநலம் பாதிக்கும்

குழந்தைகள் அழுவது பசியை தாய்க்கு உணர்த்தவே என்பது எல்லோரும் அறிந்தது. உடலில் உள்ள நோய்களையும், தனக்கு ஏற்படும் பிரச்சினைகளையும், தாய்க்கு . . . → தொடர்ந்து படிக்க..