|
இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த
அச்செடுக்க
1,921 முறை படிக்கப்பட்டுள்ளது!
Posted on 12th April, 2016 ‘தக்காளி.. வெங்காயம், உருளக்கெழங்கு, மெளகா.., பூடு..’ வாய்க்குள் முணுமுணுத்தபடியே சின்னத் தாளில் விலையை மட்டும் எழுதிக் கொண்டே வந்த ஆறுமுகம் பூண்டில் நிறுத்தி விட்டு செல்லத்தை நிமிர்ந்து பார்த்தான்.
“இன்னிக்கு பாருங்க. வீட்டுக்காரம்மாக்கு ஒடம்பு சரியில்ல. சனிக்கிழமையானா டீச்சரம்மாக்கு பூண்டு வேணுமேன்னு அவ பொலம்புனதைக் கேட்டுட்டு, காந்திதான் உரிச்சுக் கொடுத்துச்சு. ரெண்டே பாக்கெட்தான் இன்னிக்கு. ஒளிச்சுல்லா வச்சிருந்தேன் ஒண்ண உங்களுக்கின்னே” என்றான்.
“ஆஹா. காந்தி உரிச்சதா. நல்லாப் படிக்கிறாளா . . . → தொடர்ந்து படிக்க..
இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த
அச்செடுக்க
2,690 முறை படிக்கப்பட்டுள்ளது!
Posted on 11th April, 2016 நவம்பர், டிசம்பர் மற்றும் ஜனவரி மாதம் என்றாலே… ராக்கெட் வேகத்தில் உயரும் காய்கறி விலை, இந்தத் தடவை ஒளி வேகத்தில் உயர… ‘கறிகாய் சமைக்கறதையே மறந்துட வேண்டியதுதான்’ என கவலைக் குரல்கள் கேட்கின்
”ஆனா, உடம்புக்குத் தேவையான சத்துக்கள் சரிவர சேராம… புதுவித பிரச்னை வந்துடும்” என குண்டு போடும் மதுரை, ராஜேஸ்வரி கிட்டு,
”கொஞ்சம் யோசனையோட செயல்பட்டீங்கனா… ஆனை விலை, குதிரை விலை காய்கறியைக்கூட அடங்கற . . . → தொடர்ந்து படிக்க..
இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த
அச்செடுக்க
1,391 முறை படிக்கப்பட்டுள்ளது!
Posted on 10th April, 2016 குழந்தைகளை வளர்ப்பது என்பது ஒரு கலை மட்டும் அல்ல அது ஒரு விஞ்ஞானமும் கூட. அந்த விஞ்ஞான உண்மைகளை குழந்தை மனோதத்துவ மருத்துவர்கள் (Child Psychologist) புத்தங்களாகத் தந்துள்ளனர். ஆனால் அவற்றைஎல்லாம் படிக்க பெற்றோருக்கு மனதில்லை, நேரமும் இல்லை. அவர்களுக்குத் தெரிந்த வரை, அவர்கள் எப்படி வளர்ந்தார்கள் என்பதை வைத்து குழந்தைகளையும் வளர்க்க முற்படுகிறார்கள். எந்த விஞ்ஞான கல்வியும் இல்லாத பல போலி மருந்துவர்கள் தொலைக் காட்சிகளில் பேசுவதும், சிகிச்சை அளிப்பதும் இன்று கண்கூடாக . . . → தொடர்ந்து படிக்க..
இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த
அச்செடுக்க
4,141 முறை படிக்கப்பட்டுள்ளது!
Posted on 9th April, 2016 வாக்காளர்களுக்கு மதிப்பு இருக்கிறதென்றால் அது தேர்தல் நேரத்தில் மட்டுமே. அந்த நேரத்தில் எப்படியாவது பேசி, நம்மிடம் வாக்குகளைப் பெற்றுச் செல்கின்றனர் அரசியல்வாதிகள்.
சரி, அவர்கள் இயல்பு அதுதான். ஆனால், நாம் ஏன் வாக்களிக்க வேண்டும்? என்ன கொள்கைக்கு வாக்களிக்க வேண்டும் என்பதெல்லாம் நம் கையில்தான் இருக்கிறது. ஏதோ நண்பர்களோடு போனோம், அவர்கள் சொன்ன கட்சிக்கு அல்லது சின்னத்திற்கு வாக்களித்தோம் என்று பலர் இருக்கின்றனர். இதில்கூட சுயசிந்தனை இல்லையென்றால் எப்படி? யார் . . . → தொடர்ந்து படிக்க..
இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த
அச்செடுக்க
2,357 முறை படிக்கப்பட்டுள்ளது!
Posted on 8th April, 2016
”இஸ்லாம் என்பதும் ஏதோ ஒரு சடங்குகள் அடங்கிய மதம். மற்ற மதங்களில் உள்ள கடவுள் போல் அரபியாவில் மரித்த ஒருவரைத் தான் அல்லாஹ் என்று கூறி அவரது சிலையை வணங்குகிறார்கள்.” இப்படித் தான் மாற்று மத சகோதர சகோதரிகள் பலர் நினைத்துள்ளனர். இதே கருத்தை உடைய பிராமண சகோதரி சுதா தன்னுடன் உள்ள கல்லூரி தோழிகளின் வித்தியாசமான செயல்களால் கவரப்பட்டார். சூடான பானத்தை அருந்தும் போதி ஊதி சாப்பிடக் கூடாது என்றும் சாப்பிடும் போது வீணாக்காமல் கையை . . . → தொடர்ந்து படிக்க..
இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த
அச்செடுக்க
4,534 முறை படிக்கப்பட்டுள்ளது!
Posted on 7th April, 2016 தமிழகத்தின் மாநில மரம் பனை (Palmyra Palm). புல்லினத்தைச் சேர்ந்த ஒரு தாவரப் பேரினம். அறிவியல் வகைப்பாட்டில் இதைப் போரசசு (borassus) என்னும் பேரினத்தில் அடக்குவர். இப்பேரினத்தில் பல சிற்றினங்கள் அடங்குகின்றன. தமிழ்நாட்டின் கால நிலையை ஒத்த மிதவெப்ப மண்டல பகுதிகளில் வளரும் தன்மையுள்ள பனை, குறைந்தது 60 வருடங்களுக்கு மேல் வாழும். வேர் முதல் நுனி வரை பனையின் ஒவ்வொரு பகுதியும் நமக்கு பல பயனுள்ள பயன்களைத் தருகின்றது.
. . . → தொடர்ந்து படிக்க..
இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த
அச்செடுக்க
1,382 முறை படிக்கப்பட்டுள்ளது!
Posted on 6th April, 2016 நவரத்தினங்களுள் ஒன்று கோமேதகம் ஆகும். இது பசுவின் சிறுநீரான கோமியத்தின் நிறத்தைப் போன்று இருப்பதால், கோமேதகம் எனப் பெயர் வந்ததாக கூறுவர். மாணிக்கக் கல்லின் தலைநகரம் என அழைக்கப்படும் “கூபர் பெடி’(COOPER PEDY). தெற்கு ஆஸ்திரேலியாவின் வட பகுதியில் அடிலெய்டிலிருந்து 846 கிலோ மீட்டரில் அமைந்துள்ளது. உலகின் மிகச்சிறந்த மாணிக்கக் கற்களை இங்குதான் தோண்டி எடுக்கின்றனர்.
கூபர்பெடி பூமிக்கு கீழே அமைந்துள்ள ஒரு நகரம். ஆமாம், இந்தப் பகுதியே ஒரு . . . → தொடர்ந்து படிக்க..
இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த
அச்செடுக்க
1,954 முறை படிக்கப்பட்டுள்ளது!
Posted on 5th April, 2016 ▪ முதல் பார்வையில் அவர் மீது அச்சம் கலந்த மரியாதை ஏற்படும். பழகி விட்டாலோ, விலகவே முடியாத அளவுக்கு அவர் மீது பிரியம் உருவாகி விடும்.
▪ அவர் பேசினால் பேச்சு சரளமாக இருக்கும், சொல் தெளிவாக இருக்கும், கருத்து சரியானதாக இருக்கும். ஆனால், அதற்காக பெரியதொரு சிரமம் எடுத்துக் கொள்ள மாட்டார்.
▪ கிராமவாசி, நகரவாசி இருவருக்கும் தகுந்தவாறு தனது பேச்சு நடையை, முறையே எளிய முறையிலும் கருத்தாழமிக்கதாகவும் அமைத்துக் கொள்வார்.
. . . → தொடர்ந்து படிக்க..
இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த
அச்செடுக்க
2,779 முறை படிக்கப்பட்டுள்ளது!
