Google Search Engine

தலைப்புகளில் தேட

தேதிவாரியாக பதிவுகள்

January 2025
S M T W T F S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031  

Archives

Visitors since 22-3-13

Free counters!
இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 3,055 முறை படிக்கப்பட்டுள்ளது!

மீன்கள் ஜாக்கிரதை!

[மீன் சாப்பிடுபவர்களுக்கு மிகமுக்கியமான கட்டுரை]

சில தினங்களுக்கு முன் திருச்செந்தூர் அருகே கல்லாமொழி முதல் மணப்பாடு வரையிலான கடற்கரை பகுதியில் திமிங்கிலங்கள் கூட்டமாக கரை ஒதுங்கியதில் 45 திமிங்கிலங்கள் இறந்துவிட்டன. 25 திமிங்கிலங்கள் கால் நடை மருத்துவர்களால் பிரேதப் பரிசோதனை செய்யப்பட்டு கடற்கரையிலேயே புதைக்கப்பட்டன. மீதமுள்ள 20 திமிங்கலங்களையும் கடற்கரையில் ஜேசிபி மூலம் குழித் தோண்டி புதைக்கும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டனர். -என்பது செய்தி.

திமிங்கலங்களுக்கே . . . → தொடர்ந்து படிக்க..

இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 1,756 முறை படிக்கப்பட்டுள்ளது!

கழிப்பறையின் ஆரோக்கிய விதிகள்.! #Constipation

கழிப்பறையின் ஆரோக்கிய விதிகள்… மலச்சிக்கல் தவிர்க்க! #Constipation

உணவு, உறக்கம், ஓய்வு மூன்றும் மனிதனுக்கு அடிப்படை. அதைப்போலவே உண்ட உணவு நல்லவிதமாக செரிமானமாகி, குறித்த நேரத்தில் மலமாக வெளியேறவேண்டியதும் மிக மிக அவசியம். செரிமானத்தில் சிக்கல் ஏற்படும்போது, உடலின் ஒட்டுமொத்த செயல்பாடும் முடங்கிப்போகிறது. உடலைவிட்டு வெளியேறும் மலம், நமது மலச்சிக்கல் முதல் மனச்சிக்கல் வரை ஆரோக்கியம் காட்டும் கண்ணாடியாக இருக்கிறது. உடல்நிலை சொல்லும் ஸ்டூல் சார்ட் இங்கே…

. . . → தொடர்ந்து படிக்க..

இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 3,185 முறை படிக்கப்பட்டுள்ளது!

டீ முதல் ஐஸ்க்ரீம் வரை சீனித் துளசியில் ருசிக்கலாமா?

 

“சுகர் பீரி’ சீனித் துளசி மூலிகையை சாகுபடி செய்து சர்க்கரை நோயை விரட்டலாம் என, காந்திகிராம பல்கலை தெரிவித்துள்ளது. மேற்குதொடர்ச்சி மலையில் “ஸ்டீபியா ரொபோடியானா’ என்ற சீனித்துளசி மூலிகை உள்ளது. இவற்றின் இலையை மென்று தின்றால் இனிப்பாக இருக்கும். கலோரி அற்றது. இவை வெல்லம், சக்கரையை (சீனி) விட பல மடங்கு இனிப்பு சுவை கொண்டது. இவற்றின் மூலம் தயாரிக்கப்படும் உணவுப்பொருட்களை உண்டால் ரத்தத்தில் சர்க்கரை அதிகரிக்காது. இதனால் சர்க்கரை நோய் வராது. . . . → தொடர்ந்து படிக்க..

இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 3,268 முறை படிக்கப்பட்டுள்ளது!

நகத்தில் அகம் பார்க்கலாம்!

நகத்தில் வெண்மையான அரை நிலவின் தோற்றம் தென்படுவது தைராய்டும் செரிமானமும் நலமாக இருப்பதன் அறிகுறி.

நகத்தில் இருண்ட வரி இருந்தால் அல்லது நகமே இருண்டு இருந்தால், அது மெலனோமா என்ற தோல் புற்றுநோய்க்கான அறிகுறி.

நகம் வளைந்திருந்தால் இரும்புச்சத்து மற்றும் வைட்டமின் B 12 குறைபாடு இருக்கலாம்.

அரை நிலவு வடிவம் தெரியாமல் இருந்தால், அது தைராய்டு பிரச்னை இருப்பதன் அறிகுறி. இது மனச்சோர்வு, மனநிலை மாற்றம், எடை அதிகரித்தல், அடர்த்திக் குறைவான முடி போன்ற . . . → தொடர்ந்து படிக்க..

இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 2,283 முறை படிக்கப்பட்டுள்ளது!

கருவிலேயே அழிக்கப்படும் பெண் சிசுக்கள்!

இந்தியாவில் ஆண் சிசு இறப்புடன் ஒப்பிடுகையில், பெண் சிசுவின் இறப்பு விகிதம் 75 % அதிகம். இந்தியா, சீனா, கொரியா போன்ற நாடுகளில் பெண்சிசுக்கொலைகளின் எண்ணிக்கை மிக அதிகமாக உள்ளன. உலகின் பல நாடுகளிலும் 100 ஆண் குழந்தை பிறக்கும்போது, 105 பெண் குழந்தைகள் பிறக்கின்றனர். ஆனால் இந்தியாவில் 100 ஆண்களுக்கு 90-க்கும் குறைவான பெண் குழந்தைகள்தான் பிறக்கின்றனர். இந்தியாவில் ஒவ்வொரு நாளும் 2,000 பெண் சிசுக்கள் சட்டத்துக்குப் புறம்பாக கருவிலேயே கொலை செய்யப்படுவதாகக் கூறுகிறது, . . . → தொடர்ந்து படிக்க..

இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 5,258 முறை படிக்கப்பட்டுள்ளது!

சிசேரியன் பிரசவம்… பின்தொடரும் பிரச்னைகள்!

மருத்துவத் துறை வளர்ச்சியடையாத காலத்தில், நம் முன்தலைமுறைப் பெண்கள் சுகப்பிரசவமாகவே குழந்தைகளை நலமுடன் பெற்றெடுத்தனர். ஆனால், தொழில்நுட்பங்கள் பெருகியுள்ள இந்த நூற்றாண்டிலோ, அந்த அளவுக்கு சுகப்பிரசவங்களை சாத்தியமாக்க முடியவில்லை என்பது விசித்திரம்.

சில சந்தர்ப்பங்களில் மருத்துவக் காரணங்களால் சிசேரியன் பிரசவமே பாதுகாப்பானது என்று மருத்துவர்களால் பரிந்துரைக்கப்படுகிறது. அதே சமயம், அவசியமே இல்லை என்றாலும், இப்போது சிசேரியன் பிரசவத்தை நாடிச்செல்வோர் அதிகரித்து வருவதும் உண்மை.

“பொதுவாக இவர்களின் மனநிலை, . . . → தொடர்ந்து படிக்க..

இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 2,360 முறை படிக்கப்பட்டுள்ளது!

“வெயிட் லாஸ்” வெரி சிம்பிள்!

காலையில் பீச், பார்க் செல்பவர்களுக்குத் தெரியும், ‘ஜே ஜே’ என்று வாக்கிங், ஜாகிங் செல்பவர்களின் திருவிழாக் கூட்டம் பற்றி! ஃபிட்னெஸ்க்காக வாக்கிங் செய்பவர்களை விட, உடல் எடை குறைய வேண்டும் என்று வாக்கிங் செய்பவர்கள்தான் அதிகம். உடல் எடை குறைந்து, பார்க்க ஃபிட்டாக இருக்க வேண்டும் என்ற ஆசை அனைவருக்கும் உள்ளது. இதற்காக ஆயிரக்கணக்கில், ஏன் லட்சக்கணக்கில் செலவு செய்து விலை உயர்ந்த ஃபிட்னெஸ் கருவிகள் வாங்குதல், டயட்டில் இருத்தல் போன்ற முயற்சிகளில் ஈடுபடுபவர்கள் . . . → தொடர்ந்து படிக்க..

இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 3,238 முறை படிக்கப்பட்டுள்ளது!

சுகப்பிரசவம் சுலபமே!

பிரசவம் என்பது அற்புதம். வலி நிறைந்த ஒரு பயணம் இது.

ஆனாலும், வலிகளைத் தாங்கிக்கொண்டு பெற்றெடுத்த குழந்தையின் முகத்தைப் பார்த்தவுடன் பட்ட வேதனை எல்லாம் தாயானவளுக்குப் பறந்தோடிவிடும். உதிரமும் பனிக்குட நீருமாக அந்தச் சிசு வெளியே வருகையில், உடல் வலி மறந்து உலகத்தின் அதிசிறந்த படைப்பாளியாக ஆகிவிட்ட நெகிழ்வில் பெற்ற வயிறு சிலிர்க்கும். ஆனால், இன்றைய காலகட்டத்தில் பெரும்பாலான பெண்களுக்குப் பிரசவங்கள் அறுவைச் சிகிச்சை மூலமே நடைபெறுகின்றன. வலியையும் வாகை சூடிய . . . → தொடர்ந்து படிக்க..

இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 2,591 முறை படிக்கப்பட்டுள்ளது!

பித்தப் பையில் கல் உண்டாவது ஏன்?

மனித உடலில் ஆறு இடங்களில் கல் உருவாக வாய்ப்புள்ளது. சிறுநீரகம் மற்றும் சிறுநீர்ப் பாதை, பித்தப்பை, உமிழ்நீர்ச் சுரப்பிகள், மூக்கு, குடல், டான்சில் ஆகியவையே அந்த ஆறு இடங்கள். இவற்றில் சிறுநீரகக் கற்களைப் பற்றி தெரிந்த அளவுக்குப் பித்தப்பை, உமிழ்நீர் சுரப்பி உள்ளிட்ட மற்ற இடங்களில் உண்டாகும் கற்களைப் பற்றி மக்களுக்குத் தெரிவதில்லை.

சிறுநீரகக் கற்களுக்கு அடுத்தபடியாகப் பித்தப்பைக் கல்தான் (Gall stone) அதிகம் பேருக்குத் தொல்லை தரக்கூடியது. சமீபத்திய புள்ளிவிவரப்படி . . . → தொடர்ந்து படிக்க..

இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 2,765 முறை படிக்கப்பட்டுள்ளது!

கருவறைக்குள் சிசு செய்யும் லூட்டிகள்!

குழந்தைகள் என்றாலே அழகு தான், அவர்களது சிரிப்பும், அழுகை, முக பாவனைகள், கொட்டாவி விடுவது, உறங்கும் நிலை என அனைத்தும் அழகு தான். ஆனால், கருவறைக்குள் இவற்றில் என்னென்ன செயல்களை எல்லாம் சிசு செய்யும் என உங்களுக்கு தெரியுமா?

நாம் கூறிய இவற்றில் பெரும்பாலானவற்றை சிசு கருவறைக்குள்ளேயே செய்ய ஆரம்பித்துவிடும். இனிப்பு ஃப்ளுயிட்களை ரசித்து விழுங்குதல், அம்மாவின் குரலை கேட்டு அசைதல் என கருவறைக்குள் சிசு செய்யும் லூட்டிகள் நிறைய . . . → தொடர்ந்து படிக்க..

இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 8,239 முறை படிக்கப்பட்டுள்ளது!

சிறுநீர் கல்லடைப்பு – இயற்கை முறை சிகிச்சை!

சிறுநீரக கல் பிரச்னை என்பது, இன்றைக்கு பரவலாக அனைவரையும் தாக்கக்கூடிய நோயாக மாறி வருகிறது. சிறுநீரில் உள்ள கிரிஸ்டல் எனப்படுகிற உப்புகள் (கால்சியம், ஆக்சலேட், யூரிக் அமிலம் ஆகியவை) ஒன்று திரண்டு, சிறுநீர்ப் பாதையில் பல்வேறு அளவுள்ள கற்களை உருவாக்குகிறது. சிறுநீர், சிறுநீரகத்தில் உற்பத்தியாகி, சிறுநீர் குழாய் வழியே, சிறுநீர்ப் பைகளுக்கு வந்து, பிறகு வெளியேறுகிறது. சிறுநீரகத்தில்தான் கல்லும் உற்பத்தியாகிறது. அது அங்கேயே தங்கி, வளர்ந்து அடைப்பு ஏற்படுத்துகிறது என்கின்றனர் டாக்டர்கள்.

. . . → தொடர்ந்து படிக்க..

இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 1,866 முறை படிக்கப்பட்டுள்ளது!

எதற்காக குளிக்கிறோம்?

பல பேருக்கு எதற்காக குளிக்கிறோம் என்றே தெரியவில்லை!

உண்மையில் நம்மில் பல பேருக்கு எதற்காக குளிக்கிறோம் என்றே தெரியவில்லை. அழுக்கு போகவா…..! நிச்சயம் கிடையாது…..! மாத மளிகை பட்டியலில் சோப்பு டப்பாவை வாங்கி அடுக்கி வைத்து கொள்கிறோம்.

சோப்பு எதற்காக கண்டுபிடிக்கப்பட்டது தெரியுமா… கப்பலில் இயந்திரத்தோடு இயந்திரமாக வேலை செய்வோருக்கு உடலில் திட்டு திட்டாக ஆயில் படிந்துவிடும். இந்த கடின எண்ணெய்யை . . . → தொடர்ந்து படிக்க..