|
|
அச்செடுக்க
9,545 முறை படிக்கப்பட்டுள்ளது!
Posted on 19th January, 2014 சமையல் எண்ணெய், பால், கிரைண்டர், வலி நிவாரணி போன்ற பொருட்கள் மற்றும் வங்கிச் சேவை, செல்போன் சேவை குறித்து சர்வே மற்றும் ஆய்வு நடத்தி முடிவுகளை வெளியிட்டிருந்தது சென்னையைச் சேர்ந்த நுகர்வோர் விழிப்பு உணர்வு நிறுவனமான கான்சர்ட். எந்த பற்பசை (டூத் பேஸ்ட்) சிறப்பானதாக இருக்கிறது என்பது குறித்த ஆய்வு முடிவை வெளியிட்டுள்ளது.
நாம் சிறுவர்களாக இருக்கும்போது நம் தாத்தா/பாட்டி அல்லது அப்பா/அம்மா, ”டூத் பேஸ்ட்டை சாப்பிடாதே..!” என்று கண்டிப்பார்கள். அந்த எச்சரிக்கை யையும் . . . → தொடர்ந்து படிக்க..
அச்செடுக்க
7,313 முறை படிக்கப்பட்டுள்ளது!
Posted on 24th December, 2013 கை கால்களில் விறைப்பு எரிவு வலிகள் வருவது எதனால்?
‘இரும்பிலைதான் குசினிச் சாமான்களை எல்லாம் வாங்கி வைக்க வேணும் போலை கிடக்கு. சாப்பாட்டு பிளேட் கப் கிளாஸ் என்று ஒண்டும் மிச்சமில்லாமல் போட்டு உடைக்கிறாள்’ தனது மனைவிமேல்தான் அவருக்கு அவ்வளவு கோபம். அவளும் கோபக்காரியா? திரைப்படங்களில் காண்பது போல ஆவேசமான மனைவியா என்று எண்ணி அவளது முகத்தைப் பார்த்தேன். சாந்த சொரூபியாகத்தான் தோற்றமளித்தாள்.
சாந்தசெரூபி போட்டு உடைப்பது ஏன்?
. . . → தொடர்ந்து படிக்க..
அச்செடுக்க
3,867 முறை படிக்கப்பட்டுள்ளது!
Posted on 12th December, 2013 அப்பன்டிசைடிஸ் என்ற பெயரைக் கேள்விப் படாதவர்கள் இருக்க முடியாது. இருந்தபோதும் நோய் பற்றிய தெளிவு பலருக்கும் இல்லை. நாம் உண்ணும் உணவில் உள்ள கல் குடலில் போய் அடைப்பதால்தான் ஏற்படுகிறது எனத் தவறாக எண்ணுபவர்கள் இன்றும் பலர் இருக்கிறார்கள்.
வயிற்றின் வலதுபுற கீழ்ப்பகுதியில்
அப்பன்டிக்ஸ் என்பது எமது உணவுக் கால்வாயின் பெருங்குடலில் விரல் போல நீளவடிவான ஒரு சிறு பை போன்ற உறுப்பு ஆகும். இது எமது வயிற்றின் . . . → தொடர்ந்து படிக்க..
அச்செடுக்க
4,781 முறை படிக்கப்பட்டுள்ளது!
Posted on 10th December, 2013 தமிழ்நாட்டின் மாநிலப் பறவை மரகதப்புறா (Emerald Dove) பச்சை நிற இறகுகளும் சிவப்பு நிற அலகும் கொண்ட இந்த மரகதப்புறா மட்டுமல்ல, எல்லாப் புறாக்களும் தங்கள் குஞ்சுகளைப் பாலூட்டி வளர்க்கின்றன என்பது தெரியுமா?
புறாவின் பாலானது அதன் தொண்டைப் பகுதியிலுள்ள ‘crop’ எனப்படும் தொண்டைப் பையின் உட்புற சுவரின் திசுக்களில் சுரக்கிறது. இதனால் புறாப்பால் ‘crop milk’ எனவும் அழைக்கப் படுகிறது. திரவமாக இல்லாமல் பாலாடை போன்று சற்றே கெட்டியாக இருக்கும் . . . → தொடர்ந்து படிக்க..
அச்செடுக்க
6,569 முறை படிக்கப்பட்டுள்ளது!
