தலைப்புகளில் தேட

தேதிவாரியாக பதிவுகள்

October 2026
S M T W T F S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031

UserOnline

இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 2,904 முறை படிக்கப்பட்டுள்ளது!

ரமழானுக்குப் பின் நாம்

ரமழான் மாதத்தில் நோன்பை நல்ல முறையில் நிறைவேற்றவும், தொழுகை, குர்ஆன் ஓதுதல், பிரார்த்தனை, திக்ரு, தர்மம்.. போன்ற ஸாலிஹான அமல்களை செய்யவும் வாய்ப்பளித்த அல்லாஹ்விற்க்கே எல்லா புகழும். அவனது அருளும் சாந்தியும் நபி (ஸல்) அவர்கள் மீதும், அவர்களது குடும்பத்தினர்கள், தோழர்கள், அவர்களை வாய்மையுடன் பின்பற்றி வந்தவர்கள் அனைவர்கள் மீதும் என்றென்றும் நிலவட்டுமாக!

கண்ணியத்திற்குரிய சகோதரர்களே! ரமழானில் எந்த இறைவனோ அவன் தான் எல்லா மாதங்களுக்கும் இறைவன். அவனுக்கு கட்டுப்பட்டு வணக்க . . . → தொடர்ந்து படிக்க..

இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 2,914 முறை படிக்கப்பட்டுள்ளது!

நோன்புப் பெருநாள் குத்பா பேருரை 1433

நோன்புப்பெருநாள் குத்பா பேருரை

வழங்கியவர்: மௌலவி. யாஸிர் ஃபிர்தௌஸி, அழைப்பாளர், ஜுபைல் தஃவா நிலையம் – தமிழ் பிரிவு நாள்: ஆகஸ்டு 19, 2012 ஞாயிற்றுக்கிழமை இடம்: ஜுபைல் போர்ட் கேம்ப்

ஆடியோ : (Download) {MP3 format -Size : 27.5 MB}

Audio Player : [audio:http://suvanacholai.com/video/NonbuPerunaal1433_Yasir.mp3]

From: http://www.SuvanaCholai.com

இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 5,380 முறை படிக்கப்பட்டுள்ளது!

ஷவ்வால் நோன்பு!

ரமளான் மாதத்தின் கடமையான நோன்புகளைத் தொடர்ந்து வரும் ஷவ்வால் மாதத்தின் முதல் நாளை ஈகைப் பெருநாளாக நாம் கொண்டாடுகிறோம்.

இதனைத் தொடர்ந்து ஷவ்வால் மாதத்திலும் உபரியாக ஆறு நோன்புகள் நோற்பது நபி பெருமானார் (ஸல்) அவர்கள் காட்டித்தந்த வழிமுறையாகும். எனினும் இந்த ஷவ்வால் நோன்பைக் கடமையான நோன்பு என்று கருதக் கூடாது.

நபி(ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்

“ரமளான் மாதத்தின் நோன்பையும் நோற்று, பின்னும் அதைத் தொடர்ந்து . . . → தொடர்ந்து படிக்க..

இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 7,434 முறை படிக்கப்பட்டுள்ளது!

புனித ரமழான்‎ புண்ணியங்களின்‎ பூக்காலம்‎

புகழ் அனைத்தும் அல்லாஹ் ஒருவனுக்கே! அவனது அருளும் சாந்தியும் நபி(ஸல்) அவர்கள் மீதும் அவர்களது குடும்பத்தினர்கள் மற்றும் தோழர்கள்; அனைவர் மீதும் உண்டாவதாக!

சிறப்புமிக்கதொரு மாதம் நம்மிடம் வந்துள்ளது. இது ஓர் உன்னதமான பருவ காலம் இம்மாதத்தில் அல்லாஹ் பெருமளவு கூலிகளை வழங்குகின்றான். ஏராளமான அருட்கொடைகளை அளிக்கிறான். ஆர்வமுள்ள ஒவ்வொருவருக்கும் இம்மாதத்தில் நன்மையின் வாயில்களை திறந்து விடுகின்றான். இம்மாதம் வெகுமதிகள் மற்றும் அன்பளிப்புகளின் மாதம். இம்மாதத்தில் ஒரு முஸ்லிம் கடைபிடிக்க வேண்டிய . . . → தொடர்ந்து படிக்க..

இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 3,833 முறை படிக்கப்பட்டுள்ளது!

இஸ்லாம் காட்டும் ஊழலற்ற ஆட்சி!

ஸ்பெக்ட்ரம் – சுடுகாடு – சவப்பெட்டி – பேர்பர்ஸ்

இவை எல்லாம் என்ன? தி.மு.க – அதிமுக – பாரதீய ஜனதா – காங்கிரஸ் போன்ற கட்சிகளின் ஊழல் பட்டியல்கள். இந்த கட்சிகள் அனைத்தும் தங்களது கொள்கைகளில் நேரெதிராக இருந்தாலும் ஊழல் செய்வதில் ஒருவருக்கு மற்றொருவர் சற்றும் சளைத்தவர்கள் அல்ல எனபது ஒவ்வொரு நாளும் செய்திகளின் மூலம் நமக்கு தெரிய வருகிறது. ஏன் இப்படி நடக்கிறது? இவர்கள் அனைவரும் பத்தரைமாற்று தங்கங்கள் என்றல்லவா இத்தனை . . . → தொடர்ந்து படிக்க..

இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 3,862 முறை படிக்கப்பட்டுள்ளது!

நாளைய சிந்தனை

நிரந்தரமற்ற இவ்வுலக வாழ்க்கை என்பது ஒரு சோதனை என்பதை நாம் உணர்ந்து அழியக்கூடிய பொருள்களின் மீது பேராசைக் கொள்வதை விட்டு விட்டு நிரந்தரமான மறுமை வாழ்விற்கு தேவையான நல்லறங்களின் மீது நாட்டம் கொண்டவர்களாக அதிகமதிகம் நற்காரியங்களைச் செய்வோமாக! வல்ல அல்லாஹ் நம் அனைவருக்கும் அதற்கு அருள் புரிவானாக.

மரணம்

மரணம் இறைபடைப்பில் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்று. மரணத்திலிருந்து எந்த மனிதரும் தப்பிக்க இயலாது.

கண்ணியமிக்க . . . → தொடர்ந்து படிக்க..

இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 2,982 முறை படிக்கப்பட்டுள்ளது!

இந்தியாவில் இஸ்லாம் – 9

செப்பேடு தரும் செய்தி

தரிசாப்பள்ளி செப்பேட்டில் காணப்படும் மூன்று மொழிகளில் போடப்பட்டுள்ள சாட்சி கையொப்பங்களைப் பற்றி டி.ஏ. கோபிநாதராவ் பின்வருமாறு குறிப்பிடுகிறார்…

Unfortunately the missing plates are the first and last plates of second grant. They are very important because the first plate contains the name the of sovereign who granted it and the time . . . → தொடர்ந்து படிக்க..

இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 2,465 முறை படிக்கப்பட்டுள்ளது!

IGC -ரமளான் சிறப்பு நிகழ்ச்சிகள் – 2012

مركز الارشاد الاسلامي – برامج رمضان التميلية இடம்: சுவனத்து பூஞ்சோலை அரங்கம் மங்காப், பிளாக் 4, தெரு 21, பில்டிங் 65, கீழ்தளம் உதயம் ரெஸ்டாரண்ட் மற்றும் அல்முல்லா எக்ஸ்சேஞ்ச் எதிரில் இன்ஷா அல்லாஹ் ரமளான் 1 முதல் 20 வரை இஷா தொழுகையை தொடர்ந்து இரவுத் தொழுகை, சிறப்புச் சொற்பொழிவு

இன்ஷா அல்லாஹ் ரமளான் 21 முதல் 30 வரை மணி 11:30 முதல் 11:45 வரை: இரவுத் தொழுகை (2 ரகஅத்) . . . → தொடர்ந்து படிக்க..

இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 3,358 முறை படிக்கப்பட்டுள்ளது!

