|
இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த
அச்செடுக்க
4,081 முறை படிக்கப்பட்டுள்ளது!
Posted on 27th June, 2012 இப்போது பழைய மாடல் TV வாங்குவது குறைந்து, ப்ளாட் பேனல் டிவிக்கள் வாங்குவது அதிகரித்து வருகிறது. இந்த வகையில் LCD, LED மற்றும் Plasma டிவிக்கள் மார்க்கட்டில் உள்ளன. இதில் அதிகம் உள்ளது எல்.சி.டி. டிவிதான். ஆனால் சில கடைகளில் நம்மைப் பல்வேறு சொற்களைச் சொல்லி குழப்பி விடு கிறார்கள். எனவே ப்ளாட் பேனல் டிவி வாங்குவதில் எதனை வாங்கலாம் என்று பார்ப்போம்.
ஸ்கிரீன் அளவு: முதலில் நாம் வாங்க இருக்கும் டிவி யின் . . . → தொடர்ந்து படிக்க..
இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த
அச்செடுக்க
3,300 முறை படிக்கப்பட்டுள்ளது!
Posted on 26th June, 2012 இராமநாதபுரம் To மதுரை போர்டு போட்ட பஸ் மதுரை மாட்டுதாவணி பஸ் ஸ்டாப்பில் வந்து நின்றது பரமக்குடியிலிருந்து வந்த பலூன் வியாபாரி மைதீன் பஸ்க்குள்ளே இருந்து சுத்திமுத்தி நோட்டமிட்டார். அவிய்ங்கே நிக்கிறாய்ங்களா? ஆமா இம்பூட்டு பேரு நிக்கிறாய்ங்கே இவிய்ங்ககிட்டயிருந்து எப்படி தப்பிக்க போறேன் என்று யோசித்துக் கொண்டிருக்கும் போது யோவ் மாட்டுத்தாவணி வந்துருச்சு எறங்குயா கிழே என்ற நடத்துனர் குரல் குறுக்கிட்டு நிகழ்காலத்திற்கு கொண்டு வந்தது. அவுட்டோருலே மாட்டுதாவணி பஸ் ஸ்டாண்டு கட்டுறதுக்கு முன்னாடியெல்லாம் நேரே அண்ணா . . . → தொடர்ந்து படிக்க..
இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த
அச்செடுக்க
3,165 முறை படிக்கப்பட்டுள்ளது!
Posted on 18th June, 2012 இவ வாய் இருக்கே, எப்பப் பார்த்தாலும் தொண தொணன்னு யாரையாவது குறை சொல்லிக்கிட்டே இருக்கும் என்று சில பெண்கள் குறித்துச் சொல்வர்கள். அவர்கள் உள்ளுக்குள் பலாப்பழம் போல இருந்தாலும் வெளியில் முள்ளாகத் தெரிபவர்கள்.
குறிப்பாக கணவரிடம் எப்போது பார்த்தாலும் பிலுபிலுவென சண்டை பிடித்தபடி இருப்பார்கள். இந்தப் பெண்கள். வாழ்க்கை முழுவதும் தன்னுடன் வரும் கணவரை குறை சொல்வதில் இதுபோன்ற மனைவிகளுக்கு ஆத்ம சந்தோஷம்.
வாழ்க்கை முழுவதும் நான் உனக்கு, . . . → தொடர்ந்து படிக்க..
இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த
அச்செடுக்க
2,890 முறை படிக்கப்பட்டுள்ளது!
Posted on 17th June, 2012 [ நமது ஹஜ்ஜை அல்லாஹ் ஏற்றுக்கொண்டானா என்பதைப் பற்றியெல்லாம் நமக்கு அக்கரையில்லை. ஆனால், நம்மை ஹாஜி என்று மக்கள் அழைக்க வேண்டும் என்பதில் மட்டும் ஆர்வம் உடையவர்களாக இருக்கிறோம். இது சரியா? முறைதானா? ]
அல்லாஹ் அருள்மறை குர்ஆனில் கூறுகிறான்:
‘எவரேனும் இவ்வுலக வாழ்க்கையையும், அதன் அலங்காரத்தையும் (மட்டுமே) நாடினால் அவர்களுடைய செயல்களுக்குரிய (பலன்களை) இவ்வுலகத்திலேயே நிறைவேற்றுவோம்: அவற்றில் குறைவு செய்யப்படமாட்டார்கள். இத்தகையோருக்கு மறுமையில் நரக நெருப்பைத் தவிர . . . → தொடர்ந்து படிக்க..
இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த
அச்செடுக்க
1,838 முறை படிக்கப்பட்டுள்ளது!
Posted on 14th June, 2012 மத்தியில் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சி பதவியேற்று 3 ஆண்டுகள் நிறைவடைந்துவிட்டன. அரசு பற்றியோ காங்கிரஸ் பற்றியோ வந்திருக்கும் கருத்துக் கணிப்புகள் அத்தனை சிறப்பாக இல்லை. எதிர்காலத்தில் இது வெற்றிக்கோ தோல்விக்கோ இட்டுச் செல்லும் என்று சொல்ல எனக்குத் தயக்கமாக இருக்கிறது.
மக்களவைக்கான பொதுத் தேர்தல் முன்னதாகவே வரக்கூடும். கூட்டணி பற்றிய ஊகங்களைக் கூறுவதற்கு இன்னமும் காலம் கனியவில்லை. மூன்றாண்டு ஆட்சி நிறைவை முன்னிட்டு பிரதமர் அளித்த இரவு விருந்தில் சமாஜ்வாதி கட்சியின் தலைவர் . . . → தொடர்ந்து படிக்க..
இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த
அச்செடுக்க
3,682 முறை படிக்கப்பட்டுள்ளது!
Posted on 13th June, 2012 அந்த அடுக்குமாடி கட்டிடத்தின் ஆறாவது மாடி வீட்டின் சன்னலோரம் உதுமான் அமர்ந்திருந்தார். எதிரே உள்ள தொடக்கப் பள்ளியின் வாசலருகில் வகுப்பு முடிந்து வரும் தம் குழந்தைகளை எதிர்பார்த்து பெற்றோர்களும், பணிப்பெண்களும் காத்திருக்கின்றனர். பள்ளி நேரம் முடிந்து குழந்தைகள் வரத்தொடங்கி விட்டனர். அவர்கள் ஒருவர் ஒருவராகவும் வருவார்கள். இரண்டு மூன்று பேர் சேர்ந்து உரக்கப் பேசி சிரித்துக் கொண்டும் வருவார்கள். சிலர் சோர்வாக வருவார்கள். களைப்பு முகத்திலேயே தெரியும். தனக்காக காத்திருக்கும் பெற்றோரை பார்த்த உடன் . . . → தொடர்ந்து படிக்க..
இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த
அச்செடுக்க
3,847 முறை படிக்கப்பட்டுள்ளது!
Posted on 12th June, 2012 இதுவும் ஒரு கலைதான்..
பேரம் பேசுதல்ங்கறது உண்மையிலேயே ஒரு கலை. சில பேர் அதுல ரொம்பவே கை தேர்ந்தவங்களா இருப்பாங்க. கடைக்காரங்க ஒரு விலை சொன்னா, டகார்ன்னு அதுல நாலுல ஒரு பங்கு விலையை, பொருளோட விலையா இவங்க சொல்லுவாங்க. தேர்தல் சமயத்துல மக்களோட இறங்கி வந்து பழகற அரசியல்வாதி மாதிரி கடைக்காரர் மெதுவா கொஞ்சம் கொஞ்சமா இறங்கி வருவார். நாலு ஓட்டு வெச்சிருக்கும் தெம்பிலிருக்கும் வாக்காளர் மாதிரி வாடிக்கையாளர் புடிச்ச . . . → தொடர்ந்து படிக்க..
இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த
அச்செடுக்க
2,696 முறை படிக்கப்பட்டுள்ளது!
Posted on 6th June, 2012 தோப்பில் முஹம்மது மீரான்
மேற்கு மூலை கறுத்திருந்தது. இருண்ட மேகமலை! மேக மலைகளுக்கு அந்தப் பக்கதில் சூரியன் படம் தாழ்த்திக் கிடந்தான். அந்திப் பொழுதின் கவர்ச்சி மெல்லத் தேய்ந்து மறைகிறது.
மழைக்கித் தானாக அழிந்து போகக் காத்து நிற்கின்ற மேக மலை, மேக மலை நீண்ட சுவாசம் விட்டது. சூடில்லாத குளிர்ந்த சுவாசம்.
எங்கேயோ மழை தகர்த்துப் பெய்கிறது. கறுத்த மேக மலையை வெட்டிப் பிளந்துகொண்டு ஒரு பொன் வாள் மின்னி . . . → தொடர்ந்து படிக்க..
இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த
அச்செடுக்க
1,875 முறை படிக்கப்பட்டுள்ளது!