Posted on 10th December, 2013 நம் மண்ணில் நெல்லும் கரும்பும் காய்கறிகளும் செழித்து விளைந்து நிற்க, உழவர் பண்டிகையான ‘பொங்கல்’ விழாவை ஊருடனும் உறவுகளுடனும் சேர்ந்து மகிழ்ச்சி ‘பொங்கப் பொங்க’ கொண்டாடுகிறோம்! அந்த நெல்லையும் கரும்பையும் பல பயிர்களையும் ஆசையுடனும் அக்கறையுடனும் விளைவிப்பது நம்நாட்டின் ‘முதுகெலும்பு’ எனப்படும் விவசாயிகள்தான். அவர்கள்தானே இப்பண்டிகையின் கதாநாயகர்கள்! அப்படி சில வி.ஐ.பி., விவசாயிகள் இங்கே பேசுகிறார்கள்…
‘என் வழி… இயற்கை வழி’ என்று விளம்பரப் பலகை வைக்காத குறையாக, இயற்கை . . . → தொடர்ந்து படிக்க..
அச்செடுக்க
8,825 முறை படிக்கப்பட்டுள்ளது!
Posted on 5th December, 2013 சுவாசக் கருவியை அணிந்து கொண்டு பலரும் கடலுக்குள் ஜாலியாக மீன்களுக்கு நடுவே வளைய வளைய நீந்தி வருகின்ற காட்சிகளை டிவியில் டிஸ்கவரி போன்ற சேனல்களில் பார்த்திருப்பீர்கள். இதைப் பார்க்கும் போது நமக்கும் இது போன்று கடல் நீருக்குள் நீந்துவதற்கு ஆசையாக இருக்கும்.
இப்படி கடலில் நீந்துபவர்கள் எவ்வளவு ஆழம் வரை செல்வர் என்று உங்களால் ஊகித்துக் கூற முடியுமா? வெறும் 10 மீட்டர் ஆழம் தான். இது பெரிய ஆழமில்லை. ஆனால் . . . → தொடர்ந்து படிக்க..
அச்செடுக்க
16,512 முறை படிக்கப்பட்டுள்ளது!
Posted on 4th December, 2013 ‘என்ன கொழுப்பு அதிகமாயிடுச்சா?’ என்று கேட்டால், எல்லோருக்கும் கோபம்தான் வரும். கொழுப்பு அதிகரிப்பதுதான் இன்றைக்கு பல்வேறு உடல் நலக் குறைபாடுகள் வருவதற்குக் காரணம். குறிப்பாக உடல் பருமன், மாரடைப்பு உள்ளிட்ட இதய நோய்கள் வருவதற்கு, கொலஸ்ட்ரால் அளவு அதிகரிப்பதுதான் முக்கியக் காரணம். கொலஸ்ட்ரால் என்றால் என்ன, அது ஆபத்தானதா, கண்டறிவது எப்படி என்று இதய நோய் சிகிச்சை நிபுணர் ஆர்.ரவிகுமாரிடம் கேட்டோம். ‘இன்றைக்கு ‘கொலஸ்ட்ரால்’ என்ற பெயரைச் சொன்னாலே, ஏதோ மிகப் பெரிய அபாயகரமான . . . → தொடர்ந்து படிக்க..
அச்செடுக்க
8,709 முறை படிக்கப்பட்டுள்ளது!
Posted on 28th November, 2013 சாக்கடல் (Dead Sea) என்று ஏன் அழைக்கப்படுகிறது?
இங்கு 8.6 மடங்கு உப்புச்செரிவு அதிகமானதால் உயிரினங்களின் குடி நீராகவோ வாழ்விடமாகவோ இது இருப்பதில்லை. அதனால் சாக்கடல் எனப்படுகிறது. பல ஆறுகளில் இருந்து வரும் நீர் இங்கு தேங்கி நிற்கின்றது. ஆனால், இங்கிருந்து வேறு எங்கும் நீர் விரையமாவதில்லை. ஆறுகளின் நீர் இறுதியாக வந்தடையும் இடம் என்பதால் டெட் சீ/ சாக்கடல் எனப்படுகிறது.
சாக்கடல் என்ற பெயரைக் கேட்கும்போது எந்த ஒரு உயிரினமும் . . . → தொடர்ந்து படிக்க..
அச்செடுக்க
13,510 முறை படிக்கப்பட்டுள்ளது!
