Google Search Engine

தலைப்புகளில் தேட

தேதிவாரியாக பதிவுகள்

July 2024
S M T W T F S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  

Archives

Visitors since 22-3-13

Free counters!
இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 7,058 முறை படிக்கப்பட்டுள்ளது!

5 பைசாவுக்கு சுத்தமான குடிநீர்!

“நானோ’ தொழில்நுட்ப முறையில், 500 ரூபாய்க்கே குடிநீரை சுத்திகரிக்கும் இயந் திரத்தை கண்டுபிடித்த, பிரதீப்: நான், மெட்ராஸ் ஐ.ஐ.டி.,யில், வேதியியல் துறை பேராசிரியராக பணியாற்றுகிறேன். சுத்தமான நீரை குடிக்க, ஒவ்வொரு மாதமும், 1,000 ரூபாய்க்கும் மேல் செலவாகும் சூழ்நிலை உள்ளது. மனிதனின் அடிப்படை தேவையான குடிநீர், குறைந்த விலையில் கிடைக்க, ஐந்து ஆண்டுகளாக மேற் கொண்ட முயற்சியில், “நானோ’ தொழில்நுட்ப முறையில், ஒரு இயந்திரம் கண்டுபிடித்தேன். முதலில் வைரஸ், பாக்டீரியா போன்ற நுண்கிருமிகளை அழித்த . . . → தொடர்ந்து படிக்க..

இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 7,220 முறை படிக்கப்பட்டுள்ளது!

சிறுநீர்: சில சிக்கல்கள், உண்மைகள்!

நமது அடிவயிற்றின் உட்பகுதியிலுள்ள சிறுநீர்ப்பையில்தான் இரண்டு சிறுநீரகங்களிலிருந்தும் வடியும் சிறுநீர், தேங்க ஆரம்பிக்கிறது. சிறுநீரைத் தேக்கி வைக்கும் இந்த சிறுநீர்ப்பை, அடிவயிற்றினுள் தொப்புளுக்குக் கீழ், ஆண்களுக்கு ப்ராஸ்டேட் என்கிற சுரப்பியின் மேல்பகுதியில் அமைந்திருக்கிறது.

இதே போல் பெண்களுக்கு கர்ப்பப் பைக்கு கீழே அமைந்திருக்கிறது. அடி வயிற்றில் கர்ப்பப்பை கொஞ்சம் இடத்தை அடைத்துக் கொள்வதால், பெண்களுக்கு சிறுநீர்ப்பை சற்று சிறிதாக இருக்கும். சிறிய குழந்தைகளுக்கு, சிறுநீர்ப்பை வயிற்றில் பாதி இடத்தை அடைத்துக் கொள்ளும் . . . → தொடர்ந்து படிக்க..

இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 3,244 முறை படிக்கப்பட்டுள்ளது!

ஏரிகளைக் காப்போம்! மீன் வளம் பெருக்குவோம்!

உலக மக்களின் முதன்மையான கடல் உணவு மீன்களே ஆகும். 1950 ஆம் ஆண்டில் ஒரு கோடியே 93 இலட்சம் டன் மீன்கள் பிடிக்கப்பட்டன. தாமாகவே வளர்ந்த இந்த மீன்கள் ஆறுகள், குளங்கள், ஏரிகள், மற்றும் கடலின் மூலமாக கிடைத்தவை. இதுவே 2003 ஆம் ஆண்டில் பிடிக்கப்பட்ட மீன் அளவு 13 கோடியே 25 இலட்சம் டன்கள். மனிதர்களினால் வளர்க்கப்பட்டு பிடிக்கப்பட்டவை 5 கோடியே 48 இலட்சம் டன்கள்.

உலகில் கிடைக்கும் மொத்த மீன்களில் . . . → தொடர்ந்து படிக்க..

இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 12,344 முறை படிக்கப்பட்டுள்ளது!

பல நோய்களுக்கு காரணமாக அமையும் மலச்சிக்கல்

மலச்சிக்கல் பல நோய்கள் வருவதற்கு காரணமாக அமைகிறது. இதை ஒரு நோய் என்று கருத முடியாது. எனினும் பலர் இந்த மலச்சிக்கலால் மிகவும் கஷ்டப் படுகிறார்கள்.

நாம் உண்ணும் உணவு 18 மணி முதல் 24 மணி நேரத்திற்குள் மலமாகி வெளிப்படும். உணவுக்குத் தகுந்தப்படி மலமும் இருக்கும், தினமும் ஒன்று அல்லது இரண்டு முறை மலம் கழிய வேண்டும். அப்படி இல்லாமல் இரண்டு, மூன்று நாள் தங்கி மலம் வெளியானால் அதை . . . → தொடர்ந்து படிக்க..

இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 68,419 முறை படிக்கப்பட்டுள்ளது!