Posted on 3rd June, 2012 உலகின் மிக அபூர்வமான வைரக்கல் ஒன்று 17.4 மில்லியன் டாலர்களுக்கு ஏலத்தில் வாங்கப்பட்டுள்ளது.
ஹாங்காங்கில் இடம்பெற்ற ஏலத்தில் ஆறே நிமிடங்களில் எதிர்பாராத வகையில் எதிர்பார்க்காத அளவுக்கு இந்த இளஞ்சிவப்பு வைரைக்கல் விலை போயுள்ளது.
மார்ஷியன் இளம் சிவப்பு வைரம் என்று அழைக்கப்படும் அந்த வைரக்கல் 12 காரட்டுகள் அதாவது சுமார் 2.5 கிராம் எடை கொண்டது. இவ்வகையான வைரம் மிக மிக அரிதானது என்று கூறப்படுகிறது.
வட்டவடிவில் இருக்கும் இந்த வைரக்கல்லை பெயர் வெளியிட . . . → தொடர்ந்து படிக்க..
இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த
அச்செடுக்க
1,997 முறை படிக்கப்பட்டுள்ளது!
Posted on 3rd June, 2012 ஏறத்தாழ இருபது ஆண்டுகளுக்கு முன்னர் புதிதாக வார்க்கப் பட்டு, ஊடக அகராதிகளில் புகுத்தப் பட்டதும் இன்றைய காலகட்டத்தில் பரவலாகப் பேசப்பட்டு, வலிந்துத் திணிக்கப்பட்ட சொல்லாடல், “இஸ்லாமியத் தீவிரவாதம்” என்பதாகும்.
கடந்த செப்டம்பர் 11இல் அமெரிக்காவின் வாஷிங்டனின் பெண்டகன் மற்றும் நியூயார்க்கின் இரட்டைக் கோபுரத் தாக்குதலுக்குப் பிறகு இது, முதன்மைத் தலைப்பு வகிக்கும் சர்வதேச அளவிலான விவாதப் பொருளாகவே மாறிவிட்டது.
இந்தியாவின் அரசியலை உலகம் மறுவாசிப்புச் செய்யத் தொடங்கக் காரணமாய் . . . → தொடர்ந்து படிக்க..
இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த
அச்செடுக்க
2,041 முறை படிக்கப்பட்டுள்ளது!
Posted on 30th May, 2012 ”ஆலயத்துக்கு அருகில் இருப்பவன்தான் வழிபாட்டுக்குக் கடைசியாக வருவான்” என்பது போல், தன் அருகிலுள்ள பெற்றவர்களை ஏனோ தானோ என்று பொடு போக்காகப் பார்ப்பதும் தூரத்திலுள்ள சொந்த பந்தங்களுடனும் சமுதாய மட்டத்தில் அந்தஸ்தில் உயர்ந்து நிற்பவர்களுடன் சுமூகமான உறவைப் பேணி இறுக்கமான இணக்கத்துடன் முகமூடி அணிந்து வாழ்வதும் இன்றைய இளைய தலைமுறையான பிள்ளைகளுக்குப் பெஷன் ஆகிவிட்டது.
பெற்றோர்கள் கடனாளிகளாகவும் பிள்ளைகள் பங்காளிகளாகவும் மாறிவிட்ட காலம் இது. வாழ்க்கை முறை யதார்த்தத்தை அப்படியே மாற்றி விட்டது. நிலவைக் . . . → தொடர்ந்து படிக்க..
இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த
அச்செடுக்க
7,165 முறை படிக்கப்பட்டுள்ளது!
Posted on 26th May, 2012 காங்கோ ஆப்பிரிக்கா கண்டத்தில் நடுப்பகுதியில் இருக்கும் ஆப்பிரிக்காவின் இரண்டாவது பெரியநாடு. இந்த நாட்டின் மண்வளம் கொள்ளை அடிக்கப்படும் ஆப்பிரிக்காவின் பெயரிடப்படாத யுத்தக் களத்தில் கற்பழிப்பு (Rape) செய்யப்பட்ட பெண்களின் எண்ணிக்கை ஏறக்குறைய 2 இலட்சம். 2009க்குப் பின் ஒவ்வொரு மாதமும் வறுமையிலும் பிணியிலும் 45000 பேர் இறந்து போகிறார்கள். இதுவரை 900,000 முதல் 5400,000 வரை இறந்திருக்கலாம் என்று கணக்கிடுகிறார்கள்.
இந்த மக்கள் செய்த பாவம் என்ன? வளமிக்க நாட்டில் பிறந்ததைத் தவிர! பொன் . . . → தொடர்ந்து படிக்க..
|
|