Google Search Engine

தலைப்புகளில் தேட

தேதிவாரியாக பதிவுகள்

December 2024
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  

Archives

Visitors since 22-3-13

Free counters!
இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 2,509 முறை படிக்கப்பட்டுள்ளது!

கண்ணால் காண்பதும் பொய்.. காதால் கேட்பதும் பொய்

கண்ணால் காண்பதும் பொய்.. காதால் கேட்பதும் பொய்.. தீர விசாரித்தறிவது..?

ஆங்கிலத்தில் paradigm என்றொரு வார்த்தை உண்டு. அதற்கு தமிழில் அர்த்தம் சொல்வதென்றால் ‘ஒரு மனிதரைப் பற்றியோ, ஒரு பொருளைப் பற்றியோ, ஒரு சம்பவத்தைப் பற்றியோ நாம் நம் மனதிற்குள் ஏற்படுத்தி வைத்திருக்கும் மனப்பிம்பம், அல்லது அதைப்பற்றிய நமது கண்ணோட்டம், கருத்து’ எனலாம். அவ்வாறு நாம் ஏற்படுத்தி வைத்திருக்கும் கருத்து சரியானதாகத்தானிருக்கும் என்பதற்கு எந்த உத்தரவாதமுமில்லை. கண்ணால் காண்பதும் பொய்.. காதால் . . . → தொடர்ந்து படிக்க..

இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 2,529 முறை படிக்கப்பட்டுள்ளது!

முன்மாதிரி அரசியல் தலைவர்

ஹதீஸ் விளக்கம் : புஹாரி 2739 – மௌலவி இஸ்மாயில் ஸலபி

‘அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மரணிக்கும் போது திர்ஹமையோ, தீனாரையோ (வெள்ளிக் காசையோ, தங்கக் காசையோ), அடிமைகளையோ, வேறு எதனையுமோ விட்டுச் செல்லவில்லை. தமது வெள்ளைக் கோவேறு கழுதையையும், தம்முடைய ஆயுதங்களையும் தர்மமாக வழங்கிச் சென்ற ஒரு நிலத்தையுமே அவர்கள் விட்டுச் சென்றார்கள்’ அறிவிப்பவர்: ஜுவைரியா பின்த் ஹாரிஸ் (ரலி) நூல்: புகாரி 2739, 2839, 2912, 3098, 4461

பத்து . . . → தொடர்ந்து படிக்க..

இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 3,580 முறை படிக்கப்பட்டுள்ளது!

ஸலாம் கூறுதல்‏

மனிதர்களில் அல்லாஹ்விடம் உயர்வானவர்கள் ஸலாத்தினைக் கொண்டு ஆரம்பிப்பவர்கள் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபுஉமாமா (ரலி) நூல்: அபுதாவூது, திர்மிதி, அஹ்மத்

உனக்கு அறிமுகமானவரோ அறிமுகமில்லாதவரோ எவராயினும் நீ ஸலாம் கூறிக்கொள். இது இஸ்லாத்தின் சிறப்புக்களில் ஒன்றாகும் என பெருமானார் கூறினார்கள். (நூல்: புஹாரி)

தெரிந்தவருக்கு மட்டும் ஸலாம் கூறுவது யுக முடிவு நாளின் அடையாளம் என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறியுள்ளனர். நூல்: ஹாகிம் 4/493

ஒருவர் நபி(ஸல்) அவர்களிடம், ‘இஸ்லாமி(யப் பண்புகளி)ல் . . . → தொடர்ந்து படிக்க..

இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 2,858 முறை படிக்கப்பட்டுள்ளது!

இஸ்லாமிய பெண்களின் பொறுப்புக்கள் (AV)

பெண்கள் தங்களது சரியான பொறுப்புக்களை விட்டு விட்டு தேவையற்ற பொறுப்புக்களை எடுத்துக் கொண்டுள்ளதால் .. குடும்பம், குழந்தைகள் மற்றும் சமுதாயம் எப்படி சீரழியும் என்பதையும் எப்படி சரிபடுத்துவது என்பதையும் மெளலவி இம்தியாஸ் அவர்கள் குர்ஆன் ஹதீஸ் அடிப்படையில் விளக்கம் அளிக்கின்றார்கள். இலங்கையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியை நமது வாசகர்கள் பார்த்து – கேட்டு பயன்பட வீடியோ ஆடியோ இங்கே தரப்பட்டுள்ளது. . . . → தொடர்ந்து படிக்க..

இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 2,494 முறை படிக்கப்பட்டுள்ளது!

மீலாது விழா கொண்டாடலாமா?

”எவர் அவருடைய (முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களின்) கட்டளைக்கு மாறு செய்கிறார்களோ அவர்கள் தங்களை சோதனை பிடித்துக் கொள்வதையோ, அல்லது தங்களை நோவினை தரும் வேதனை பிடித்துக்கொள்வதையோ அஞ்சிக் கொள்ளட்டும். (அல்குர்ஆன் 24:63)

நபி(ஸல்)அவர்களின் பிறந்த நாள் விழா: –

ரபீவுல் அவ்வல் என்ற உடனேயே அது நபி(ஸல்) அவர்கள் பிறந்த மாதமல்லவா! என்ற நினைவு வருகிறது. முஸ்லிம்களுக்கு மத்தியில் இவ்வளவு பிரபலமாகியிருக்கும் இம்மாதத்தில் நடைபெறும் செயல்கள் அல்லாஹ்வும் அவனது தூதர்(ஸல்) அவர்களும் வழிகாட்டியதின் அடிப்படையில் அமைய . . . → தொடர்ந்து படிக்க..

இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 2,498 முறை படிக்கப்பட்டுள்ளது!

உலகம் ஒரு சோதனைக் கூடம் – AV

மௌலவி முபாரக் மஸ்ஊத் மதனி அவர்கள் 27-01-2011 அன்று இஸ்லாமிய கலாச்சார மையம் – தம்மாமில் உலகம் ஒரு சோதனைக் கூடம என்ற தலைப்பில் உரையாற்றினார்கள். வாசகர்கள் அந்த உரையினை வீடியோ – ஆடியோ வழியில் கேட்க / டெளன்லோடு செய்ய வசதி செய்யப்பட்டுள்ளது. . . . → தொடர்ந்து படிக்க..

இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 2,906 முறை படிக்கப்பட்டுள்ளது!

காதலர்தினம் ஒரு இஸ்லாமியபார்வை

காதலர்தினம் ஒரு இஸ்லாமியபார்வை!!! & காதலர் தினம் எனும் கலாச்சார சீரழிவு

பிப்ரவரி 14 அன்று காதலர்தினம் உலகம் முழுவதும் அனுஸ்டிக்கப்படுகிறது. காதல் என்றால் ஒரு பெண்ணும்-ஆணும் விரும்புவது என்ற ஒன்றுதான் அர்த்தம் என்ற ரீதியில் அர்த்தம் செய்யப்படுகிறது. ‘லவ்’ என்ற இந்த வார்த்தைக்கு அன்பு, நேசம், காதல் என்ற அர்த்தங்கள் உண்டு. இந்த காதலர்தினம் எவ்வாறு உருவாக்கப்பட்டது என்பதை முதலில் அறிந்துகொண்டு, இந்த தினம் பற்றிய இஸ்லாத்தின் நிலைப்பாடு என்ன என்பதை பார்ப்போம்.

. . . → தொடர்ந்து படிக்க..

இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 5,082 முறை படிக்கப்பட்டுள்ளது!

மனிதரில் சிறந்தவர் மனைவியிடம் சிறந்தவரே!

மௌலவி அலி அக்பர் உமரி

‘இறை நம்பிக்கை கொண்டவர்களில் முழுமையான இறை நம்பிக்கை கொண்டவர் அவர்களில் நற்குணம் கொண்டவரே! உங்களில் சிறந்தவர் உங்கள் மனைவியரிடம் நற்பண்பால் சிறந்து விளங்குபவரே!’ என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), நூல்: திர்மிதி எண்: 1082)

ஒருவர் ஊருக்கு நல்லவராகி விடலாம். ஆனால் வீட்டுக்கு நல்லவரானால் தான் அவர் அல்லாஹ்விடம் நல்லவராவார் என்ற உயரிய பண்பை நபி (ஸல்) அவர்கள் நமக்கு எடுத்துக் . . . → தொடர்ந்து படிக்க..

இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 14,614 முறை படிக்கப்பட்டுள்ளது!

