Google Search Engine

தலைப்புகளில் தேட

தேதிவாரியாக பதிவுகள்

December 2024
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  

Archives

Visitors since 22-3-13

Free counters!
இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 2,452 முறை படிக்கப்பட்டுள்ளது!

ஒளிமயமான எதிர்காலம்!

எது? எது? எப்ப? எப்ப?

பதினாறாம் லூயி மன்னர் மட்டும் ஒரு சின்ன ஆபரேஷன் செய்து கொண்டிருந்தால் பிரெஞ்சுப் புரட்சியே நடந்திருக்காது என்று யாராவது சொன்னால் நம்புவீர்களா? நம்பத்தான் வேண்டும். ஓரளவு உண்மைதான் இந்தச் செய்தி.

பதினாறாம் லூயி மன்னரின் பிறப்புறுப்பில் ஒரு சின்ன குறைபாடு. இறுக்கமாகத் தோல்மூடியிருந்தது. அதைச் சரிசெய்ய சின்ன அறுவை சிகிச்சை செய்ய வேண்டும். அந்த அறுவை சிகிச்சை உலக முழுவதும் இன்று ஒரு மதச் சடங்காகக் கூட ஆகிவிட்டது. . . . → தொடர்ந்து படிக்க..

இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 1,839 முறை படிக்கப்பட்டுள்ளது!

ஆரகிள் நிறுவனர் லேரி எல்லிஸன்

ஆரகிள். உலகின் முன்னணி டேடாபேஸ் நிறுவனம். தகவல் தொடர்பு யுகத்தின் தாய்வீடு என்று ஆரகிள் நிறுவனத்தை அவசியம் சொல்லலாம்.

வித்தியாசமான அணுகுமுறை, வழக்கமான நடைமுறைகளுக்கு எதிரான மனோபாவம், இளமைப் பருவத்தில் மனரீதியான போராட்டம் என்று கலவை வாழ்க்கை வாழ்ந்த ஒரு மனிதரின் உருவாக்கம் தான் ஆரகிள். தகவல்களைக் கையாள்வதற்குத் தேவையான தொழில் நுட்பம் தருவதில் உலகளாவிய நிலையில் முதலிடம் வகிக்கும் ஆரகிள், மைக்ரோ சாஃப்ட் நிறுவனத்தைக் கடந்து செல்லும் குறிக்கோளோடு தன் செயல்பாடுகளைத் தீவிரப்படுத்தியது.

. . . → தொடர்ந்து படிக்க..

இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 2,842 முறை படிக்கப்பட்டுள்ளது!

சரித்திரம் படைத்த சாதனைத் தமிழன்!

‘இந்தியாவில் போலியோ முற்றிலும் ஒழிக்கப்பட்டது என்ற அரசு அறிவிப்பைப் பார்க்கும்போது, இனிமேல் என்போல் இந்தியாவில் போலியோவால் எவரும் மாற்றுத் திறனாளி ஆக மாட்டார்கள் என்ற மன நிறைவு ஏற்படுகிறது’ என்று தீர்க்கமாகப் பேசத் தொடங்குகிறார், கடலில் 43 கி.மீ. நீந்திச் சாதனை படைத்த முதல் மாற்றுத் திறனாளி பிரகாஷ்.

தடைக்கற்களைத் தகர்த்த தன் சாதனைச் சரித்திரத்தை விவரிக்கிறார்…’என் சொந்த ஊர் திருநெல்வேலியில் உள்ள ஆழ்வார் தோப்பு. அப்பா அம்மா வேலைக்காக மும்பைக்கு . . . → தொடர்ந்து படிக்க..

இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 2,198 முறை படிக்கப்பட்டுள்ளது!

இந்தியா – சொல்ல மறந்த செய்திகள்!

கையால் மலத்தை அள்ளிக் கழிப்பறைகளைச் சுத்தம் செய்யும் இழிதொழிலை ஒழித்துக்கட்டக் கோரும் போராட்டங்கள் கடந்த முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக நடந்து வரும் நிலையில், மைய அரசு தூக்கத்திலிருந்து திடீரென விழித்துக் கொண்டதைப் போல, கடந்த செப்டம்பர் மாதத்தில் இதற்காகப் புதிய சட்டமொன்றை – கையால் மலம் அள்ளும் தொழிலாளர்களைப் பணிக்கு அமர்த்துவதைத் தடை செய்தல் மற்றும் அவர்களது மறுவாழ்வுக்கான சட்டம் – நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் ஒருமனதாக நிறைவேற்றியிருக்கிறது.

ஐ.டி. கம்பெனிகள், . . . → தொடர்ந்து படிக்க..

இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 12,331 முறை படிக்கப்பட்டுள்ளது!

நூல் படிக்கும் பழக்கம் – வெற்றிக்கு வழி வகுக்கும்

எப்பொழுதோ நிகழ்ந்ததை நிகழ்ந்தது நிகழ்ந்தவாறு இப்பொழுதும் நாம் அறிந்து கொள்ள உதவுவது புத்தகங்கள். எங்கோ நடந்ததைக் கண்டுபிடித்து அதை இங்குள்ள நமக்கு எடுத்து விளக்குபவை நூல்களே. எவரோ அறிந்ததை நாமும் தெரிந்து கொள்ளத் துணை நிற்பவை நூல்கள் தாம். விலங்குகளின் வாழ்க்கை ஆயிரமாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு எப்படியோ அப்படியே தான் இன்றும். எப்படியும் வாழலாம் என்பது விலங்கு வாழ்க்கை. இப்படித்தான் வாழ வேண்டும் என்பது மனித வாழ்க்கை. முன்பு வாழ்ந்தவர்களின் அனுபவங்களையும் அறிவையும் எடுத்துக் . . . → தொடர்ந்து படிக்க..

இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 4,913 முறை படிக்கப்பட்டுள்ளது!

பக்கத்து வீட்டு அங்கிளை, நம்ம வீட்டுக்கு…

“பக்கத்து வீட்டு அங்கிளை, நம்ம வீட்டுக்கு வர வேணாம்னு சொல்லுங்கம்மா!”

பத்து வயதான அந்த குட்டிப்பெண், படிப்பில் படு சுட்டி. விளையாட்டில் அவளை மிஞ்ச ஆளில்லை. எப்போதும் பரபரவென ஒரு பட்டாம்பூச்சியைப் போல் சுற்றிகொண்டிருந்த குழந்தை, திடீரென வீட்டில் யாருடனும் அதிகம் பேசுவதில்லை. நண்பர்களுடன் சேர்ந்து விளையாடுவதில்லை. சரியாகச் சாப்பிடுவதில்லை. முதல் ஐந்து ரேங்குக்குள் வருகிறவள் இந்த முறை தேர்வில் இரண்டு பாடங்களில் ஃபெயில். அவள் ரேங்க் கார்டைப் பார்த்த பிறகுதான் பெற்றோர் . . . → தொடர்ந்து படிக்க..

இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 6,172 முறை படிக்கப்பட்டுள்ளது!

சந்தோஷம் விளையணுமா… விவசாயம் பண்ணுங்க !

நம் மண்ணில் நெல்லும் கரும்பும் காய்கறிகளும் செழித்து விளைந்து நிற்க, உழவர் பண்டிகையான ‘பொங்கல்’ விழாவை ஊருடனும் உறவுகளுடனும் சேர்ந்து மகிழ்ச்சி ‘பொங்கப் பொங்க’ கொண்டாடுகிறோம்! அந்த நெல்லையும் கரும்பையும் பல பயிர்களையும் ஆசையுடனும் அக்கறையுடனும் விளைவிப்பது நம்நாட்டின் ‘முதுகெலும்பு’ எனப்படும் விவசாயிகள்தான். அவர்கள்தானே இப்பண்டிகையின் கதாநாயகர்கள்! அப்படி சில வி.ஐ.பி., விவசாயிகள் இங்கே பேசுகிறார்கள்…

‘என் வழி… இயற்கை வழி’ என்று விளம்பரப் பலகை வைக்காத குறையாக, இயற்கை . . . → தொடர்ந்து படிக்க..

இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 2,425 முறை படிக்கப்பட்டுள்ளது!

ஐநாவும் என்னை அழைக்கும்…

அமெரிக்காவில் உள்ள ஐநா சபையில் ஒருவர் ஒரு முறை பேசினாலே வாழ்க்கையில் பாக்கியம் பெற்றவர் ஆவார் ஆனால் பார்வையற்ற சென்னை மாணவி சுவர்ணலட்சுமி ஒரு முறைக்கு இரு முறை சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு ஐநாவில் பேசியுள்ளார் அவர் யார் என்பதை அறிய ஆர்வமாக இருக்கிறதா…

சென்னை கனரா பாங்கின் நிறுவனர் நாள் விழாவினை முன்னிட்டு சாதனை புரிந்த மாணவ, மாணவியருக்கான பாராட்டு விழா ப்ரீடம் ட்ரஸ்ட் டாக்டர் சுந்தர் தலைமையில் . . . → தொடர்ந்து படிக்க..

இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 3,359 முறை படிக்கப்பட்டுள்ளது!