Posted on 4th April, 2016 பீட்ரூட் கீர் தேவையானவை: பீட்ரூட் (பெரியது) – 2, காய்ச்சி ஆறவைத்த பால் – 4 கப், ஏலக்காய் – 3, குங்குமப்பூ – ஒரு சிட்டிகை, முந்திரி – 6 (நெய்யில் வறுக்கவும்), சர்க்கரை – 50 கிராம், நெய் – சிறிதளவு.
செய்முறை: பீட்ரூட்டை தோல் சீவி, நறுக்கி, குக்கரில் வேகவிட்டு எடுத்துக் கொள்ளவும். வெந்த பீட்ரூட், காய்ச்சி ஆறவைத்த பால், சர்க்கரை, ஏலக்காயை மிக்ஸியில் போட்டு அரைத்து எடுக்கவும். மேலே
குங்குமப்பூ தூவி, . . . → தொடர்ந்து படிக்க..
இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த
அச்செடுக்க
1,422 முறை படிக்கப்பட்டுள்ளது!
Posted on 3rd April, 2016 மும்பையில் உள்ள புலேஷ்வர் பகுதியைச் சேர்ந்த பிரேமலதா பன்சாலி என்ற பெண் சமீபத்தில், புறநகர் ரயிலில் பயணித்துள்ளார். மஹாலட்சுமி ரயில் நிலையத்தில் இறங்கிய அவரிடம் பயணச்சீட்டு பரிசோதகர்கள், பயணச்சீட்டு கேட்டுள்ளனர். ஆனால், அவர் பயணச் சீட்டு இல்லாமல் பயணித்துள்ளார். இதனால் 260 ரூபாய் அபராதம் செலுத்துமாறு பயணச் சீட்டு பரிசோதகர்கள் கூறியுள்ளனர்.
அந்த அபராதத்தைச் செலுத்த மறுத்த அவர், வங்கிகளில் 9,000 கோடி ரூபாய் கடன் வாங்கி தப்பித்துச் சென்ற, தொழிலதிபர் . . . → தொடர்ந்து படிக்க..
இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த
அச்செடுக்க
1,259 முறை படிக்கப்பட்டுள்ளது!
Posted on 2nd April, 2016 மூன்றாம் வகுப்பு வரை மட்டுமே படித்துள்ள ஒடிசா மாநில கவிஞர் ஹல்தார் நாக் என்பவருக்கு பத்மஸ்ரீ விருது கிடைத்துள்ளது.
ஒடிசா மாநிலம் பல்காரா மாவட்டத்தில் ஹல்தார் நாக்(66) பிறந்தார். ஏழ்மையான குடும்பத்தில் பிறந்த இவர் இளம் வயதில் தந்தையை இழந்ததால் குடும்பத்தை நிர்வகிக்கும் பொறுப்பு இவருக்கு வந்தது. வறுமை காரணமாக மூன்றாம் வகுப்புடன் பள்ளிப் படிப்பை நிறுத்தினார். பள்ளியில் 16 ஆண்டுகள் சமையல் வேலை பார்த்துள்ளார். பின் ஆயிரம் ரூபாய் கடன் வாங்கி, பள்ளி . . . → தொடர்ந்து படிக்க..
இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த
அச்செடுக்க
2,211 முறை படிக்கப்பட்டுள்ளது!
Posted on 1st April, 2016
இன்று மார்க்கம் பேசுபவர்கள் தீனைப் பற்றிப் பேசுகிறார்கள். தீன் என்றால் அல்லாஹ்வின் கட்டளை மற்றும் நபிகள் ஸல் அவர்களின் வாழ்க்கை முறை – அதாவது குர்ஆன் சுன்னாவை பின்பற்றி வாழ்வதாகும். ஆனால் நடப்பது என்ன, குர்ஆன் ஹதீஸை பின்பற்றுபவர்கள் ஒவ்வொரு ஊரிலும் ஒதுக்கப்படுகிறார்கள். இது தொழுகைக்கு அல்லது நோன்பு போன்ற வணக்கங்களுக்கு மட்டும் தானா என்பதை சிந்திக்க வேண்டும். எல்லா விசயத்திலும் பின்பற்றப்பட வேண்டும் . குறிப்பாக திருமணத்தில் இது கண்டிப்பாக நடைமுறைபடுத்தப்பட வேண்டும். . . . → தொடர்ந்து படிக்க..
|
|