இஸ்லாமிய திருமணம்

(எங்கள் இறைவா) உன்னையே நாங்கள் வணங்குகிறோம்: உன்னிடமே நாங்கள் உதவி தேடுகிறோம். நீ எங்களை நேரான வழியில் நடத்துவாயாக! (அல்குர்ஆன் 1:4,5)

அல்லாஹ் அறிவுறுத்துகிறான்:

நீங்கள் சிந்தித்து நல்லுணர்வு பெறுவதற்காக நாம் ஒவ்வொரு பொருளையும் ஜோடி ஜோடியாகப் படைத்தோம். (அல்குர்ஆன் 51:49,)

 

மணம் முடித்து மகிழுங்கள்:

ஓ மனிதர்களே! உங்கள் இறைவனுக்குப் பயந்து நடந்து கொள்ளுங்கள், அவன் உங்கள் அனைவரையும் ஒரே ஆத்மாவிலிருந்து படைத்தான் அவரிலிருந்தே அவர் மனைவியையும் படைத்தான், இவ்விருவரிலிருந்து அனேக ஆண்களையும், பெண்களையும் . . . → தொடர்ந்து படிக்க..

இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 2,881 முறை படிக்கப்பட்டுள்ளது!

பெண்களின் வழிபாட்டுரிமை

A.H. பாத்திமா ஜனூபா

இஸ்லாம் பெண்களுக்கு வழங்கியிருக்கும் உரிமைகள் அவர்களின் உலக இலாபங்களை அடையும் விஷயத்தில் மட்டுமல்லாது ஆன்மீக விஷயத்திலும் ஆண்களுக்கு கொடுக்கும் உரிமைகளை பெண்களுக்கு மறுக்கவில்லை. உதாரணத்திற்கு ஆண்கள் தங்களின் ஜவேளை தொழுகையை நிலைநாட்ட பள்ளிவாயில்களை நோக்கி செல்வது அவர்களின் கடமை என்பதையும், அவ்வாறு செல்லாதவர்கள் நபியவர்களால் கண்டிக்கப்படுகிறார்கள் என்பதும் நாம் அறிந்த உண்மையே. இவ்வாறு ஆண்கள் பள்ளிக்கு வருவதை கடமையாக்கிய இஸ்லாம் பெண்களின் நலன் கருதியும், பெண்கள் வீட்டையும்,குழந்தையும் பராமரிப்பவர்களாக இருக்கிறார்கள் . . . → தொடர்ந்து படிக்க..

இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 2,628 முறை படிக்கப்பட்டுள்ளது!

வறுமையின் வாசலில் வசந்தம்!!!

மதீனாவில் அது ஒரு பஞ்சக் காலம். எங்கும் பட்டினி. வறுமையின் பிடியில் சிக்கித் தவித்த ஒரு பெண் தன் இரு பெண் குழந்தைகளுடன் ஒரு நாள் அன்னை ஆயிஷா(ரலி) அவர்களின் வீட்டுக்கு வந்து தங்கள் பசிக்கு ஏதாவது தருமாறு கேட்டாள்.

விசுவாசிகளின் அன்னையான ஆயிஷா (ரலி) அவர்கள் தங்கள் வீடு முழுவதும் தேடினார் – வந்த விருந்தாளிகளுக்கு ஏதாவது கொடுக்க! ஒன்றும் கிடைக்கவில்லை. அன்னைக்கு அளப்பரிய சங்கடம். மீண்டும் தேடினார். இறுதியில் மூன்று பேரீச்சம் பழங்களைக் . . . → தொடர்ந்து படிக்க..

இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 2,140 முறை படிக்கப்பட்டுள்ளது!

குர்ஆன் முஸ்லிம்களுக்காக மட்டும் அருளப்பட்டதா?

இல்லை. அகிலங்களின் ஏக இறைவனால் முழு மனிதகுலத்திற்கும் வாழ்க்கை நெறியாக அருளப்பட்டது தான் திருக்குர்ஆன். இஸ்லாத்தின் பார்வையில் இறைவனின் இறுதிவேதமாகியத் திருக்குர்ஆனை தனது வாழ்க்கை நெறியாக ஏற்றுக் கொண்டவர்கள் முஸ்லிம்கள். திருக்குர்ஆன் கற்றுத் தரும் வாழ்க்கை முறையை தங்களது வாழ்க்கை நெறியாக ஏற்காதவர்கள் முஸ்லிமல்லாதவர்கள்.

இந்த அடிப்படையில் நோக்கினாலே திருக்குர்ஆன் உலக மக்கள் அனைவருக்காகவும் அருளப்பட்டது என்பதைத் தெளிவாகப் புரிந்து கொள்ள முடியும்.

இக்கேள்விக்கு திருக்குர்ஆன் கூறும் பதிலை கவனித்தாலும் அது உலக மக்கள் அனைவரையும் நல்வழிப்படுத்த . . . → தொடர்ந்து படிக்க..