உங்களுக்கு பொருத்தமான பணி?

நல்ல சம்பளத்தில், நல்ல வேலை வேண்டும் என்று ஆசைப்படும் அதேநேரத்தில், நாம் எந்த வேலைக்குப் பொருத்தமானவர்கள் என்பதையும் ஆராய வேண்டும். நம்முடைய திறமைகள், தகுதிகள் மற்றும் பின்னணிகள் குறித்து சுய பகுப்பாய்வை மேற்கொண்டாலொழிய, பொருத்தமான பணியை நாம் பெறுவதென்பது இயலாத காரியமே. எனவே சுய பகுப்பாய்வு தொடர்பான சில ஆலோசனைகள் இங்கே வழங்கப்பட்டுள்ளன.

தொழில்ரீதியிலான பகுப்பாய்வு வேலை தேடுதலில் உள்ள மிகப் பிரதானமான அம்சம் என்னவெனில், உங்களுக்குள் இருக்கும் ஆர்வத்தையும், தொழில்முறை . . . → தொடர்ந்து படிக்க..

இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 2,634 முறை படிக்கப்பட்டுள்ளது!

பிறர் மீது நம்பிக்கை

இடைவிடா முயற்சி…. தொழில் நேர்மை…. தன்மீது நம்பிக்கை…. பிறர் மீது நம்பிக்கை…. தளர்வறியா உழைப்பு இவை எல்லாம் இருந்தால் ஒரு பழைய இரும்பு வியாபாரி பல நூறு கோடிகளில் வர்த்தகம் செய்யும் அளவுக்கு இரும்பு உருக்காலைக்கு அதிபராகவும் உயர்வு அடையலாம் என்பது நிர்தசனமான உண்மை!

1998ம்ஆண்டு வரை பழைய இரும்பு வியாபாரத்தை நடத்திக்கொண்டு இருந்தவர்கள் இன்று இரும்புக்கம்பிகள் தயாரிக்கும் நான்கிற்கும் மேற்பட்ட நிறுவனங்களை வெற்றிகரமாக நடத்திக் கொண்டு வருகிறார்கள்.

இவர்களிடத்தில் 1200 நேரடியாக பணியாற்றும் பணியாளர்கள்…

. . . → தொடர்ந்து படிக்க..

இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 4,058 முறை படிக்கப்பட்டுள்ளது!

போரடிக்காமல் இருக்க வழிகள்!

இன்றைய இளைஞர்கள் அதிகமாகப் பயன்படுத்தும் ஒரு வார்த்தை “போரடிக்கிறது” என்பதாக இருக்கிறது. எதுவும் அவர்களுக்கு சீக்கிரமே போரடித்துப் போகிறது. ஆரம்பத்தில் சுவாரசியமாக இருப்பதாக அவர்கள் நினைக்கும் விஷயங்கள் கூடக் காலப்போக்கில் போரடிக்கும் விஷயங்களாக மாறி விடுகிறது. சொல்லப் போனால் பழையவை எல்லாம் போரடித்துப் போகும் சமாச்சாரங்களாக மாறி விடுகிறது. எப்போதும் எதையும் புதிது புதிதாகப் பெறுவதும் சில நாட்களிலேயே அதையும் மாற்றி அதை விடப் புதிதாக ஒன்றைப் பெறுவதும் போரடிக்காமல் இருக்க அவசியம் என்று . . . → தொடர்ந்து படிக்க..

இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 8,838 முறை படிக்கப்பட்டுள்ளது!

டிசைனர் குஷனில் குஷியான லாபம்!

சென்னை, திருவல்லிக்கேணியில் உள்ள மஞ்சுபாஷிணியின் வீட்டுக்குள் நுழைந்தால், திரும்பின பக்கமெல்லாம் அழகழகான குஷன்கள். சதுரமாக, வட்டமாக, இதய வடிவத்தில், திண்டு மாடலில்…. இன்னும் விதம்விதமான வடிவங்களில் அசத்தும் அத்தனையும் அழகு குஷன்கள்.

கார் வைத்திருப்பவர்களும், வீட்டை ஆடம்பரமாக வைத்திருப்போரும் மட்டும்தான் ஒரு காலத்தில் குஷன் உபயோகிப்பார்கள். இன்று வீட்டுக்கு வீடு அவற்றின் உபயோகத்தைப் பார்க்க முடிகிறது. ‘‘எம்.ஏ எகனாமிக்ஸ் படிச்சிருக்கேன். அடிப்படையில நான் ஒரு பியூட்டிஷியன். அழகு விஷயத்துல ஆர்வம் அதிகம். . . . → தொடர்ந்து படிக்க..