Posted on 17th November, 2013 ஒரு நிமிடத்தில் நாம் சராசரியாக 12 முதல் 14 தடவை மூச்சை உள்ளிழுத்து, உள் நிறுத்தி, வெளியிடுகிறோம்.ஒரு முறை மூச்சினை உள்ளே இழுக்கும் போது குறைந்த பட்சம் அரை லிட்டர் காற்று உள்ளிழுக்கப் படுகிறது. இவை எல்லாம் இயல்பு நிலையில் நடை பெறும் மூச்சின் கூறுகள் ஆகும்.ஒருவரின் உடல் அமைப்பு, உடலின் தேவை, உடலின் செயல்பாடுகளைப் பொறுத்து இந்த அளவு மாறுபடும்.உடலமைப்பைப் பொறுத்து நுரையீரலின் கொள்ளளவும், உள்ளிழுக்கப் படும் காற்றின் அளவும் மாறுபடும்.அடிப்படையில் நம்மில் . . . → தொடர்ந்து படிக்க..
அச்செடுக்க
3,007 முறை படிக்கப்பட்டுள்ளது!
Posted on 11th November, 2013 பிளாஸ்டிக் என்னும் சொல்லுக்கு “எளிதாக அச்சில் வார்க்கக்கூடியது” எனப் பொருள். பிளாஸ்டிக் 1862ஆம் ஆண்டு இங்கிலாந்து நாட்டில் அலெக்சாண்டர் பார்க்ஸ் என்பவரால் கண்டுபிடிக்கப் பட்டது. தொடக்கத்தில் இதனை செல்லுலாய்ட் என அழைத்தனர். இப்போதும் சில இடங்களில் இப்பெயரே வழங்கி வருகிறது. செல்லுலாய்ட் கண்டுபிடிக்கப்பட்ட பிறகு, பல்வேறு வகைப்பட்ட பிளாஸ்டிக்குகள் கண்டுபிடிக்கப்பட்டு, பல வகைப் பொருட்கள் விற்பனைக்கு வந்து விட்டன. குறைந்த எடை, வளைந்து கொடுக்கும் தன்மை, காற்று, தண்ணீர் ஆகியவற்றால் சிதையாத தன்மை போன்றவற்றால் . . . → தொடர்ந்து படிக்க..
அச்செடுக்க
8,320 முறை படிக்கப்பட்டுள்ளது!
Posted on 10th November, 2013 பூகம்பம் ஏன் ஏற்படுகிறது? சுனாமி ஏன் நம்மை தாக்குகிறது? எரிமலை ஏன் அப்ப அப்ப நிலக்கரியில் ஓடும் புகைவண்டி போல் புகையை வெளியாக்குது போதாக்குறைக்கு தீயையும் கக்குது இதுவெல்லாம் ஏன் ஏன் ஏன் என்று சந்தானம் பாணில கேக்கத்தோனுதா வாங்க பார்ப்போம் மேலே குறிப்பிட்ட எல்லா நிகழ்வுகளுக்கும் காரணகர்த்தா world techtonic plate என்று சொல்லக்கூடிய பூமித் தட்டுக்கள் அல்லது பூமி சில்லுகள்.
இவை அனைத்தும் மிகப் பெரிய நெருப்புக்கோளமான நமது பூமியில் பொருத்தப்பட்டு . . . → தொடர்ந்து படிக்க..
அச்செடுக்க
5,373 முறை படிக்கப்பட்டுள்ளது!
Posted on 8th November, 2013 இந்த வேகமான அவசர உலகில் மனிதர்கள் தேவையென்ற இலக்கை அடைய வழியும் தெரியாமல் நேரமும் போதாமல் அல்லல்படும் பொழுது எங்கே அவர்கள் தங்கள் உடல் ஆரோக்கியத்தைப் பற்றி கவலைப்பட போகிறார்கள். ஆனால் சுவர் இல்லையேல் சித்திரம் எப்படி வரைவது அதனால நம் ஆரோக்கியம் பற்றி விழிப்புணர்வு நமக்கு மிக அவசியமான ஒன்று.
முதுகு தண்டுவட தட்டு:
ஒரு சிலருக்கு இடுப்பில் திடீரென வலி உண்டாகி பரவும். அதிக நேரம் ஒரே இடத்தில் . . . → தொடர்ந்து படிக்க..
|
|