பகட்டான வாழ்க்கை..தேடி பணம் எனும் காகிதம் சேகரிக்க.. பாசத்தை அடகு வைத்து… பாரினில் வந்து சேர்ந்தேன்.. மழலை மனம் மாறா மகனை விட்டு..வந்து சேர வாங்கிய பணத்தின் வட்டி கட்ட வருடம் ஒன்றானது.. முழுக்கடன் முழுதாய் தீர்க்க.. முழுவதும் எனை அடகு வைத்தேன். வேலையைப் புதுப்பிக்கின்ற சாக்கில்.அன்பு மனைவியோடு.. அலைபேசி வாழ்க்கை வாழ்ந்து தொலைந்து போனது..இளமை… அவள் துயரம் அறிந்தும்… அருகில் இல்லாமல்..மனதை கல்லாக்கி மண்ணாகி போனேன். அல்லும்பகலும் அயராது உழைத்து இதயமும் இரும்பாகிப் போனது. பணமென்ற பிணமொன்றை வாலிபத்தில் வந்தவனின் போதுமடா வாழ்க்கையென்று… பண மரமாகிப் போனெனோ..நான் மீதமுள்ள நாட்களை… |
தேனி சூர்யாபாஸ்கரன்