100 மார்க் உணவு எது- அம்மாக்களுக்கு டிப்ஸ்

ஆரம்பித்துவிட்டது எக்சாம் கவுன்ட் டவுன்… பரீட்சை பயமும் டென்ஷனும் பிள்ளைகளைவிட, அம்மாக்களுக்கே அதிகம் நன்றாகப் படிக்கவும், படித்ததை நினைவில் வைத்துக்கொள்ளவும் வெண்டைக்காயில் இருந்து வல்லாரை வரை சகலத்தையும் சமைத்துக் கொடுக்கும் அம்மாக்கள் எக்கச்சக்கம்…

தேர்வு நேரத்து டயட் எப்படி இருக்க வேண்டும், எதையெல்லாம் தவிர்க்க வேண்டும்- அம்மாக்களுக்கு டிப்ஸ் தருகிறார் டயட்டீஷியன் புவனேஸ்வரி.

உணவை விட முக்கியம் உறக்கம். என்னதான் ஆரோக்கிய உணவு கொடுத்தாலும், போதுமான அளவு தூக்கம் இல்லாவிட்டால், உள்ளே சென்ற உணவால் . . . → தொடர்ந்து படிக்க..

இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 5,977 முறை படிக்கப்பட்டுள்ளது!

தண்ணீர் சிறந்த மருந்து

தண்ணீரை எப்படி குடிக்க வேண்டும்?

தண்ணீரை, டம்ளரில் நன்றாக வாய் வைத்துக் குடிக்க வேண்டும். அவசரமின்றி மெதுவாகக் குடிக்க வேண்டும்.வாய் நிறைய தண்ணீரை வைத்திருந்து கொஞ்சம், கொஞ்சமாக வயிற்றுக்குள் இறக்குதல் வேண்டும். அப்பொழுது எச்சிலுடன் குதப்பி தண்ணீரை வயிற்றில் இறக்குவது உண்ட உணவு ஜீரணிக்கும்.

அண்ணாந்திச் சாப்பிடுவது காது நோய் ஏற்படுத்தும்

*டம்ளரில் வாய்வைத்துக் குடித்தால், காதில் வருகிற நோய்கள் தள்ளிப் போகும்.தண்ணீரைத் தலை அண்ணாந்திச் சாப்பிடுவது காது நோய்களுக்கு . . . → தொடர்ந்து படிக்க..

இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 2,901 முறை படிக்கப்பட்டுள்ளது!

தண்ணீர்!! தண்ணீர்!! தண்ணீர்!!

நீ அதிசயம் மட்டுமல்ல … நீ ஆச்சரியமான ஆசான் …. உன் நேர்மையான பாதை வழி எங்கும் இன்பமே …. உன் பாகுபாடில்லாத அணுகு முறையால் நீ போகும், நிற்கும், நடக்கும், ஓடும் இடமெல்லாம் சுகமே ….

நீ பார்க்காத பள்ளம் எங்குமில்லை அதனால் நீ தளர்வதுமில்லை பள்ளத்தை நிறைத்து பொங்கி எழும் உன் வேகம் உணர்த்தும் உத்வேகம், பாய்ச்சிடுமே புத்துணர்ச்சி ….

சுத்த தங்கமாக நீ வலம் வந்து மற்றவர்களின் மாசுக்களை சுமந்து செல்லும் நீ . . . → தொடர்ந்து படிக்க..

இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 4,329 முறை படிக்கப்பட்டுள்ளது!

ஆபரேஷன் இன்றி சிறுநீரகக்கற்கள்

ஆபரேஷன் இல்லாமல் சிறுநீரகக் கற்களை அகற்றும் முறை

ஆபரேஷன் செய்யாமல் நவீன இயந்திரத்தின் மூலம் சிறுநீரகக் கற்களை அகற்ற முடியும் என்று டாக்டர்கள் தெரிவித்தனர்.

மதுரை விநாயகா லேசர் ஆஸ்பத்திரியின் அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் எஸ்.ராஜேந்திரன், சிறுநீரகத்துறை நிபுணர் டாக்டர் கோபாலன் ஆகியோர் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தனர். அப்போது அவர்கள் கூறியதாவது:-

கற்கள் உருவாவது எப்படி?

ஒருவருக்கு சிறுநீரகத்தை ஒட்டிய இடுப்பு பகுதியில் தொடர்ந்து தாங்க முடியாத அளவு வலியிருந்தால் அவர்களுக்கு சிறுநீரகக் கற்கள் . . . → தொடர்ந்து படிக்க..

இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 6,147 முறை படிக்கப்பட்டுள்ளது!

அதிசிய மிகு ஜம்ஜம் தண்ணீர்!

ஆராய்ச்சி: தாரிக் ஹுஸைன் ; மொழியாக்ம்: காஜா முயீனுத்தீன்

ஹஜ் காலம் வரும்போதெல்லாம் அதிசிய நீராகிய ஜம்ஜமின் அந்த நினைவுகள் எனது மனதிலே தோன்றும். ஆம் 1971 ஆம் ஆண்டில் எகிப்து நாட்டின் ஒரு டாக்டர் ஐரோப்பிய பிரசுரத்திற்கு ‘ஜம்ஜம் நீர் குடிப்பதற்கு உகந்ததல்ல” என்ற அடிப்படையில் ஒரு செய்தியைக் கொடுத்தார். உடனே நான் முஸ்லிம்களுக்கு ஏற்படும் அநீதிகளில் இது ஒன்று என்று நினைத்தேன்.

கஃபத்துல்தாஹ் தாழ்வு பகுதியான மக்காவின் நடு மையத்தில் உள்ளதால் . . . → தொடர்ந்து படிக்க..