தலைப்புகளில் தேட

தேதிவாரியாக பதிவுகள்

November 2025
S M T W T F S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

UserOnline

இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 3,949 முறை படிக்கப்பட்டுள்ளது!

ஊர் பெயர் என்ன?

சித்தார் கோட்டை – ஓர் ஆய்வுக்கோவை – தொடர்: 8

மனதை மயக்கும் மந்த மாருதம் வீசும் இளவேனிற்காலம். பொழுது புலர்வதற்கு இரண்டு நாழிகை இருக்கும்.

கிருஷ்ணபட்சத்துத் தேய்பிறை, மங்கலான வெளிச்சத்தை உமிழ்ந்து கொண்டிருந்தது.

ஆதவனின் வருகையை தெரிவிப்பதுபோல் கீழ்வானத்தில் செம்மை படர்ந்தது.

இரவு முழுவதும் தங்கள் பேடையுடன் கீச்சுக் குரலில் காதல் மொழி பேசிக் கும்மாளம் அடித்துக்கொண்டிருருந்த பட்சி ஜாலங்கள் கூடுகளில் முடங்கின. ஊர் மொத்தமும் உறக்கத்தில் ஆழ்ந்திருந்தது. எங்கும் அமைதி………

ஊரா! . . . → தொடர்ந்து படிக்க..

இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 3,489 முறை படிக்கப்பட்டுள்ளது!

வாரிசுப்போட்டி

சித்தார் கோட்டை – ஓர் ஆய்வுக்கோவை – தொடர்: 7

‘சசிவர்ணத்தேவரையும் கடம்பனையும் பொட்டல் வெளியில் திண்டாட விட்டு விட்டு இந்த சுற்றுலா அவசியம் தானா?’ என்று வாசகர்கள் கேட்கலாம்.

மேலோட்டமாகப் பார்க்கும் போது வாசகர்களின் கேள்வியில் நியாயம் இருப்பது தெளிவாகவே தெரிகிறது.

ஆனால் இந்த அத்தியாயத்தைப் படித்து முடித்த பின்னர் தான் இந்த சுற்றுலா எத்துணை முக்கியமானது என்பது புரியும்.

இந்த கதை ஆரம்பமாகும் 11ஆம் நூற்றாண்டின் துவக்கத்திலிருந்து 12ஆம் நூற்றாண்டின் இறுதி . . . → தொடர்ந்து படிக்க..

இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 4,081 முறை படிக்கப்பட்டுள்ளது!

பொட்டலில் பூத்த புதுமலர் 3

சித்தார் கோட்டை – ஓர் ஆய்வுக்கோவை – தொடர்: 5

அழகன்குளம் சென்ற குழு கையிலிருப்புச் சரக்குகளை விற்று விட்டு, புதிய சரக்குகள் கொள்முதல் செய்து ஆரவாரத்துடன் வந்து சேர்ந்தது.

தேவருக்கும் கடம்பனுக்குமாகச் சேர்த்து வாங்கிய சரக்குகளை முதலியார் விவரித்துக் கொண்டிருந்தார். சரக்கு அதிக அளவில் இருந்தது.

அதே சமயம் மேற்குத் திசையில் இருந்து வேகமாக ஓர் ஆள் வந்து சேர்ந்தான். அவன் வந்த வேகத்தில் மூச்சிரைத்தது.

அவன் யார்? எதற்காக வந்திருக்கிறான் என்பதைத் . . . → தொடர்ந்து படிக்க..

இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 2,722 முறை படிக்கப்பட்டுள்ளது!

பொட்டலில் பூத்த புதுமலர் 2

சித்தார் கோட்டை – ஓர் ஆய்வுக்கோவை – தொடர்: 4

யாரோ தன்னைக் கவனித்துக் கொண்டிருக்கிறார்கள் என்ற பிரக்ஞையே இல்லாமல் மேலே மரத்தில் எதையோ உற்று நோக்கிக் கொண்டிருந்தான். பின்னர் கையில் வைத்திருந்த ஆயுதத்தை மரக்கிளைக்கு நேராக உயர்த்திப் பிடித்தான்.

கண் இமைக்கும் நேரத்தில் புலிபோல் பாய்ந்தார் தேவர். அவனுடைய கைகளைக் கெட்டியாகப் பிடித்துக் கொண்டு, “யார் நீ? என்ன செய்யப் போகிறாய்” என்று அதட்டினார்.

அவன் அலட்சியமாக சிரித்துக் கொண்டே கையில் உள்ள . . . → தொடர்ந்து படிக்க..

இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 2,725 முறை படிக்கப்பட்டுள்ளது!

பொட்டலில் பூத்த புதுமலர் 1

சித்தார் கோட்டை – ஓர் ஆய்வுக்கோவை – தொடர்: 3

வணிகக்குழு

கதிரவன் மறைந்து இரண்டரை நாழிகையிருக்கும். சுக்கிலபட்சத்து சந்திரனின் மங்கிய நிலவொளி, தெற்கத்திக் காற்றின் சுகமான வருடல் மனதைப் புளகாங்கிதமடையச் செய்தது.

திட்டுப்பிரதேசத்திற்குத் தென்புறம் தூரத்தில் பறவைகள் சிறகடித்து இடம் பெயரும் சப்தம், நரிகளின் ஊளை அபஸ்வரமாக ஒலித்தது. எங்கோ ஓர் ஊமைக்கோட்டானின் குரல் மரணஓலம் போல் பயங்கரமாக ஒலித்தது.

சற்று நேரங்கழித்து காய்ந்த இலை சருகுகளின், “சர சர”வென்ற ஓசை!

புரிந்து . . . → தொடர்ந்து படிக்க..

Hadeeths/Quran Search

புகாரிமுஸ்லிம்குர்ஆன்

அறிவியல்