அஹ்மது தகிய்யுத்தீன் இப்னு தைமிய்யா

மாபெரும் மார்க்க மேதையும் சீர்திருத்தவாதியுமான அஹ்மது தகிய்யுத்தீன் இப்னு தைமிய்யா என்பவர் ஹிஜ்ரி 661-ஆண்டு ரபீவுல் அவ்வல் 10(கி.பி 1263 ஜனவரி 22 ஆம் நாள்)சிரியாவில் ஹர்ரான் என்ற ஊரில் பிறந்தார். தந்தை ஷிஹாபுத்தீன் அப்துல் ஹலீம் இப்னு தைமிய்யா திமிஷ்கிலுள்ள (டமாஸ்கஸ்) ஜாமி வுல் உமவீ மஸ்ஜித் இமாமாகவும், தாருல் ஹதீதுஸ்-ஸகரிய்யா பேராசிரியராகவும் பணியாற்றி வந்தார். இவரின் பாட்டனார் அபுல் பரகாத் மஜ்துத்தீன அப்துஸ்ஸலாம் இப்னு தைமிய்யா (ஹி-652) ஹன்பலி மத்ஹபின் சிறந்த . . . → தொடர்ந்து படிக்க..

இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 2,967 முறை படிக்கப்பட்டுள்ளது!

இந்தியாவில் இஸ்லாம் – 8

செம்பேடு தரும் சான்றுகள்..

சேரமான் பெருமாள் என்று வரலாற்றில் புகழ் பெற்ற முதல் சேரவம்சத்தின் கடைசி பெருமாளுடைய பெயர் ‘இராஜசேகர வர்மா’ என்பதாகும். இவரது ஆட்சிக் காலம் கி.பி.750க்கும் 850க்கும் இடைப்பட்ட காலம் என திருவிதாங்கூர் ஆர்க்கியாளஜிக்கல் சீரிஸின் (T.A.S) ஆசிரியர் திரு. டி.ஏ. கோபிநாதராவ் (T.A.S Vol.11 Page 9) குறிப்பிடுகிறார். கேரளாவில் சங்கனாச்சேரியின் அருகாமையில் உள்ள ‘வாழப்பள்ளி’ என்ற ஊருக்கு இவர் செப்பேடு ஒன்று எழுதிக் கொடுத்துள்ளார். அந்த . . . → தொடர்ந்து படிக்க..

இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 3,104 முறை படிக்கப்பட்டுள்ளது!

ரமளான் இரவு வணக்கங்கள்

புனித ரமளான் மாதத்தில் தனியாக விஷேசமான வணக்கங்கள் ஏதேனும் உள்ளனவா? உள்ளன என்றால் அவை யாவை? இதனை நாம் அறிந்து கொள்வது அவசியமானதாகும். ஏனெனில் புனித ரமளானில் நாம் செய்யும் ஒவ்வொரு நல்லமல்களுக்கும் ஒன்று முதல் 700 மடங்கு நன்மைகளை இறைவன் தருவதாக நபி(ஸல்) அவர்கள் கூறிச் சென்றிருக்கிறார்கள். அவ்வளவு மகத்துவமிக்க முக்கியமான இத்தினங்களில் நாம் செய்யும் செயல்களின் அடிப்படை நபி(ஸல்) அவர்கள் காட்டித் தந்தவை தானா என அறிந்து செய்வது மிகவும் அவசியமானதாகும்.

. . . → தொடர்ந்து படிக்க..

இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 3,090 முறை படிக்கப்பட்டுள்ளது!

ரமழானை வரவேற்போம் – பத்து அம்சத் திட்டம்

ரமழான் எனும் புனித மாதம் அண்மிவிட்டது. இந்த ஆண்டின் ரமழானை அடைந்துகொள்ளாமல் மரணித்துவிட்ட முஸ்லிம்கள் அனைவருக்கும் நம் பிரார்த்தனைகள் உரித்தாகட்டும். இதை நமக்கு அடையத் தந்த அல்லாஹ்வைப் புகழ்கிறோம்! இந்தப் புனித மாதத்தை எதிர்நோக்கும் விதத்தில் ஆவலுடன் முஸ்லிம் சமுதாய அமைப்புகளும் தனி நபர்களில் பலரும் பல்வேறு நினைவூட்டல் நிகழ்வுகளும் அறிவுரைகளும் வழங்கி அவற்றின் மூலம் முஸ்லிம்கள் அதிகமாக நன்மைகளைப் பெறவேண்டும் என்ற நன்நோக்கத்தில் மிகவும் ஆர்வத்துடன் செயல் படுகின்றனர், அல்ஹம்துலில்லாஹ்!

. . . → தொடர்ந்து படிக்க..